ரங்கமணிகள் விடுப்பு எடுக்காம வேலைக்குச் செல்பவர்கள். அவங்களைத் தடுக்காதீங்க, வேலைக்குப் போகட்டும் என்று சொல்லியிருந்தேன்.
இந்தப் பாடத்தில் ரங்கமணிகள் தப்பித்தவறி
விடுப்பு எடுத்து வீட்டில்இருந்தால் என்ன
நடக்கும்? என்பதற்கு ஒரு சிறு காட்சி பார்க்கலாம்.
தங்கமணிக்கு உடம்பு சரியில்லை. பயங்கர காய்ச்சல்.
"என்னங்க! எனக்கு ரொம்ப முடியலை. இன்னைக்கு
கொஞ்சம் லீவு போடறீங்களா?, அப்படின்னு கேக்க!
ஏதோ நல்லமூடில் இருந்த ரங்கமணி, "அச்சச்சோ! உடம்பு சரியில்லையா? நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் சமையல்,
பசங்க எல்லாம் கவனிக்கிறேன்.லீவு போட முடியாது.
ஆனால் வீட்டிலிருந்து மேனேஜ் பண்ணிக்கிறேன்.
வேலைக்கு வேலையும் ஆச்சு, உன்னனயும்,
பசங்களையும் கவனிச்சமாதிரி ஆச்சு. உனக்காக இது கூட செய்யமாட்டேனா? செல்லம்!(பிரகாஷ்ராஜ் உபயம்), நீ ரெஸ்ட் எடு."
10 நிமிடத்திற்கு அப்புறம். "டிரிங்.. டிரிங்.. டிரிங்....".
ரங்கமணி போன் எடுத்து பேசுகிறார்," Hello, yeah. I
am at home today. My wife is not well. Nobody is there
to help her. Managing both family and office ......,"என்று ஆரம்பித்து............................. பேசிக்கொண்டிருக்கிறார்.
(நம்மாளுங்கத்தான் போன் எடுத்தா சட்னு
கீழவெக்கிறதே தெரியாதே).
" அம்மா பசிக்குது. சாப்பாடு கொடுங்க!!!!" இது பிள்ளைகள்.
தாளாமல் எழுந்து தோசை சுட ஆரம்பிக்கும்போது
ரங்கமணி வர்றார்.
"நீ படுத்துக்கோ! தோசைதானே நான் போட்டுத்தர்றேன்". அப்படின்னு தோசைப் போடுவார். 2 தோசை போட்டு 3 ஆவது தோசை போடும்போது மறுபடி "டிரிங்..டிரிங்..டிரிங்...."
"ஹலோ, சொல்லு. பொண்டாட்டிக்கு உடம்பு
சரியில்லை, வீட்டுல இருந்து பார்த்துக்கறேன்.......................... அப்படின்னு ஆரம்பிச்சு அய்யா, பேசிட்டு வர்றதுக்குள்ள இங்க தங்கமணீ தோசை சுட்டு, அடுப்புல குக்கரை,
ஏற்றி, காய்கறிகளை கழுவும்போது
ரங்கமணி பேச்சை முடித்து வருவார்.
"தோசை போட்டு, குக்கர் வெச்சுட்டேங்க" அப்படின்னு ஆரம்பிக்கறதுக்குள்ள,
"ஐயோ! நீ ஏம்மா இதெல்லாம் செஞ்சுகிட்டு?
டிபன் இப்பத்தானே முடிஞ்சிருக்கு. 11 மணிக்கு
மேலே சூடா சமைச்சுக்கிடலாம். நீ பிரெட்
சாப்பிட்டுடு மாத்திரை போட்டுகிட்டு ரெஸ்ட்
எடு"' அப்படின்னு சொல்லிட்டுதோசைகளச் சாப்பிடறார்.
நடுவில் ஓயாது ஒலிக்கும் போன்களும், ரங்கமணி
எல்லார் கிட்டையிம்,தன் மனைவிக்கு உடல்நிலை
சரியில்லாததால் வீட்டில் இருந்து
பார்த்துக் கொள்வதை சொல்வதை கவனிக்கத்
தவறக்கூடாது!!!!!
மாத்திரையின் மயக்கத்தில் ஓய்வெடுத்த
ரங்கமணி, 12 மணி வாக்கில் பார்த்தால் ரங்கமணி, போனில்
பேசிக்கொண்டிருப்பதையோ"சின்னதா
ஒரு அர்ஜென்ட் மெயில் அனுப்பிட்டு வர்றேன்",
என்று சொல்லிவிட்டு கணீணிக்குள் தலையை விட்டுக்
கொண்டிருப்பதோ,ஸ்போர்ட்ஸ் சேனல் பார்த்துக்
கொண்டிருப்பதோ தெரியும்.
வெறுத்துப் போன தங்கமணி காய் வெட்டி, கறி
செஞ்சு சமையல் முடிச்சு பார்க்க மணி 1.
அதுவரை ஐயா," இதோ வந்துட்டேன்"! அப்படின்னு
குரல் கொடுத்து கிட்டு இருக்கிறார்.
சமையல் ரெடி, அனைவரும் சாப்பிட்டு முடித்ததும்,
போன் பேசிய களைப்பால் ரங்கமணீயும், உடல்நிலை
சரியில்லாததால் தங்கமணீயும்
மதியம் தூங்கிப் போகிறார்கள்.
காலையில் பட்ட கஷ்டத்தை நினைத்துப் பார்த்து
தங்கமணி பேசாமல் இரவு சாப்பாட்டையும்
செய்து வைத்துவிடுகிறார்.
மேற் சொன்ன காட்சி தரும் பாடம் என்ன?
ரங்கமணீயை வீட்டில் இருக்கச்
சொல்வானேன்? தங்கமணிக்கு உடல்நிலை
சரியில்லாததால் வீட்டில் இருந்து கவனித்துக்
கொள்வதாய் தம்பட்டம் அடித்திருப்பதனால், தான்
தங்கமணியை தங்கமாக கவனித்துக் கொள்வதாக
இமேஜ் கிரியேட் ஆகி இருக்கும்.
ஆனால் நடந்த்து என்ன? உடல்நிலை சரியில்லாவிட்டாலும் வேலைகளைச் செய்தது தங்கமணீ. உதவுவதாக
கூறி வீட்டிலிருந்த ரங்கமணி உதவவே இல்லை.
ரங்கமணி ஆபிஸ் போயிருந்தாலாவது அந்த
போன் சத்தம் ஆகியவை இல்லாமல் வீடு நிசப்தமாக
இருந்திருக்கும். ஓய்வு எடுத்திருக்கலாம்.
ஆகவே தங்கமணிகளே, உடல்நிலை சரியில்லலயா?
ரங்கமணிகளை லீவ் எடுக்கச்சொல்லி அவதிப்படாமல்
ஆனந்தமாய் ஆபிஸ் அனுப்பிவிட்டு
ஓய்வு எடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
52 comments:
//ஆனந்தமாய் ஆபிஸ் அனுப்பிவிட்டு
ஓய்வு எடுப்பதுதான் புத்திசாலித்தனம்.//
ஒரு சின்ன கூட்டல்:
ஆனந்தமாய் ஆபிஸ் அனுப்பிவிட்டு
வழக்கம்போல ஓய்வு எடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
இத்தனைக்கும் நடுவிலே டிவியில் வேற ஸ்போர்ட்ஸ் பார்த்துக்கிட்டே இருப்பாருன்றதை விட்டுட்டீங்களே.....:-))))
பதிவில் ஒரு இடத்தில் தங்கமணி ரங்கமணியா வந்திருக்கு. அதையும் பாருங்க
ஒரு அட்டெண்டன்ஸ் இப்போதைக்கு
உள்ளேன் அக்கா.
