Monday, February 08, 2016

இவங்களுக்கெல்லாம் எம்புட்டு செஞ்சாலும் பத்தாது..............!!!!!!!

சமீபத்தில் ஒரு உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். டீ,காபி உபசரிப்புக்கு பின்னர் இரவு சாப்பாட்டுக்கு ரெடி செஞ்சுகிட்டு இருந்தேன்.  சரி வா நானும் கூட பேசிகிட்டே இருக்கேன்னு கூட வந்து கிச்சன்ல நின்னாங்க. நான் பொதுவா யாரையும் சாப்பிட கூப்பிட்டா அவங்க வருவதற்குள் சமையலை முடிச்சு, கிச்சன்லாம் துடைச்சு நீட்டா வெச்சிட்டு ரெடியாகி இருப்பேன். அன்னைக்கு மத்த ஐட்டங்கள் செஞ்சாச்சு. சூடா அடை போடுவதுதான் வேலை. அதை செஞ்சுகிட்டு இருந்தேன். பக்கத்துல நின்னு பேசிக்கிட்டு இருந்தவங்க.

எங்க உறவுல கல்யாணம் ஆகியிருக்கும் ஒரு இளம் தம்பதிகளைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. இப்ப நம்ம வீட்டுலயே ( வீட்டுப்பேரு) சூப்பர் மருமகள்னா அந்த பொண்ணு தான். அப்படின்னாங்க.  அவங்க எப்பவும் இந்த மாதிரி பேசறவங்கனு தெரியும். அதனால ஓ அப்படியான்னுட்டு அடுத்த அடையை போட்டேன். “ ஏன்னு கேட்க மாட்டியான்னு?” என்னிய கேட்க, சொல்லுங்கன்னேன்.

அதாகப்பட்டது அந்த மருமக பொண்ணு கை நிறைய்ய சம்பாதிக்கறா. ஆனா அந்த நினைப்பே இல்லாம வீட்டுல வேலை எல்லாம் செய்யறா!! பூஜை புனஸ்காரம் எதுவும் விட்டுக்கறதில்லை. அதனாலத்தான் சொல்றேன் அவதான் சூப்பர் மருமகள்னு அப்படின்னாங்க. எனக்கு புஸுபுஸுன்னு கோவம் வந்தது. ஆனா எதுவும் பதில் சொல்லிக்கலை. வயசானவங்க. அவங்க கிட்ட போய் என்ன பேசிக்கிட்டு. அதுவும் அவங்க சொல்ற அந்த பொண்ணு நம்மை விட ரொம்ப சின்ன பொண்ணு மட்டுமில்ல அந்த பொண்ணுக்கே இவங்க இப்படில்லாம் பேசறாங்கன்னு தெரியுமான்னும் தெரியாது.

அந்த பொண்ணோட மாமானார் மாமியாரை ஒரு ஃபங்க்‌ஷனில் பார்த்தப்போ, அவங்க மருமக வேலைக்கு போவதால எங்கயும் போக முடியாம குழந்தையும் பாத்துக்கறதை சொல்லிக்கிட்டு இருந்தாங்க. மருமக வேலைக்கு போறாளேன்னு புரிஞ்சுகிட்டு ஒத்தாசையா இருக்காங்க அவங்க.  எனக்கு ஒண்ணே ஒண்ணு புரியலை. அது என்னன்னா??!!!

எந்த பொண்ணும் வேலைக்கு போயிட்டா அவங்க செய்யறதை மட்டும் சாதனையா சொல்றாங்க. வேலைக்கு போகாம வீட்டுல இருக்கறவங்க செய்யறது எதுவும் சாதனைகள் கீழ வர்றதே இல்லை. வேலைக்கும் போகும் அந்த பெண்ணின் குழந்தையை பாத்துக்க மாமனார் மாமியார் இருக்காங்க. ஒரு நேரம் சமையல் அவங்க செய்யறாங்க. இன்னொரு நேரம் மருமக செய்யறாப்ல. மாசத்துல 3 நாள் ரெஸ்ட் கொடுத்து தனியா இருக்காப்ல. நோன்பு, பெரிய நாள்னா கூட மாட செய்ய மாமியார் இருக்காங்க. இவ்வளவு சப்போர்ட் இருந்து இவங்க எல்லாம் செய்வது தான் சாதனை. அவ்வளவு ஏங்க குழந்தையை கை மாத்தி விடவாச்ச்ம் வீட்டுல ஆள் இருக்காங்கள்ல!!!!

பிள்ளைத்தாச்சியா இருந்தப்பலேர்ந்து தனியா தன்னை கவனிச்சுக்கிட்டு, பிள்ளை பிறந்ததும் அதையும் கவனிச்சுக்கிட்டு, பெட்ரிடர்ன் மாமியாரை பாத்துக்கிட்டு, மாசத்துல டூருக்கு போகும் கணவனுக்கு சப்போர்ட்டா வீட்டு நிர்வாகத்தை கவனிச்சு, ரெண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி வேலைகள் செய்யும்போது வரும் ஒவ்வொரு பண்டிகைகள் பெருநாட்களை ஒன் வுமன் ஆர்மியா ஏத்து நடத்தி  அந்தந்த நாளுக்கு தேவையான பூஜை பொருட்களையும் வாங்கி கொண்டாந்து வெச்சுகிட்டு விடாம பூஜைகள் செய்யணும்னு  எல்லாம் செஞ்சதெல்லாம் இவங்களுக்கு நினைவில் இல்லை. வேலைக்கு போகும் தகுதி இருந்தும் சூழ்நிலை சரியில்லாததால் வேலையை ராஜினாமா செஞ்சிட்டு ஹவுஸ் வைஃப் எனும் அந்த சூழலை ஏத்துக்க ரொம்ப தைரியம் வேணும்.

இவங்கள்லாம் பாராட்டி நமக்கு ஒண்ணும் ஆகப்போறதில்லை. ஆனா 20 வருஷம் நாம மருமகளா, மனைவியா, தாயா  செய்யற செய்கைகளை வேலைக்கு போகலை எனும் ஒரே காரணத்துக்காக ஜஸ்ட் லைக் தட் செஞ்சிட்டு இருக்கறதா பேசும்போது ஒரு வருத்தம் வரத்தான் செய்யுது. பூஜைகள் செஞ்சது நம்ம வீடு நல்லா இருக்கணும். வீட்டுல ஒரு பாசிட்டிவ் வைப்ஸ் உண்டாக்கணும்னு நாம செய்யறதுதான். பல பேர் பூஜை செஞ்சாத்தானான்னு செய்யாமயும் இருக்காங்க. அவங்களை பத்தி பேசலை. ஆனா ஒழுங்கா எல்லாம் செஞ்சிகிட்டு இருக்கும்போது என்னமோ அவங்க தான் ஒசத்திங்கற ரேஞ்சுல பேசறது எந்த விஷயத்துல நியாயம்.

அந்த பொண்னை பத்தி பெருமையா பேசுறாப்ல பேசி நம்ம தலைல குட்டுவது என்ன நியாயம். இந்த மாதிரியான ஆளுங்க இருக்காங்க பாருங்க. வேலைக்கு போகாத பொண்ணுங்களும் மனுஷங்க தாங்க. அதுவும் என்னிய போல இருக்கும் ஒன் உமன் ஆர்மிக்காரங்களுக்கு எனதன்பான வாழ்த்துக்கள், மட்டும் பாராட்டுக்கள். உங்களுக்கு இந்த கிரீடத்தை கொடுத்து என் பாராட்டை தெரிவிச்சுக்கறேன்.






12 comments:

Geetha Sambasivam said...

இதை எல்லாம் ஒரு காதால் கேட்டுட்டு மறு காதால் வெளியே விடணும். எதுக்கு இந்தப் புலம்பல் எல்லாம்? :)

Thenammai Lakshmanan said...

செம செம தங்க்ஸ். நல்லா திருப்பி கொட்டிட்டீங்க என்னோட ஆதங்கமும் இதேதான். :) தாங்க்ஸ் ஃபார் த க்ரீடம் தங்காய் :)

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாஜி

pudugaithendral said...

வாங்க அக்ஸ்😀
வருகைக்கும் கருத்துக்கும் நன்றீஸ்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கலா, இந்த ஊரில வேலைக்குப் போனாலும் என் பொண்ணு அவ வந்து மிச்ச வேலையெல்லாம் செய்யறா. டபிள் மடங்கு. என்னால் முடிந்தது வாக்குவம் செய்யரது டிஷ் வாஷர் லோடிங்க் அண்ட் அன்லோடிங்க்.
முழங்கால் வலி அதற்கு மேல் முடிவதில்லை. ரெண்டு பசங்களுக்கும் நாக்கை நல்லா வளர்த்துவிட்டிருக்கா. அது போல என்னால் சமைக்க முடியாது.

20 வருஷங்களுக்கு முன்னால் இருந்த கலகலாவெல்லாம் இப்போ இல்லை.
மிகப் பொறுமை சாலி. நீங்கள் சொல்வது உண்மைதான்.

Unknown said...

Good article,lot people thinking home making is not a work,yes its not a paid job ,its a noble work.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்குத்தான் தெரியும். வாய் பேசாம இருக்கலாம்ல அதான் என் கேள்வி. உங்க பொண்ணுக்கு என் வாழ்த்தை சொல்லிடுங்க.

வருகைக்கு ரொம்ப நன்றி

pudugaithendral said...

வாங்க ரமேஷ் சுந்தர்ராஜன்,
,its a noble work.// இந்த புரிதல் தான் வேணும். அப்ப எந்த பெண்ணையும் குறைச்சு எடைப்போட தோணாது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Unknown said...

Well said. I hate it when people take mothers for granted solely because they stay at home.

சுசி said...

கலா! வேலைக்கு போரவங்கன்னே இல்ல. அடுத்தவங்க வீட்டு மருமகளோ மகளோ ஒசத்தி நம்ம வீட்டு பொண்ணு மட்டம் அவ்வளவு தான். எங்க அம்மாவே, அவள பாரு இவள பாருன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. எவ்வளவு தான் செஞ்சாலும் என் மாமியாரும்,"அவ என்னை எப்படியிருக்கீங்க ன்னு கல்யாணத்துல பார்த்து கேட்டா தெரியுமா" சிரிச்ச முகம், அடக்கம், வேலைக்கு போற கர்வமே துளி கூட கிடையாது. இப்படி நிறைய சொல்லுவாங்க. "எங்கே அவங்க வீட்டுல போயி ஒரு வாரம் தங்கிட்டு வாங்க பார்க்கலாம் ன்னு " வாய் வரைக்கும் வரும். அடக்கிப்பேன். சொன்னா,"அவ நல்லா செய்யிரான்னு சொன்னதுக்கு பொறாமையில என்ன வீட்ட விட்டு போன்னு சொல்லிட்டான்னு" சொல்லி நாடகம் ஆரம்பமாகிடும்.

சுசி said...

கலா ! பல பெண்கள் வேண்டாத விஷயங்களை பற்றி விவாதித்து விட்டு நாம் வேண்டாத விஷயங்களை விவாதிக்கிறோம் என்ற எண்ணம் சிறிதுமின்றி அதை மகா மேதாவித்தனமான விவாதம் என்றும் கருதுகிறார்கள். சமீபத்தில் அப்படி ஒரு விவாதத்தை கண்டு எனக்கு கடும் கோபம் வந்தது. அதை சொன்னால் நான் கோபப்படுகிறேன் என்கிறார்கள். உங்கள் விருந்தினராகட்டும், என் விஷயத்தில் விவாதத்தில் இறங்கியவர்களாகட்டும் வேண்டாத பேச்சால் தானே நம் மனதை புண்படுத்துகிறார்கள். ஏன்? அனாவசிய பேச்சை குறைக்கலாமே.

pudugaithendral said...

வாங்கத் தானைத்தலைவி,

என்ன செய்ய. மக்களுக்கு புரிதல் அவ்ளவுதான்னு போக வேண்டியதா இருக்கு. அனாவசிய பேச்சு பத்தி நல்லா சொன்னீங்க. குறைக்கலாம்? ஆனா தான் செய்வது தப்புன்னு புரியாதவங்க கிட்ட என்ன பேச.

வருகைக்கு மிக்க நன்றி