கல்யாண வேலைகளில் மண்டை காய்ஞ்சு, உடம்புக்கு அலைச்சல்னு ஆனிச்சோ இல்லையோ பின்னாலேயே வந்த பசங்க பரிட்சையில மண்டை நிஜமாவே காஞ்சு போச்சு. ”எப்பவும் போல அம்மா உங்க கிட்ட சொன்னாத்தான் சரியா இருக்கும்னு” பசங்க. அதனால அவங்க படிக்க உக்காந்தா நானும் அவங்க கூட இருப்பேன். நடுவுல கொஞ்சம் ப்ரேக் விட்டு படிக்க வெச்சு, ரிலாக்ஸாக்கி, நல்லா சாப்பாடா கொடுத்துன்னு வேலை தான். அதுலயும் ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்துல பரிட்சை தான்னாலும் இந்த வாட்டி மகன் +2 மகளுக்கு 9த்ம் போர்ட் பரிட்சை. 3 மாசமா வேலைப்பளுவுக்கு பிறகு ஓய்வே இல்லாம போக அயித்தான் கிட்ட பாருங்க சாமி! பரிட்சை முடிஞ்சதும் எனக்கு ஓய்வு கண்டிப்பா வேணும். எங்கயாச்சும் போறதுக்கு ஏற்பாடு செய்ங்கன்னு சொன்னேன்.
அவுகளும் “ஆமாம். யூ நீட் ப்ரேக்னு” சொல்ல வழக்கம்போல வெளில போக திட்டம். அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில ரங்கனை சேவிச்சோம். :)) அதேதான் நமக்கு மனசை என்னவோ அங்கயே விட்டுட்டு வந்த மாதிரி இருக்கு. மனசுக்கு ஒட்டுதலா இருக்கணும்னா அங்கதான் போகணும் ஒரு மனதோட முடிவு செஞ்ச நேரம், பக்கத்துலயே இருக்கற அங்கயும் போகலாம்பான்னு சொல்ல ஆமாம் அம்ருதாவும் இப்ப ரெடில்ல. சரின்னு ப்ளான் போட்டு டிக்கட் புக் செஞ்சாச்சு. நம்ம நாட்டுக்கு போக நமக்கு இன்னாத்துக்கு ட்ராவல் ஏஜெண்ட். எஸ்ஸூ போனது இலங்கைக்கு.
ஸ்ரீலங்கன் விமானச்சேவையில் சூப்பர் டிஸ்கவுண்டில் டிக்கட் கிடைத்தது. போக வர டிக்கட் ரெடி. தங்குவதற்கு? அதுல பார்த்தா இப்ப எல்லா ஹோட்டல்கள்லயும் கன்னாபின்னா ரேட்டு. ஹோட்டல்கள் இவ்வளவுதான் பணம் வசூலிக்கணும் அதுல இம்புட்டு அரசாங்கத்துக்கு கொடுக்கணும்னு இருக்காம். அதனால 2009ல போனதைவிட செமயா ரேட்டெல்லாம் ஏறியிருக்கு. நம்ம பட்ஜட்ல வரணும்!!! என்ன செய்யலாம்? அப்படின்னு யோசிக்கயில அயித்தானோட நண்பர் தான் ஒரு கெஸ்ட் ஹவுஸ் நடத்திகிட்டு இருப்பதாகவும், மொத்த பங்களாவையும் எங்களுக்கு கொடுத்திடறதாவும் சொல்லி அந்த பங்களாவுடைய லிங்கை அனுப்பி வெச்சாப்ல.
பங்களா இருப்பது கொஞ்சம் ஜயவர்தனபுர (பாராளுமன்றம் அங்கதான் இருக்கு) மெயின் சிட்டியிலிருந்து கொஞ்சம் தூரம்தான். போக வர வண்டி இருக்க போவுது அப்புறமென்ன கவலைன்னு லிங்கை பார்த்தோம். ரொம்ப பிடிச்சிருந்தது. நண்பரிடம் சொல்ல நல்ல டிஸ்கவுண்ட் கொடுத்தார். அயித்தானும் அவரும் நண்பர்கள். அவரது மகனும் ஆஷிஷும் பள்ளியில் ஒன்றாக 5 வருடம் படிச்சாங்க. ஆனா இப்ப வரைக்கும் அவங்க நட்பு தொடருது. ஒரு 12 வருஷமா. ( அவங்க வீட்டுக்கு சாப்பிட போயிருந்த போது பக்கத்து வீட்டுக்காரரான ஃப்ரெஞ்ச் விசா ஆபிசர் ரொம்ப ஆச்சரியப்பட்டார். இத்தனை வருட நட்பு அதுவும் இலங்கையில் இல்லாமலிருந்தும் தொடர்வது ரொம்ப ஆரோக்கியமான விஷயம்னு)
உங்களுக்கும் உதவும்னு அந்த கெஸ்ட் ஹவுஸ் லிங்க்:
சென்னையில் ஸ்ரீலங்கன் விமானச்சேவையில் ஏறி உட்கார்ந்ததும் அப்படிஒரு சந்தோஷம். இலங்கையை அடைய 1.30 நிமிடம் ஆகுமே என்பதுதான் கவலை. அதென்னவோ சில ஃப்ளைட்டுகள் சென்னை - மாத்தல - கொழும்புன்னு இருக்கு. அன்னைக்கு ஃப்ளைட்டும் மாத்தல போய் அங்கேயிருந்து 20 நிமிடத்துல கொழும்பு. வெளியில் வந்ததும் அயித்தானின் அலுவலகம் ஏற்பாடு செஞ்சிருந்த வண்டி ரெடியா இருந்தது. எங்க எல்லோர் முகத்துலயும் அம்புட்டு குஷி.
