நம் வாழ்வு நம் கையில் தான். இப்படிச்சொன்னா சிலர் அட போங்கய்யா!!! என்னத்த நம் கைய்லன்னு என்னத்த கன்னைய்யா
ரேஞ்சுக்கு புலம்புவாங்க. வாழ்க்கை எனும் கடலின் அலையில் சிக்கி சின்னாபின்னமாகிறோம் இது தான் நம்ம எல்லோருடைய நினைப்பும்.
எது நடந்தாலும்,” ம்ம்ம் நம்ம விதி” அப்படின்னு நினைச்சு நமக்கு நாமே ஆறுதல் சொல்லிப்போம். ஆனா நம்ம முன்னோர்கள் சொன்ன ஒரு விஷயத்தை மறந்தே போயிட்டோம்.”விதியை மதியால் வெல்லலாம்”!!
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா!!! நம்மால என்ன செஞ்சிட முடியும்?
இப்படி நமக்கு நாமே அதைர்ய படுத்திக்கறதை விட்டுட்டு நம் வாழ்வை நம்மால் திருத்தி எழுதிக்க முடியும் அப்படின்னு சொன்னா ஆச்சரியமா இருக்குல்ல.
இது உண்மைங்க. நாம எதை விரும்புறோமோ அதை அடைகிறோம். இதுதான் உலக பொது விதி. இதை நாம மறந்திட்டோம்னா தான் நம்ம வாழ்க்கை சிக்கி சின்னாபின்னமாகுது. இப்பவும் நம்பிக்கை வரலையா!!!
”மனம்போல் வாழ்வுன்னு” நம்ம பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க. கனவு நனவாகும்.... நல்லதே நினை... இதெல்லாம் கூட நம்ம பெரியவங்க சொன்னதுதான். அதுக்கான அர்த்தம் என்ன? அதாவது நல்லதே பேசி, நல்லதே நினைச்சா எல்லாம் நல்லபடியா நடக்கும். சில சமயம் நம்ம வாழ்க்கையில் ஏற்படுகிற கசப்பான அனுபவங்களால நாம மனசு ஒடிஞ்சு போயிடறோம். ஆனா அந்த கசப்பான அனுபவமே நம்மளுடைய எதிர்மறையான எண்ணங்களால் வந்த தாக்கம்னு நமக்கு தெரியாது!!
Rhonda Byrne அப்படிங்கறவர் எழுதியிருக்கற புத்தகம் தான் சீக்ரட். நம்ம வாழ்க்கையை நம்ம இஷ்டத்துக்கு வடிவமைச்சுக்கலாம். நீங்க எதை அதிகமா நினைக்கறீங்களோ அது உங்களுக்கு திரும்ப கிடைக்கும். சோக கீதமே பாடிக்கிட்டு இருந்தா சோகமே உருவாக மாறிடுவோம். மாறாக மனதில் மகிழ்ச்சியோடு எப்பவும் நல்லதை நினைச்சோம்னா நல்லபடியா வாழ்வோம்.
உங்க வாழ்வும் நீங்க நினைக்கறபடி நல்லா இருக்கணும்னா என்ன செய்யணும்னு தெரிஞ்சிக்க ஆவலா இருப்பீங்கள்ல. இந்த புத்தகத்தை படிச்சு பாருங்க. அப்படி என்னதான் இருக்கு இந்த புத்தகத்துல அப்படின்னு நினைக்கறீங்கள்ல படிச்சதுல எனக்கு பிடிச்ச ஒரு விஷயத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்.
டீவியில படம் எப்படி தெரியுது???? எங்கயோ ஒளி/பரப்படுவது நம்ம வீட்டு டீவியில எப்படி தெரியுது அதுமாதிரி நம்ம மனசுல எழும் எண்ண அலைகளை நாம பிரபஞ்சத்துக்கு அனுப்புறோம். அதை உள்வாங்கி பிரபஞ்ச சக்தி நமக்கு
அதே போன்ற நிகழ்வுகளை நமக்கு திருப்பி அனுப்புது. அதுதான் நம்ம வாழ்க்கை. நம்ம எண்ணங்களுக்கு அவ்வளவு சக்தி இருக்கு. நாம நல்லது நினைச்சா நல்லதே நடக்கும். எனக்கு இனி விடியாது அவ்ளோதான்னு நினைச்சா அவ்ளவே தானாம்.
இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்னு ரோசனையா இருக்குல்ல.
இந்த புத்தகத்தை படிச்ச என் நண்பர்கள் சிலரோட அனுபவத்தையும் சொல்றேன் கேளூங்க.
