Tuesday, March 01, 2016

கானக்கந்தர்வனின் இசைமழையில் நான்........................

3 வருஷம் பாட்டு கத்துகிட்ட அனுபவம் இருக்கு. குடும்பத்தில பலரும் நல்லா பாடுறவங்க ஆனா எனக்கு சங்கீதத்தை ரசிக்க ரொம்ப பிடிக்கும். பாடுறது கானக்கந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ்னா உயிர் உருகும் நிலைதான். என் சோகத்தை கரைத்து, எனக்குள் இறங்கி என்னை அரவணைக்கும் அந்த குரல். சின்ன வயசுலேர்ந்து ரொம்ப ஆசை அவருடைய கச்சேரியை ஒருவாட்டியாவது நேர்ல கேக்கணும்னு. நியாயமான ஆசைன்னா அது கண்டிப்பா நிறைவேறும்னு சொல்வது சரிதான். அந்த நாளும் வந்தது.

அடையார் டைம்ஸ்  (ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பார்ட்மெண்ட்களில் கொடுக்கறாங்க இங்க) பேப்பர்ல அடையார் அனந்தபத்மநாப சுவாமி கோவில் ப்ரம்மோற்சவ நிகழ்வுகளில் ஒரு பகுதியா தினமும் சாயந்திரம் பிரபல பாடகர்களின் கச்சேரி. என்னென்னைக்கு என்னென்ன கச்சேரின்னு போட்டு வந்திருந்தது. கடைசி நாள் கானக்கந்தர்வன் கச்சேரின்னு படிச்சதும் அயித்தான் கிட்ட அப்ளிகேஷன் போட்டேன். :) அவரும் உடனடியா டிக்கட் புக் செய்ய கோவில் ஆபீஸுக்கு போன் போட்டார். டிக்கட்லாம் இல்லை சார், முதலில் வருபவருக்கு சீட்ங்கற அடிப்படையில் இலவச அனுமதிதான்னு சொல்ல, கொஞ்சம் பயம் வந்தது. டிக்கட் வாங்கினாலாவது கன்ஃபார்மா சீட் கிடைக்கும். இலவசம்னா எத்தனை பேர் வருவாங்க. சரி நடக்கட்டும்னு இருந்திட்டேன்.

23.2.2016 மறக்க முடியாத நாள். காலையில கூட இந்த ஞாபகம் இல்லாம மற்ற வேலையில இருந்தேன். மதியம் 3 மணிக்கு மேல ஞாபகம் வந்து கடகடன்னு டின்னர் ரெடி செஞ்சுகிட்டே அயித்தானுக்கு போன் போட்டு சாயந்திரம் 6.15க்கு கச்சேரின்னு ஞாபகப்படுத்தினேன். 5.30க்குள்ள வந்திடுவேன். வந்ததும் கிளம்பிடலாம்னாரு. மணி 5. சமையல் முடிச்சாச்சு. டீ போட்டு குடிச்சு அயித்தானுக்கு ஃப்ளாஸ்க்ல ஊத்தி வெச்சாச்சு. அம்ருதம்மாவுக்கு எக்ஸாம் என்பதால தான் வரலைன்னு சொல்லிட்டாங்க. நானும் ரெடியாகி இருக்கேன். 5.30க்கு அயித்தான் வரலை. போன் போட்டா இந்தோ கிளம்பறேன்னு சொல்ல எனக்கு ஷாக். பத்து நிமிஷத்துல வரக்கூடிய தூரம் தான்னாலும் டிராபிக் இருந்தா கஷ்டம். வந்து அவர் ரெஃப்ரெஷ் ஆகி அடையார் போக 15 நிமிஷமாவது ஆகும். சீக்கிரம் போனாத்தானே சீட் கிடைக்கும். அயித்தான் வரும்போது மணி 5.45. உடன் ரெடியாகி கிளம்பினோம். பொதுவா எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கும் சிக்ன்ல்ல டிராபிக் கன்னாபின்னான்னு இருக்கும். ஆனா அன்னைக்கு 5 நிமிஷம் கிராஸ் செஞ்சு பத்தே நிமிஷத்துல கோவில்கிட்ட போயாச்சு.

வெளியிலயே பெரிய ஸ்க்ரீன் போட்டு சேர்ஸ் போட்டிருந்தாங்க. எனக்கு அவரை நேர்ல பாக்கணுமே!!! உள்ளே போய் ட்ரை செய்யலாம்னு அயித்தான் சொல்ல போனா ஹாலில் ஹவுஸ்ஃபுல். ஆண்டவனை வேண்டிகிட்டே பார்த்தா இடது ஓரத்துல 3 சீட் முன்னும் பின்னுமா காலியா இருந்துச்சு. பாஞ்சு ஓடிப்போய் உக்காந்துகிட்டோம். தலைவர் 6.15 கச்சேரிக்கு தாமதமா 6.45கு தான் வந்தார். சாமி தரிசனம் முடிச்சு மேடையேறி கச்சேரி ஆரம்பிக்கும்போது மணி 7 அல்லது 7.15 இருக்கும்.

