Wednesday, December 05, 2007

M.SC HUSBANDOLOGY - (முதுகலை இல்லறவியல்) பாடம் : 2

எடுத்த சபதம் முடிப்பேன்! "சொல்வதைக் காதில் பொட்டுக்
கொள்ளக் கூடாது" என்று எடுத்த சபதம் முடிப்பேன்.


பல சமயம் ரங்கமணிகள் நாம பேசறத காதில் போட்டுக்காமலே
இருப்பாங்க. அது ஏன்? எதுக்கு? எப்படி? இது தான் இன்றைய
பாடம்.

நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்றதுக்கு முன்னாடி ஐயா
என்ன செஞ்சுகிட்டு இருக்காருன்னு பாருங்க.

இந்த மாதிரி சமயங்களில் சொல்லியிருப்போம்.

1. டீவி பார்த்துக்கொண்டு இருக்கும் போது. முக்கியமாக sports,
National geographic and news channels போன்றவைத்தான்
பொதுவா பாப்பாங்க. (தோத்துப் போன பழைய மேட்சாகவோ, aeroplane accident பத்தியோ தான் இருக்கும்.)

2. புத்தகம், நியூஸ்பேப்பர் படிக்கும் போது. (படிக்கிறாரா? நடிக்கிறாரா? ஒன்னுமே புரியல)

3. சாப்பிடும்போது.

இந்த அதிமுக்கியம் வாய்ந்த தருணங்களில் மிக முக்கியமான விஷயமாக இருந்தால் கூட சொல்லாதீங்க. சொன்னாக்க செவிடன் காதில் ஊதிய சங்கு கதை தான்.

நாம் சொல்றது காதிலே விழும். ஆனா கேட்காத மாதிரியோ அல்லது
interest இல்லாத மாதிரியோத்தான் இருப்பாங்க.

இந்த காட்சியைப் பாருங்க.

ரங்கமணி டீவி பார்த்துகிட்டு இருக்காங்க,

"என்னங்க, இன்னிக்க்கு...........", அப்படின்னு தங்கமணி ஆரம்பிக்கிறாங்க.

(சொல்லிக்கிட்டு இருக்கும்போது கேட்கிறாரா? இல்லையான்னு
சந்தேகம் வரும். ஏன்னா? ஐயா கண்ணு டீவி மேலல்ல இருக்கு.)

தங்கமணி," ஏங்க கேக்குறீங்களா?

"ஆமாம்! கேட்டுகிட்டு தான் இருக்கேன்"

"டீவி பார்க்கிறீங்களோன்னு நினைச்சேன்"

"காது கேட்குது சொல்லு" (பெரிய அஷ்டாவதானி. ஒரே நேரத்தில 2 வேலை செய்யறாருன்னு நினைப்பீங்களே?!)

பாதி கவனம் தங்கமணி சொல்லும் விஷயத்தில், மீதி கவனம் பார்த்துக்
கொண்டிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றியோ தான் சிந்தித்து கொண்டிருப்பார்கள்.

(அடுத்து யாரை இரக்க போறாங்க. மேட்ச் என்னவாகும்?

ஐர்வினால எப்படி முதலைகள் பக்கத்தில நிக்க முடியுது?

புஷ் ஏன் இப்படி செய்யுறாரு? இதான் சிந்தனை)

சரி ஏன் இப்படி இருக்காங்க? என்ன பிரச்சினைன்னு பார்த்தாக்க
விஷயம் இது தான்.

  1. 1. தங்கமணிகள் சொல்றதை கவனிக்கிறார் ரங்கமணி அப்படிங்கற மெசெஜ் தங்கமணிகளுக்கு(அதாவது நாம் சொல்றதுல இன்ட்ரஸ்ட காட்டிட்டா?) உணர்த்திட்டா, அடுத்தமுறை தான் கேட்க விரும்பாத (செய்தி/சூழ்நிலை) போதும் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் என்பதாலேயே இந்த "காது கேளாத" எஃபக்டு.
  2. விஷயத்தை கேட்டு "உம்" கொட்டிட்டா மொத்தமும் சொல்லிடுவாங்களோன்னு பயம்.
  3. கேளாத மாதிரி இருந்தால்," காது கேட்குதா இல்லையா? எந்த உலகத்திலே இருக்காரு"? அப்படின்னு குழம்பி தங்கமணிகளுக்கு பைத்தியம் பிடிச்சிடும்.
  4. கேட்டும் கேளாத மாதிரி இருந்து வெறுப்பேற்றினால் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல், வெளிநடப்பு செய்து விடுவார்கள்.தப்பிச்சுக்கலாமே!!!! அது மேட்டரு.

