தங்கமணி- ரங்கமணி பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு.... அதான்.
காரசாரமான சண்டைக்கு அப்புறம் தங்கமணியும் ரங்கமணியும் கார்ல போய்க்கினு இருந்தாக.
ஒருவார்த்தை கூட ரெண்டு பேரும் பேசிக்கலை. கோவம் ரெண்டு பேருக்கும் அடங்கவே இல்லை. அத்தோட தவிர்க்க முடியாத பயணம் என்பதால ரெண்டு பேரும் சேர்ந்தே போக வேண்டிய நிலமை.
வழியில ஒரு பண்ணையில ஆடு, மாடு, பன்றி இருந்ததை பார்த்திட்டு ரங்கமணி “ உன் சொந்தக்காரங்க போல இருக்கே??!!”” அப்படின்னு கேட்டிருக்காரு.
தங்கமணி உடனடியா சொன்ன பதில்,”ஆமா!! என் புகுந்த வீட்டு முக்கியமான சொந்தங்கள்!!!”””
*****************************************************************************
ரங்கமணி ஒரு நாள் நாளிதழ் ஒன்றில் பெண்கள் எவ்வளவு வார்த்தைகளை உபயோகிக்கறாங்கன்னு எழுதியிருந்ததை படிச்சிட்டு வந்து தங்கமணி கிட்ட,
“பெண்கள் ஒரு நாளைக்கு 30,000 வார்த்தைகள் உபயோகிப்பதா போட்டிருக்காங்க பாரு. ஆனா நாங்க ஆண்கள் அப்படியா இருக்கோம்!!! 15000 வார்த்தைகள் தான் உபயோகிக்கிறோம்” அப்படின்னு சொல்லிட்டு தங்கமணியை மட்டம் தட்டிட்டோம்னு மமதையா ஒரு பார்வை பார்த்தாரு.
தங்கமணி அலட்டிக்காம சொன்ன பதில்,” ஒரு தரம் சொன்னதையே திரும்ப திரும்ப உங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கு. அதனாலத்தான் நிறைய்ய பேசறோம்னு சொல்ல, இப்ப ரங்க்ஸ் தங்க்ஸை பார்த்து கேட்கிறாரு, “என்ன சொன்ன??!!!””
************************************************************************************
ஒரு ரங்கமணி தன் மனைவியை கிட்ட இப்படி சொல்லிக்கிட்டு இருந்தாரு,”
நீ எப்படி ஒரே சமயத்துல முட்டாளாவும், அழகாவும் இருக்கேன்னு!!””
நம்ம தங்க்ஸ் கொடுத்த பதிலில் ரங்க்ஸுக்கு ”பல்பு” கிடைச்சது.
”””கடவுளின் படைப்பு இது. நான் அழகா இருப்பதால நீங்க என்னை விரும்புனீங்க, நான் முட்டாளா இருப்பதால உங்களை விரும்பினேன்!!!!!””
****************************************************************************************
தங்கமணி ரங்கமணிக்குள்ள சண்டை அடிக்கடி வந்ததால, ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கறது இல்லன்னு முடிவுக்கு வந்தாங்க. சைலண்ட் ட்ரீட்மெண்டுன்னு இந்த ஆப்பரேஷனுக்கு பேரும் வெச்சுக்கிட்டாங்க.
இந்த ஆப்பரேஷன் ஆரம்பிச்ச அடுத்தநாளே ரங்கமணிக்கு ஒரு பிரச்சனை வந்தது. அலாரம் அடிச்சாலும், அதை அடிச்சிட்டு தூங்கற ரங்க்ஸ், தான் அடுத்த நாள் காலையில் 5 மணிக்கு எந்திரிச்சாதான் ஃப்ளைட் பிடிக்க முடியும். இப்ப தங்க்ஸ் ராசியா இருந்தாங்கன்னா எழுப்பி விடுன்னு சொன்னா எழுப்பி விட்டிருப்பாங்க. உதவி தேவைன்னாலும் பேச வேணாம்னு முடிவு எடுத்ததால, “ காலை 5 மணிக்கு என்னை எழுப்பவும்னு!!” பேப்பரில் எழுதி தங்க்ஸ் கண்ணில் கரெக்டா படும்படியான இடத்தில வெச்சிட்டு ஆழ்ந்த நித்திரைக்கு போயிட்டாரு மனுஷன்.
அடுத்த நாள் மனுஷன் எந்திரிச்சது 9 மணிக்கு. ஃப்ளைட் மிஸ்ஸாகிடிச்சு. கோவமான கோவத்தோட தங்க்ஸ் ஏன் எழுப்பலைன்னு கேட்கலாம்னு எந்திரிச்சவர் கண்ணில் “ மணி 5 எழுந்திருக்கவும்னு” எழுதின பேப்பர் கண்ணில் பட்டது. :((
********************************************************************************
பதிவை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு சண்டைக்கு வர்றாதீங்க. அங்கொண்ணும் இங்கொண்ணுமா தங்க்ஸ்களை தாக்கி பதிவு வந்துக்கிட்டு தான் இருக்கு. அதுபோலத்தான் இதுவும்னு சும்மா லைட்டா எடுத்துக்கோங்க.
வாட்ஸப்பில் உலாவிக்கொண்டிருக்கும் மெசஜை இங்கே பகிர்ந்தேன் அம்புட்டுதான். :)))

38 comments:
எனக்குத் தெரிஞ்சே பல வருசங்களுக்கு முன்னே பத்திரிகைகளில் வந்த ஜோக்தான்ப்பா இது!
ஆனாலும் வலை உலகில் இப்பதான் முதமுதல்னு சொல்லிக்கலாம்:-)))))
-----------
எந்திரிச்சவர் கண்ணில் “ மணி 5 எழுந்திருக்கவும்னு” எழுதின பேப்பர் கண்ணில் பட்டது. :((
-----------
அட்டகாசம்! பலே பதிவு.
முக்கியமா ஊட்டுக்காரம்மா கண்ணுல படாம வைக்கனும் ;)
வாங்க துளசி டீச்சர்,
வாட்ஸப்பில் மாமா மகள் அனுப்பி வெச்ச மெசஜ் இது
:))
வலை உலகில் ஹஸ்பண்டாலஜி பேராசிரியையா என் கடமையை சரியா செய்யணும்ல :))
வருகைக்கு மிக்க நன்றி
ஹா... ஹா... மணிகள்-கலக்கல்
வாங்க கடைசிபெஞ்ச்,
முக்கியமா ஊட்டுக்காரம்மா கண்ணுல படாம வைக்கனும் //
இதனாலத்தான் இன்னமும் பல நட்புக்கள் என்னை அவங்க மனைவிக்கு அறிமுகப்படுத்தி வைக்க மாட்டேங்கறாங்க.
நல்லது சொல்றது தப்பா. :))
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க தனபாலன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஏற்கனவே வாசிச்சிருந்தாலும் இன்னொருக்கா வாசிக்கறப்ப நல்லாத்தான் இருக்கு :-))
நகைச்சுவைகள் அருமை,
:-)))
நல்ல ஜோக்ஸ், ஏற்கனவே படித்தவைதான் எனினும் மீண்டும் சிரிக்க வைத்தன!
//..சண்டைக்கு வர்றாதீங்க.
..சும்மா லைட்டா எடுத்துக்கோங்க.
வாட்ஸப்பில் உலாவிக்கொண்டிருக்கும் மெசஜை இங்கே பகிர்ந்தேன் அம்புட்டுதான். :)))//
உலகத்துல உண்மையச் சொல்லக்கூட எம்புட்டு யோசிக்க வேண்டிருக்கு!! :-)))
ஜோக் வடிவில் உண்மைகளை ரிமைண்ட் பண்ணதுக்கு நன்றி. இப்ப இங்க (மறுபடியும்) ஒரு பனிப்போர் கோயிங் ஆன். தேவையான சமயத்தில் தேவையான பதிவு!! :-))))))))
nice...
