Thursday, November 13, 2014

ஹைதை ஆவக்காய பிரியாணி - 13-11-14

பிரியாணி போட்டு ரொம்ப நாளாச்சு. :) வாங்க சுடச்சுட சாப்பிடலாம்.
 ****************************************************************************
 கடப்பான்னு ஊர் ஆந்திராவுல இருக்கு. கேள்வி பட்டிருப்பீங்க. அதென்ன
கடப்பான்னு பேர்.  எங்க ஊர் பக்கம் கடப்பான்னு ஒரு வித குருமா சாப்பிடும்போது கூட எதுக்கு எது பேர். எதனலன்னு கன்ஃப்யூசிங் .
கடப்பா கல்லு கிடைக்குதா, அதனாலத்தான் அப்படி பேரான்னு யோசிச்சிருக்கேன். இப்பதான் அதுக்கு பதில் கிடைச்சது.
தெலுங்குல “கடப்பா(கடப்ப)” என்றால் “வாசற்படி”. இந்த ஊருக்கும் அதான் பேரு. வாசற்படி எதுக்கு? எல்லாம் நம்ம வெங்கி தரிசனத்துக்குத்தான். இந்த ஊருக்கு வந்து இங்கே இருக்கும் லக்‌ஷ்மி வெங்கடசேஸ்வர சாமியை கும்பிடுவதுதான் திருப்பதி போவதற்கு முதல் படியாம். இங்க வந்து தரிசனம் செஞ்சிட்டு அப்புறம் திருப்பதி போனா பலிதம் என்பதாலத்தான் இந்த ஊருக்கு இப்படி ஒரு பேர். அந்த கோவில் அமைந்திருக்கற கிராமத்துக்கு பேரு கூட
தேவுனிகடப்ப. சாமியின் படின்னு அர்த்தம். சூப்பரா இருக்குல்ல.
********************************************************************************


 ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்வாங்க. அந்த மாதிரி தான் ஆகிப்போச்சு எங்க கதை. தெலங்கானாவாகி 6மாசம் ஆகுது. வைஃபை சிட்டியாக்குறோம்னு சொல்றாங்க, Tankbund சுத்தி அடுக்குமாடி கட்டி
அழகாக்குறோம்னு சொல்றாங்க. எதுவும் ஆகுறவரைக்கும் ஒண்ணும் சொல்வதற்கு இல்லை. அரசாங்கம் நடக்குதான்னு டவுட்டா இருக்கு.
6 வருஷம் முன்னால இங்க விலைவாசி ரொம்ப குறைவு. இப்ப தமிழ்நாட்டைவிட இங்கதான் பெட்ரோல் விலை ஜாஸ்தி. படுத்துகிடக்கும் ரியல் எஸ்டேட் எப்ப எந்திரிக்குமோ? வாடகையும் குறைஞ்சு போச்சு
என்னவோ போடா மாதவா ரேஞ்சுக்கு புலம்பல் தான்.
****************************************************************************
பக்கத்து மாநிலமான ஆந்திராவுக்கு அதிர்ஷ்டம் சந்திரபாபு நாயுடு கிடைச்சிருக்காருன்னு தெலங்கானா காரங்களே சொல்வதை கேட்டிருக்கேன். அந்த கண்ணுதான் பட்டுடிச்சு போல. ஹுட் ஹுட் புயல் விசாகபட்டிணத்தை புரட்டி போட்டு வெச்சிருக்கு. பச்சை பசேல்னு இருந்த ஊர்ல மரமே இல்லையாம். கைலாஷ் ஹில்ஸ் கூட செம சேதாரமாம். பாவம் நாயுடு. அக்டோபர் 2முதல் கரண்ட் கட் இருக்காதுன்னு சொன்னாரு. ஆனா பாருங்க 10 நாளைக்கு கரண்டே இல்லாம மக்கள்ஸ் தவிக்க வேண்டியதா போச்சு. ஆனாலும் ஐயா களத்துல இறங்கி துரிதமா வேலை பார்த்ததை மக்கள்ஸ் பாராட்டிங்
******************************************************************************
 நேத்து 1.30 மணி நேரம் சரியான மழை. சொல்லாம கொள்ளாம வந்திருச்சு.
அப்படியே ஷாக்காகிட்டேன் ரேஞ்சுக்கு மக்கள்ஸ் ஷாக்காகி தவிச்சாங்க.
முகநூல்ல கூட “உங்களுக்கு நீஞ்ச தெரியாதா? அப்படியே தொலி சவுக்கி ஏரியாவுக்கு வாங்க. நீச்சல் கத்துக்கலாம்னு “ போட்டோ போடுற அளவுக்கு மழை. ஆனா இந்த மழை ஒரு 26 வயசு பொண்ணை காவு வாங்கிடிச்சு. அங்கங்க திறந்து கிடக்கும்  சாக்கடையில் ஒரு பெண் விழுந்து பாவம். ஹிமாயத் நகர் ஏரியாவுல தன் வீட்டுக்கு ரொம்ப பக்கத்துலயே ஒரு பெரியவர் இந்த மாதிரி விழுந்து போயிட்டாரம்.
******************************************************************************
அமிர்கான் ஷோ இந்த தடவையும் நல்லா இருந்துச்சு. இந்த வாட்டியும் ஏதோ ஒரு எபிசோடுக்காக வழக்கு தொடர்வதும் நடந்துச்சு.  ஆனாலும் அவரை பாராட்டணும். அது மனநலம் பத்தின எபிசோட் சூப்பர்ப்.
**********************************************************************************
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீரன்னு பாட்டு கேட்டிருக்கோம்.
முத்தமழை பொழிந்து கொண்டார்கள்னு கதைகள்ல படிச்சிருக்கோம். ஆனா பொது இடத்துல “முத்தமழை போராட்டம்” தலைநகரில் நடந்ததுன்னு படிச்சேன். இது தப்பா சரியான்னு சொல்லலை. இதைப்பத்தின செய்திகள் பார்த்தப்ப அவங்க கிட்ட இருந்த போர்டில் இருந்த வாக்கியம் பிடிச்சிருந்தது.
”பொது இடத்துல பாத்ரூம் போறாங்க அது தப்பில்லைன்னா, பொது இடத்துல முத்தம் கொடுப்பதும் தப்பிலைங்கற” மாதிரியான வாசகம் அது. ம்ம்ம்ம்ம்
********************************************************************************
இந்த வீடியோ நல்லா எடுத்திருக்காங்க.
 

2 comments:

Thenammai Lakshmanan said...

பிரியாணி சூப்பர், வீடியோ ரொம்ப சூப்பர் :)

புதுகைத் தென்றல் said...

வாங்க தேனக்கா,

சுடச்சுட பிரியாணி ருசிக்க வந்தற்கு மிக்க நன்றீஸ்