நண்பர் பதிவர் ஹரி திருமண வாழ்வில் இணைந்துள்ளார். 23.8.09 அன்று கோயம்புத்தூரில் திருமணம் நடந்தது.
5.9.09 ஹைதையில் வரவேற்பு நடந்தது.
சென்றிருந்தேன். திருமணத்திற்கே வாழ்த்து பதிவு போட வேண்டும்
என்று நினைத்திருந்தேன். கைவலி அதிகமாகி முடக்கி விட்டது.
ஹரி ஆர்த்தி தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ் வாழ்த்துக்கள்.
சிரித்தமுகமும், நட்பாக இருக்கும் ஆர்த்தி நல்ல சாய்ஸ்
ஹரி. ஆல் தி பெஸ்ட்.
************************************************
இந்த ஒரு வாரத்திற்குள் 2, 50ஆவது திருமண நாள்
விழாவில் கலந்து கொண்டு பெரியவர்களின் ஆசி பெற
வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஞாயிறன்று நடந்த
அயித்தானின் நண்பரின் பெற்றோரின் 50ஆவது
திருமண நாள் விழா மிக அருமையாக இருந்தது.
வித்தியாசமாக பேரன், பேத்திகள் நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கினார்கள். மூத்தமகன் பேசும்போது
நெகிழ்ந்து போனார்.”பெற்றவர்கள் செய்த தியாகத்தை
மக்கள் மறந்து போகக்கூடாது!” என்று சொன்னது
பகிர்ந்து கொள்ள வேண்டிய விடயமாக கருதுகிறேன்.
**********************************************
தஞ்சாவூர் பெயிண்டிங், டூவீலர் ஓட்டக் கற்றல்
என எல்லா ஆசைகளையும் கைவலி நிறுத்தி
வைத்துவிட்டது. சுத்தமாக விலகிவிடாமல்
அவ்வப்போது பதிவிடுவேன். வந்து
ஆதரவு தாருங்கள். சீக்கிரம் 500 அடிக்க
போகிறேன். :)))
*********************************************
எங்கள் அபார்ட்மெண்டில் பிள்ளையார் சதுர்த்தி
வெகு சிறப்பாக நடந்தது.
எங்கள் அபார்ட்மெண்டில் பூஜித்த பிள்ளையார்.
இதோ:
7 நாள் வைத்திருந்தோம். தினம் ஒரு குடும்பத்தினர்
பூஜை,நைவேத்தியம் பொறுப்பு. மிக விமர்சையாக
நடந்தது. இதில் முக்கியமான விசயம், எங்கள்
அபார்ட்மெண்ட் பிள்ளைகள் பூஜை முடிந்ததும்
பிரசாதத்தை விநியோகம் செய்தது. ஒருவர்
தட்டு எடுத்து கொடுக்க, மற்றவர் பரிமாற
என ஆளுக்கு ஒரு வேலை செய்தனர். 6 வயது
குட்டி பாப்பா ஸ்பூன் எடுத்துக்கொடுத்து தன்
பங்கிற்கு வேலை செய்தது. பெரியவர்களை
அருகில் விடாமல் தாங்களே முன்னின்று
செய்த பிள்ளைகளுக்கு மனமார்ந்த
பாராட்டுக்கள்.
7ஆம் நாள் சனிக்கிழமை அன்று விசர்ஜன்.
உட்டி அடித்தல், ஆட்டம் என விமரிசைதான்.
எல்லோர் மேலும் தண்ணீர் அடித்து மொத்த
அப்பார்ட்மெண்டும் ஆட்டம் போட்டதை
மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
தெருவே அதிர்ந்தது. :))
சென்னையில் அப்பார்ட்மெண்டில் வசித்து
நொந்து நூலான எனக்கு பலவருடங்கள்
கழித்து மும்பையி்ல் வசித்த நாட்களுக்கு
சென்றது போல் இருந்தது.
அனைவரும் கூடி பேசி, சிரித்து மகிழ்ந்து
என நன்றாக இருந்தது. விசர்ஜன் முடிந்ததும்
எல்லோரும் சொன்ன வார்த்தை,”ஞாயிற்றுக்கிழமையிலிருந்து
இரவு வீட்டில் சமைக்கணும்பா, கீழே டின்னர் என்று
இருந்து விடப்போகிறோம்” :)))))))))))))))))
15 comments:
/சீக்கிரம் 500 அடிக்க
போகிறேன். :)))
//
சூப்பரூ வாழ்த்துக்கள் :))
//நண்பர் பதிவர் ஹரி திருமண வாழ்வில் இணைந்துள்ளார். 23.8.09 அன்று கோயம்புத்தூரில் திருமணம் நடந்தது.
5.9.09 ஹைதையில் வரவேற்பு நடந்தது.
சென்றிருந்தேன். /
திருமண வாழ்த்துக்களை சொல்லிடுங்க :))
மீ த ஃபர்ஷ்டா வந்ததுக்கு நன்றி பாஸ்.
வாழ்த்தை சொல்லிடறேன். வாழ்த்திற்கு நன்றி
which city this celebration ?
nice
:-)
எங்களுக்குத் தெரியாம கோவையில் பதிவர் கல்யாணமா?
ஹரி தம்பதியை மனதார வாழ்த்துகிறேன்.
//சீக்கிரம் 500 அடிக்க
போகிறேன்//
வாழ்த்துக்கள்...
அருமையான கதம்ப பதிவு...
வாங்க யாசவி,
ஹைதை எனப்படும் ஹைதராபாத்தில்தான் கொண்டாட்டம்.
:))) வருகைக்கு நன்றி
வாங்க சஞ்சய்,
உங்களுக்கு என் மன்மார்ந்த தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நன்றி லோகு
மணக்குது:)
தஞ்சாவூர் பெயிண்டிங், டூவீலர் ஓட்டக் கற்றல் என எல்லா ஆசைகளையும் கைவலி நிறுத்தி வைத்துவிட்டது. //
இன்னும் சரியாகலையா தென்றல்?
அப்புறம் நீங்களும் கதம்பம் கட்டஆரம்பித்துள்ளீர்களா? நல்மணம்.!
தலைப்பு வேற பிடிக்கக்கூடாதா? ஏற்கனவே வடகரை அண்ணாச்சியும் இதே தலைப்புதான் இல்லையா?
நன்றி வித்யா
இன்னும் சரியாகலையா தென்றல்?//
இல்லீங்க. இன்னும் காலம் எடுக்கும். :((
அப்புறம் நீங்களும் கதம்பம் கட்டஆரம்பித்துள்ளீர்களா? நல்மணம்.!//
நன்றி
தலைப்பு வேற பிடிக்கக்கூடாதா? ஏற்கனவே வடகரை அண்ணாச்சியும் இதே தலைப்புதான் இல்லையா?//
அப்படியா தெரியாதே!! அப்டேட்ஸ்னு வெச்சு இதுக்கு மாத்தினேன். வேற யோசிக்கறேன். :))
நல்ல கோர்வை
விநாயகர் சதுர்த்தி எல்லாம் அடிச்சு ஆடி இருக்கீங்க :-)
Post a Comment