அக்கா நீங்க தங்க்ஸ் மட்டுமே ஜெயுசிட்டமாதிரி எழுதிர்கிங்க
ரங்கஸ் ஒரு தடவககூடவா ஜெயிக்கலா. பாவன்ககா அவரு
வாழ்த்துக்கள்
வாங்க அமைதிச்சாரல்,
இந்த மெசெஜ் வந்ததுலேர்ந்து திரும்ப திரும்ப படிச்சு சிரிச்சுக்கிட்டு தான் இருக்கேன்.
அப்பாவி ரங்குகள்
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க கும்மாச்சி,
முதல் வருகையோ!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஃப்ரெண்ட்,
+ல தான் பதில் வரும்னு எதிர்பார்த்தேன். பதிவுக்கே வந்தற்கு மிக்க நன்றி
வாங்க ஹுசைனம்மா
உலகத்துல உண்மையச் சொல்லக்கூட எம்புட்டு யோசிக்க வேண்டிருக்கு!! :-)))//
ஸ்மைலியையும் நீங்களே போட்டுட்டீங்க.
ஜோக் வடிவில் உண்மைகளை ரிமைண்ட் பண்ணதுக்கு நன்றி.//
நன்றிக்கு நன்றி
இப்ப இங்க (மறுபடியும்) ஒரு பனிப்போர் கோயிங் ஆன். தேவையான சமயத்தில் தேவையான பதிவு!! //
ஆஹா
ம்ம்ம் வருகைக்கு மிக்க நன்றி
வாங்க இராஜராஜேஸ்வரி,
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க கருணாகரன்,
உண்மை அதுதான். ஆனா அதை ரங்கமணிகள் ஒத்துக்காம இருப்பாங்க.
ரெண்டு பேரும் மெக்கானிசம் வேற.
வருகைக்கு மிக்க நன்றி
தங்க்ஸ், ரங்கஸ் - ரெண்டுபேரும் இந்த ஜோக்குகளை ரசிச்சிருக்காங்கன்னு பின்னூட்டம் சொல்லுது!
தங்க்ஸ் வாங்கின 'பல்ப்' ரொம்ப பிடிச்சிருக்கு!
நெம்ப நாள் கழித்து வந்து நெம்பிட்டீங்க ரங்ஸை
:)
எல்லா பல்பும் நல்லாதான் கொடுத்து இருக்கீங்க
வாங்க ரஞ்சனி மேடம்,
தங்க்ஸ், ரங்கஸ் - ரெண்டுபேரும் இந்த ஜோக்குகளை ரசிச்சிருக்காங்கன்னு பின்னூட்டம் சொல்லுது!//
ஆமாம். :))
பல்பு வாங்கினது தங்க்ஸ் இல்லை ரங்க்ஸ்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ஜமால்,
:))
வருகைக்கு மிக்க நன்றி
ரசித்தேன்.
வாங்க மலர்,
:))) நான் கொடுத்தது இல்ல. படிச்சு ரசிச்சது.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க மலர்,
:))) நான் கொடுத்தது இல்ல. படிச்சு ரசிச்சது.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ஸாதிகா,
ரசித்தமைக்கு மிக்க நன்றி
:)))))
எல்லாமே நல்லா இருக்கு...:) இப்படித் தான் இருக்கணும்..:))
அன்புடையீர்,
வணக்கம்.
நேற்று 17.03.2013 ஞாயிறு 'தினகரன்' செய்தித்தாளின் இணைப்பான 'வசந்தம்' இதழின் ஆறாம் பக்கத்தை பார்க்க நேர்ந்தது.
அதில் “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்” என்ற தலைப்பில் தங்களின் வலைத்தளம் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.
படித்ததும் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in
வாங்க ஐயா,
இனிப்பான செய்தி சொல்லியிருக்கீங்க. ஹைதையில் இருப்பதால் தெரியலை.
தகவலுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்
வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி சிவா :))
:)) வருகைக்கு மிக்க நன்றி கோவை2தில்லி
அனைத்தும் ரசனை.
தினகரன் வசந்தத்தில் அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!
வருகைக்கு மிக்க நன்றி மாதேவி
வாங்க ரஞ்சனிம்மா,
வாழ்த்துக்கும் வருகைக்கும்மிக்க நன்றி
super super super super super super super super super super super super super super super dooper post akka...:))))10000 likes
Post a Comment