Tuesday, July 21, 2015

வணக்கம் நட்புக்களே

என்ன எல்லோரும் சொளக்கியமா? இங்கே நானும் ஓரளவுக்கு நலம். பிசியோதெரபி ஆரம்பிச்சு வெற்றிகரமாக 1 மாசம் ஓடிடிச்சு. ஆரம்பத்துல சின்ன சின்ன அசைவுகளுக்கே சதை பிடிப்பு பிடிச்சு ஒரே அவஸ்தை. ஐஸ் ஒத்தடம், வெந்நீர் ஒத்தடம்னு கொடுத்து, ரெஸ்ட் கொடுத்துன்னு உடம்பு ஒரு வழி(லி)யா ட்ரீட்மெண்டை ஏத்துக்கிட்டது.


ஆனா அதிகமா வேலை செய்ய கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அதனால அடக்கி வாசிச்சுகிட்டு இருக்க வேண்டிய சூழல். மொதல்ல கூட வலி இருந்ததால ஏதும் செய்யலை. இப்ப பழகிடிச்சு. ரொம்பவே ஃப்ரீயா இருப்பது போல தோண என்னுடைய இன்ஸ்ட்ரக்டரை நச்சரிச்சு க்ரோஷா கொஞ்சமா செய்யறேன்னு கேட்டு தொல்லை செய்வதை தாங்காம சரி ஆனா ரொம்ப நேரம் கூடாது 10 நிமிஷம் தான் செய்யணும்னு சொன்னாங்க.

சரின்னு நேத்து ரொம்ப சந்தோஷமா ஊசியையும் நூலையும் எடுத்தேன். எங்க 5 நிமிஷத்துக்கே கையில் வலிக்க ஆரம்பிச்சதும் எடுத்து வெச்சிட்டேன். :(
இன்னும் ரொம்ப தூரம் போகணும்னு இன்ஸ்ட்ரக்டர் சொன்னது சரிதான். நாம அவசரப்படக்கூடாது என்பது நேத்து கத்துகிட்ட பாடம்.

இப்போதைக்கு இந்த போஸ்ட் டைப் செய்யக்கூடிய அளவுக்கு கை பரவாயில்லை. :) அதுவே ஆனந்தம்.  ஸ்ட்ரெத்தனிங் எக்ஸசைர்ஸ் எல்லாம் செஞ்சு கையையும் காலையும் திடமாக்கிகிட்டு  விஜயதசமியிலிருந்து பழைய படி வலைய வருவேன்.

அப்பப்ப வந்து நலம் விசாரிப்பேன். அதுவரைக்கும் ஆனந்தமா இருங்க. மறந்துடாதீங்க. :))

6 comments:

'பரிவை' சே.குமார் said...

உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா...
நலமுடன் வாருங்கள்.

ஹுஸைனம்மா said...

//பழைய படி வலைய வருவேன்//

வாங்க.. வாங்க... உங்களோடு நாங்களும்...

தனிமரம் said...

ஆரோக்கியத்துடன் மீண்டும் வாங்க! காத்திருக்கின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

முற்றிலும் குணம் அடைந்தவுடன் வருக...

”தளிர் சுரேஷ்” said...

உடல் நலம் சீராக வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

நட்புக்கள் அனைவருக்கும் வணக்கம்,

தங்கள் அன்புக்கும் வருகைக்கும் மிக்க நன்றி