அப்பாவும் மகனும் மாற்றி மாற்றி கார் ஓட்ட எங்கள் கோவாவை சுற்றி பார்க்கும் பயணம் துவங்கியது. baslica of bom jeasus இந்த சர்ச்சில் தான் 400 வருடங்களாக st.xavier அவர்களின் உடலை பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இங்கே உள்ளே நுழையும் முன்பு வரை மழை இல்லை. அப்புறம் கொட்டி தீர்த்தது. ரோடை கிராஸ் செய்து எதிரில் இருக்கும் இன்னொரு புகழ் பெற்ற
se cathedral போவதற்குள் மழை அதிகமானது. அங்கேயே குடை விற்று கொண்டிருந்தவரிடம் இரண்டு குடையை வாங்கிக்கொண்டோம். மெல்ல ரோட்டை கிராஸ் செய்து சர்ச்சினுள் நுழைவதற்குள் பெருமழை.
அருகில் ஓரிடத்தில் காத்திருந்து ஓரளவுக்கு விட்டதும் போய் பார்த்து வந்தோம். வேலைப்பாடுகள் நிறைந்த இடம். நல்ல வைப்ரேஷன்ஸ்.
கோவாவில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என நெட்டில் தேடியபோது கிடைத்ததுதான் மோஹினி அவதாரக்கோவில். பாற்கடலை கடைந்த பொழுது கிடைத்த அமிர்தத்தை பகிர விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து மாற்று தோற்றத்தில் இருந்த இராகு/கேது சிரச்சேதம் செய்த இடம் இந்தகோவில் என்று படித்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. போய் பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஸ்ரீ மஹாலச நாராயணி கோவில்.
அப்போது கணவரின் நண்பர் ஒருவர் போன் செய்தார். கோவாவில் இருப்பதாக சொன்னதும் மங்கேஷ்கர் குடும்பத்தினருக்கு சொந்தமான கோவிலை பார்க்க தவறாதீர்கள் என்றார். பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் குடும்பத்தினரின் குல தெய்வக்கோவிலாம் இது.
நிறைய்ய கூட்டம் இருந்தது. ரொம்ப நீட்டாக கோவிலும் அதன் வளாகமும் இருந்ததை சொல்லவேண்டும். இங்கே பொதுவாகவே எல்லா இடங்களும் நீட்டாக வைத்திருக்கிறார்கள்.
மழையில் இதற்குமேல் அலையமுடியவில்லை என்று ஹோட்டலுக்கு திரும்பிவிட்டோம்.
4 comments:
ஆஹா.... கோவா பயணமா.... நான் இதுவரை சென்றிராத மாநிலங்களில் கோவாவும் ஒன்று. இதுவரை பயணம் அமையவில்லை.
உங்கள் மூலம் கோவா சுற்ற ஒரு வாய்ப்பு. தொடர்ந்து எழுதுங்கள்.
கோவா பயணக்கட்டுரை சுவாரஸ்யம். இன்னும் படங்கள் இணைக்கலாமே...
வாங்க வெங்கட் சகோ,
ஞாபகத்துல இருப்பதை எழுதறேன். வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ஸ்ரீராம்,
மொபைலில் படங்கள் வைத்திருந்தேன். அதை டெலிட் செஞ்சீட்டேன். அதனால தான் நெட்லேர்ந்து படங்கள் எடுத்து பகிர்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment