Wednesday, November 21, 2007

M.Sc.HUSBANDOLOGY (முதுகலை இல்லறவியல்) வகுப்புக்கள் ஆரம்பம்மகளே! மணமகளே! மருமகளே! வா! வா!தாரை, தப்பட்டை மற்றும் டிரம்ஸ் மணி அவர்களின்

"அதிரடி" தாள சப்தங்களுடன், சகல மானவர்களுக்கும்

அரிய தருவது என்ன வென்றால் " M.Sc.Husbandology (முதுகலை இல்லறவியல்" வகுப்புகள் அதி விரைவில்

துவங்க இருக்கின்றன.

வகுப்புகள் தங்கமணி/ரங்கமணி இருவருக்கும் தான்.

மிக முக்யமாக "கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல்"

இருக்கும் புது மனைவியர்,

பொறுத்தது போதும் என் பொங்கி எழ காத்திருக்கும்
கழக கண்மனி மன்னிக்கவும் தங்கமணிகள், மற்றும்

கன்னி இளம் பெண்களுக்கும் (பின்னாடி உதவுமுங்கோ)


ரங்கமணிகளை புரிந்து கொள்வதற்காக அல்ல,
தற்காப்பு கலை போல் ரங்கமணிகளை எதிர்கொள்வது
எப்படி என்பதை தங்கமணிகள் புரிந்து கொள்ளவதே
இப்பாட திட்டத்தின் குறிக்கோள்.

பின்னூட்டம் இட்டாலே வகுப்புகளுக்கு

பதிவு செய்து விடுவோம்.
விசிட்டிங் பொரஃப்ஸர்களாக அனுவம்

மிக்க தங்கமணிகள் வர விரும்பினால்

இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்
மிக முக்யமான விஷயம்:
இந்த வகுப்பில் வீட்டு பாடம் கிடையாது.
தரப்பட்டுள்ள தியரிகளை புரிந்து கொண்டு,

அவற்றை செயற்படுத்தி பார்ப்பதே வீட்டுப்பாடம்

ஒவ்வொரு புதனும் பாடங்கள் வெளியாகும்.

ரெடி! ஸடார்ட்! தி பேண்ட்,

23 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹாஹாஹாஹா....

விளம்பரமே பட்டையை கிளப்புது.. :-))))

தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்.. :-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

யக்கா, அந்த word verification தூக்கிடுங்க.. வேணும்ன்னா comment moderation எனேபல் பண்ணிக்கோங்க.. :-)

புதுகைதென்றல் said...

நன்றி மை ஃபிரண்ட்.

முதல் அட்மிஷன் உங்களுக்குத்தான்.

Ganesh Babu said...

நீங்க இதுக்கு முன்னால சன் டிவி-ல வேலை செஞ்சிட்டு இப்போ சமீபமா கலைஞர் டிவிக்கு மாறியிருக்கீங்களா? அதே stlye-a follow பன்றீங்க. சரி சொல்லுங்க கேட்போம்.

ரசிகன் said...

ஒன் ஃபிரண்ட் பெஞ்ச் சீட் ரிசர்வ் பிளிஸ்..

ரசிகன் said...

பதிவை இன்னும் தமிழ் மணத்துல/தேன் கூட்டுல சேக்கலியா?..கிளாஸ் ஆரம்பிக்கிறதுக்குள்ள சேத்தாக்கா நெறய பேர் கிளாஸுக்கு வருவாய்ங்கல்ல....

புதுகைதென்றல் said...

வாங்க கனேஷ் பாபு,

காலம் மாறும் போது நாமும் மாறனும்ல. அட்மிஷன் போட்டாச்சு.

புதுகைதென்றல் said...

வாங்க ரசிகன்.

பெஞ்ச் ரிசர்வ் செஞ்சு அட்மிஷன் போட்டாச்சு.

தமிழ் மணத்துல சேர்க்க அப்பிளிகேஷன் போட்டாச்சு. மை ஃபிரண்ட் உதவி பண்ணாங்க என்ன ஆச்சுன்னு தெரியல்.

மங்களூர் சிவா said...

ஏற்கனவே நம்ம பினாத்தல் சுரேஷ் இந்த க்ளாஸ் எடுத்துகிட்டிருக்காரே!!

சரி எதுக்கும் நமக்கும் ஒரு லாஸ்ட் பென்ச் சீட்ல ஃமை ப்ரெண்ட் பக்கத்துல துண்டு போட்டு வைங்க!!.

ஆஷிஷ் - அம்ருதா said...
This comment has been removed by the author.
புதுகைத் தென்றல் said...

வாங்க மங்களூர் சிவா,

பினாத்தலார் நடத்தரது wifeology.

இது husbandology.

துண்டு போட்டாச்சு

ரசிகன் said...

@ மங்களூர் சிவா

// ஃமை ப்ரெண்ட் பக்கத்துல சீட்ல துண்டு போட்டு வைங்க!! //

உருப்பட்ட மாதிரித்தேன்...
[கிளாசுல அவிங்க செய்யர அலும்புக்கெல்லாம் நீங்க பெஞ்சு மேல நிக்க வேண்டிவரும் மாமே.. எதுக்கு சொ.கா.சூ வைச்சுக்கனுமின்னு நல்லா யோசிச்சிக்கோங்க. சொல்லிப்புட்டேன்.]:-?

// நமக்கும் ஒரு லாஸ்ட் பென்ச் சீட்ல துண்டு போட்டு வைங்க!!.//

சிவா மாம்ஸ்... இது என்ன காலேஜி கிளாசுன்னு செனச்சிப்புட்டீங்களா?.. லாஸ்ட் பெஞ்சில போயி தூங்கறத்துக்கு?.. லைஃப் சப்ஜெட் மாமே.. உங்களுக்கு ஹோம் மினிஸ்டர் வர்ரதுக்கு முன்னாடி கப்புன்னு கத்துக்கனுமின்னாக்கா.. மொத பெஞ்சிக்கு தாவிடுங்க.. ஹிஹி...:))))

புரட்சி தமிழன் said...

சரியான போட்டி எந்த கோர்ஸ் நல்லா இருக்குனு பார்ப்போம் இதலையும் எக்ஸாம் எல்லாம் உண்டா.

புதுகைத் தென்றல் said...

வாங்க புரட்சித் தமிழன்

எக்ஸாம் எல்லாம் எதுக்கு? அனுபவமே சிறந்த பயிற்சியை கொடுத்துவிடும். ஏனென்றால் எங்க பாடத்திட்டத்தில் எல்லாமே செய்முறை பயிற்ச்சி தான்.

நந்து f/o நிலா said...

ஏங்க தென்றல் இது உங்களுக்கே நியாயமா? ஏற்கனவே சிக்கிக்கிட்டு சீக்கியடிக்கறோம், :( இதுல நீங்க வேற.

ஆமா எனக்கொரூ சந்தேகம்.கல்யானம் ஆகி husbandology தெரியாத பொண்ணூங்கள்ளாம் கூட இருக்காங்களா? :O

எங்க வீட்ல இதுல டபுள் டாக்டரேட் வாங்குன ஆள் ஒருத்தி இருக்கா :(

புரட்சி தமிழன் said...

ரொம்ப விவகாரமான பாடதிட்டமாக இருக்கும் போல் இருக்கே எதுக்கும் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருந்துக்கிறேன்.

இராம்/Raam said...

அக்கா,

முதல் பெஞ்ச்'லே இடம் இருக்கா??? இருந்தா எனக்கொரு இடம் ஒதுக்கி கொடுங்க..... :D

J K said...

சீட் இருந்தா நமக்கும் ஒன்னும். இல்லைனா கூட நான் அப்படியே ஒரு ஓரமா நின்னு கவனிச்சுக்கிறேன்.

J K said...

//மங்களூர் சிவா said...
சரி எதுக்கும் நமக்கும் ஒரு லாஸ்ட் பென்ச் சீட்ல ஃமை ப்ரெண்ட் பக்கத்துல துண்டு போட்டு வைங்க!!.//

தல இருக்கியளா?

எங்கடா கம்பெனி யாருமே இல்லையேனு பாத்தேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ராம்,
பாடம் ஆரம்பிச்சு இன்னைக்கு 4ஆவது பாடம் பொட்டாச்சு. லேட் அட்மிஷன் போட்டுட்டேன். எல்லா பாடங்களையும் படிங்க.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜே.கே

இடம் இல்லேன்னு சொல்ல மனசு வல்ல. அதனால நீங்க கேட்ட இடத்தில் சீட்டு போட்டாச்சு. நிக்கல்லாம் வேணாம். உட்கார்ந்து சரியா எல்லா பாடங்களையும் படிச்சிட்டு வாங்க. இன்னைக்கு 4ஆவது பாடம் வந்தாச்சு.

வீ. எம் said...

பட்டய கிளப்புங்க புதுகை தென்றல் அவர்களே..
மொதல்ல நம்ம வீட்டு அம்மனி இந்த ப்லாக் பக்கம் வராம மடக்கனும் :)

பெணாத்தலாரே உசார்...

புதுகைத் தென்றல் said...

வாங்க வீ.எம்.

தங்கள் முதல் வருகைக்கு நன்றி. 4 பாடம் போட்டாச்சு. படிச்சுட்டு சொல்லுங்க.