Thursday, October 29, 2015

சிங்கை பயணம்

2005ல சிங்கப்பூர் போனதை பத்தி பேசிக்கிட்டு இருந்தப்போ அம்ருதம்மா தனக்கு சில இடங்கள் ஞாபகம் இல்லைன்னு சொன்னாப்ல. ஆமாம் அப்ப அவங்க வயசு 5 தான். அண்ணாவுக்கு கொஞ்சம் வயசு கூட என்பதால நினைவு இருக்கு.  பசங்க வளர்ந்துட்டா வர்ற முக்கியமான பிரச்சனை இரண்டு பேருக்கும் சேர்ந்தா மாதிரி லீவு கிடைப்பதில் இருக்கறதுதான். 3 வருஷமாவே இப்படித்தான் ஆகிடிச்சு. அண்ணாவுக்கு ஒரு சமயம் லீவுன்னா, அம்ருதம்மாவுக்கு ஒரு சமயம் லீவு. இரண்டு பேருக்கும் சேர்ந்தாப்ல லீவு கிடைப்பது கஷ்டம்.

தசரா லீவு அம்ருதம்மாவிற்கு. அப்பதான் அண்ணாவுக்கு மாடல் எக்ஸாம். அது முடிஞ்சு சரஸ்வதி பூஜை, விஜயதசமியோட மொஹரமும் சேர லாங்க் வீக் எண்ட் வருதுன்னு தெரிஞ்சுகிட்டு சிங்கைக்கு டிக்கட் போடலாம்னு ப்ளான் செஞ்சோம்.  ஊர் சுத்தினாப்லயும் ஆச்சு, தம்பியையும், தம்பி மனைவியையும் பாத்தாப்ல ஆச்சுன்னு ப்ளான் செஞ்சோம்.

4 நாளைக்கான்னு கேட்டாப்ல.  4 நாளாவது சேர்ந்தாப்ல போக முடிஞ்சதே பெரிய விஷயம்னு டிக்கட் போட ஏற்பாடு செய்யும்போது தம்பி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல போடுங்க, சர்வீஸ் நல்லா இருக்கும்னு சொன்னாப்ல. தாய்லாந்து போனப்ப கூட தாய் ஏர்லைன்ஸ்ல சர்வீஸ் நல்லா இருந்தது. சரின்னு அதுலயே டிக்கட் போட சொல்லி எங்க ட்ராவல் ஏஜண்ட் கிட்ட சொன்னோம். ப்ளாக் செஞ்சிட்டேன் அப்படின்னு சொன்னாப்ல. வந்து பணத்தை வாங்கிகிட்டு போங்கன்னு சொன்னோம். ஆள் வரலை. ஆனா நடுவுல வந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரேட்டை மாத்திடிச்சு.

நம்ம பட்ஜட்டுக்கு ஆகாதுன்னு டைகர் ஏர்வேஸ்ல புக் செய்ய சொன்னோம். டைகர் ஏர்வேஸ் பட்ஜட் ஏர்வேஸ். அதனால லக்கேஜுக்கு, சாப்பாட்டுக்கு எல்லாம் தனித்தனியா கட்டணும். நம்ம ட்ராவல் ஏஜண்ட் லக்கேஜ், வெஜ்மீல் எல்லாம் சேர்த்து சூப்பர் ஆஃபர் கொடுத்தாப்ல. (20கிலோ) சரின்னு புக் செஞ்சாச்சு. அந்த நாளும் வந்ததுன்னு புறப்பட்டாச்சு. சென்னையிலேர்ந்து புறப்பட்டோம்.

அடுத்த நாள் சிங்கை டைமுக்கு 5.15க்கெல்லாம் சேர்ந்தாச்சு. 30 மினிட்ஸ் முன்னாடி வந்திட்டோம்னு அலட்டல் வேற ஏர்லைன்ஸ்காரங்க கிட்ட. நம்ம ஊர்லயும் பட்ஜட் ஏர்லைன்ஸ்ல ட்ராவல் செஞ்சிருக்கோம். ஆனா இது ரொம்பவே சின்னதா இருந்தது. இருக்கமா 4 மணிநேர பயணம். சாப்பாடு ப்ரவுன் ரைஸ் கொஞ்சம், 4 கேரட் 8 மஷ்ரூம் போட்ட ஒரு க்ரேவி, தண்ணி பாட்டில் பெரிய லோட்டாவுல டீ/காபி. பாஸ்மதி அரிசியா இருந்தாலாவது சாப்பிடலாம். நல்ல வேளை ஏர்போர்ட் லவுன்ச்ல சாப்பிட்டு கிளம்பினோம்.

ஏர்போர்ட்டுக்கு தம்பியும் தம்பி மனைவியும் வந்திருந்தாங்க. அங்கேர்ந்து அவங்க தங்கியிருக்கற இடத்துக்கு போனோம். செம டயர்ட். ப்ரக்ஃபாஸ்ட் சாப்பிட்டு அயித்தான் தூங்க போயிட்டாங்க. பேசிக்கிட்டே தம்பி மனைவி மதிய சமையலை முடிச்சாங்க. சின்னதா பூஜை செஞ்சிட்டு சாப்பிட்டு தூங்கினோம்.

சாயந்திரம் எம் ஆர் டில ரஃபில் சிட்டி ஸ்டேஷன் போய் மெர்லயன் பாத்தோம். நதி, கடல் இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். சிங்கப்பூர் நதியில் போட் ரைட் போய் அங்கேர்ந்து திரும்ப ட்ரையின் பிடிச்சு சொமர்சட் அப்படிங்கற இடத்துக்கு தம்பி கூட்டி போனாப்ல. அந்த ஷ்டேஷனுக்கு மேலயே இருக்கற மார்ஷே அப்படிங்கற ரெஸ்டாரண்ட் போனோம்.

வித்தியாசமான செட்டிங்க்ஸ். உணவும் வித்தியாசமா இருந்தது. உள்ள நுழையும்போதே ஆளுக்கு ஒரு கார்ட் கொடுத்திடறாங்க. நாம வேணும்ங்கறதை ஆர்டர் செய்யும் போது அந்த இடத்துல இந்த கார்டை தேச்சிட்டா போதும். மொத்தமா வெளியில வரும்போது எம்புட்டு அமொளண்ட்னு காட்டும். அந்த மாதிரி ஒரு சிஸ்டம்.

தின்க்ரஸ்ட் பிட்சா,  வொயிட் க்ரீம் பாஸ்தா, பம்ப்கின் சூப், மஷ்ரூம் சூப், வெஜிடபிள் சாலட்னு சாப்பிட்டோம். கீழே இறங்கினா ஷ்டேஷன். திரும்ப எம் ஆர் டி பிடிச்சு தம்பி தங்கியிருக்கற இடத்துக்கு போனோம்.

சிங்கையில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அவங்களுடைய போக்குவரத்து வசதி. ரோட் செம ஸ்மூத்தா நல்லா இருக்கு. எங்கயும் ஒரு குண்டு, குழி இல்லை. அந்த மாதிரி சாலையில அழகான பஸ்கள். எல்லாமே ஏசி பஸ்தான். சில டபுள் டக்கர்களும் இருக்கு. கண்டக்டர் கிடையாது. டிரைவர் மட்டும்தான். ட்ரையின், பஸ் ரெண்டுக்கும் சேர்த்து ஒரு கார்ட் வாங்கிட்டு பஸ்ல ஏறினதும் அதை அந்த மிஷின்ல காட்டணும், இறங்கும்போதும் காட்டினா ஆட்டோ மேட்டிக்கா பணம் டிடக்ட் ஆகுது. எவ்வளவு பேலன்ஸ் இருக்குன்னும் சொல்லுது.

எம் ஆர் டி சர்வீஸ்கள் சூப்பர். நம்ம ஊர் மெட்ரோ ரயில் தான். ஆனா சிங்கையில நான் பார்த்து வியந்தது அந்த ஒழுங்கை.  ரயில் வந்து நின்னதும் கதவு திறக்குது. இறங்கறவங்க நடுவழியில இறங்கறாங்க. ஏறுறவங்க இரண்டு பக்கத்துலேர்ந்தும் ஏற்றாங்க. எக்ஸலேட்டர்களில் கூட ஒரு சைடாவே மக்கள் நிக்கறாங்க. (இடது பக்கமா) வலது பக்கம் காலியா விடணும். அவசறமா போறவங்க படிகளில் ஏறி போக வசதியாம். ஒவ்வொரு ரயில்வே ஷ்டேஷன்/பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே மால்கள் மாதிரி கட்டிவெச்சிருக்காங்க. வேணும்ங்கறதை வாங்கிக்க, சாப்பிட வசதியா இருக்கு. ஆட்டோ இல்லை. மீட்டர்ட் டேக்ஸி தான். தாய்லாந்துல வரிசையில நின்னு ஏறி ட்ரைவர் கூட காசு கேட்டு படுத்தினது ஞாபகம் வந்துச்சு. ஆனா சிங்கையில அப்படில்லாம் இல்லை. வரிசையில வந்து அழகா கூட்டிகிட்டு போகுற சர்வீஸ்.  அட்வான்ஸ் புக்கிங் செஞ்சா 3.5டாலரோ என்னவோ கூட கொடுக்கணும். ஆனா டாக்சி ஸ்டாண்ட்ல போய் நின்னோம்னா அதெல்லாம் கட்ட தேவையில்லை

இந்த மாதிரி வசதிகள் நம்ம ஊர்லயும் செஞ்சு கொடுத்தா கார், ஆட்டோல்லாம் தேவையே இல்லை. பொல்யூஷன் குறையும்.  பெருமூச்சுவிட்டுக்கிட வேண்டியதுதான்.

5 comments:

R Abinaya said...

நல்ல பயணம்... ரசித்து எழுதியிருக்கீங்க...

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபினயா

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பயணம்.... தொடர்கிறேன்.

Unknown said...

புதுகை அக்கா நல்ல travelogue. உங்க கை இப்போ எப்டி இருக்கு? பிசியோதெரபி பண்ணறீங்கள?

உமா (கலி இல் இருந்து)

புதுகைத் தென்றல் said...

நன்றி சகோ

உமா எப்படி இருக்கீங்க. இப்ப கைவலி பரவாயில்லை. பிசியோ முடிஞ்சது. அன்புக்கு நன்றி