Wednesday, January 04, 2017

யே கெட்டவுட்டு, வெளில போன்னு சொல்லிட்டோம்ல!!!!!!

நியூ இயர் ரெசல்யூஷன்ஸ் எல்லாம் ஜனவரி முடியறதுக்குள்ள காணாம போயிடும். ஆனா போன வருஷம் டார்கெட் வெச்சு இதை முடிச்சிடணும்னு திட்டம் போட்டேன். அது மெல்ல மெல்ல என் கிச்சனுக்குள்ள நான் அனுமதிச்சிருந்த ப்ளாஸ்டிக் தான். எப்படின்னு தெரியலை ஆனா ஒரு நாள் பாக்கும்போது எல்லாம் ப்ளாஸ்டிக் மயமா இருந்துச்சு. இது நல்லதில்லையேன்னு கெட்டவுட் சொல்வது எப்படின்னு யோசிச்சேன்.

மொதல்ல இந்த டப்பர்வேர்  வாட்டர் பாட்டில்.  இதை எப்படி வெளியேத்த!!! அதுவும் இந்த மூடியை திறக்காமலேயே தண்ணி குடிக்கற பாட்டில் வந்ததுக்கப்புறம் மூடியை திறக்கறமாதிரி இருக்கும் எவர்சில்வர் தண்ணி பாட்டிலுக்கு வீட்டுல வரவேற்பு அம்புட்டா இல்ல. புலம்பினாங்க. சரி இதுக்கு தீர்வு இல்லாமலா இருக்கும்னு பாத்திரக்கடைல போய் தேடினேன். கேட்டதும் கிடைத்ததுவே க்ருஷ்ணா! கிருஷ்ணா! இது எவர்சில்வர் பாட்டில்தான். :)


அஞ்சறைப்பெட்டி ப்ளாஸ்டிக் அதையும் தூக்கிப்போட்டுட்டு எவர்சில்வர்ல சும்மா பளபளன்னு . சின்ன சின்ன டப்பாக்களில் போட்டு வைக்கும் சாமான்களுக்கு ஒரே மாதிரி சின்ன பாட்டில் தேடினேன் கிடைக்கலை. சன்ரைஸ் காப்பிப்பொடி 3 மாசத்துக்கு ரீஃபில் வாங்காம பாட்டில் வாங்கினேன். அது ரெடி. ஊறுகாய் பாட்டில்கள் எடைக்கு போடாம அதை கழுவி ஒரே சைஸ்ல எடுத்து வெச்சது கொஞ்சம் அளவு கூட இருக்கும் சாமான்கள், பொடிகள் போட உதவியானது.

கண்ணாடி பாட்டில்கள் கடைகளில் இல்லாமலேயே போயிருச்சு போய் பாத்திடுவோம்னு தேடினா அட சாமி ரங்கா, எம்புட்டு அழகாழகா பாட்டில்கள் இருக்கு. yera
இப்படி விதம் விதமா கிடைக்குது. ஒவ்வொண்ணும் அழகு. 170 ரூவாக்கு 2 கிலோ கொள்ளவு பாட்டில் வாங்கலாம். பாத்திரக்கடைகள்ல இருக்கு, பிக் பஜார்ல , ஹோம் செண்டர்ல கிடைக்குது. இப்ப உப்பு புளி எல்லாம் இந்த மாதிரி பாட்டில்களில் தான். பீங்கான் ஜாடிகளும் வகைக்கு கிடைக்குது. ஒரே வருத்தம் என்னன்னா மூடிகள் ப்ளாஸ்டிக்லதான் இருக்கு. பழையபடி ஹார்லிக்ஸ் பாட்டில்களுக்கு எவர்சில்வர் மூடி வந்தா நல்லா இருக்கும். :)

பசங்களுக்கு சாப்பாடு கொடுத்தனுப்பும் டப்பாக்களுக்கும் கல்தா கொடுத்தாச்சு. 

உப்பு ஊறுகாய்களுக்கு மரஸ்பூன். மற்ற பருப்பு வகைகளுக்கு ஒண்ணுக்குள்ள ஒண்ணு போடுவோமே அந்த மாதிரி டப்பாக்கள். சில கடைகளில் எடைக்கும் கிடைச்சது. பீஸ் ரேட்டுலயும் வாங்கினேன்.அம்மா சக்கரை, டீ, காபிப்பொடி எதுல இருக்குன்னு வித்தியாசம் தெரியாதேன்னு சொன்ன மகளுக்காக  :)


இட்லி மாவு ஃப்ரிட்ஜ்ல வைக்க, தயிர் உறைய வைக்கன்னு எல்லாம் இப்ப சில்வர் டப்பாதான். 2016 முடியும்போது கிச்சன்லேர்ந்து ப்ளாஸ்டிக்கை யே வெளிய போன்னு சொல்லிட்டோம்ல!!! இப்பதான் புதுக்குடித்தனம் ஆரம்பிச்சவங்க வீட்டு கிச்சன் போல சும்மா பள பளன்னு இருக்கு கிச்சன்.16 comments:

துளசி கோபால் said...

ஆஹா..........

அருமை!

Ajai Sunilkar Joseph said...

ஆஹா...!
புதுசா இருக்கே இந்தப்பதிவு....!
வாழ்த்துகள் மா...!!!

ஸ்ரீராம். said...

சபாஷ். நல்ல முயற்சி. கண்ணாடி பாட்டிடில்களில் விழுந்தால் உடைந்து விடும் சங்கடம் ஒன்றுதான் மைனஸ்.

Dr B Jambulingam said...

காலத்தின் மாற்றம்?

ராமலக்ஷ்மி said...

சூப்பர்:). பாராட்டுகள். புத்தாண்டு வாழ்த்துகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள தகவல்கள்... நன்றிங்க...

சுசி said...

நானும் கொஞ்ச மாசங்களா இதே முயற்சில தான் இருக்கேன், அனேகமா அடுத்த வருசத்துக்குள்ள முடிச்சிருவேன்னு நினைக்கிறேன்.

மாதேவி said...

நன்று. நானும் ப்ளாஸ்டிக்கைதவிர்த்து விடுவேன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முடிவு....

புதுகைத் தென்றல் said...

வாங்க டீச்சர்,

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அஜய்,

முன்னல்லாம் இப்படிதான் இருந்தது. திரும்ப எப்படி ப்ளாஸ்டிக் உள்ள நுழைஞ்சதுன்னு தெரியலை. முழிச்சுகிட்டு மாத்தியாச்சு.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஸ்ரீராம்,

ஆமாம் அது தான் கஷ்டமா இருந்துச்சு. இப்ப பழகிடிச்சுன்னு சொல்லலாம்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஐயா,

மாற்றம் ஒன்றுதானே மாற்றமில்லாதது :)

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள் சுசி,

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க மாதேவி,
வீட்டுக்கு வர்றவங்களுக்கு கொடுப்பது கூட பனை ஓலை அயிட்டங்கள், துணிப்பைகள்னு அதையும் மாத்திட்டேன். வரதட்சணை கொடுப்பதும் இல்லை வாங்குவதும் இல்லை கொள்கை மாதிரி ப்ளாஸ்டிக் கொடுப்பதும் இல்லை வாங்குவதும் இல்லை. :)

வருகைக்கு மிக்க நன்றி