சரி எப்படித்தான்? எப்பத்தான் சொல்லுறதுன்னு கேக்கறீங்களா?

கிட்ட வாங்க ரகசியம் சொல்றேன்!!!

எதை? எப்போது? எங்கே? எப்படி சொல்ல வேண்டும்னு திட்டமிட்டு சொல்லுங்க.

சொல்ல வேண்டியதின் சாராம்சம் மாத்திரம் சொல்லுங்க. இன்ட்ரெஸ்ட் இருந்தா பொட்டியை ஆஃப் செஞ்சுட்டு வருவாங்க.

பேசறதுக்கு முன்னாடி டீவிஐ ஆஃப் செஞ்சுட்டு, ரிமோட், பக்கத்தில இருக்கற பேப்பர், புத்தகம் எல்லாம் எடுத்து ரங்கமணி கையில சிக்காத இடத்தில் வைச்சுட்டு, டீவி ஸ்கிரீன் முன்னாடி போய் நின்னு கிட்டு (ரங்கமனி பக்கம் திரும்பித்தான்) பேசுங்க.

சாப்பிடும்போது கண்டிப்பா சொல்லாதீங்க.

மேற்படி சொன்னது எதுவும் ஒத்துவரலைன்னா விட்டுடுங்க. சொல்லாவே சொல்லாதீங்க.

"உங்ககிட்ட சொல்ல வந்தேன். நீங்க பிஸியாக இருந்தீங்க. அவசரம். அதனாலே நானே முடிச்சிட்டு உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன்," அப்படின்னு டயலாக் விடுங்க.

சொல்லிட்டு செய்ய வேண்டிய விஷயத்தைக் கூட சொல்லாமலே இருந்துட்டா? செஞ்சுட்டா? விட்டது பிரச்சனை.

அப்புறமென்ன. ஐயா, ஆடோமேடிக்கா," சொல்லாமல் அடிச்ச சுந்தரி- இனி எங்கிட்ட சொல்லுடி சுந்தரி"ன்னு வழிக்கு வந்திடுவாரு.

புரிஞ்சுதா? இது தான் இன்றைய பாடம். சொல்லியிருக்கிற செயற்பயிற்சிகளை செஞ்சு பார்க்கறது தானே

வீட்டுப்பாடம்.

அடுத்த புதன் நான் வந்திடுவேன். நீங்க வற மறந்திடாதீங்க

வர்ட்டா?

24 comments:

துளசி கோபால் said...

//பேசறதுக்கு முன்னாடி டீவிஐ ஆஃப் செஞ்சுட்டு, ரிமோட், பக்கத்தில இருக்கற பேப்பர், புத்தகம் எல்லாம் எடுத்து ரங்கமணி கையில சிக்காத இடத்தில் வைச்சுட்டு, டீவி ஸ்கிரீன் முன்னாடி போய் நின்னு கிட்டு (ரங்கமனி பக்கம் திரும்பித்தான்) பேசுங்க.//

இதைத்தானே நான் செய்யறேன். நீங்க நம்ம வீட்டுக்கு எப்ப வந்தீங்க?

ஆமாம்...தலைப்புலே என்ன பொட்டு?

பெண்கள் வகுப்புன்னு காமிக்கவா?

மகளிர் மட்டும்???????

ரசிகன் said...

இப்போதைக்கு அட்டனென்ஸ் போட்டுக்கோங்க.... விரைவில் வர்ரேன்..ஹிஹி..

pudugaithendral said...

அப்பாடி வந்துட்டீங்களா துளசி அக்கா,

வீட்டுக்கு வீடு வாசப்படி தானே.

