புதுக்கோட்டை (புதுகை) - இது தான் நான் பிறந்த ஊர். இந்த ஊரை அகழ்வாராய்ச்சியாளர்களின் சொர்க்கம் எனலாம். மன்னர் தொண்டைமான் வம்சத்தினர் ஆண்ட ஊர். புராதன கால குடவரை கோயில்கள் பிரசித்தம்.
சித்தன்ன வாசலின் ஓவியமே:
அஜந்தா குகை ஓவியம் போல், சமணர்கள் இயற்கை வர்ணங்களால் தீட்டிய ஓவியங்களும், சமணர் படுக்கைகளும் (கல்லில் செதுக்கியவை) சித்தன்ன வாசலில் காணலாம்.
கோட்ட கோட்ட எங்க திருமயம் கோட்டை:
இறைவனுக்கு சாற்றிய பூவில் முடி இருக்க கண்ட மன்னர், "சிவனுடைய ப்ரசாதத்தில் முடி எப்படி வந்தது?" என குருக்களை கேட்க, பயந்து போன குருக்கள்," இறைவனுடைய முடி தான் அது," என சொல்ல, குருக்களை காப்பாற்ற, இறைவன் மன்னருக்கு முடியோடு காட்சி அளித்த ஸ்தலம். இறைவன் திருநாமம் சிகாகிரீசன்.
குன்று தோராடும் குமரன்;
புதுகைக்கு அருகே இருக்கும் விராலிமலை முருகன் கோவில் மிகப்பிரசித்தம். மற்றுமொரு முருகன் கோவில் குமரமலை. வருட பிறப்பன்று
படி பூஜை அமர்க்களமாய் இருக்கும்.
திருக்கோகர்ணம்:
குடவரை கோயிலாகிய திருக்கோகர்ணத்தில் உறையும் கோகர்ணேஸ்வரர் கோயில் (லிங்கத்திர்கு பசு மாடு தன் காதில் நீர் கொணர்ந்து அபிஷேகம் செய்ததால் இறைவனுக்கு இப்பெயர்.) மற்றும் அருள்மிகு பிரகதம்பாளும் புதுகையை ஆண்ட மன்னர் பரம்பரையினருக்கு இஷ்ட தெய்வம்.
ஆவுடையார் கோவில்:
மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற ஸ்தலம். திருவாசகம் உருவானது இங்குதான். சந்நிதியில் உருவ வழிபாடு இல்லை. உற்சவமூர்த்தியாக மாணிக்கவாசகர் தான் இருக்கிறார்.
மற்ற சிறப்புக்கள்:
மேற்சொன்ன கோவில்கள் தவிர, புதுக்கோட்டை புவனேஷ்வரி கோவில்,
பெரம்பலூர் வீர மாகாளி கோயில், பேரையூர் நாகர்கோவில் (நாக தோஷத்திற்கு), நார்த்தாமலை மாரியம்மன் கோவில், பொற்பனைக் கோட்டை முனீச்வரன் கோவில் ஆகியவைகளும் தவராமல் காணவேண்டியவைகளாகும்.
வீதிகள் ரிப்பன் வைத்து கட்டயது போல் ஒரே சீராக இருக்கும். தற்போது மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அமைந்திருப்பது, மன்னரின் அரண்மனையாகும்.
வீதிகள் ரிப்பன் வைத்து கட்டயது போல் ஒரே சீராக இருக்கும். தற்போது மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அமைந்திருப்பது, மன்னரின் அரண்மனையாகும்.
திரையுலகும் புதுகையும்:
தந்த நடிகர்கள்
காலஞ்சென்ற திரு. ஜெமினி கணேசன்
மற்றும் பி.யு. சின்னப்பா அவர்களும்
ஆவார்கள்.
சில வருடங்களுக்கு முன் வெளியான "நந்தா" (சூர்யா நடித்தது) திரைப்படத்தில் சில காட்சிகள் புதுகையில் படம்பிடிக்கபட்டிருந்தன. படத்தில் வரும் கல்லூரி புதுகையின் பெருமை சொல்லும்,"மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி"
சில வருடங்களுக்கு முன் வெளியான "நந்தா" (சூர்யா நடித்தது) திரைப்படத்தில் சில காட்சிகள் புதுகையில் படம்பிடிக்கபட்டிருந்தன. படத்தில் வரும் கல்லூரி புதுகையின் பெருமை சொல்லும்,"மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி"
ஆகும்.
5 comments:
// அஜந்தா குகை ஓவியம் போல், சமணர்கள் இயற்கை வர்ணங்களால் தீட்டிய ஓவியங்களும், சமணர் படுக்கைகளும் (கல்லில் செதுக்கியவை) சித்தன்ன வாசலில் காணலாம்.//
ஆஹா.. அப்ப அந்த சித்தன்ன வாசல்ங்கரது உங்க ஊருதானா?
ஆயிரம் வருஷத்துக்கு மேல கூட வெறும் மூலிகை சாறால வரைஞ்ச அந்த ஓவியங்கள் இப்பவும் நிலைக்குதுங்கராய்ங்களே.. ஆச்சர்யந்தேன்..
அப்பவே பர்மணன்ட் இங்க் கண்டுபுடிச்ச ஆளோட மூளை.
//ஆயிரம் வருஷத்துக்கு மேல கூட வெறும் மூலிகை சாறால வரைஞ்ச அந்த ஓவியங்கள் இப்பவும் நிலைக்குதுங்கராய்ங்களே.. ஆச்சர்யந்தேன்..
அப்பவே பர்மணன்ட் இங்க் கண்டுபுடிச்ச ஆளோட மூளை.//
ஆமாங்க அது தானே நம் இந்திய மூளை.
ஆவுடையார் கோவிலைப் பற்றி , தனி பதிவு போடும் அளவிற்கு விஷயங்கள் இருக்கிறது.இப்போதுள்ள ஸ்தபதியார்களெல்லாம் இந்த கோவிலைப் பற்றி சொல்லும் பொதுவான விஷயம்,இங்குள்ள சிலைகளைத் தவிர வேறு எந்த கோவிலின் சிலை மாதிரியையும் எங்களால் செய்ய முடியும் என்பதுதான்.அந்தளவுக்கு கலை நுணுக்கத்துடன் சிலை வேலைபாடுகள் நிறைந்ததொரு கோவில்.
varugaikku nandri naaddodi ilaggiyan
எல்லா இடங்களையும் பார்த்திருக்கிறேன். பதிவுக்கு நன்றி
Post a Comment