எந்த வழியா போகட்டும்னு கேட்க, புதுசா கட்டியிருக்கற ஹைவேயில போவோம்னு சொல்லி போனோம். சூப்பரா இருக்கு. தாஜ் ஏர்போட் கார்டன் பேக் வாட்டர்ஸ் பக்கமா ஹைவே கட்டியிருக்காங்க. இதனால ஜாஎல, அந்த பக்கம் ட்ராபிக்ல மாட்டிக்க வேண்டாம். Gale வரைக்கும் ஹைவே போட்டிருக்காங்க. குறைஞ்சது 2 மணி நேரத்துல போயிரலாம்னு கூடுதல் தகவல் சொன்னாட் ட்ரைவர்.
கெஸ்ட் ஹவுஸ் போய் சேர்வதற்கு முன்னால இரவு சாப்பாடு பேக் செஞ்சு எடுத்துக்கிட்டு போயிடலாம்னு ப்ளான். எங்க போறது பிள்ளைகள் சாய்ஸ் Arpico. அங்க போய் கொஞ்சம் கெட்டித்தயிர், Elephant house ice cream வாங்கிகிட்டு வெளிய இருக்கற food courtல கொத்து பார்சல் செஞ்சு எடுத்துக்கிட்டு கிளம்பினோம். 20 நிமிஷத்துல கெஸ்ட் ஹவுஸ் சேர்ந்திட்டோம். அயித்தானோட நண்பர் வந்து பேசிட்டு போனாங்க. ரொம்ப நாளைக்கப்புறம் கொத்து.... :)
கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கற கேர் டேக்கர் நாளை காலைச்சாப்பாடு என்ன வேணும்னு சொல்ல பசங்க “ இடியாப்பம், தால், வெஜிடபிள் ரோட்டின்னு “ சொல்ல இதெல்லாம் இருந்தா ஓகேவா ,” இந்தியாவிலேர்ந்து வர்றாங்கன்னு சொல்ல இட்லிக்கு ஏற்பாடு செய்வோம்னு இருந்தேன்னு சொல்ல, “அதெல்லாம் எங்க ஊர்ல கிடைக்கும். இங்கத்த சாப்பாடு தான் வேணும்னு பசங்க கோரஸா சொல்ல” கவலைய விடுங்க தம்பி சிரிச்சுகிட்டே சொன்னார் மைக்கேல்.

9 comments:
Have a break, have a kitkat!
நன்றி கடைசி பெஞ்ச்
படிக்க ஆரம்பிச்ச உடனேயே லிங்க் குடுங்கன்னு கமெண்ட்ல கேக்கலாம்ன்னு நினைச்சே. கேக்காமலேயே குடுத்திட்டீங்க. ரொம்ப நன்றி.
இலங்கை சுற்றுலாவிற்கு எத்தனை நாட்கள் தேவைப்படும். காஸ்ட் (2 பெரியவர்கள், 2 குழந்தைகள்) தோராயமாக எவ்வளவு ஆகும், போன்ற விவரங்கள் கிடைக்குமா?
Much needed break.... Enjoy...
வாங்க தானைத்தலைவி,
அதெல்லாம் நட்புக்களிடம் பகிர்ந்துக்காம எப்படி. உங்களுக்கு விரிவா மெயில் அனுப்பறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
நன்றி சகோ
வணக்கம்
தங்களின் பயண அனுபவம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் நீங்கள் இலங்கையின் திருகோணமலைக்கு சென்றிருந்தால் இராமாயண வரலாற்று சின்னங்களையும் ஈழத்தில் பாடல்பெற்ற தலமான கோணேஸ்வரப்பெருமனையும் தரிசிக்கலாம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்,
5 வருஷம் முன்னாடிவரைக்கும் கொழும்புல தான் இருந்தோம். அதனால எல்லா இடங்களையும் ஓரளவுக்கு பாத்திட்டோம். பாக்கி இருப்பது நல்லூர் கந்தன் தான்.
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment