Wednesday, January 21, 2015

மாலத்தீவு பயணக்குறிப்புக்கள்

போட்டுக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாச்சு. அதுக்குள்ள அயித்தானின் நண்பர் கிட்ட ஏற்கனவே மினரல் வாட்டர் பாட்டில்களும். லோக்கல் சிம்மும் வாங்கி வைக்க சொல்லியிருந்தோம். மறக்காம பாட்டில்களை ஒரு பேக்கில் போட்டு கொடுத்திருந்தார். ( தண்ணி பாட்டில் செம விலை ரிசார்ட்டில்)

அயித்தான் அடிக்கடி போய் வந்து கிட்டு இருந்தவர் என்பதால அங்கய நிலவரம் தெரியும். விலை வாசியும் தெரியும். அதைவிடவும் முக்கியமானது சாப்பாடு. நாம வெஜிட்டேரியன். அப்படி இருந்தும் சில நாடுகளுக்கு போயிட்டு வந்திட்டோம். :)) அயித்தானின் நண்பர் தான் நாங்க போக விருந்த ரிசார்ட் பத்தி சொல்லி அங்கயே புக்கிங் செஞ்சு கொடுத்திருந்தாப்ல. சாப்பாடு பத்தி கவலைப்பட வேணாமாம். காரணம் அங்கே இருப்பது நம்ம ஸ்ரீலங்கன் செஃப். அவர் மூலமாத்தான் புக்கிங் எல்லாம் செஞ்சிருக்காரு நண்பர். அவர்கிட்ட சொல்லி இவங்க வெஜிட்டேரியன் ஃபுட் தான் சாப்பிடுவாங்கன்னு சொல்ல அதெல்லாம் நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டாப்ல. தாஜ் ரிசார்ட், ஹில்டன் ரிசார்ட் எல்லாம் இருக்கும். எல்லாம் செம காஸ்ட்லி. நாங்க புக் செஞ்சிருந்தது. எம்புது வில்லேஜ் ரிசார்ட் ( EMBUDU VILLAGE)

வாட்டர் பங்களோவெல்லாம் இருக்காம். ஆனா நாங்க தேர்ந்தெடுத்திருந்தது காட்டேஜ் டைப். ஒரு ரூமுக்கு 2 பேர்தான். நாங்க 4 பேர் என்பதால ரெண்டு ரூம் புக் செஞ்சிருந்தோம். ரிசார்ட்டுக்கு சொந்தமான போட் வந்தது. இங்க போட்டை தோனின்னு சொல்றாங்க. ரிசார்டுக்கு  சொந்தமானது கொஞ்சம் பெரிய சைஸ் தோனி.

அம்ருதம்மா ஏதும் பயப்படுவாப்பிலயோன்னு நினைச்சுகிட்டு இருந்தோம். ஸ்பீட் போட்டுக்கு இது பரவாயில்லைன்னு சொல்லிட்டு பயணத்தை ரசிக்க ஆரம்பிச்சிட்டாப்ல. போட்டோக்கள் எடுத்துக்கிட்டோம். மாலத்தீவு ஏர்போர்ட்லேர்ந்து கரெக்டா 30 நிமிட பயணத்துல எம்புது வில்லேஜ் இருக்கு.  கண்ணுக்கு எட்டுற தூரத்துல தாஜ் ரிசார்ட்ஸ் இருக்கு.  Embudu ரிசார்ட்டுக்கு வந்திட்டோம்.  இதான் ரிசார்டுக்குள்ள போகும் பாதை. போட் வர்றது தெரிஞ்சவுடனேயே பெல் பாய்ஸ் ரெடியா வர்றாங்க. போட்டிலேர்ந்து நாம் இறங்க உதவி செஞ்சிட்டு நம்ம லக்கேஜுகளை வெளிய கொண்டு வந்து வைக்கறாங்க.