Dear students,
Wifeology துறையைச் சேர்ந்த பேராசிரியர் சுரேஷ் வந்திருக்காரு பாருங்க.
எல்லோரும் அவருக்கு ஒரு வணக்கம் சொல்லுங்க.
வாங்க துளசி அக்கா,
நீங்க சொல்வதையும் சேர்த்துடுறேன்.
நீங்க சொன்னதையும் சரி செஞ்சுட்டேன்.
மங்களூர் சிவாக்கு
அட்டென்டென்ஸ் மார்க் செஞ்சாச்சு.
ரங்கமணி: Bread வாங்கி வச்சுட்டேன்..எங்களுக்குச் சமைக்க வேணாம்..வெளில வாங்கிக்கிறோம்..
இவ்வளவாவது செய்யுறாங்களேன்னு நெனச்சிட்டுப் போக வேண்டியதுதான்..
இதுக்கெல்லாம் லீவு போட்டா office என்ன ஆகிறது?
<==
பினாத்தல் சுரேஷ் said...
ஆனந்தமாய் ஆபிஸ் அனுப்பிவிட்டு
வழக்கம்போல ஓய்வு எடுப்பதுதான் புத்திசாலித்தனம் ==>
அதானே.
புதுகைத் தென்றல்,
அதாவது,தன் கையே தனக்குதவின்னு சொல்றீங்க.
வேற வழி சிவா,
தாங்கமுடியாம வீட்டில இருக்கச் சொன்னாத்தான் காட்சி இப்படி இருக்கே?
வெளில வாங்கிக் கொடுக்கற ஆண்கள் ரொம்ப குறைவு பாசமலர்.
<===
பாச மலர் said...
ரங்கமணி: Bread வாங்கி வச்சுட்டேன்..எங்களுக்குச் சமைக்க வேணாம்..வெளில வாங்கிக்கிறோம்..
இவ்வளவாவது செய்யுறாங்களேன்னு நெனச்சிட்டுப் போக வேண்டியதுதான்..
இதுக்கெல்லாம் லீவு போட்டா office என்ன ஆகிறது?
==>
பாச மலர், உங்களைபோல் உள்ளவங்க பு.தெறலுக்கு எடுத்துச்சொல்லுங்க.
<== இதுக்கெல்லாம் லீவு போட்டா office என்ன ஆகிறது? ==>
அதைத்தான நாங்களூம் சொல்ரோம்.
த.மணிக்கு முடியலன்னா, வெளியில சாப்டுக்கரேன்ன்னு சொன்னா எங்கங்க த.மணி கேக்ராங்க? [ஒரு நாளாவது வாய்க்கு ருசியா சாப்ட விடுராங்களா? =))) ]
<===
புதுகைத் தென்றல் said...
வேற வழி சிவா,
தாங்கமுடியாம வீட்டில இருக்கச் சொன்னாத்தான் காட்சி இப்படி இருக்கே?
==>
எல்லாரும் எப்படியோ ஒய்ஃபாலஜிய வேர வேர ரூபத்தில/சமயத்திலே படிச்சுருப்பாங்கன்னு நினைக்கிரேன் =))
<==
புதுகைத் தென்றல் said...
வெளில வாங்கிக் கொடுக்கற ஆண்கள் ரொம்ப குறைவு பாசமலர்.
==>
இந்தியாவுல மொதத த.மணிகளும் சேர்ந்து சொன்னாக்கூட ஒத்துக்கமாட்டேன்னு சொன்னா என்ன பண்ண முடியும்?
//ரங்கமணி: Bread வாங்கி வச்சுட்டேன்..எங்களுக்குச் சமைக்க வேணாம்..வெளில வாங்கிக்கிறோம்..//
இது எஸ்கேபிஸம் பாசமலர்.
