Wednesday, May 20, 2015

45 நாளாவபோவுது!!!!!

அந்தா இந்தான்னு சென்னை வந்து 45 நாளாக போவுது!!!  ஹைதைக்கும்
சென்னைக்கும் ரொம்ப வித்தியாசமா இருக்கு. (இப்படித்தான் இருக்கும்னு
முன்னமே கொஞ்சம் கெஸ் செஞ்சு வெச்சிருந்தாலும், எதிர் பாராத விதத்திலும் சென்னை சர்ப்ரைஸ் கொடுக்குது )

ஹைதையோட கம்பேர் செஞ்சு புண்ணியம் ஏதுமில்லைன்னாலும் வெளிநாட்டுக்கு போய் ஷாப்பிங் செய்யும்போது டாலர் ரேட்டை கணக்கு போட்டு நம்ம ஊர் காசுக்கு எம்புட்டுன்னு ஒரு மணக்கணக்கு போடுவோமில்லை அதை மாதிரி இதையும் தவிர்க்க முடியவில்லை யூ சி)

சிலிண்டர் அட்ரஸ் மாத்தி இங்க கொண்டாந்து அந்த ரசீதை அவங்க கிட்ட கொடுத்தா புது கேஸ் ஏஜன்ஸி ஒரு சின்ன துண்டு அட்டையில் பேர் எழுதி கொடுத்து அதை ரெசிப்ட் மாதிரி யூஸ் செய்ய சொல்றாங்க. எதுக்குன்னு கேட்டா லெட்ஜர் எழுத நேரமில்லையாமாம்!!! அதனால அவங்க எழுதி டாக்குமெண்ட் ரெடி செஞ்சதுக்கப்புறம் நாம வந்து கையெழுத்து போட்டு, ரெகுலேட்டர் வாங்கி கிட்டு போன 2 நாள் கழிச்சு தான் சிலிண்டர் வருமாம்.

கம்ப்யூட்டரைஸ்ட் ஆன ஹைதையை நினைச்சு பாத்தேன். கொஞ்சம் குரல் உசத்தி பேசி ரெகுலேட்டர் உடனே வாங்கியாந்தேன். (என் தோழி வீட்டு சிலிண்டரை வெச்சு ஒப்பேத்திக்கலாம்னு) சிலிண்டர் டெலிவரிக்கு வர்றவங்க அடாவடி அப்பப்பா தாங்கலை. சிலிண்டர் டெலிவரிக்கு ஒரு சிலிண்டருக்கு 35 ரூவா கொடுக்கணுமாம். (ஹைதையில் 10 ரூவா தான் கொடுத்திருக்கேன்) பில் அமொண்ட்டோட அதையும் சேத்தே சொல்றாங்க. பில்லை வாங்கி பாத்தா செம ஷாக். 70 ரூவா எதுக்குய்யா கூட கொடுக்கணும்னா,” 2 பேர், 2 சிலிண்டர் அம்புட்டு தூரத்துலேர்ந்து எடுத்தாந்தோம், மாசத்துக்கு ஒரு தடவை தானேன்னு பதில்” தெரியாமத்தான் கேக்கேன், சிலிண்டரை சுமந்துகிட்டேவா வந்தாக. அப்பார்ட்மெண்ட்ல கூட லிஃப்ட்ல இல்லை கொண்டாந்தாங்க. வீட்டு வாசப்படியோட அவங்களை அனுப்பிட்டேன்.

ஒரு சிலிண்டருக்கு 10 ரூவா தர்றேன். அதுவும் நாங்க கொடுக்க வேண்டியதில்லை, ஏதோ சந்தோஷமா தர்றதை வாங்கிக்கங்கன்னு சொன்னா, மனசாட்சியே இல்லை அது இதுன்னு அடாவடி பேசறாப்ல. எனக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா இல்லையா என்பதை உனக்கு பணம் கொடுத்துதான் நிருபிக்கணும்னு இல்லைன்னு சொல்லி 20 ரூவா மட்டும் கொடுத்தனுப்பினேன்.

இண்டர்நெட் கனெக்‌ஷனுக்கு போராடினதை பத்தி தனி போஸ்டே எழுதலாம்.  ஹைதையிலையே ஏர்டல் லேண்ட்லைனை சென்னைக்கு மாத்தி எழுதி கொடுத்திட்டு வந்தோம். அதனால அது உடனேயே வந்தாங்க. அதுலயும் லோக்கல் ஆக்டிவேஷன் தனி, எஸ்டிடி ஆக்டிவேஷன் தனின்னு ஏகப்பட்ட லொள்ளுகள்.  20 நாள் இண்டர்நெட் இல்லாம ஓட்டினது தனிக்கிளைக்கதை.

இதுதான் இப்படின்னா மோர், ஸ்ப்ன்செர்ஸ் மாதிரி சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட எவரெஸ்ட் ப்ராண்ட் மாதிரியான மசாலா அயிட்டங்களை பார்க்க முடியலை.  கரம்மசாலா கூட ஈஸ்டர்ன் ப்ராண்ட் இல்லாட்டி, ஆச்சி மசாலாக்கள் தான் எங்கயும். அதெல்லாம் யூஸ் செஞ்சா இம்புட்டு நாள் செஞ்ச சமையல் மாதிரியே இல்லை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சமோசா வாங்கி பல்பு வாங்கின கதையை உங்க கிட்ட சொல்லிக்கிட்டே ஆகணும். வீட்டுக்கு பக்கத்துல ஒரு கடை. ஓரளவுக்கு பெருசா இருக்கு கடை. சமோசா ஒரு ப்ளேட் 20 ரூவான்னு போட்டிருந்துச்சு. சரி புள்ளைக்கு வாங்குவோம்னு  கவுண்டரில் போய் ஒரு ப்ளேட்ல எவ்வளவு இருக்கும்னு கேட்க 4 ந்னு சொன்னாங்க. பரவாயில்லையேன்னு நினைச்சு 2 ப்ளேட் ஆர்டர் செஞ்சேன். பேக் செஞ்சு தருவாங்க உட்காருங்கன்னு சொல்ல உக்காந்தேன். 10 நிமிஷத்துல ஒரு கவர் வந்தது. அதுல சமோசா இருக்கற மாதிரியே தெரியலை. எடுத்து பாத்தா எங்க ஹைதையில இரானி சமோசான்னு ஒண்ணு வெங்காய மசாலோட குட்டி குட்டியா இருக்கும். அதை விட கொஞ்சமே கொஞ்சம் பெருசு. :((  இம்புட்டு குட்டியான சமோசா அங்க சில இடங்களில் தான் கிடைக்கும். பொதுவா சமோசான்னா பெருசா உருளை மசால் வெச்சு இருப்பதுதான் தெரியும்.

சரி சாட் அயிட்டத்துக்கு வருவோம். வடா பாவ், பாவ் பாஜி, பானி பூரி, சமோசா ரகடான்னு ஒவ்வொரு ஏரியாவுலயும் ஒரு கடை கண்டிப்பா ஹைதையில் இருக்கும். இங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு ப்ளேட் பானி பூரி 30 ரூவா. 6 பீஸ்தான் இருக்கும். :((  அங்க ஒரு ப்ளேட் 10 ரூவா அதுல 8 பீஸ் வரும். உள்ளயே பீஸ் மசாலா வைப்பாங்க. உருளை மசால் எல்லாம் கிடையாது. அப்புறம் ஒரு பிரபலமான கடைக்கு போனோம். அங்கயும் சாட் எல்லாம் இருக்குன்னு பையர் ஆசைப்பட்டு பாவ் பாஜியும், பேல் பூரியும் ஆர்டர் செஞ்சாப்ல. பாவ் பாஜி வாஸ் ஓகே! ஆனா பேல் பூரில சில பழத்துண்டுகள் எல்லாம் போட்டு ஒரு மாதிரி இருந்துச்சு.

ஹைதையில் curry point கடைகள் ரொம்ப  பிரபலம். புல்கா அல்லது சப்பாத்தி, ஸ்டஃப்டு பராத்தாக்கள் கிடைக்கும். அதோட  சப்ஜீக்களூம் வாங்கிக்கலாம். நான் ரொம்ப கை வலின்னா வீட்டுலயே சப்பாத்திக்கான சப்ஜீ செஞ்சிட்டு சுடச்சுட சப்பாத்தி மட்டும் வாங்கியாந்துப்பேன். இங்கே சென்னையில் நிறைய்ய வட நாட்டு காரங்கதான் கடைகளில் வேலை பார்க்கறாங்க. தமிழர்களையே காணம். எங்கப்பா போனாங்க எல்லோரும்.  ஸ்வீட் ஸ்டால்ல கூட வேலைக்கு வட நாட்டு காரங்க தான். சரி சப்பாத்தி மேட்டருக்கு வருவோம். இங்கே ஒரு சப்பாத்தி கடை கூட கிடையாது. எந்த நேரமும் தங்கு தடையின்றி கிடைப்பது தோசை, இட்லி, பொங்கல் வகைகளே!!!!

புதுகையில் ரோட்டோரக்கடைகள் ஜாஸ்தி.  இரவு டிபனுக்கு, இட்லி, தோசையோட இடியாப்பம், புரோட்டா, அடை அவியல்னு வெரைட்டியா வாங்கலாம். தொட்டுக்கொள்ள ஒவ்வொண்ணும் டிஃபரண்ட், கடப்பா, சாம்பார், குருமான்னு இருக்கும். அந்த மாதிரி ஒரு கடை கூட இங்க பாக்கலை. ஒரே ஒரு புரோட்டா கடைதான்.