தரிசனம் முடிஞ்ச்சு மேடையேற வரும்போது ஜன்னலேர்ந்து அயித்தான் எடுத்த போட்டோ இது.

மனிஷனுக்கு 70+ வயசு. போட்டோலோ பார்த்திருந்த கறுப்பு தாடியெல்லாம் இப்ப ஒரே வெள்ளை. மனுஷன் போட்டிருந்த ட்ரஸ்ஸோட கலந்து ஒரே வெள்ளை மயம். தலையில் இருக்கும் கொஞ்சமே கொஞ்சம் கறுப்பு முடி கூட அழகு. :)  எல்லாம் செட் செஞ்சிட்டு பாட ஆரம்பிச்சாரு. முன்னாடி ஐபேட் வெச்சு அதுல பாடல்களை செலக்ச்ட் செஞ்சு  பாடினார்.

நான் தானா! அந்த இடத்திலயா! அவரோட கச்சேரியை கேட்கும் பாக்கியமான்னு எனக்கு ஒரு அயோமயமான நிலை. கானக்கந்தர்வனின் குரலை கேட்டது தான் இது கனவு இல்லை, நிஜம்தான்னு இயல்புக்கு வந்தேன். எத்தனை நாள் காத்திருப்பு !! இலவசமா கேக்க வந்திருக்கறவங்க தானேன்னு இல்லாம எடுத்துகிட்ட வேலையை அருமையா செஞ்சாரு.  1.45 நிமிஷம் கச்சேரி. அதிலயும் பாவனகுரு பாட ஆரம்பிச்சாரு. கண்னுலேர்ந்து தண்ணி வழியறதை கட்டு படுத்த முடியலை எனக்கு. என் குருவாக நான் நினைச்சிருப்பது அவரைத்தானே. (அன்னைக்கு கே.ஜே.ஒய் அவர்களின் இன்னொரு குரு டீ.வி.கோபாலகிருஷ்ணன் அவர்களும் வந்திருந்தார்)

என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் பாடினார். உள்ளே உயிர் உருக ஆரம்பிச்சது.
70 வயதில் அமர்க்களமாக பாடுவதை பார்த்து அதிசியத்து உக்காந்திருந்தேன். ஒவ்வொரு பாடல்களும் அற்புதம். ஸ்வரங்கள் பாடுவதை கேட்டுகிட்டே இருந்தா போதும்னு இருக்கு. மிருந்தங்கம், கடம் தனி செமையா இருந்தது. வயலினும் அருமை. அப்புறம் அன்னைக்குத்தான் மொதோ தடவை அவருடைய இந்த பாட்டை கேட்டேன். என்ன ஒரு இனிமையான பாட்டு.8 மணி வாக்கில் கோவில் ட்ரஸ்டை சேர்ந்தவர்கள் கானக்கந்தர்வனுக்கும் மற்ற குழுவினருக்கும் சால்வை போத்தி மரியாதை செலுத்தினார்கள். அப்புறம் சில பாடல்கள் பாடினார்.  ஹரிவராசனம் பாடியதும் அங்கே இருந்தவங்க எல்லாரும் பரவச நிலைக்கு போயாச்சு. இனிமையாக மங்களம் பாடி கச்சேரியை நிறைவு செய்தார்.

என் ஜென்மசாபல்யம் அடைந்த சந்தோஷத்தில் அயித்தானுக்கு நன்றி சொன்னேன். அவருடைய கண்களும் பனித்திருந்தது!!!  என் கனவை நினைவாக்கித்தந்த இறைவனுக்கு நன்றிகள்.4 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா நேரடியாக அவர் பாடக் கேட்பது நல்லதோர் அனுபவம். உங்கள் மகிழ்ச்சி எழுத்திலும் தெரிகிறது.....

வல்லிசிம்ஹன் said...

அன்பு கலாமா,
எனக்கே நேரா கேட்டாப்போல இருந்தது. இத்தனை பக்தியா.
இன்னும் நிறைய அவர் இசையைக் கேட்க உங்களுக்குப் பாக்கியம் இருக்கு.
நல்லதொரு பதிவு. வாழ்க வளமுடன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

ஆமாம் சகோ. இப்ப நினைச்சாலும் மகிழ்ச்சி பொங்குது.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

பக்திக்கு மேல ஒரு நிலை இருந்தா அதை சொல்லலாம். அவரின் குரல் தான் எனக்கு வழிகாட்டி, என்னை அரவணைத்து என் சோகத்திலும் சந்தோஷத்திலும் பங்கெடுத்து என்னை முறை படுத்தியிருக்கு. அந்த குரலை பிடிச்சு மேலே எழும்பிக்க ஆண்டவன் அருள் புரிஞ்சிருக்கான். உங்க ஆசிர்வாதத்துல அந்த ஆனந்தமழையில அடிக்கடி நனைவது நடக்கட்டும்.

வருகைக்கு நன்றி