Saturday, March 08, 2014
லீவு சொல்லிக்கறேன்......
பதிவே ரொம்ப கம்மியா வருது.... இதுல லீவு சொல்லிக்கறேன்னு ஒரு பதிவான்னு கேக்கலாம்.
எனக்கும் பதிவு தொடர்ச்சியா எழுதணும்னு ஆசை தான். ஆனா பல வேலைகள் வந்திருது.
இப்ப ரொம்பவே முக்கியமான வேலை..... பரிட்சை.
ஆஷிஷ் +2, அம்ருதா 9ஆம் வகுப்பு. 11 ஆம் தேதியிலிருந்து அம்ருதாவிற்கும், 13லிருந்து ஆஷிஷிற்கும்
பரிட்சை ஆரம்பம்.
பெரிய பிள்ளைகள் ஆகிட்டாங்க இனி நமக்கு வேலை இருக்காதுன்னு நினைச்சா விடறாங்க இல்லை.
பக்கத்துலேயே இருங்க... அப்பதான் கான்சண்ட்ரேஷன் வருதுன்னு சொல்றாங்க. :)
உங்க கிட்ட ஒப்பிச்சா ஓகேவாகும்னு சொல்லும்போது வேற வேலை எங்க செய்ய... :)))))
பிள்ளைகளுக்கு பரிட்சைன்னா வெறும் படிப்பு மட்டுமில்லையே, நம்ம பங்கும் இருக்கே!!
நேரத்துக்கு சத்தான உணவு.... ஒழுங்கான ஓய்வு, டென்ஷனாகிடாம ரிலாக்ஸ் செய்ய வெச்சு
அப்புறம் படிக்க வைப்பதுன்னு நம்முடைய பங்களிப்பும் ரொம்ப அவசியமாச்சே!!!
அதானால வழக்கம்போல பிள்ளைகளுக்கு மாரல் சப்போர்ட்டா இருந்து உதவும் வேலையை
செய்யப்போறேன். அதனால சீதா கல்யாணத்திலிருந்து எல்லா பதிவுகளுக்கும் வெயிட்டீஸ் விட்டுட்டேன்.
பெரியவங்க எல்லோரும் பிள்ளைகள் நல்ல படியா பரிட்சை எழுத பிரார்த்தனை செஞ்சுக்க
வேண்டிக்கறேன்.
உங்க வீட்டுல குட்டீஸ் இருந்தா அவங்க பரிட்சை நல்லா எழுத என் பிரார்த்தனைகளுடன்
ஆல் த பெஸ்ட் சொன்னேன்னு சொல்லிடுங்க.
இப்போதைக்கு டாடா.....
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
சீக்கிரம் வந்துடுங்க...!
All the best!!
பிள்ளைகளின் பரீட்சைகள்
அம்மாக்களுக்கும்தான்.
சுருக்கமாக அழகாகச் சொன்னீர்கள்
பிள்ளைகள் இருவருக்கும் பரீட்சை நன்றாக எழுத வாழ்த்துக்கள்... உங்களுக்கு இரட்டிப்பு வேலை என்பதால் இரட்டை வாழ்த்துக்கள்....:)
Leave granted.... :)))
All the best to your son and daughter.
நன்றி தனபாலன், வந்திடுவேன் :)
நன்றி ஹுசைனம்மா,
நன்றி முருகானந்தம் அவர்களே
நன்றி சுதர்ஷிணி
நன்றி சகோ
நன்றி தனபாலன், வந்திடுவேன் :)
நன்றி ஹுசைனம்மா,
நன்றி முருகானந்தம் அவர்களே
நன்றி சுதர்ஷிணி
நன்றி சகோ
நன்றி தனபாலன், வந்திடுவேன் :)
நன்றி ஹுசைனம்மா,
நன்றி முருகானந்தம் அவர்களே
நன்றி சுதர்ஷிணி
நன்றி சகோ
நன்றி தனபாலன், வந்திடுவேன் :)
நன்றி ஹுசைனம்மா,
நன்றி முருகானந்தம் அவர்களே
நன்றி சுதர்ஷிணி
நன்றி சகோ
WISH YOU A HAPPY UGADHI
Post a Comment