ஒரு தோழி தனது உடல்பருமன் குறையணும்னு நினைச்சாங்க. எப்பவும் எக்ஸெல் சைஸ் துணி வாங்கறவங்க முயற்சி செஞ்சு பாப்போமேன்னு எல் சைஸ் வாங்கியாந்து வெச்சுக்கிட்டு இந்த உடுப்பு எனக்கு செட் ஆகணும்னு சொன்னதோட மட்டுமில்லாம அதற்கு ஒரு காலக்கெடுவும் வெச்சுகிட்டாங்க. என்ன ஆச்சரியம் அவங்க ஒரு மாதம்னு நினைச்சிருக்க ஒரு மாதத்துக்கு முன்னாடியே அந்த உடை அவங்களுக்கு செட் ஆகிடுச்சு!!!
எத்தனையோ பொண்ணு தேடியும் என் மகனுக்கு ஏன் கல்யாணம் நடக்கலைன்னு ஒரு பெற்றோர் வேண்டாத தெய்வமில்லை, போகாத கோயிலுமில்லை. ஆனாலும் திருமணம் கைகூடவே இல்லை. இந்த புத்தகத்தை படிச்ச தோழி அந்த நண்பருக்கு “ உன் மனசால எனக்கு மனைவி அமையணும்! “ அப்படின்னு தினமும் சொல்லுங்க. அதோட உங்க அலமாரியில் மனைவிக்காக இடம் ஒதுக்கி வைப்பது, வீட்டை மனைவி வந்தா எப்படி வைக்கணும்னு நினைச்சீங்களோ அந்த மாதிரி செய்ங்க அப்படின்னு சொல்ல ரொம்ப நாளா தட்டிப்போன விரக்தியில் இருந்தவர் செஞ்சு பாக்கலாம்னு இறங்க கல்யாணம் முடிஞ்சிருச்சுன்னு சொன்னா நம்பறீங்களா!!!
புத்தகமா வர்றதுக்கு முன்ன இதைப்பத்தின விடயங்களை வெச்சு சினிமா எடுத்தாங்களாம். புத்தகம் படிக்க நேரம் இல்லைன்னு நினைக்கறவங்க அந்த சினிமாவை பாருங்க. (ட்யூப்மேட்டில் டவுன்லோட் செஞ்சு மொபைல்லயும் பார்க்கலாம்.)
ரகசியத்தை ரகசியமாவே வெச்சுக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் பகிர்ந்துக்கோங்க. எல்லோரும் மகிழ்ச்சியான வாழ்வு வாழ நம்மாலான ஒரு உதவியா இருக்கட்டுமே!!

15 comments:
நல்லதோர் பகிர்வு. எல்லோரும் சந்தோஷமா இருந்தா நல்லது தானே...
எண்ணம் போல் வாழ்வு... 100% சரி தான்...
ரகசியங்கள் அருமை
வாங்க ஆதி,
ஆமாம்பா.. வருகைக்கும் மிக்க நன்றி
வாங்க தனபாலன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஜலீலா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நல்ல விஷயம்தான்...வள்ளுவர் சொன்ன மாதிரி உள்ளத்தனையது உயர்வு.
இங்கிலீசு புத்தகத்தை எலுத்துக் கூட்டி வாசிச்சு கஸ்டப்படற என்ன மாதிரி சனங்களுக்கு நீங்க ரசிச்சதைச சொல்லியிருந்தது ரொம்பவே ரசனையயா இருந்துச்சு தென்றல் மேம்! இந்தப் புத்தகத்தை தமிழ்ல யாரும் பெயர்த்திருக்காங்களான்னு விசாரிச்சுப் பாக்கறேன்...! டாங்ஸு!
நல்ல விஷயம்..... படம் பார்க்கிறேன்.
எத்தனையோ பொண்ணு தேடியும் என் மகனுக்கு ஏன் கல்யாணம் நடக்கலைன்னு ஒரு பெற்றோர் வேண்டாத தெய்வமில்லை >>>>>
எனக்கு கூறியது போல் உள்ளது ......
வாங்க சுந்தரா,
நம்ம முன்னோர்கள் சொல்லிவெச்ச விஷ்யங்களை ஒவ்வொரு தலைமுறைக்கும் முறையா எடுத்து சொல்லப்படுவதில்லை என்பது என் ஆதங்கம்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க பால கணேஷ்,
64 மொழிகள்ல மொழிபெயர்த்திருக்காங்களாம். ட்ரை செஞ்சு பார்க்கலாம்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சகோ,
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அப்பாஜி,
இந்த புத்தகத்தை படிச்சா நமக்கு எதுவும் சாத்தியம்னு தான் தோணுது.

Post a Comment