//இவ்வளவாவது செய்யுறாங்களேன்னு நெனச்சிட்டுப் போக வேண்டியதுதான்..//
இதுக்கே சந்தோஷப் பட்டுக்குவீங்களா?
//இதுக்கெல்லாம் லீவு போட்டா office என்ன ஆகிறது?//
இந்த டயலாக்கை வேலைக்குப் போகும் பெண் தன் கணவனிடம் சொன்னா அவ்வளவுதான். வேலைக்குப் போகிறாங்கற அகம்பாவம் திமிரு அப்படி இப்படின்னு சொல்வாங்க.
ஒரு சின்ன தலைவலிக்கு ஆண்கள் காட்டும் சீன்கள் அப்பபா. கடுமையான ஜுரத்திலும் சமைத்து வைத்துவிட்டு சாப்பிட முடியாமல் கிடக்கும் மனைவிகளுக்கு கேட்க ஆள் ஏது?
சாமான்யன் சொன்னது,
//இதுக்கெல்லாம் லீவு போட்டா office என்ன ஆகிறது?
==>
பாச மலர், உங்களைபோல் உள்ளவங்க பு.தெறலுக்கு எடுத்துச்சொல்லுங்க.
எனக்கு எடுத்துச் சொல்லவேண்டியது இல்லை. நான் சொல்வதில் நியாயம் இருக்கிறது.
//<== இதுக்கெல்லாம் லீவு போட்டா office என்ன ஆகிறது? ==>
அதைத்தான நாங்களூம் சொல்ரோம்.//
இதுக்கு பதில் பாசமலர் அவர்களுக்குச் சொன்ன பின்னுட்டத்தில் இருக்கு சாமான்யன்.
//த.மணிக்கு முடியலன்னா, வெளியில சாப்டுக்கரேன்ன்னு சொன்னா எங்கங்க த.மணி கேக்ராங்க? [ஒரு நாளாவது வாய்க்கு ருசியா சாப்ட விடுராங்களா? =))) ]//
ஹோட்டல் சாப்பாடு ருசி. வீட்டுச் சாப்பாடு வாயில வெக்க விளாங்காது. ஆஹா, என்ன ஒரு குணம்.
சாமான்யன் சொன்னது.
//இந்தியாவுல மொதத த.மணிகளும் சேர்ந்து சொன்னாக்கூட ஒத்துக்கமாட்டேன்னு சொன்னா என்ன பண்ண முடியும்?//
இந்தியாவுல இருக்கிற மொத்த த.மணிகளை விசாரித்துப் பாரும் நான் சொல்லாத நிறைய கதைகள் வரும்.
நீ எக்கேடு கெட்டு போனாலும் எனக்கு வக்கணையா, வகைவகையா சாப்பாடு வேணூம், உடம்பு சரியில்லாத விட்டால் ஆஸ்பத்திரிக்கு போகக்கூடாது, தனக்கு வந்திருக்கும் தலைவலிக்கு ரங்கமணிகள் அடிக்கும் கூத்து, பிரச்வ வலி வந்த நேரத்தில் கூட மொத்த குடும்பத்திற்கு வடித்து வைத்துவிட்டு ஆஸ்பத்திரி போனகதை எல்லாம் வரும்.
அதையெல்லாம் இங்கு நான் பேச விரும்பவில்லை. ஆண்கள் எப்படின்னு ரொம்ப துளையாமல், நயமான வார்த்தைகளோடு சொல்லியிருக்கிறேன்.
நீங்க மறுக்கறதுனால இதெல்லாம் இல்லைன்னு ஆயிடப்போறது இல்ல.
அச்சச்சோ புதுகை...நான் same side goal போடவில்லை..
நான் எழுதியது அப்பட்டமான கிண்டல் ரங்கமணியைப்பற்றி..
office இவங்களாலே மட்டுமே நடக்குதுன்ற அவங்க எண்ணத்தைச் சொல்லிருக்கேன்..
சிவாதான் புரிஞ்சுக்கலை..நீங்களுமா?
வாங்க பாசமலர்,
நான் எழுதியது அப்பட்டமான கிண்டல் ரங்கமணியைப்பற்றி..
office இவங்களாலே மட்டுமே நடக்குதுன்ற அவங்க எண்ணத்தைச் சொல்லிருக்கேன்..
ஒரு ஆச்சரியக்குறி அப்படி இப்படின்னு ஏதாவது போட்டிருக்ககூடாது?
ஆமாம்..கொஞ்சம் ஆச்சரியக்குறி..இன்னும் கொஞ்சம் வார்த்தைகள் சேர்த்திருக்கலாம்...
<==
பாச மலர் said...
நான் எழுதியது அப்பட்டமான கிண்டல் ரங்கமணியைப்பற்றி..
office இவங்களாலே மட்டுமே நடக்குதுன்ற அவங்க எண்ணத்தைச் சொல்லிருக்கேன்..
சிவாதான் புரிஞ்சுக்கலை..நீங்களுமா?
==>
வாங்க பாசமலர் தாயீ,
இப்ப திருப்தியா?
இதையே நீங்களூம்/நாங்களும் எத்தனையோ சொல்லியாச்சு.அதனால்,பதில் சாய்ஸ்ல விட்டாச்சு
<===
வேலைக்குப் போகிறாங்கற அகம்பாவம் திமிரு அப்படி இப்படின்னு சொல்வாங்க.
==>
வேலைக்குப் போவாட்ட சொல்ல மாட்டாங்களா? =)
<==
புதுகைத்தென்றல் சொல்ரார்
அதையெல்லாம் இங்கு நான் பேச விரும்பவில்லை. ஆண்கள் எப்படின்னு ரொம்ப துளையாமல், நயமான வார்த்தைகளோடு சொல்லியிருக்கிறேன்.
==>
ரொம்ம நன்னிங்கோ.
சாமான்யன் சொன்னது
//==>
வேலைக்குப் போவாட்ட சொல்ல மாட்டாங்களா? =)//
வாங்க சார். உங்க வர்க்கம் எப்படி இருந்தாலும் பெண்களைச் சொல்லிகிட்டுத்தான் இருக்கும்.
வீட்டுல இருக்கற பெண்கள் எல்லாம் சும்மாவே இருக்கறமாதிரி ஒரு நினைப்பு. இதைப் பத்தி ரொம்பவே
பேசியாச்சு. அதனால் திரும்ப பேசவேண்டாம்.
அதனாலத்தான் பினாத்தலாரின் பின்னூட்டத்திற்கும் நெத்திஅடி பதில் தரலை.
<===
புதுகைத் தென்றல் said...
அதனாலத்தான் பினாத்தலாரின் பின்னூட்டத்திற்கும் நெத்திஅடி பதில் தரலை. ==>
பினாத்ததலார்,
பதில் உங்களூக்கும்தான்.நாங்களே பின்னூட்டமிட்டுக்கொண்டிருந்தா எப்படி?
இப்ப உங்க டர்ன்.
//
பினாத்தல் சுரேஷ் said...
ஒரு சின்ன கூட்டல்:
ஆனந்தமாய் ஆபிஸ் அனுப்பிவிட்டு
வழக்கம்போல ஓய்வு எடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
//
ரிப்பீட்டேய்
//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
<===
வேலைக்குப் போகிறாங்கற அகம்பாவம் திமிரு அப்படி இப்படின்னு சொல்வாங்க.
==>
வேலைக்குப் போவாட்ட சொல்ல மாட்டாங்களா? =)
//
அதுக்கு வேற சொல்லுவாங்கவோய்!!
//
புதுகைத் தென்றல் said...
ஹோட்டல் சாப்பாடு ருசி. வீட்டுச் சாப்பாடு வாயில வெக்க விளாங்காது. ஆஹா, என்ன ஒரு குணம்.
//
உண்மை அதுதானே.
நான் சென்னைல வேலை பாக்கிறப்ப அடிக்கடி பார்த்த காட்சி வீட்டுல குக்கர் மட்டும் வெச்சிட்டு சாம்பார், ரசம் ஹோட்டெல்ல வாங்க தூக்கம் தெளியாம க்யூல நிக்கிற பொம்மணாட்டிகள்தான் அதிகம். இது நடக்கிறது தி.நகரில் துரைசாமி சப்வே அருகே இருக்கும் டட்டா உடுப்பிபவன்.
வாங்க மங்களூர் சிவா,
//நான் சென்னைல வேலை பாக்கிறப்ப அடிக்கடி பார்த்த காட்சி வீட்டுல குக்கர் மட்டும் வெச்சிட்டு சாம்பார், ரசம் ஹோட்டெல்ல வாங்க தூக்கம் தெளியாம க்யூல நிக்கிற பொம்மணாட்டிகள்தான் அதிகம். இது நடக்கிறது தி.நகரில் துரைசாமி சப்வே அருகே இருக்கும் டட்டா உடுப்பிபவன்.//
சென்னை மாத்திரமே தமிழ்நாடு ஆகிவிடாது.
//
புதுகைத் தென்றல் said...
சென்னை மாத்திரமே தமிழ்நாடு ஆகிவிடாது.
//
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஊர் முழுவதும் இப்பிடித்தான்.
<==
புதுகைத் தென்றல் said...
சென்னை மாத்திரமே தமிழ்நாடு ஆகிவிடாது.
==>
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்களே. சென்னையில டாட்டா உடுப்பி ஓட்டல்னா, அன்னபூர்ணா,மதுரையில முனியான்டி விலாஸ்... இப்படி எடுத்துக்கணும்.
கரீக்டுங்களா?
பணமும் பத்தா இருக்கணும், பொண்ணும் முத்தா இருக்கணும்னா எப்படி?
அடுப்பங்கரை என்பது பெண்களுக்கு
மட்டுமேயானது அல்ல.
எந்தப் பண்டிகை, எந்த நல்ல நாளுக்கும் ஓய்வில்லாத துறை அடுப்பங்கரைதான்.
//எல்லார் கிட்டையிம்,தன் மனைவிக்கு உடல்நிலை
சரியில்லாததால் வீட்டில் இருந்து
பார்த்துக் கொள்வதை சொல்வதை கவனிக்கத்
தவறக்கூடாது!!!!!//
பாபாவில் டெல்லி கனேஷ் சொல்வார் மூனு வேளை குளிக்கிறேன் நாலுவேளை காளிகாங்மாளை பூஜை செய்கிறேன் ஆனா எனக்கு ஒன்னும் செய்யவில்லை என்று அடிக்கடி சொல்வார் அதுபோல் காலையில் கட்டிலில் இருந்து எழுந்திருக்கிறேன், காப்பி போடுறேன் எடுத்துவருகிறேன் என்று எல்லா வேலைகளையும் தினம் தினம் பட்டியல் போட்டு ஒப்பிக்கும் பொழுது அவர் பேசாமல் கேட்டுக்கிட்டுதானே இருந்தார்:)
ஆனால் அவர் ஒரு நாள் சொல்லங்காட்டியும் பெண்களுக்கு பொருக்காதே!!!:)))
//காலையில் பட்ட கஷ்டத்தை நினைத்துப் பார்த்து
தங்கமணி பேசாமல் இரவு சாப்பாட்டையும்
செய்து வைத்துவிடுகிறார்.///
அதை சாப்பிட அவர் பட்ட கஷ்டத்தை பார்த்து இருக்க மாட்டீங்க:))
//புதுகைத் தென்றல் said...
பணமும் பத்தா இருக்கணும், பொண்ணும் முத்தா இருக்கணும்னா எப்படி?