லக்கேஜுகளும் நம்ம கூட வருமோன்னு நினைச்சா இல்ல நீங்க ரிஷப்ஷன் போங்கன்னு சொல்ல போனோம். ஹோட்டல் ரிஷப்ஷங்கற பிம்பத்தை உடைச்சு எந்த ஆடம்பரமும் இல்லாம அந்த ரிசார்ட்ல இருக்கற அழகு வெள்ளை மணல்ல  லாபி மாதிரி அமைச்சு சேர்கள் போட்டு வெச்சிருக்காங்க. டைனிங் ஹால், ரூம்ஸ் தவிர எங்கயும் இந்த வெள்ளை மணல் தான். அதுல கால் புதைய நடக்கறது சுகானுபவம்.


நம்மளுடைய டீட்டெயில்ஸ் ஒரு ஃபார்ம்ல எழுதி கொடுக்கணும். அதுல நம்ம ஃப்ளைட் எத்தனை மணிக்கு, எந்த ஃப்ளைட்ல திரும்ப போறோம் எல்லாமும் எழுதணூம். (ஏர்போர்டுக்கு போட் சரியான நேரத்துக்கு அனுப்பனுமே) வெல்கம் ட்ரிங்கா க்ரீங் டீ வந்தது குடிச்சிதுக்கப்புறம் ரூம்  சாவி கொடுத்தாங்க. வெளிய வந்தா பொட்டிகளை வெச்சுக்கிட்டு பெல்பாய்ஸ் வெயிட்டிங். நம்ம பெட்டிகளை நாம போய் அடையாளம் கண்டு சொல்லணும். அதை தூக்கியாந்து ரூம்ல வைக்கறாங்க. அவங்களுக்கு டிப்ஸ் கொடுத்து அனுப்பிட்டு  ரிலாக்ஸா உக்காந்தோம். ஏன்னா? எங்களுக்கு ஒரு டென்ஷன் இருந்துக்கிட்டே இருந்தது. அது  early check in. மதியம் 2 மணிக்கு தான் செக்கின் டைம். எங்க ஃப்ளைட் டிலே ஆனதால நாங்க மாலத்தீவு சிட்டிய சுத்தி பார்க்க நினைச்சிருந்தது கேன்சல் ஆச்சு. அதனால சீக்கிரமே ரிசார்ட்டுக்கு வந்திட்டோம். ரெண்டு மணிக்குத்தான் ரூம் கொடுப்பேன்னு அடம் பிடிக்காம ரூம் கொடுத்தது ரிலாக்ஸானிச்சு.

ரூம்ல ஏசி மட்டும் தான். ஃபேன் கிடையாது. ரொம்ப பெரிய ரூம்னு சொல்ல முடியாது.



தனிவீடு மாதிரி அழகா இருக்கு காட்டேஜ் ரூம்ஸ். வாசலிலேயெ துணி காய போட்டுக்க கொடி, ஸ்டாண்ட், ரிலாக்ஸா உட்கார 2 சேர் எல்லாத்தையும் விட மண்ணு போக காலைக்கழுவிகிட்டு உள்ளே போக ஏதுவா பைப் அதுக்கு சின்னதா ஒரு தொட்டின்னு கலக்கலா இருந்துச்சு. எங்களுக்கு எதிர் சைட்ல இருந்த காட்டேஜ் ஆஷிஷ் அம்ருதாவுக்கு. லக்கேஜை மட்டும் அங்கே வெச்சிட்டு எங்க ரூம்ல உக்காந்தாங்க பசங்க. கொண்டு போயிருந்த சிம்மை மொபைலில் போட்டோம். ரீச்சே இல்லை. அயித்தானும் ரொம்ப நேரம் ஏதேதோ செஞ்சு பாத்தாப்ல. ரீச்சே இல்லைன்னதும். நல்லதா போச்சுன்னு எந்த வித டிஸ்டபர்ன்சும் இல்லாம நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சுக்கிட்டோம்.

