Tuesday, July 22, 2014

தலைப்பெல்லாம் ஒண்ணும் வைக்கலீங்க

2014 செம பிசி வருடமா இருக்கப்போவுதுன்னு போன வருஷ கடைசியிலேயே தெரிஞ்சி போச்சு. எப்படியும் 6 மாசத்துக்கு பிசியாகிடுவோம்னு ப்ளான் பண்ணிக்கிட்டேன். ஒவ்வொரு மாசமும்  ஆரம்பிச்சதும் தெரியலை முடிஞ்சதும் தெரியலைங்கற லெவலுக்கு பிசியாகி கிடந்தேன். யெஸ்ஸு கிடந்தேன்னு தான் சொல்லணும்.

வேலைகளுக்கு இடையே இடையே முடியாம முடியாம படுக்கறதும்  நடந்தது. மைனர் ஆப்பரேஷன், காலில் வார்ட் ரிமூவல், இதோடு ஏதோ GERD வேற. ட்ரீட்மெண்ட் இன்னமும் நடந்துகிட்டு இருக்கு. இப்பத்தான் பசிச்சு சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன்.

எல்லாமும் சந்தோஷமான நிகழ்வுகள் தான். அதனால மனசு குதூகலமா வேலை பாத்துச்சு. ஆஷிஷுக்கு காலேஜ் அட்மிஷன் கிடைச்சாச்சு. அவர் விரும்பின மெக்கானிக்கல் எஞ்சினியரிங், சென்னயில இப்ப ஆஷிஷ். இது நாள் வரைக்கும் பிள்ளைகளை விட்டு பிரிஞ்சதே இல்லை. கஷ்டமாத்தான் இருக்கு. ஸ்கூல் லீவ்னு பசங்க வீட்டுல இருந்தாலே சந்தோஷப்படுவேன். அப்படி இருக்க “அம்புட்டு” தூரம் அனுப்பி வெக்க கஷ்டம்தான்.  இதுவும் வாழ்க்கையில சகஜம்னு மனசை தேத்திக்கிட்டு அனுப்பி வெச்சிருக்கேன்.

உறவுகளும் நட்புகளும் மறக்காம கேட்ட கேள்வி அதுவும் ஆஷிஷ் கிட்டயே,” உங்கம்மா உன்னை விட்டுட்டு இருந்திருவாளா? எப்படி இருப்பா?” :)  என்ன செய்ய என்னுடைய தோழிகள் சில பேர் தன் பிள்ளைகளை படிக்க வெளிநாட்டுக்கெல்லாம் கூட அனுப்பி வெச்சிருக்காங்க. அவங்களை எல்லாம் நினைச்சு பாத்துக்கிட்டேன். நமக்கென்ன? இந்தா இருக்கு சென்னை. ஒரு எட்டு பிள்ளைய பாக்கணும்னாலும் போகலாம், லீவுக்கு பிள்ளை வரணும்னாலும் மிஞ்சி போனா 2 மணிநேரத்துல வீட்டுல இருக்கும். அப்படின்னு மனசை தேத்திக்கறேன்.



ஆனா பாருங்க ஆஷிஷை காலேஜ்ல கொண்டு போய் விட்டுட்டு வீட்டுக்கு வந்ததற்கப்புறம் ஆஷிஷுக்கும் சேத்து சமைச்சு வெச்சிருந்தேன். டீ/காபி போடும் போதும் பழக்க தோஷத்துல ஆஷிஷுக்கும் சேர்த்து போட்டேன்.  தினமும் 3 வேளையும் வாட்ஸப்பில் மெசெஜ், போனில் பேசறதுன்னு ஓட்டிக்கிட்டு நானும் மனசை தேத்திறலாம்னு பாத்தா...................................

அப்பா, பொண்ணு கூட்டணி ரொம்ப ஸ்ட்ராங்க போய்க்கிட்டு இருக்கு. எனக்கு சப்போர்ட் பண்ண ஆளில்லாம தவிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா இவங்க ரெண்டு பேரும் அடிக்கற கொட்டத்துக்கு தான் அடிக்கடி ஆஷிஷுக்கு போனைப்போட்டு சொல்லிக்கறேன். “ வாட்டு டூ மம்மி”ன்னு அவரும் அங்கே அதே லெவல் தான். ம்ம்ம்ம்ம்ம் :((( :)))))

ஆஷிஷோட முன்னாள் ஸ்கூல்ல படிச்ச பசங்க  அப்படி இப்படின்னு தெரிஞ்ச பசங்களும் அங்கே ஹாஸ்டல்லயும் இருக்கறதால அவருக்கும் கொஞ்சம் சுணக்கம் இல்லாம இருக்கு. வீட்டு ஏக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். இது வரைக்கும் கைக்குள்ளயே இருந்த பையன்.  பறக்க கத்துக்கத்தானே வேணும்!!

அம்ருதம்மா இந்த வருடம் 10த்.  இனி அடுத்த 3 வருடங்கள் அம்ருதம்மாவுடன் லாக்குன்னாலும்  நேரம் நிறைய்ய இருக்கு. இம்புட்டு காலியா இருப்பது நான் தானாங்கற யோசனை அப்பப்ப வந்திட்டு போவுது. :)

இதனால இனி இந்தப்புயல் இனி தொடர்ந்து வீசும் என சொல்லிக்கணும். வீசணும்னு நீங்களும் பிரார்த்தனை செஞ்சுக்கோங்க ப்ளீஸ்!!!! :))

10 comments:

கோமதி அரசு said...

இதனால இனி இந்தப்புயல் இனி தொடர்ந்து வீசும் என சொல்லிக்கணும். வீசணும்னு நீங்களும் பிரார்த்தனை செஞ்சுக்கோங்க ப்ளீஸ்!!!! :))//

உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.
பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.
தென்றல் வீசுவதை அனுபவிக்க ஆவலாக இருக்கிறோம்.

குழந்தை இவ்வளவு நாள் கூடவே இருந்துவிட்டு வெளியூருக்கு போவது மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.

pudugaithendral said...

வாங்க கோமதி அரசு அம்மா,

ரொம்பவே கஷ்டமா இருக்கு. மகன் எதிர்ல அழுதிடாம இருக்கணும்னு ரொம்ப கண்ட்ரோலா இருந்தேன் பழகிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ADHI VENKAT said...

உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள். நாங்களும் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

ஆஷிஷின் நலனுக்காக மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.

pudugaithendral said...

வாங்க ஆதி,

நன்றீஸ்

:))

Anonymous said...

மேற்கல்விக்கு சென்னை வந்த தெலுங்கானா இளம்புயலுக்கு இனிய வரவேற்புகள்

பாண்டியன்
புதுகை

pudugaithendral said...

வாங்க நம்ம ஊர்க்காரரே

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றீஸ்.

சுசி said...

அட ! நீங்க ஒண்ணும் கவலையே படாதீங்க, பையன் நல்லா வருவாரு, உங்க பையனாச்சே... இந்த அப்பா, பொண்ணு கூட்டணி தான் கொஞ்சம் கஷ்டம் அதுவும் ஒண்ணும் கவலைபடாதீங்க, எப்பவும் மைனாரிட்டீஸ்க்கு தானே பவர் அதிகம்.:) உடம்பை பார்த்துக்கோங்க. நாங்கள்ளாம் சென்னையில தானே இருக்கோம், சொல்லுங்க எதுன்னாலும் உடனே வர்றோம்.

pudugaithendral said...

வாங்க தானைத்தலைவி,

ரொம்ப நன்றிப்பா. புது இடத்துல செட்டாகிட்டாரு. ஃப்ரெஷஷ் டே அன்னைக்கு சாரோட டான்ஸ் ஃபெர்மாமன்ஸ் இருக்கு.கலக்கலா இருக்கப்போகுது. கண்டிப்பா சொல்றேன்பா.

மிக்க நன்றீஸ்

புதுகை.அப்துல்லா said...

தனியா இருந்தாலும் எப்படி இருக்கணும்னு என் மாப்ளைக்கு தெரியும். யூ பிளீஸ் டோன்ட் ஒர்ரி :)

சுசி said...

எப்போன்னு சீக்கிரம் மெயில் பண்ணுங்க. கட்டாயம் பார்க்கிறோம்.