Wednesday, May 07, 2014

வந்துவிட்டேன்.

லீவு கொடுத்திட்டு போனேன்.... ஆளையே காணோமேன்னு நினைச்சவங்க, மெயிலில் மிரட்டினவங்க :) எல்லோருக்கும் அன்பு கலந்த நன்றி. செம செம பிசியா இருந்திட்டேன். அதான் பதிவு பக்கமே வர முடியலை. இனியாவது தொடர்ந்து வரும் சூழலை இறைவன் கொடுக்கணும் .

 அம்மா அப்பா கல்யாணம் முடிஞ்சே உடல்நிலை ரொம்ப முடியாம இருந்த சூழலோட தம்பியின் திருமணத்திற்கு 3 மாதமே இருக்கற சூழல்ல கல்யாண வேலைகளையும் கவனிச்சாக வேண்டிய கட்டாயம். அம்மா,அப்பா ஒரு ஊர்ல, தம்பி ஒரு இடத்துல, நான் ஒரு இடத்துல. ஒருங்கிணைச்சு வேலைகளை முடிப்பது ரொம்ப மலைப்பா இருந்தது. அம்மா,அப்பாவுக்கும் உடல்நிலை ஒத்துழைக்கலை. ஆனா வேற வழியே இல்லாம கல்யாண வேலைகளை தொடர்ந்தோம்.

புதுகை ஃபங்க்‌ஷன் முடிஞ்ச 10 நாளைக்கெல்லாம் சென்னை வந்து தம்பியின் வருங்காலத்தை அழைச்சுகிட்டு பர்ச்சேசிங் முடிச்சு, அம்மா அப்பாவுடன் ஹைதை வந்து மற்ற பர்ச்சேஸ்களை முடிச்சோம். (சில ரகங்கள் சென்னையில் தான் எடுக்க முடியும்..... அதே போல ஹைதையிலும். உறவினர்களுக்கு கொடுப்பது ஹைதையிலிருந்து வாங்கியதில் ரொம்ப சந்தோஷபட்டனர். சென்னைதான் எப்பவும் எடுக்கறோமே என்ற நினைப்பாக இருக்கலாம்.)

அம்மா,அப்பாவுடன் பர்ச்சேசிங் முடித்ததும் தம்பி சிங்கையிலிருந்து வருவது போல ப்ளான் போட்டிருந்தோம். தம்பி வந்ததும் அவருக்கு தேவையான உடைகளை ஹைதையில் வாங்கிக்கொள்ளலாம் என்பதால் அப்படி திட்டம்.
நானும் உடன் இருக்க வேண்டும் என்பதில் அம்மா, அப்பா, தம்பி நினைத்ததாலும் பல வேலைகளை ஹைதையில் வைத்து முடித்தோம்.

ஹைதையில் வைத்து பார்த்ததில் நான் அம்மா,அப்பாவுடம் கடைக்கு போய் உதவிய மாதிரியும் ஆச்சு,  இங்கே இவர்களையும் பார்த்து கொண்ட மாதிரி ஆச்சு. சமையல் செய்து பிள்ளைகளை பள்ளி அனுப்பி விட்டு மதியத்துக்குள் சில பர்ச்சேஸ், வீடு வந்து சாப்பிட்டு திரும்ப அடுத்த ரவுண்ட் என ஒரே ஓட்டம் தான்.

தம்பிக்கு பெண் பார்க்க ஆரம்பித்த உடனேயே நாங்கள் எல்லா லிஸ்ட்டும் ரெடி செய்து வைத்திருந்தோம். அழைப்பவர்கள் லிஸ்ட், சீர் செய்ய வேண்டிய லிஸ்ட்,  துணி மணிகள் வாங்கி மரியாதை செய்ய வேண்டிய லிஸ்ட் என எல்லாம் கம்ப்யூட்டரில் போட்டு வைத்திருந்தேன். அதை தம்பியுடன் கூகுள் ட்ரைவில் ஷேர் செய்து கொண்டதால் சின்ன மாற்றம் இருவரில் யார் செய்தாலும் மற்றவருக்கு தெரிந்து விடும். அம்மா,அப்பாவிடம் ஒரு காப்பி பிரிண்ட் எடுத்து கொடுத்து வைத்திருந்தோம். அதனால் சரியான திட்டமிடல் சாத்தியமாக இருந்தது. என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எப்படி, எங்கே என்பதும் திட்டமாயாச்சு. செயல் படுத்த வேண்டியது தானே பாக்கி...

அதனால் என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் நேரம் வீணாகவில்லை. அம்மா அப்பா ஊருக்கு கிளம்பிய உடன் பத்திரிகை பிரிண்ட் கொடுத்துவிட்டார்கள்.  2 நாளில் ரெடியாகி வந்துவிட்டதும் கூட. உடன் குல தெய்வம் கோவிலுக்கு மற்றும் சில கோவில்களுக்கு நேரடியாக சென்று அம்மா, அப்பா பத்திரிக்கை வைத்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன் என்று போன் செய்து பேசினார்கள். அடுத்த பத்தாவது நிமிடம் மும்பையிலிருந்து போன். அம்மம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம் என்று.

அம்மம்மாவிற்கு ஏற்கனவே சிறுக சிறுக வலி அவ்வப்போது வருவதும் டாக்டரிடம் காட்டுவதும் நடந்து கொண்டிருந்த ஒன்று தான் என்றாலும் ஐசியுவில் வைக்கும் அளவுக்கு இருக்கிறது என்பது கவலையை அதிகமாக்கியது. 3 நாள் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வலி கொஞ்சம் பரவாயில்லை என நினைத்துக்கொண்டிருந்த பொழுது நிலமை மிக மோசமாகி ஆஞ்சியோ செய்ய வேண்டுமென்று டாக்டர்கள் சொல்ல மாமாவும் சரி என்று சொல்லியிருக்கிறார். திரும்ப ஐசியூவில் கொண்டு போய் வைத்துக்கொண்டு மருத்துவம் பார்க்கிறேன் என்று ஏதோ செய்தவர்கள் கூடிக்கூடி பேசி சாயந்திரம் வாக்கில் ஆஞ்சியோ செய்யும் வசதி இங்கே இல்லை நீங்கள் வேறே ஏதாவது பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து போங்கள் என்று சொல்லிவிட்டார்கள். பிப்ரவரி மாதக்கடைசியில் இந்த பரபரப்பு.

வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து போங்கள் என்று சொன்ன அதே வேளையில் நிலமை கவலைக்கிடம் என்பதையும் வலியுறுத்தி சொல்ல அம்மாவும், சித்தியும் அடுத்த ஃப்ளைட்டில் மும்பை கிளம்பினார்கள்.




11 comments:

மங்களூர் சிவா said...

technology improved so much.

hearty wishes to karthi.

கோமதி அரசு said...

இறைவன் அருளால் அப்பா நலமாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

welcome back....

puduhai.pudhalvan said...

ammavin udal nalamadaya iraivanai prarthikkirein

Appaji said...

இந்த கொளுத்தும் வெயிலை தங்களது எழுத்து நடையால்
தென்றலாக வீசி, பாலைவனத்தை (இரண்டு மாத இடைவெளியை ) சோலை வனம் ஆக்கி
விட்டீர்கள்.....

சகோதரருக்கு வாழ்த்துகள்...

அம்மம்மா தற்பொழுது எப்படி உள்ளார்கள்...

Appaji said...

இந்த கொளுத்தும் வெயிலை தங்களது எழுத்து நடையால்
தென்றலாக வீசி, பாலைவனத்தை (இரண்டு மாத இடைவெளியை ) சோலை வனம் ஆக்கி
விட்டீர்கள்.....

சகோதரருக்கு வாழ்த்துகள்...

அம்மம்மா தற்பொழுது எப்படி உள்ளார்கள்...

மன்சி (Munsi) said...

http://www.youtube.com/watch?v=NyUo2yKV2hA

Reminds me of you and a few others. Telugu people accepted Tamil as their mother tongue

Anonymous said...

நீங்க வந்திட்டீங்க. நான் ஊருக்குப் போயிட்டேன்!!

Thenammai Lakshmanan said...

அம்மா நலமா..

pudugaithendral said...

நன்றி சிவா,

நன்றி கோமதி அம்மா. அம்மம்மா நலமே.

நன்றி சகோ

நன்றி புதுகை புதல்வன்

நன்றி அப்பாஜி. அம்மம்மா நலம்.

என்னை நினைவுக் கூர்ந்ததற்கு நன்றி மன்சி

நன்றி கடைசி பெஞ்ச். இப்படியே கண்ணாமூச்சி ஆடிக்கிட்டு இருக்கோம். சந்திப்பு எப்ப நடக்குதுன்னு பாப்போம். :)

pudugaithendral said...

நன்றி சிவா,

நன்றி கோமதி அம்மா. அம்மம்மா நலமே.

நன்றி சகோ

நன்றி புதுகை புதல்வன்

நன்றி அப்பாஜி. அம்மம்மா நலம்.

என்னை நினைவுக் கூர்ந்ததற்கு நன்றி மன்சி

நன்றி கடைசி பெஞ்ச். இப்படியே கண்ணாமூச்சி ஆடிக்கிட்டு இருக்கோம். சந்திப்பு எப்ப நடக்குதுன்னு பாப்போம். :)