Thursday, January 22, 2015

மாலத்தீவு பயணக்குறிப்புக்கள் - 2

நாம எடுத்துக்கிட்டு இருக்கறது ஃபுல் பேக்கேஜ். அதனால டீ/காபியோட ரெண்டு குக்கீஸ் அல்லது கேக் பீஸ் கொண்ட மாலை நேர விருந்தும் உண்டு. குக்கீஸ் ஓகே. டீயும் நல்லா இருந்துச்சு. அயித்தான் காபி கலந்து கொடுக்க சொல்லி குடிச்சாக. கடல்ல நீந்தி உயிரினங்களை பாக்கணும் இதான் பிள்ளைங்க ப்ளான். ஆனா அது சாத்தியமில்லைன்னு சொன்னா திரும்ப எப்பப்பா வரப்போறோம் போவோம்னு ஒரு செல்ல அடம். :)

அங்கே இருக்கறவங்களே இப்ப வேணாம்னு சொல்ல மகனை பாத்தேன். பாவமா இருக்கு. எம்புட்டு ஆசையோட வந்தாப்லனு. ஆனா என்ன செய்ய. சரி வாங்க சும்மா சுத்திட்டு வருவோம்னு  ரிசார்டை ரவுண்ட் அடிக்க போனோம்.
அங்கே பேபி ஷார்க்குகள் சர்வ சாதாரணமா இருக்கும்னு அயித்தான் சொல்ல கேள்வி. முன்பு அயித்தான் போயிருந்த போது ஹில்டன் ரிசார்ட்ல ஜகஜமா வருமாம்.

இந்த ரிசார்டோட அமைப்பு இப்படித்தான்.



தண்ணியோட கலரை வெச்சு ஆழம் இருப்பதை கண்டு பிடிக்கலாமாம். ரிசார்ட்டை சுத்தி நடந்து வரும்போது ஒரு பக்கம் ரொம்ப ஆழம். ஆனா அடுத்த பக்கம் கடல்ல 2 கிமீ வரைக்கும் நடக்கலாம்.

தண்ணியை விட்டு வெளிய வர மனசே இல்லை. அலைகள் காலில் முட்டி மோத இதமா இருந்தது. இதமான வெயில் கூட. பசங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நிறைய்ய வெளிநாட்டுக்காரங்க அங்க இருந்தாங்க. சில பேர் நீச்சல் அடிச்சு ரொம்ப தூரம் வரைக்கும் போய்கிட்டு இருந்தாப்ல.  சுத்தமான தண்ணி, குப்பை கூளம் இல்லாத பீச். ஆனந்தமா தண்ணியில விளையாடிட்டு ரூமுக்கு வந்து ஃப்ரெஷப் ஆனோம். அதுக்குள்ள இருட்ட ஆரம்பிச்சிருச்சு.

இந்த பாதை எங்க ரூமுக்கு கிட்ட தான். இதுல வந்து உக்காந்துகிட்டு ஜம்பிங் ஜப்பாக்குகளா குதிச்சு ஆட்டம் போட்டுகிட்டு இருந்த மீன்களை பார்த்து ரசிச்சு கிட்டு இருந்தோம். கையோட கேமிரா கொண்டு போயிருந்தோம். பவள பாறைகளை போட்டோ எடுத்தோம்.




கலர் கலரா, சைஸ் வாரியா மீன்கள்.பேபி ஷார்க் தட்டு படுதான்னு பாத்தோம். ஆனா பார்க்க முடியலை. போட்ல நாம பிரயாணம் செய்யும்போதே டால்பின் பார்க்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. அந்த மாதிரி ஏதும் பார்க்கலை. ஆனா ரிசார்ட்ல நின்னு பாக்கும்போது ஒரு கப்பல் போய்கிட்டு இருந்தது. அது பக்கத்துல 2 தடவை டால்பின்கள் எம்பி குதிச்சதை பார்த்தது சந்தோஷமா இருந்தது.

இதுதான் பேபி ஸ்டிங் ரே. நம்ம ஜியாக்ரபிகல் சேனல்ல ஸ்டீவ் இர்வின் வருவாரே. அவரை  ஸ்டிங் ரே தாக்கி தான் இறந்தார்.  இதையெல்லாம் பாத்ததுக்கப்புறம் snorkeling செய்யணும்ங்கற ஐடியாவையே விட்டுட்டோம். வந்தோம். நல்லா ரிலாக்ஸ்டா இருந்துட்டு ஆனந்தமா கிளம்பி போவோம்னு சொன்னதும் பசங்களும் ஓகே சொன்னாங்க.

இரவு சாப்பாடும் எங்களுக்குன்னு ஷ்பெஷலா வந்தது. ரொம்ப வேணாம்ங்க நாங்க நாலு பேருதான் அப்படின்னு முன்னாடியே சொல்லியிருந்தோம். ஆனாலும் பாசம் ஜாஸ்தியாகி நிறைய்ய வெரைட்டி கொண்டாந்து வெச்சாங்க. எதுக்குங்க இம்புட்டுன்னு சொல்ல,  எங்க விருந்தாளி நீங்க உங்களை நல்லா கவனிக்க வேண்டியது எங்க கடமைன்னு சிரிச்சுகிட்டே சொன்னார் அந்த ஸ்ரீலங்கன் ரெஸ்டாரண்ட் மேனேஜர்.

சாப்பிட்டு முடிச்சதும் ரூமுக்கு போக வேணாம், கொஞ்ச நேரம்  பீச்ல காத்து வாங்கலாம்னு சொன்னேன்.
இந்த மாதிரி ரெண்டு ஊஞ்சல் இருந்தது. நானும் அயித்தானும்  ஒரு ஊஞ்சல்ல உக்காந்து ஆடிக்கிட்டு இருந்தோம். :) இதமான காத்து. பசங்களும் இன்னொரு ஊஞ்சல்ல உக்காந்து எஞ்சாய் செஞ்சு கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு பீச் சேர்கள் போட்டு வெச்சிருந்த இடத்துக்கு போனோம். அங்கே உக்காந்துகிட்டு தூரத்துல தெரியற தாஜ் ரிசார்ட் விளக்குகளை பாக்குறது, ராத்திரியில மீன் பிடிக்க போன போட் வர்றது பாக்கறதுன்னு பொழுது போக்கினோம். கடலோரம் காத்து வாங்கி கிட்டே வானத்துல நட்சத்திரங்களை பார்க்கிறது ஒரு சுகம் தாங்க.



18 comments:

ப.கந்தசாமி said...

இந்த மாதிரி அனுபவிக்க பூர்வ புண்ணியம் பண்ணியிருக்கோணும் .

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மாலத்தீவு பற்றி அறியாத தகவலை தங்களின் பதிவுவழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

சுகமான பயணம். அருமையான நினைவுகள்.
மாலத்தீவு படங்கள் எல்லாம் அழகு.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான தகவல்கள்! அழகிய படங்கள்! பகிர்வுக்கு நன்றி!

pudugaithendral said...

வாங்க ஐயா,

ஆமாம். அது நிஜம் தான். ஆண்டவனருள்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ரூபன்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோமதிம்மா,

வருகைக்கு மிக்க நன்றிம்மா

pudugaithendral said...

வாங்க சுரேஷ்,

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

இந்த சுகானுபவம் மீண்டும் கிடைக்கட்டும்.....

Anuprem said...

சுகமான பயணம். .........

'பரிவை' சே.குமார் said...

அழகிய அனுபவத்தை ரசனையோடு எழுதியிருக்கீங்க அம்மா...

pudugaithendral said...

வாங்க சகோ,

இந்த மாதிரி அனுபவம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அனுராதா,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க குமார்,

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

Unknown said...

super akka. நேர்ல பாத்தது போல இருக்கு நீங்க சொல்லற விவரம் எல்லாம். பீச் என்றாலே குதுகலம் தான். கட்டாயம் ஒரு முறை மாளத்தீவு செல்ல வேண்டும். Waiting for more travelogue.

Uma,
Bayarea california

pudugaithendral said...

ஹாய் உமா,

வாங்க நலமா. பதிவுகளை ரசிச்சதுக்கு நன்றி. சீக்கிரமே மத்த பதிவுகள் வருது

வருகைக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை

வலைச்சர தள இணைப்பு : மகளிர் மட்டும்

pudugaithendral said...

நன்றி தனபாலன்,
நலமா?