Friday, January 29, 2016

வீடு

சென்னைக்கு மிக அருகிலேன்னு கூவி விக்கறவங்க ஆகட்டும், குறைஞ்ச விலையில எல்லா வசதிகளுடனும்னு கூப்பிடறவங்க ஆகட்டும் எல்லாரும் டார்கட் செய்வது தனக்குன்னு ஒரு சொந்த வீடாவது வேணும்னு நினைக்கற மக்களுக்காகத்தான்.அது ஏன் சொந்த வீடு வாங்கணும்? வாடகை வீட்டுலயே இருந்திடக்கூடாதான்னு சிலர் நினைக்கலாம்.

வாடகை வீடுன்னு வரும்போது பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் தான். ஹவுஸ் ஓனர் எனப் படுபவர் போடும் கண்டீஷன்கள், இப்போ ஒண்டுகுடித்தன வீடுகள் இல்லைன்னாலும் அப்பார்ட்மெண்ட்களில் ஒவ்வொரு ரகம். ஏதோ அவங்க சொத்தை நமக்கு இலவசமா கொடுத்திட்டா மாதிரியான முகபாவம், பேசும் தோரணை இதெல்லாம் தான். அதுவும் இந்த அப்பார்ட்மெண்ட்களில் வாடகைகாரர்கள் சந்திக்கற முக்கியமான பிரச்சனை அசோஷியஷன் மீட்டிங்குக்கு அவங்க அழைக்கப்பட மாட்டாங்க. காரணம் சொந்த வீட்டுக்காரங்க மட்டும் தான் அலவ்ட் யூ சி.  ஹவுஸ் ஓனர் வாடகைக்கு இருப்பவங்க கஷ்ட நஷ்டத்தை புரிஞ்சிக்கற மனுஷனா (மனுஷியா) இருந்துட்டா சரி. இல்லாட்டி அதோகதிதான்.  குடியிருக்கறவங்க கஷ்டத்தை சொல்லிக்க முடியாது சொன்னா தீர்வும் இருக்காது.

 எத்தனையோ பிரச்சனைகள் வாடகை வீட்டு காரங்களுக்கு. சில வாடகைக்காரங்க வீட்டுக்காரங்களை  ரொம்ப கஷ்டபடுத்தறதும் உண்டு. அது தனிக்கிளைக்கதை. ( வீடு காலி செய்ய சொன்னா வேற யாரும் வாடகைக்கு கிடைக்க மாட்டாங்களோன்னு நினைக்கற ஹவுஸ் ஓனரை சிக்கிட்டாண்டா அடிமைன்னு முடிவு கட்டி படுத்தி எடுக்கற வாடகைக்கு இருக்கறவங்களை பார்த்திருக்கேன்.

இந்த கஷ்டத்துக்கெல்லாம் ஒரு விடிவா இருக்கட்டும்னு தான் “எலி வலையானலும் தனிவலைன்னு “ ஒரு சொந்த வீட்டை வாங்கிடணுனு ஒவ்வொருத்தரும் துடிக்கறது. இவங்களுக்கு வாடகையா கொடுக்கற காசோட கொஞ்சம் கூட போட்டு இஎம் ஐ கட்டிட்டா 20 வருஷத்துல கடன் தீர்ந்திடப்போகுது, வீடு நமக்கு சொந்தமாகிடும்னு ஒரு திட்டம் தான்.   கிரஹப்ரவேசத்துக்கு பத்திரிகை வைக்க போன நண்பர் ஒருவருக்கு அவங்க உறவினர் “ பெரிய்ய லெவல்ல கடன்காரன் ஆகிட்டன்னு சொல்லுன்னு” ஜெர்க் கொடுத்திருக்காரு.  கடன் இல்லாம வீடு கட்டுறது, கடன் இல்லாம கல்யாணம் செய்யறது இரண்டும் நடக்க கூடியதே இல்லை.  கைல காசு சேத்துதான் வீடு வாங்கணும்னு உக்காந்திருந்தா எப்படி வீடு வாங்க முடியும். நாம பணம் சேர்த்துக்கிட்டே இருந்தா ரேட்டு ஏறிக்கிட்டே போகும். இந்த வீட்டுக்கடன் வாங்கறதுல இன்னொரு வசதி இன்கம்டேக்ஸ் எம்ஸம்ப்ஷன் கொஞ்சம் கிடைக்கும்.  அதை வட்டியா கட்டறதா நினைச்சுக்கிட்டுத்தான் பலரும் லோன் போட்டு வீடு வாங்கறாங்க.

சொந்த வீடு வெச்சிருக்கறவங்க அவங்களே அங்க இருந்திட்டா ஓகே. வாடகைக்கு விட்டா ஆகா அது ஒரு விதமான இம்சை. :) நாம வாடகைக்கு இருக்கும்போது வாடகைப்பணம் ஒழுங்கா கொடுக்கணும், மெயிண்டனென்ஸ் கரெக்டான தேதில கட்டணும், கப்போர்ட் உடைஞ்சிருந்தா சரி செஞ்சு கொடுக்கணும், வீடு காலி செஞ்சு போகும்போது வீட்டை சுத்தமா செஞ்சு வெள்ளை அடிச்சு கொடுக்கணும். ஆனா நாம ஹவுஸ் ஓனர் ஆகும்போது வருவாங்க பாருங்க ஒவ்வொருத்தங்களும் மாஸ்டர் பீஸ்.

பைப் ரிப்பேர், பல்ப் போச்சு, ஃபேன் ரிப்பேர், வாஷ் பேசின் உடைஞ்சு போச்சு இப்படி ஏகப்பட்ட செலவு வைப்பாங்க. நாம என்னதான் அக்ரிமெண்ட்ல எழுதியிருந்தாலும் அதெல்லாம் நடக்காது. வீடு காலி செஞ்சிட்டு போகும்போது குப்பையா போட்டுட்டு போவாங்க. கப்போர்ட் கதவு தொங்கும். இந்த முன்பணம் இருக்கோ ஹவுஸ் ஓனர்ஸ் தப்பிச்சாங்க. இதைத்தவிர ப்ராபர்ட்டி டேக்ஸ் கட்டணும். வீட்டுல இருக்கறவங்களால அண்டை அசலாருக்கு பிரச்சனை இல்லாம இருக்கணும், மாசம் தவறாம ஒழுங்கா வாடகைப்பணம் வாங்கணும். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ம்முடியல.

மொத்தத்துல சொந்த வீடோ வாடகை வீடோ  ”வீட்டுக்கு வீடு வாசப்படி தான்”




10 comments:

சுசி said...

நிறைய பில்டர்ஸ் நாங்க கட்ற ஃப்ளாட்டுல ஸ்விமிங் பூல் இருக்குன்னெல்லாம் விளம்பரம் பண்ணினாங்க. ஆனா, போனமாசம் நிறைய ஃப்ளாட்டுங்களுக்குள்ளயே ஸ்விமிங் பூல் வந்திச்சே!!! எப்பவுமே நான் வாடகைவீடு தான். தொல்லை தராத வெளிநாட்டில் இருக்கும் ஹவுஸ் ஓனர். என்ன ப்ரச்சனையானாலும் நாங்களே தான் சமாளிச்சிக்கணும். நிறைய பேர் எங்களத்தான் ஓனர்ன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க. ;)

pudugaithendral said...

ஆஹா வாங்க,
நலமா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
வாடகை வீடு என்றால் பல பிரச்சினைகள் வருவது வழக்கம்... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

pudugaithendral said...

வாங்க ரூபன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

வீட்டுக்கு வீடு வாசப்படி....

இரண்டு விதங்களிலும் பார்த்துவிட்டேன்!

Pandian R said...

என்ன வலையானாலும் ஆகட்டும். 80 சதம் கூட வங்கிக் காரன் லோன் கொடுக்கட்டும். நிதி நிலைமை சரியாகனும்னா, குறைஞ்ச பட்சம் 25 30 சதமாவது கைக்காசாக இருக்கும் பட்சத்தில் நம் சொத்தை வங்கிக்கு எழுதி வைப்பது குறையும். அதெல்லாம் போகட்டும். அபாட்மெண்ட் குடியிருப்பாக இருக்கும் பட்சத்தில் தொல்லைகளுக்குப் பஞ்சமில்லை. வாடகை வீடாக இருந்தாலாவது காலி செய்திட்டுப் போகலாம்னு பொலம்பறவன் நிறைய பேர்.

Thulasidharan V Thillaiakathu said...

வீட்டுக்கு வீடு வாசப்படியேதான்...எந்த வீடாக இருந்தாலும்

pudugaithendral said...

வாங்க சகோ,

அதேதான். ரெண்டு பக்கமும் பாத்தாச்சு என்பதை விட பட்டாச்சுன்னும் சொல்லலாம். :)

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கடைசி பெஞ்ச்,

100 பர்சண்ட் லோன் தரமாட்டாங்களே.
//வாடகை வீடாக இருந்தாலாவது காலி செய்திட்டுப் போகலாம்னு பொலம்பறவன் நிறைய பேர்.//
ரொம்ப ரொம்ப சரி.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க துளசிதரன்.

அதேதான்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி