Thursday, October 23, 2014

ஹாப்பி தீபாவளி!!!!

நட்புக்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். தீபாவளி தான் நேத்தே முடிஞ்சிருச்சே இன்னைக்கு என்ன வாழ்த்து சொல்றேன்னு பாக்கறீங்களா??!!! நம்ம ஊர்லதாங்க தீபாவளி ஒரே ஒரு நாள். இங்கன எல்லாம் 3 நாள். எனக்கு தெரிஞ்சு எங்க வீட்டுல 3 நாள் தான் தீபாவளி. மொதோ நாள் நீர் நிறைக்கும் பண்டிகை. அன்னிக்கு உக்காரை, பஜ்ஜி தான் மாலை டிபன். தலை தீபாவளிக்கு மகளும், மருமகளும் வீட்டுக்கு வந்திருந்தாங்கனா, சின்ன வெங்காயம் முள்ளங்கி அரைச்சுவிட்ட சாம்பார் தடபுடலா நடக்கும்.

 அடுத்த நாள் நரக சதுர்த்தசி ஸ்நானம். விடிய காலமே எந்திரிச்சு முதல் நாளே காய்ச்சிய எண்ணெய் தேய்ச்சு குளிச்சு, சாமி கும்பிட்டு, கார்த்திகை மாதிரி விளக்குகள் ஏத்தி, பட்டாசு வெடிச்சு விடிய ஆரம்பிச்சதுமே தீபாவளி ஓடிப்போயிடிச்சுன்னு வீதியில கத்திக்கிட்டு பசங்க வருவாங்க. அப்புறம் அக்கம் பக்கம், உறவினருக்கு பட்சணம் கொடுக்கும் வேலை. தீபாவளி அன்னைக்கு அமாவாசையா இருந்தா அன்னைக்கு இல்லாட்டி, அடுத்த நாள் குபேர பூஜை செய்வாங்க இதுதான் பழக்கம். இப்படி பழகின எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் ஹைதையில் தீபாவளி வித்தியாசமா இருந்துச்சு.


நரக சதுர்த்தசி ஸ்நானத்துக்கு 4 மணிக்கே எந்திரிச்சா எங்க வீட்டுல மட்டும் தான் லைட் எரியுது!!! பட்டாசு சத்தம் கேக்கணுமே.... ஹுஹூம். குளிச்சு, பூஜை செஞ்சு நாம பட்டாசு வெடிக்க போகலாம்னு போனா தெருவே காலியா இருக்கு!!! நம்ம பழக்கத்துக்கு பட்டாசு போட்டுட்டு வருவோம்னு  ஏதோ வெடிச்சிட்டு வந்தோம். நாள் முழுசும் எந்த சத்தமுமே இல்லாம எனக்கு தீபாவளி மாதிரியே தெரியலை.

சாயந்திரம் உறவினர் வீட்டுக்கு போனா, அங்க அப்பதான் லட்சுமி பூஜை செஞ்சுகிட்டு இருந்தாங்க. (நான் காலையிலயே முடிச்சேன்) அப்புறம் தான் தெரிஞ்சது நரகசதுர்த்தசி ஸ்நானம் இங்க தீபாவளி கிடையாது. அமாவாசை எப்ப இருக்கோ அதுதான் முக்கியம், அமாவாசை சாயந்திரம் லட்சுமி பூஜை செஞ்சு, புத்தாடை, பட்டாசு விளக்கேத்தறதுன்னு அமர்க்களமா தீபாவளி கொண்ட்டாட்டம். ஹைதையில் வட இந்தியர்கள் ஜாஸ்தி. குஜராத்தி, மார்வாடி காரங்களுக்கு தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து புத்தாண்டு. ஆக  லட்சுமி பூஜை முடிஞ்சு வெடிக்க ஆரம்பிச்சா விடிய விடிய வெடி தான்.

இந்த வருஷம் கூட நேத்து அம்ருதம்மாவுக்கு ஸ்கூல் இருந்தது. (நாங்க டும்மா அடிச்சோம்) இன்னைக்கு, நாளைக்கு லீவு. :) இன்னைக்கு லட்சுமி பூஜை.  ஆஷிஷ் அண்ணாவுக்கு நேத்து ஒரு நாள் தான் லீவு. அதனால அண்ணா இங்கே வரலை. அண்ணா இல்லாம மொதோ வாட்டி தீபாவளி. பெருசா ஏதும் செய்யலை. சிம்பிளா கடையில் வாங்கின ஸ்வீட்களோட முடிச்சிட்டோம். ஆஷிஷ் அண்ணா மாமா கூட சென்னையில் தலைதீபாவளியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். :) (தலை தீபாவளி எனக்கா??! ஆஷிஷுக்கான்னு தெரியலைக்கா!!!! என் மாமியார், மாமனார், அம்மா, அப்பா எல்லாம் ஆஷிஷை நல்லா கவனிச்சுகிட்டு இருந்தாப்ல. நானும் என் பொண்டாட்டியும் இருந்ததையே மறந்துட்டாங்களோன்னு நினைச்சோம்னு புலம்பினாப்ல தம்பி ) :)

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கலாச்சாரம். இதுவும் சரிதான். :)




8 comments:

கோமதி அரசு said...

தீபாவளி வாழ்த்துக்கள்.
பதிவு அருமை.

pudugaithendral said...

வாங்க கோமதி அரசு அம்மா,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வெங்கட் நாகராஜ் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

pudugaithendral said...

வாங்க சகோ,

வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

Unknown said...

Akka after a long time. Happy deepavali to everyone in family. How's your health now??

Uma (Bayarea, CA)

Vaishnavi said...

HAPPY DIWALI MAM.PAST WEEK I SENT U A MAIL.DID U SAW THAT?

pudugaithendral said...

வாங்க உமா,

இப்போ நலம். தங்களின் அன்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

pudugaithendral said...

வாங்க வைஷ்ணவி,

மெயில் ஏதும் வரலைப்பா.