Saturday, October 25, 2014

DAWAT - E-ISHQ

ஆஷிஷ் ஹைதை வந்திருந்த சமயம் அம்ருதம்மாவுக்கும் பரிட்சை முடிஞ்சிருந்ததால கண்டிப்பா சினிமா போகணும்னு ப்ளான் செஞ்சு போனோம். தாவத்தே இஷ்க் என்கிற இந்த சினிமாவுக்கு நான் ஆஷிஷ் அண்ணா, அம்ருதம்மா 3 பேரும் போனோம்.

இந்த படத்துல ஹீரோயின் ஹைதையை சேர்ந்தவங்களா காட்டியிருக்காங்க. ஹைதையில ஷூட்டிங் நடந்திருக்குன்னு படிச்சதால ஒரு அட்ராக்‌ஷன். இல்லாட்டி இந்த ஆதித்யா ராய் கபூர் படங்கள்னாலே அலர்ஜியா இருந்தது. அவருடைய முந்தைய படங்களாக நான் பார்த்த ஆஷிக்கி-2 மற்றும் யே ஜவானி ஹே திவானி இரண்டிலயும் பாட்டிலும் கையுமாகத்தான் ஆதித்யா இருப்பார்.

படத்துல கதை ஓஹோ இல்லை. ஆனா இப்படியும் செஞ்சா சிலருக்கு புத்திவரும்னு மனசுல தோணுது. மேட்டர் என்னன்னா வரதட்சணை கொடுமை. கோர்ட்டில் குமாஸ்தா வேலை பார்க்கும் அனுபம் கெர்ரின் மகள் பரினிதி சோப்ரா. பல வரன்கள் வந்து வரதட்சணையால் தட்டிப்போகுது. அதனால் அப்பாவை எப்படியோ கன்வீன்ஸ் செய்து  ஃபேக் மேட்ரிமோனி ஐடி கிரியேட் செய்து, வேற ஊரில்((லக்னோ) மாப்பிள்ளை பார்க்கும் சடங்கு ஏற்பாடு செய்கிறார்கள்.ஐடியா என்னன்னா!!! இண்ட்ரவ்யூக்கு வரும் மணமகன்  வீட்டுக்காரங்க கேட்கும் வரதட்சணையை பத்தி வீடியோ ரெக்கார்ட் செஞ்சு, ஜாஸ்தியா கேக்கறவங்க கிட்ட திருமணத்துக்கு ஏற்பாடு செஞ்சு  திருமணம் முடிஞ்சதும் அவங்ககிட்ட வீடியோவை காட்டி  அவங்க கிட்டேயிருந்த பணத்தை எடுத்துக்கிட்டு தப்பிச்சு போறதா ப்ளான்.

அதனாலத்தான் ஹைதராபாத்திலிருந்து லக்னோ போறாங்க அப்பாவும் பொண்ணும். மணமகன் வீட்டினரை நம்ப வைக்க பெரிய்ய ஹோட்டல்ல தங்கறாங்க. தங்க பேரை மாத்திக்கிட்டு சில ஐடிக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு போன் செய்து  இண்டர்வ்யூவுக்கு கூப்பிடுகிறார்கள். அதில் ஹைதர் கபாப் கடையின் ஓனர்  ஆதித்யாவும் இருக்கிறார்.



தன்னோட பெற்றோர் வரதட்சணை கேட்டாலும், அந்த வரதட்சணைக்கான பணத்தை  பெற்றோருக்கு தெரியாம பரினிதிக்கு கொடுத்து திருமணம் செய்துக்கறார் ஆதித்யா. அப்புறம் என்ன நடக்குது என்பது தான் சூப்பர்.
ஹைதையில ஹிந்தி பேசுறது வித்தியாசமா இருக்கும். இங்க வந்த புதுசுல  என்ன பேசறாங்கன்னு புரிய கஷ்டமா இருந்துச்சு. அந்த ஸ்லாங்கை பர்னிதியும் அனுபம் கெர்ரும் பேசி நடிச்சிருக்காங்க.

செப்டம்பர் 19 தான் இந்தப்படம் ரிலீஸ் ஆச்சு. ஆனா அதுக்குள்ள டீவில போடறாங்க. நாளைக்கு சாயந்திரம் 7 மணிக்கு சோனிடீவில போடுறாங்க. பாருங்க நல்லா இருக்கும்.




2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தெளிவான விளக்கம் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

pudugaithendral said...

வாங்க ரூபன்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி