Saturday, November 19, 2016

கொடி அசைந்ததும் காற்று வந்ததா???!!!!

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா? அருமையான பாட்டுல்ல. மனதுக்கு ரொம்ப இனிமையானதும் கூட. இதே மாதிரிதாங்க நம்ம உடல் நலமும். உடல் நலத்தால் மன நலமா? மன நலத்தால் உடல் நலமான்னு சொல்லிட முடியாது. ஆனா ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையது.

இந்த தொடர் பாடம் எடுக்கும் முயற்சி எல்லாம் இல்லை. நான் இழந்து கற்றுக்கொண்ட பாடத்தை மற்றவர்கள் இழக்காமல் கற்றுக்கொள்ளும் ஒரு முயற்சி தான். கருத்துக்கள் வேறு படலாம். ஆனா மூலக்காரணம் ஒண்ணு நம் உடல் மன நலம் பேறுதல். இதுல உங்களூக்கு உதவியா இருக்கறதை எடுத்துக்கோங்க. உங்களுக்கு தெரிஞ்சதையும் பகிர்ந்துக்கோங்க. அது அனைவருக்கும் உதவியாய் இருக்கும்.

பிரபல பாலிவுட் நடிகை தீபீகா படுகோன் அவங்க  ஸ்ட்ரெஸ் பத்தி பேசியிருந்தாங்க. அதுக்கு அவங்க மருத்துவம் பார்த்துக்கிட்டதையும் பத்தி சொன்னதும் மக்கள் மனசுல என்ன இப்படி பேசறாங்களேன்னு இருந்தது.  ஆனா பலருக்கு தன் உடலின் நிலைக்கு காரணம் என்னன்னே தெரியாமலேயே இருக்காங்க. வலிக்கான மூலக் காரணம் என்னன்னு தெரியுமா?



இந்த படங்களை பாத்தீங்கன்னா ஒவ்வொரு வலிக்கும் காரணத்தை சொல்லுது. நாம வலி நிவாரணி பூசறது, உள்ளுக்கு சாப்பிடறதுன்னு செஞ்சும் வலி ஏன் குறையலை? இதை எப்பவாவது யோசிச்சிருப்போமா?  இதற்கும் உடற்பயிற்சிக்கும் என்ன சம்பந்தம்? நாமே நம்மை குணமாக்கிக்க முடியுமா? மருந்து எடுத்துக்க நாம மருத்துவர் இல்லை. ஆனா மாற்றுவழிகள் இருக்கு. அது என்ன  எல்லாம் பேசுவோம்..


2 comments:

கோமதி அரசு said...

நல்ல பதிவு தென்றல்.
தொடருங்கள், தொடர்கிறேன்.

P.Vimala said...

அருமை.. ஆவலுடன் மீண்டும்...