அயித்தான் போய் அந்த செஃபை பாத்திட்டு வரலாம்னு சொல்ல, ரூம்லயே இருப்பானேன்னு நாங்களும் கூட போனோம். செஃப் லீவுல இருக்கறதாகவும், ஆனா அவர் இந்த மாதிரி கெஸ்ட் வர்றாங்கன்னு சொன்னாங்கன்னு ரெஸ்டாரண்ட் மேனேஜர் சொன்னார். அவங்களும் ஸ்ரீலங்கன்ஸ் தான். அயித்தானையும் தெரியும்னு சொன்னாங்க.  சும்மாவா மார்கெட் நல்லா கஷ்டபட்டுல்ல உழைச்சு இருக்கீங்க. ஒவ்வொரு கஸ்டமருக்கும் உங்களை நல்லாத் தெரியுமேன்னு சர்டிபிகேட் வேற கொடுக்க, அந்த ரிசார்ட் ஜீம் அங்கே வர அவரும் அயித்தானை சந்திச்சிருப்பதா சொல்லி தன்னோட கேபினுக்கு அழைச்சு கிட்டு போயி அயித்தானோட பேசிக்கிட்டு இருந்தார்.

நாங்க ரிசார்ட்ல என்னென்ன ஆக்டிவிட்டிஸ் இருக்குன்னு விசாரிச்சுகிட்டு இருந்தோம்.  பசங்களுக்கு தண்ணியில டைவிங் செய்யணும்னு. ஆனா அதுக்கெல்லாம் முறையா பயிற்சி எடுத்துக்கணு, அதுக்கே ரெண்டு நாள் ஆகும், தவிரவும் கடல் கொஞ்சம் ர்ஃபா இருப்பதால அலைகள் ஜாஸ்தியா இருக்கு. இந்த சமயம் சரியில்லைன்னு ரிஷப்ஷன்ல சொன்னாங்க. அயித்தான் ஜீ எம் கிட்ட பேசிட்டு வந்தாப்ல.

நாளைக்கு மாலத்தீவு சிட்டிக்கு போட் ஏதும் போவுதான்னு பாத்து சொல்றேன். நீங்க அதுல போயிட்டு சிட்டியை பாத்திட்டு வாங்கன்னு சொன்னாராம். இலவசமா. இல்லாட்டி ஒரு ஆளுக்கு 70 டாலரோ என்னவோ சார்ஜ்.  லன்சுக்கு போனோம்.

புஃபே டைப் தான். சரி அதுல என்ன வெஜிட்டேரியன் இருக்கோ சாப்பிடலாம்னு எடுத்துக்கிட்டு வந்து உக்காந்தோம், ரெஸ்டாரண்ட் மேனேஜர் இருங்க உங்களுக்கு ஷ்பெஷல் வருதுன்னு ஸ்ரீலங்கன் அயிட்டங்கள், வெஜிடபிள் க்ரேவி, ரோட்டி எல்லாம்  ஷ்பெஷலா செஞ்சு கொடுத்திருந்தாங்க.
அருமையான சாப்பாடு வித் கெட்டித்தயிர். :))

சாப்பிட்டாச்சு.... அடுத்து  உண்ட மயக்கம் தொண்டனுக்கே உண்டே.... :)

படங்கள் உதவி: கூகுளார்



9 comments:

வெங்கட் நாகராஜ் said...

இனிய பயணம். தொடர்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

பயண அனுபவம் அருமை அம்மா...

ப.கந்தசாமி said...

தூங்கி எழுந்திரிங்க, மிச்சத்த அப்புறம் பாத்துக்கலாம்.

pudugaithendral said...

நன்றி சகோ

நன்றி குமார்

நன்றி ஐயா

Jaleela Kamal said...

எப்படி பயணத்திலும் பதிவு

pudugaithendral said...

வாங்க ஜலீலாக்கா,

போயிட்டு வந்து 6 மாசம் ஆகுது. பதிவு இப்பதான் வருது

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவரது தளத்தில் http://gopu1949.blogspot.in/2015/07/33_3.html என்ற முகவரியில் உங்களது தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தங்களது தளத்தினைக் கண்டேன். பாராட்டுக்கள்.
http://www.ponnibuddha.blogspot.com/
http://www.drbjambulingam.blogspot.com/

pudugaithendral said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

தகவலுக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க யாதவன் நம்பி,

தகவலுக்கு மிக்க நன்றி