Monday, May 04, 2015

வெசாக் நல் வாழ்த்துக்களுடன் திரும்ப வந்திருக்கேன்.

இன்னைக்கு புனிதமான வெசாக். அனைவருக்கும் அமைதியும் சமாதானமும் நிறைந்ததாக இருக்க என் வாழ்த்துக்கள். இதுவரை ஹைதையிலிருந்து வீசிக்கொண்டிருந்த இந்த தென்றல் இனி சென்னையிலிருந்து வீச ஆரம்பிச்சிருக்கு. ஆமாம் ஹைதையை விட்டு கிளம்பி வர மனசில்லாம கிளம்ப வேண்டியதா போச்சு.

அயித்தானுக்கு சென்னை மாற்றல்.  இந்த ந்யூஸ் கேள்வி பட்ட உடனேயே அழுவாச்சி தான்.  சொந்த வீட்டை விட்டு வரணும் என்பதை விட, சென்னைக்கு.... சென்னைக்கு மாற்றல். அதுதான்.  ஆஷிஷ்  ஹாஸ்டலில் தங்க வேணாம். வீட்டுக்கு வந்திடலாம். பிரிச்சுவிட்டதுல தெலங்கானா ஒரு வழி ஆகிகிட்டு இருக்கு. இதுல அம்ருதா மேல் படிப்பு வேணாம் அது இதுன்னு ப்ரையின் வாஷ் ( இருக்கு. கொஞ்சமாவது இருக்கு. :) ) செஞ்சு அயித்தான் இட்டாந்திட்டாக. வந்து ஒரு மாசம் போகுது.

அம்ருதா பரிட்சை முடிந்த கையோட வந்து  இங்கே வீடு தேடினோம்.  வீடு முடிவு செஞ்சு அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் எடுத்து போய் மத்த வேலைகளை செஞ்சு வெச்சுகிட்டோம். முக்கியமா இந்த அதார் அட்டையில எங்க புது வீட்டு அட்ரஸ் வாங்கிகிட்டு வந்தது நாங்க செஞ்ச நல்ல காரியம்.


ஹைதையில் சாமான்களை பேக் செய்ய அயித்தான் பேக்கர்ஸ் கிட்ட பேசிவெச்சிருந்தாங்க.   பேக்கர்ஸ் அன் மூவர்ஸ் வந்தாங்க.  ஆகா நாம சும்ம உக்காந்திடலாம்னு மட்டும் யாரும் நினைச்சிடாதீங்க. பேக்கர்ஸ்லேர்ந்து வர்றவங்க ஆளூக்கு ஒரு அயிட்டம் பேக்கிங்கினு கிளம்பிடறாங்க. அவங்களுக்கு பதில் சொல்லி எடுத்து கொடுக்க வேண்டியது நாம தான்.  அயித்தான், நான், அம்ருதா மூணு பேர்தான். வந்தவங்க 6 பேர். பர  பரன்னு பேக்கிங் செய்ய ஆரம்பிச்சாங்க.   ஏற்கனவே வேணாம்ங்கற சாமானை எல்லாம் ஒழிச்சு வெச்சிருந்தேன்.  அதனால ஓரளவுக்கு வசதியா போச்சு.   எப்படியோ பேக்கிங் செஞ்சு 4 மணிக்கெல்லாம் சாமானை வண்டியில ஏத்தியும் முடிச்சிட்டாங்க.

அடுத்த நாள் ஃப்ளைட் பிடிச்சு நாங்க சென்னை வந்து ஹோட்டலில் தங்கினோம். அதற்கு அடுத்த நாள் பால்காய்ச்சி பூஜை செஞ்சு  கிட்டு இருக்கும்போது வண்டி பூந்தமல்லி வந்திருச்சுன்னு போன் செஞ்சாங்க. சரிதான்னு  ரெடி ஆனோம். 12 மணிக்கெல்லாம் சாமான் வந்திருச்சு. வீட்டுல கொண்டு வந்து வெச்சிட்டு, அன் பேக்கிங்கினு ஆரம்பிச்சாங்க.  இப்பவும் அதே 3 பேர் தான் இருக்கோம். ஆனா அவங்க 6 பேர். பர பரன்னு எல்லா பெட்டியையும் ஓபன் செஞ்சு இதை எங்க வைக்க, அதை எங்க வைக்கன்னு???? கூப்பிட்டு கூப்பிட்டு எல்லாத்துக்கு நானே ஓட வேண்டியதா போச்சு. நல்ல வேளையாக சாமான் பேக்கிங் செய்யும் போதே அட்ட பெட்டிகளில் எந்தெந்த ரூம் சாமான்னு எழுதி வெச்சிருந்தேன்.

அதை வெச்சு அந்தந்த ரூம்ல வெச்சாச்சு. அன் பேக்கிங் செஞ்சா அப்படியே உடனடியா எடுத்து வைக்கணூம்னா கஷ்டம். அதனால முக்கியமான அயிட்டங்கள், பாத்திரங்கள் எல்லாம் எடுத்து கொடுக்க சொல்லி வெச்சோம். மேலே ஏத்த வேண்டியதுகளை சொன்னா அதையும் ஏத்திடுவோம்னு சொல்ல, சாமி ஒவ்வொரு பொட்டியா திறந்து பாத்து செய்யணும். சாமிகளா ஆளை விடுங்க. இப்பவே இதெல்லாம் செய்ய முடியாதுன்னு சொன்னேன்.

இப்பெல்லாம் அட்டை பெட்டிகளையும் திரும்ப கொடுக்கணுமாம். கொஞ்சமாவது வேணும்னு சொல்ல சிலபெட்டிகள் திறந்து அவைகளை காலி செஞ்சு கொடுத்தோம். பத்து நாள் டைம் கொடுங்க சாமிகளா, மத்ததையும் காலி செஞ்சு தர்றோம்னு சொல்ல சரின்னு விட்டுட்டு போனாங்க.

பாக்கிங் செய்யறப்ப கூட இம்புட்டு கஷ்ட படலை. அந்தந்த இடத்துலேர்ந்து அவங்களே எடுத்து  செஞ்சதாலன்னு நினைக்கிறேன். அன்பேக்கிங் அவங்க ஓபன் செஞ்சு கொடுத்தாலும் வைப்பது நாமதான். மெல்ல மெல்ல ஒரு வாரத்துல நானும் அம்ருதம்மாவும் ஒழுங்கு செஞ்சோம். காஸ் சிலிண்டர் உடனடியா மாத்த முடியாத காரணத்தால கிச்சனுக்கு கட்டாய லீவு கொடுத்திருந்தேன். :))

என் ஃப்ரெண்ட் அண்ணபூர்ணா இங்க தான் பக்கத்துல இருக்காங்க. அவங்க சாப்பாடு செஞ்சு அனுப்புவாங்க. வெளியில் வாங்கிக்கிறதுன்னு ஓட்டினோம்.  கேட்டரிங்ல் சொன்னா கொண்டு வந்து கொடுக்கறாங்க. அதுவும் நல்லா இருக்கு. ஹோட்டல் சாப்பாட்டுக்கு வீட்டு சாப்பாடுன்னு அதுவும் வாங்கிகிட்டோம். இருந்த Induction  அடுப்புல காபி, டீ போட்டு ஒப்பேத்திகிட்டு
மெல்ல மெல்ல சென்னை வாழ்க்கைக்கு தயாரானோம்.

ம்ம்முடியலைன்னு அடிக்கடி சொல்ல வைக்கிறது இந்த வேர்வை. இருக்கற எல்லா எனர்ஜியும் அதுலயே போயிடுது.  இதோ இன்னையிலிருந்து அக்னி நட்சத்திரம் வேற. ஆண்டவன் தான் காப்பாத்தணும்.

எல்லோருக்கும் அதிக வெயில் கொடுமை இல்லாத “அக்னி நட்சத்திரம்” காலம் அமைய வாழ்த்துக்கள்.

12 comments:

பழனி. கந்தசாமி said...

மாற்றம் எப்பொழுதும் தொல்லைதான்.

MyFriend said...

Konja naalaa aala kaanomnnu paarthen. Enjoy the new place and environment 👍👍

புதுகைத் தென்றல் said...

வாங்க ஐயா,

ஆமாம். ஆனா மாறாதது மாற்றம் மட்டும் தான்னு சொல்வாங்களே. :)

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

ஹாய் மை ஃப்ரெண்ட்,

எப்படி இருக்கீங்க. வர வர ஒழுங்கா பதிவு எழுதறதே இல்லை நான். 1000 பதிவு போடுற வரைக்கும் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. இனி ஒழுங்கா எழுதணும்னு வெச்சிருக்கேன்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஹுஸைனம்மா said...

நானும் ரெண்டு மூணு வாட்டி வீடு மாத்தினதுல, பேக்கர்ஸ்&மூவர்ஸை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு கத்துகிட்டாச்சு!! :-)

சென்னை வந்ததில் உங்க பெற்றோருக்கும் மகிழ்ச்சியா இருக்குமே.. அடிக்கடி பாத்துக்கலாமே...

உங்களுக்கும் வெசாக் வாழ்த்துகள்!!

ரூபன் said...

வணக்கம்
மாற்றம் வரும்போது மனிதர்களும் மாறுகிறார்கள் இதுதான் உண்மை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர வாழ்த்துக்கள்...

Thanai thalaivi said...

உங்களை ரொம்ப நாளா காணோமேன்னு நினைச்சுகிட்டே இருந்தேன். சென்னைக்கே வந்துட்டீங்களா, ரொம்ப சந்தோஷம்.எங்க இருக்கீங்க? எதாவது வேணும்ன்னா மெயில் பண்ணுங்க.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

பேக்கர்ஸ் & மூவர்சை ஹேண்டில் செய்யவும் கத்துக்கிட வேண்டியதா தான் இருக்கு. ஆமாம். அம்மா அப்பாக்கு பரம சந்தோஷம். ரெண்டு ட்ரையின் மாறி வரவேண்டாம். ஹாயா பல்லவனைப்பிடிச்சோமான்னு வந்திடலாமே
:))

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ரூபன்,

ஆமாம். அப்பத்தானே நிறைய்ய கத்துக்கிட முடியும். சிலர் ஒரே ஊர்லயே ரொம்ப வருஷம் இருந்தேன்னு சொல்வாங்க. எப்படித்தான் இருக்காங்களோன்னு நினைப்பேன். நமக்கு மாறுவது ரொம்ப பிடிக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

தொடரணும்னு நல்லா பிரார்த்தனை செய்ங்க. இனி இங்கே ஒழுங்கா நான் வரணும்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தானைத்தலைவி,

உங்க மெயில் ஐடிலேர்ந்து எனக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்ப முடியுமா. என்னோட பழைய மெயில்கள் எல்லாம் டெலிட் ஆகிருச்சு. உங்க ஐடி கண்டுபிடிக்க முடியலை.

நன்றீஸ்