மகளீட் மட்டுமல்லாம் இல்ல. வகுப்புகள் 2 பேருக்கும் தான்.

pudugaithendral said...

வாங்க ரசிகன்,

என்னடா ஆளையே காணோமேன்னு பாத்தேன்.

ரிஜிஸ்டர் மார்க் பண்ணிக்கிட்டேன்.

seethag said...

புதுகை உங்களளவு நல்ல எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது..

செலெக்டிவ் டெஃப்னெஸ்ஸான்னு அப்படியே கதில சுள்ளுன்னு விழறமாதிரி கேட்பேன்.

pudugaithendral said...

சீதா said

//புதுகை உங்களளவு நல்ல எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது..

செலெக்டிவ் டெஃப்னெஸ்ஸான்னு அப்படியே கதில சுள்ளுன்னு விழறமாதிரி கேட்பேன்.//

தங்கமணிகளே நோட் திஸ் பாயிண்ட். சில சமயம் இந்த மாதிரியும் கேக்கணுமாம்.

பாச மலர் / Paasa Malar said...

வகுப்பு பலே ஜோர்...தொடருங்கள் தொடருங்கள்...

pudugaithendral said...

வாங்க பாச மலர்,

வாழ்த்துக்கு நன்றி.

தங்களிடம் ஏதானும் பாடக் குறிப்பு இருந்தா மெயிலுக்கு அனுப்புங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== தங்கமணிகளே நோட் திஸ் பாயிண்ட். சில சமயம் இந்த மாதிரியும் கேக்கணுமாம். ==>

எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்க!

pudugaithendral said...

வாங்க சாமான்யன்,

சபதமே எடுத்திருக்கோமே தெரியாதா?

என்ன கிளாஸுக்கு லேட்டா வர்ரீங்க?

அட்டென்ட்ஸ் போட்டுட்டு போன ரசிகன யாராவது பாத்தாக்க கிளாசுக்கு வரச்சொல்லுங்க.

சுரேகா.. said...

// டீவி பார்த்துக்கொண்டு இருக்கும் போது.

புத்தகம், நியூஸ்பேப்பர் படிக்கும் போது

சாப்பிடும்போது.//

இப்படி எந்திரிக்க முடியாத எடத்துல வெச்சே மடக்குறீங்கன்னா..நீங்க சொல்ல வர்ற விஷயம் ஓட விடப்போகுதுன்னுதானே அர்த்தம்..!

pudugaithendral said...

sureka said
//இப்படி எந்திரிக்க முடியாத எடத்துல வெச்சே மடக்குறீங்கன்னா..நீங்க சொல்ல வர்ற விஷயம் ஓட விடப்போகுதுன்னுதானே அர்த்தம்..!//

இந்த சமயத்தைவிட்டா ரங்கமணிகளை பிடிக்கறதும் கஷ்டம்

பினாத்தல் சுரேஷ் said...

//டீவிஐ ஆஃப் செஞ்சுட்டு, ரிமோட், பக்கத்தில இருக்கற பேப்பர், புத்தகம் எல்லாம் எடுத்து ரங்கமணி கையில சிக்காத இடத்தில் வைச்சுட்டு, டீவி ஸ்கிரீன் முன்னாடி போய் நின்னு கிட்டு //

இதைத்தான் நான் அடக்குமுறைன்னு சொல்றேன்.. நீங்க சொல்லவர மேட்டர் முக்கியமானதா இருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா, முக்கியமான வேலைகளைத்தான் நாங்க முன்னாடியே முடிச்சுடறோமே..

//முக்கியமாக sports,
National geographic and news channels போன்றவைத்தான்
பொதுவா பாப்பாங்க// ஆமாம்..

நாயகியின் கணவனை நாலு பெண்கள் டிஸைன் டிஸைனா சதி பண்ணி கைப்பற்ற விரும்பும் காவியங்கள், ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டி உலகைத் திருத்தக் கிளம்பும் நாயகிகளின் வாழ்க்கை வரலாறு, பந்தம் பாசம் சொந்தம் தாலி மாங்கல்யம் போன்றவற்றின் மகத்துவத்தை உணர்த்தும் மெகாத்தொடர்கள் புரியும் அளவிற்கு இன்னும் எங்களுக்கு அறிவு வளரவில்லை!

