Wednesday, December 12, 2018

திரும்பி பார்க்கிறேன் - 2018 & 2019 ஆம் ஆண்டின் நிறமென்ன?

வலையுலக நட்புக்களுக்கு வணக்கம். 2018 முடிய போகும் இந்த தருணத்தில் தான் கிட்டத்தட்ட ஒராண்டுக்கு பின்னர் பதிவு வருகிறது. இனி கட்டாயம் தொடர்ந்து பதிவுகள் 2019 ஜனவரி முதல் வரும். பழைய படி புதுகைத்தென்றல் வீசும். முன்பு போல் எப்போதும் ஆதரவு கொடுக்க வேண்டுகிறேன்.

 2018 மிகச்சிறந்த வருடம் எனதான் பதிவு செய்ய வேண்டும். நிறைய்ய பாசிட்டிவ் விஷயங்கள் இந்த வருடம் நடந்திருக்கிறது. பரதம் பயில வேண்டும் என்ற என் கனவு மார்ச் மாதம் முதல் மெய்பட்டு கொண்டிருக்கிறது. அதை சாத்தியமாக்கிய ஆத்மலயாவுக்கு என் நன்றிகள். இத்தனை வருடங்கள் பிள்ளைவளர்ப்பு, அவர்களின் கனவை நனவாக்க உதவுவது என ஓடிக்கொண்டிருந்தேன். இப்பொழுது அவர்கள் வளர்ந்து விட்ட சூழலில் என் கனவை எனக்காக ஒரு தொழிலை உருவாக்கி கொள்ள வேண்டும் என்ற என் எண்ணத்தின் முதல் படி சைக்காலிஜி அண்ணாமலை யுனிவர்சிட்டியில் தொலைதூரபடிப்பில் சேர்ந்து முதலாம் ஆண்டு பரிட்சை எழுதியாகிவிட்டது.

 stress management professional இந்த கோர்ஸ் செய்து இதில் இன்னும் இரண்டு நிலை பரிட்சை முடிந்தால் நானும் ஒரு ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் ப்ர்ஃபொசனல் அதுவும் இந்த வருடம் தான் சாத்தியமானது. இதற்கு அடுத்த கட்டமாக ஹோம் மேக்கர்களுக்கும், பதின்மவயது குழந்தைகளுக்கும் எப்படி உதவலாம் என யோசித்து அதற்கு தக்க என் அடுத்த கட்ட பயிற்சி இருக்கும். ஹீலிங்- இது எனக்கு மிகவும் விருப்பமான ஒரு விடயம். இதுவரை தொலை தூர ஹீலிங்கில் நல்ல ரெக்கார்ட். இந்த வருடமும் சிலருக்கு உதவ முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

 நான் பெற்ற பெறுக இவ்வையகம் என்பது போல் நான் வாட்சப்பில் பல விஷயங்கள் கற்றது போல் வாட்சப் குழு அமைத்து தமிழில் மெடிட்டேஷன் மற்றும் சில கோர்ஸ்கள் சொல்லி கொடுக்க முடிந்ததில் கூடுதல் மகிழ்ச்சி.

 உடற்பயிற்சி கட்டாயம் என மருத்துவர் குறிப்பிட்டிருந்த சூழலில் விடாமல் நடந்து என் எடை குறைந்ததுடன் சீக்கிரமே சுகர் மாத்திரைகளை நிறுத்திவிடலாம் என மரூத்துவர் கூறும் அளவிற்கு முன்னேறம். நிற்கவே முடியாமல் கஷ்டபட்ட நான் உள்ளத்தனையை உடல் முகநூல் குழுவில் பயிற்சியால் வெறுங்காலில் 5 கிமீ ஓடியதெல்லாம் இமாலய சாதனை. இப்பொழுது தினமும் சைக்கிளிங். அதிலும் இந்த வருடம் முடிய போகும் இந்த தருணத்தில் ஒரே நாளில் 23 கிமீ சைக்கிள் ஓட்டியது வேற லெவல் என நினைக்க வைக்கிறது. இன்னும் கைவலி குறைய வேண்டும்.


அதுவும் சாத்தியமாகும். பிறக்க இருக்கும் 2019 எல்லா வளங்களையும் கொடுத்து எல்லோருக்கும் எல்லாமும் சாத்தியமாக்கும் ஒரு வருடமாக அமையும். Pantone ஒவ்வொரூ வருடமும் டிசம்பர் மாதத்தில் வர இருக்கும் புத்தாண்டின் நிறத்தை வெளியிடும். இந்த ஆண்டு கண்ணுக்கு மிக இனிமையான நிறம்.

பாசிட்டிவிட்டியை பரப்பும் நிறமாக இதை கூறுகிறார்கள். நன்மை பெருகட்டும். வளங்களை அள்ளிதரட்டும்.

No comments: