Thursday, February 23, 2017

மாண்டிசரி முறைக்கல்வி - ஓர் அறிமுகம்.

மாண்டிசரி முறைக்கல்வி என்று மிகவும் கொண்டாடப்படும் இந்த முறையை துவக்கியவர் மரியா மாண்டிசரி அம்மையார். ஒரே நாளில் இந்த முறைக்கல்வியை அவர் கொண்டு வந்து விடவில்லை. மனவளர்ச்சி குன்றிய  பிள்ளைகளுடன் வேலை செய்யும்போது மெல்ல தனது ஐடியாக்களுக்கு செயல் வடிவம் தந்தார். அவர்களின் தேர்ச்சி இவருக்கு மேலும் ஊக்கத்தை கொடுத்தது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இவை இவ்வள்வு உதவும்போது நல்ல மனவளம் உள்ள குழந்தைகளிடம் திறமையை மேலும் வளர்க்குமே என சந்தோஷப்பட்டார்.

அவரின் முதல் பள்ளி Casa dei Bambini (மழலையர் இல்லம்) ரோமில் ஆரம்பிக்கப்பட்டது. பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட தனியாக இருக்கும் ஏழைக் குழந்தைகளைக் கொண்டு  அந்தப்பள்ளி நடந்தது.  இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் சூப்பர்வைசராக மாண்டிசரி வந்தார். இவர்களின் பொழுதை இனிமையானதாக மாற்ற சில  உபகரணங்களை  கொண்டுவந்தார். குழந்தைகளிடம் மாற்றம் வந்தது. கைகளால் உணர்ந்தும், அனுபவித்தும்  குழந்தைகள் எளிதாக கற்றனர். மற்ற பள்ளிகளில், விளம்பிக்கொண்டும், எழுத கஷ்டபட்டுக்கொண்டும் இருந்தனர்.

இந்த மாறுதல்கள் காட்டுதீயாய் உலகெங்கும் பரவியது. தான் ஒன்றும் அற்புதத்தை நிகழ்த்தி விடவில்லை என்றுதான் மாண்டிசரி கூறுவார். "பிள்ளைகளிடம் அபார சக்தி இருக்கிறது. அதை முறையாக பயன்படுத்த அவர்களுக்கு உதவினேன்,'
என்றுதான் கூறுவார்.

 இந்த் முறைக் கல்வியின் சிறப்பம்சம், பிள்ளைகள் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களாக, தனது வரையறைக்குள் தனது சுதந்திர்த்தை பயன்படுத்திக்கொள்ள தெரிந்து கொண்டு , இயற்கையாகவே அவர்களுக்குள் இருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள உதவக்கூடிய வகையுடன், முழு உடல் மற்றும் மனவளர்ச்சியையும் சேர்த்து தரும்.


மாண்டிசரி முறையில் ஐம்புலன்களினாலும் கற்கும்படி
பாடத்திட்டங்கள் இருக்கும். பார்த்தல், கேட்டல், உணர்தல், சுவைத்தல், முகர்தல் எனும் முறையில் இருக்கும் பாடத்தை - SENSORIAL என்போம்.

(ARISTOTLE- THE GREAT PHILOSPHER SAYS," There is nothing
in the mind fo men, that his senses have not known".) "அரிஸ்ட்டாடில் என்ற தத்துவ ஞானி சொல்வது: "புலன்களுக்குப் புலப்படாத எந்த ஒன்றும் மனிதனின் மனதில் இருக்கவே முடியாது.

அடுத்து மொழி. அடுத்து கணிதம். அடுத்து ESSENCE OF PRACTICAL LIFE (EPL)
எனப்படும் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்கள்.


மரியா மாண்டிசோரி அடிக்கடி இப்படிச் சொல்வாராம்:

" என் மாணவர்களை நான் படித்துப் புரிந்து கொண்டேன். எப்படி அவர்களுக்குப் கற்றுத்தரவேண்டுமென்று அவர்கள்தான் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.

"1. ஒரு குழந்தை தன் ஆசிரியரிடம் கவனம் செலுத்துவதைக் காட்டிலும்,ஓர் ஆசிரியர் தன் குழந்தையிடம் கவனம் செலுத்துவது முக்கியமானது.

2. படிப்பதற்கான வழிமுறைகள் முறைப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் ஒரு குழந்தை தன்னிச்சையாகத் தன் வழியில் தானே முன்னேறும் சாத்தியக்கூறு அதிகமாகிறது.

3. கற்பனைத்திறன் சார்ந்த போதிக்கும் கருவிகள்தான் இம்முறையின் முக்கியமான அம்சமாகும்.
4. ஒவ்வொரு கருவியும் சுய திருத்தம் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எனவே, ஒரு குழந்தை தனக்கேற்ற வேகத்தில் படித்துத் தன் தவறுகளைத் தானே சரி செய்ய முடியும். ஒரு மாண்டிசோரி வகுப்பறையைப் பார்வையிடும்போது,
தனித்தனியே ஒவ்வொரு குழந்தையும் தானே தேர்ந்தெடுத்த ஒரு படிக்கும் தளத்தில் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பது புரிய வரும். 

மாண்டிசோரி அம்மையார் இந்தத் துறையில் பயிற்சி பெறும் ஆசிரியர்க்கு அடிக்கடி நினைவுறுத்துவது:

"ஒரு குழந்தையின் கவனத்தைக்  கட்டுப்படுத்தும் பிரச்சினையை  சமாளித்துவிட்டால் போதும். முழுக் கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினையும்  இதன் மூலம்தீர்ந்து விடும்.

மாண்டிசரி முறைக்கல்வி பயிற்சி பெற்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என நினைக்கிறேன்.  மாண்டிசரி முறைக்கல்வியில் ஒவ்வொன்றுக்கும் அதற்கென வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள் இருக்கும்.

pre school : இந்த முறை கல்வி பயிற்சியும் எடுத்துக்கொண்டிருக்கிறேன். இந்த முறையில் ப்ரத்யேகமான உபகரணங்கள் ஏதும் கிடையாது. நம்மை சுற்றி இருக்கும் பொருட்களின் உதவி கொண்டு பயிற்றுவிக்கலாம். இந்த இரண்டு முறை கல்வியையும் சேர்த்து வீட்டிலேயே எந்த மாதிரி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கலாம் என்பது தான் வரும் நாட்களின் இந்த தொடரில் நாம் பார்க்க போகிறோம்.




3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது...

Anuprem said...

அருமை...தொடர்கிறேன்..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மாண்டிசரி கல்விமுறையைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.