Night is always young இதுதான் ஹைதையின் தாரக மந்திரம். அங்கலேட்டா கடை போட்டாலும் வார இறுதி நாட்களில் களைகட்டும். மாயாஜாலில் சினிமா போயிட்டு வர்ற வழியில இருக்கும் நம்ம வீடு வசந்த பவனில் இரவு 9.30 மணிக்கு இட்லி தோசை அயிட்டங்களைத்தவிர வேற ஏதும் இல்லை. இதுதான் பதிலா இருக்கு. மாயா ஜாலிலேர்ந்து வரும் அந்த ஈசி ஆர் ரோட் 9 மணிக்கே வெறிச்சோடி கிடக்கு.  அயித்தானைக்கேட்டா, இது சென்னை. இங்கல்லாம் அம்புட்டு தான் சீக்கிரம் கடை அடைச்சிட்டு தூங்க போயிடுவாங்கன்னு சொல்றாப்ல.

சென்னையில் எல்லாம் சுறுசுறுப்பு குல திலகங்கள்னும் சொல்ல முடியலை. (ஹைதையில் இருந்தப்பா அப்படித்தான் ஒரு நினைப்பு)  போன் செஞ்சா எடுக்க மாட்டாங்க கடைகளீல். கம்ப்ளைண்ட் செஞ்சு 1வாரம் கழிச்சு தான் போன் செஞ்சீங்களான்னு கால் வராது.

ஆனா பேமண்ட் வாங்கணும்னு வரும்போது மட்டும் சூப்பர் சுறு சுறுப்பு. அதுலயும் அந்த டாடா டொக்கமோ காரங்க கிட்ட தெரியாத்தனமா ஒரு  டேடா கார்ட் வாங்கிட்டோம். அதுக்கு பில் ஜெனரேட் செஞ்சு மெயிலில் அனுப்பி, வீட்டுக்கும் போஸ்ட்ல ஒரு காபி அனுப்பி, இம்புட்டு பணம் கட்டணும்னு எஸ் எமெஸ் அதைத் தவிர போன் போட்டு சொல்றாங்க. சாமிகளா, ட்யூ டேட்டுக்குள்ள கட்டலைன்னாதானைய்யா!! ட்யூ டேட் வரைக்கும் கூட பொறுக்காம அப்படி என்னங்கயா????

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்பவே கண்ணைக்கட்டுதே!!!!!



10 comments:

வெங்கட் நாகராஜ் said...

Welcome to Chennai.....

இன்னும் எவ்வளவு பார்க்கணும். இதுக்கே இப்படி புலம்பினா எப்படி! வெளி ஊர்களுக்கும் நம்ம ஊருக்கும் நிறையவே வித்தியாசம்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
பேச்சு தமிழில் வைத்து பின்னியுள்ளீர்கள் இறுதியில் சொல்லிய வசனம் எனக்கும் புரிய வில்லை.. பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ஹைதை தான் சிறப்போ...?

pudugaithendral said...

நன்றி சகோ,

ஆமாம் இன்னும் எம்புட்டோ இருக்கு. ஆனா வெளி ஊர்களுக்கும், நம்ம ஊர்களுக்கும் சென்னைக்கும் கண்டிப்பா வித்தியாசம் இருக்கு சகோ.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ரூபன்,

இப்பவே கண்ணை கட்டுதே, இங்க இருக்கப்போற காலம் வரை எப்படி ஒட்டப்போறேன்னு தெரியலையேன்னு சொன்னேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

ஹைதை தான் சிறப்புன்னு சொல்லலை. அங்கே மக்கள் பழகும் விதம், பேசும் விதம், கிடைக்கும் உணவு வகைகள்னு எல்லாமே அருமையா இருக்கும். இங்க ஏன் எல்லாருமே தெனாவட்டா இருக்காங்கன்னு புரியலை.

வருகைக்கு நன்றி

Appaji said...

சென்னையை பற்றி எழுதுவது(!) சுவையாய் உள்ளது...
ஹைதைக்கு bye ..தினமும் ..வணக்கம் சென்னை(!) என சொல்லுங்கள்...

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

சம்சாரம் அது மின்சாரம் டயலாக் எனக்கு சொன்னா மாதிரி இருக்கும் :)

( ம்ம்ம் நீயும் பழகிக்கோ அவ்ளோதான்) லட்சுமி சொல்லும் டயலாக் எனக்காகத்தான்.

வருகைக்கு மிக்க நன்றி

shameeskitchen said...

உங்கள் வலைப்பூவை முழுவதும் படித்தேன்..நன்றாக எழுதுகிறீர்கள் கலா..
நானும் சமையல் மட்டுமல்லாமல் பிற விஷயங்களையும் எழுத முயற்சித்து வருகிறேன்..

pudugaithendral said...

வாங்க ஷாமி,

உங்க பின்னூட்டத்தை தாமதமா இப்பதான் பார்த்தேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்க.