இது புதன்கிழமை வருதா? சரிதான், ஏவாள்லே இருந்து பின் தங்கித்தானே இருக்கீங்க.. இதுலயும் பாலோ பண்ணிக்குங்க!

pudugaithendral said...

தைரியமா மொதல் நாளே வந்து பின்னுட்டம் இட்ட பினாத்தலாருக்கு பாரட்டுக்கள்.

// நீங்க சொல்லவர மேட்டர் முக்கியமானதா இருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா, முக்கியமான வேலைகளைத்தான் நாங்க முன்னாடியே முடிச்சுடறோமே..//


அப்படின்னு மனசுக்குள்ள நினைப்பு. வேற என்ன சொல்ல. நீங்க எல்லா வேலையும் எங்க செய்யறீங்க (அதுக்கு தனியா ஒரு பதிவு வருது)

//மெகாத்தொடர்கள் புரியும் அளவிற்கு இன்னும் எங்களுக்கு அறிவு வளரவில்லை!//

நீங்க பார்க்கற் மத்த சானல்கள்னால் மத்திரம் அப்படியே அறிவு பெருகி அறிவுக்கொழுந்து ஆகிட்டீங்க. இப்போ பெண்களே சீரியல் பார்க்கறது இல்ல.ரிடையர்ட் ஆன பெரியவங்க தான் பார்க்கராங்க.

//இது புதன்கிழமை வருதா? சரிதான், ஏவாள்லே இருந்து பின் தங்கித்தானே இருக்கீங்க.. இதுலயும் பாலோ பண்ணிக்குங்க!//

இப்படி சொல்லிட்டீங்கலேன்னு மாத்த மாட்டேனே. ஏன்னா காலம் காலமா ஆண் வர்க்கம் பழமொழிய தப்பாவே புரிஞ்சுகிட்டு சொல்றது தானே. மாத்த முடியாது உங்களையெல்லாம்.

ரசிகன் said...

// National geographic and news channels போன்றவைத்தான்
பொதுவா பாப்பாங்க. (தோத்துப் போன பழைய மேட்சாகவோ, aeroplane accident பத்தியோ தான் இருக்கும்.)//

அவ்வ்வ்வ்வ்.. உங்க ஊருல எப் டீவி , பேஷன் டீவில்லாம் தெரியரதில்லையா?..ஹிஹி...

ரசிகன் said...

// புத்தகம், நியூஸ்பேப்பர் படிக்கும் போது. (படிக்கிறாரா? நடிக்கிறாரா? ஒன்னுமே புரியல)//

பிரச்சனையில் மாட்டிக்காம தப்ப அதான் ஒரேவழி.அதையும் விட மாட்டிங்கறிங்களே.. நெசமாவே உங்க அய்த்தான் பாவம்தானுங்கோ...ஹிஹி..

ரசிகன் said...

// பேசறதுக்கு முன்னாடி டீவிஐ ஆஃப் செஞ்சுட்டு, ரிமோட், பக்கத்தில இருக்கற பேப்பர், புத்தகம் எல்லாம் எடுத்து ரங்கமணி கையில சிக்காத இடத்தில் வைச்சுட்டு, டீவி ஸ்கிரீன் முன்னாடி போய் நின்னு கிட்டு (ரங்கமனி பக்கம் திரும்பித்தான்) பேசுங்க.//

ஆஹா... இந்த இடுகைய எதிர்காலத்துல ,எங்க வீட்டுக்கு தெரியாம பாத்துக்கோனுங்க்க...

ரசிகன் said...

// "உங்ககிட்ட சொல்ல வந்தேன். நீங்க பிஸியாக இருந்தீங்க. அவசரம். அதனாலே நானே முடிச்சிட்டு உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன்," அப்படின்னு டயலாக் விடுங்க.//
// அப்புறமென்ன. ஐயா, ஆடோமேடிக்கா," சொல்லாமல் அடிச்ச சுந்தரி- இனி எங்கிட்ட சொல்லுடி சுந்தரி"ன்னு வழிக்கு வந்திடுவாரு.//

அவ்வ்வ்வ்வ்......

