Monday, June 18, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி 18/6/12

பத்து நாள் முன்னாடி வரைக்கும் 40...44ன்னு பயமுறுத்திக்கிட்டு இருந்த
சூரியன் இப்ப மேகத்துக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டாரு. படிப்படியா குறைஞ்சு
நேத்து நல்ல மழை. வருணபகவான் இனி தன் ஆட்டத்தை கவனிச்சுக்குவாரு.
இன்னைக்கு ஜஸ்ட் 28 டிகிரிதான். :)) அதான் சுடச்சுட பிரியாணி
போடலாம்னு வந்திட்டேன்.
*******************************************************************
ஒருவழியா ஜகன் அண்ணாவை சீபிஐ விசாரிச்சு கைது செஞ்சாச்சு.
ஆனா அதையே அனுதாப அலையா மாத்தி இடைத்தேர்தல்ல பல
இடங்களில் ஜெயிச்சிருக்காங்க. ம்ம்ம்ம்.
அண்ணன் இப்ப உள்ள இருப்பதாலயும், அவங்க மனைவி பாரதி
பிசினஸ்ல பிசியா இருப்பதாலயும், அம்மா விஜயம்மா கூச்ச
சுபாவமா இருக்கறதாலயும் ஜகன் அண்ணா தங்காச்சி தான்
கட்சியை தலைமை தாங்குவாங்கன்னு சொல்லிக்கறாங்க.

வாம்மா மின்னல்.....
*********************************************************************
இருக்கற குடைச்சல் பத்தாதுன்னு ஜனாதிபதி தேர்தல் வேற இப்ப.

பிராண்ப்தா ஜனாதிபதியா வர்றதுல எனக்கு பெருசா எந்த சந்தோஷமும்
இல்ல. ஆனா இனி அவர் நிதி அமைச்சர் இல்ல அது வரைக்கும்
சந்தோஷம். ஆனா இந்த கார்ட்டூன் பாருங்க, அந்த சீட்டுல
உக்காந்திருந்த வரைக்கும் ஐயாவுக்கு முள்ளு குத்தினிச்சாம்!!!

அப்ப பொது மக்களுக்கு!!!!????!!!! பிராண்ப் தா 24ஆம் தேதி
பதவி விலகறார்னு பேச்சு அடிபட்ட உடனேயே ரிசர்வ் வங்கி
கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க போவுதுன்னு பேசிக்கிறாகளே!!
என்ன மேட்டர் பா??!!!
*******************************************************************

இதுவரைக்கும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள்தான் வேன்
கவிழ்ந்து இறைவனடி சேர்ந்ததா பாத்திருக்கும். ஆனா இப்ப வித்தியாசமா
ஷீரடி போன வோல்வோ பஸ் கவிழ்ந்து நடந்திருக்கும் சோகம் கொடுமை.
புதுசா வேலை கிடைச்சு ட்ரையினிங் முடிச்சு தரிசனத்துக்கு போன
11 பேர், எனக்கும் இஷ்டம் இல்லை, ஆனா உன்னோட இருக்கணும்னு
தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரியை விட்டு பிரிய மனமில்லாம
அவளுடன் போய் அந்த பஸ்ஸில் இருவரும் உயிரை விட்டதுன்னு
நிறைய்ய..... குடிச்சிட்டு அந்த பஸ் டிரைவர் பஸ் ஓட்டினதுக்கு
தண்டனை பயணிகளுக்கா????
*********************************************************************
ஐஐடி குழப்பம் இன்னும் தீர்ந்த பாடில்லை. இனி ஒரே ஒரு நுழைவுத்
தேர்வுதான்னு கபில் சிபில் சொன்னாரு. ஆனா 7 ஐஐடியில் 5 தான்
ஒத்துக்கிட்டதாகவும், மத்த ரெண்டு பேரும் தாங்களே பரிட்சை
வெச்சுக்கறதாவும் பேச்சு அடிபடுது. என்ன கொடுமை இது?
பேசாம அப்படியே இருந்திட்டா உங்களுக்கு என்ன பிரச்சனை
மிஸ்டர்.கபில் சிபில். இப்ப பாருங்க நீங்க சொல்ற பொதுத் தேர்வுக்கு
தயாராகனுமா? பிட்ஸ் வேணும்னா அதுக்கு தயாராகணும், எதுக்கு
இருக்கட்டும்னு மத்த ரெண்டு ஐஐடி பரிட்சைக்கு தயாராகணும்.
பத்தாதற்கு எஸ்.ஆர்.எம், இங்க லோக்கல் எம்செட்னு பரிட்சை
எழுதி எழுதியே மக்கள்ஸ் நொந்து நூடில்ஸ் ஆகிடுவாங்க.


அப்புறம் வேணாம் மக்கா வேணாம் இந்த இஞ்சினியரிங் படிப்புன்னு
முடிவு செஞ்சிட போறாங்க. நீங்களும் குழம்பி, இருக்கறவங்களையும்
ஏனுங்க சாமி குழப்பறீங்க!!!!!!
*********************************************************************
இந்தப்பாட்டு மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. பாலமுரளியோட குரல்.
அருமையான பாடல்வரிகள்னு... எந்தப்பாட்டு?
மொளனத்தில் விளையாடும் மனசாட்சியே....





2 comments:

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய ஆவக்காய பிரியாணியின் ஹைலைட்டே “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே....” தான்..

என்ன குரல்....

ரசித்தேன் சகோ.

pudugaithendral said...

வாங்க சகோ,

இன்றைய ஆவக்காய பிரியாணியின் ஹைலைட்டே “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே....” தான்..
நன்றி சகோ