எங்க ஏதோ ஆவலா சொல்லவர்ராங்களேன்னு திரும்பிப்பாத்தாக்கா..
என்னங்க.. பக்கத்துவீட்டு பாமாவுக்கு அவ விட்டுக்காரர் புதுசா பட்டுபுடவை எடுத்து குடுத்திருக்காரு(பின்ன முன்சிபாலிட்டியா பொடவை எடுத்துக்குடுக்கும்?)ம்பாங்கன்னு கல்யாணமான பாவப்பட்டவிங்க சொல்லறத கேட்டிருக்கேனுங்க..

உங்க வீட்டுல நடந்த உரையாடல்களோடு அருமையா சொல்லியிருக்கிங்க... சூப்பரே.

pudugaithendral said...

ரசிகன்:
//அவ்வ்வ்வ்வ்.. உங்க ஊருல எப் டீவி , பேஷன் டீவில்லாம் தெரியரதில்லையா?..ஹிஹி...//

நல்லாவே தெரியுது. அதெல்லாம் பப்ளிக்கா சொல்லி போட்டுக்குடுக்க வேண்டாமேன்னு தான் சொல்லல.

pudugaithendral said...

ரசிகன்:

// புத்தகம், நியூஸ்பேப்பர் படிக்கும் போது. (படிக்கிறாரா? நடிக்கிறாரா? ஒன்னுமே புரியல)//

பிரச்சனையில் மாட்டிக்காம தப்ப அதான் ஒரேவழி.அதையும் விட மாட்டிங்கறிங்களே.. நெசமாவே உங்க அய்த்தான்
பாவம்தானுங்கோ...ஹிஹி..//

அய்த்தானுக்கு ட்ரீட்மென்டே வேற.

மங்களூர் சிவா said...

//
நாயகியின் கணவனை நாலு பெண்கள் டிஸைன் டிஸைனா சதி பண்ணி கைப்பற்ற விரும்பும் காவியங்கள், ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டி உலகைத் திருத்தக் கிளம்பும் நாயகிகளின் வாழ்க்கை வரலாறு, பந்தம் பாசம் சொந்தம் தாலி மாங்கல்யம் போன்றவற்றின் மகத்துவத்தை உணர்த்தும் மெகாத்தொடர்கள் புரியும் அளவிற்கு இன்னும் எங்களுக்கு அறிவு வளரவில்லை!
//
எங்கள் குல தங்க தலைவன் வரும்கால ரங்கமணிகளின் நலன் காக்க புறப்பட்ட வேந்தன் 'பெனாத்ஸ்' சொன்ன இந்த பொன் வரிகளுக்கு ஒரு ரிப்பீட் சொல்லிக் கொள்கிறேன்.

மங்களூர் சிவா said...

//
Seetha said...
புதுகை உங்களளவு நல்ல எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது..

செலெக்டிவ் டெஃப்னெஸ்ஸான்னு அப்படியே கதில சுள்ளுன்னு விழறமாதிரி கேட்பேன்.
//
இது போன்ற கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தக்க உபாயம் கண்டறிய வேண்டுமென அண்ணன் பெனாத்ஸை கேட்டுக்கொள்கிறேன்.

மங்களூர் சிவா said...

//
நல்லாவே தெரியுது. அதெல்லாம் பப்ளிக்கா சொல்லி போட்டுக்குடுக்க வேண்டாமேன்னு தான் சொல்லல.
//
அப்ப அறிவை வளர்க்க அதை பார்க்க வேண்டுமா ?

யாரும் சொல்லவே இல்ல!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

rasigan said
//உங்க வீட்டுல நடந்த உரையாடல்களோடு அருமையா சொல்லியிருக்கிங்க... சூப்பரே//

பாடக்குறிப்புகள் தயாரிக்கும்போது பிறரது அனுபவங்களும் சேர்க்கப்படும்.
தனிமனித அனுபவங்கள் மாத்திரம் சரி வராது.அப்பத்தானே புது ஐடியாஸ் கிடைக்கும்.