அடுப்பங்கரை என்பது பெண்களுக்கு
மட்டுமேயானது அல்ல.//
இப்பொழுது காலேஜில் படித்துக்கொண்டு இருக்கும் பெண்களுக்கு எத்தனை பேருக்கு சமைக்க தெரியும் என்று கேட்டு பாருங்க:)))) அப்ப தெரியும்!!! கிச்சனா எவ்வட உண்டு என்று கேட்பார்கள்!!!
நீங்க சொல்லும் ரூல்ஸை எல்லாம் பின்பற்றி இரண்டு தலைமுறை ஆகிறது!!!
துளசி கோபால் said...
பதிவில் ஒரு இடத்தில் தங்கமணி ரங்கமணியா வந்திருக்கு. அதையும் பாருங்க///
உண்மைய மறைக்க முடியாது துளசி டீச்சர்!!! தானாவெளியே வந்துடும்:)))
குசும்பன் சொன்னது.
//காலையில் கட்டிலில் இருந்து எழுந்திருக்கிறேன், காப்பி போடுறேன் எடுத்துவருகிறேன் என்று எல்லா வேலைகளையும் தினம் தினம் பட்டியல் போட்டு ஒப்பிக்கும் பொழுது அவர் பேசாமல் கேட்டுக்கிட்டுதானே இருந்தார்//
அப்படியா சாமி, ஒருநாள் வீட்டு வேலையெல்லாம் செஞ்சு பாருங்க அப்பத் தெரியும்.
உங்களுக்கு சீக்கிரத்தில கல்யாணமாமே, அப்ப பார்க்கலாம்.
பேசறது சுலபம், எல்லா வேலையும் செஞ்சு பாருங்க தெரியும்.
அப்ப மூச்சுவிடறதக்கூட ஒரு வேலையா சொல்வீங்க.
குசும்பன் சொன்னது.
//அதை சாப்பிட அவர் பட்ட கஷ்டத்தை பார்த்து இருக்க மாட்டீங்க//
இப்படி பேச மனசு எப்படி வருது உங்களுக்கு?
இல்லத் தெரியாமத்தான் கேக்குறேன்.
இதத்தான் நரம்பு இல்லாத நாக்குன்னு
சொல்வாங்களோ?
கொடுமை?
குசும்பன் சொன்னது.
//இப்பொழுது காலேஜில் படித்துக்கொண்டு இருக்கும் பெண்களுக்கு எத்தனை பேருக்கு சமைக்க தெரியும் என்று கேட்டு பாருங்க:)))) அப்ப தெரியும்!!! கிச்சனா எவ்வட உண்டு என்று கேட்பார்கள்!!!
நீங்க சொல்லும் ரூல்ஸை எல்லாம் பின்பற்றி இரண்டு தலைமுறை ஆகிறது!!!//
வாங்க, கல்யாண்த்துக்கு முன்னாடி சமைக்கத் தெரியாதுன்னு யார் சொன்னாங்க? உங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.
என்ன படிச்சிருந்தாலும்,எவ்வளவு பெரிய வேலைக்கு போனாலும் கரண்டி பிடிக்காம இருக்க முடியாதுங்கறது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்.
என்னவோ பெண்கள் எல்லாம் ஹோட்டல்களில் உட்கார்ந்து 3 வேளையும் சாப்பிடறமாதிரி பேசறீங்க?
பேசுவார் பேசட்டும், தென்றல்! நீங்க, ரங்கமணி, தங்கமணி ன்னு போட்டதால் தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றாங்க ஆண்கள்! அம்மா...ன்னு சொல்லிப் பாருங்க, அத்தனை பேரும் ஆமா, ஆமா ன்னு தலையாட்டி இருப்பாங்க. அம்மாவும், அப்பாவின் மனைவி அப்படிங்கிறது பாவம், இவர்களுக்குத் தெரிவதில்லை.
//என்ன படிச்சிருந்தாலும்,எவ்வளவு பெரிய வேலைக்கு போனாலும் கரண்டி பிடிக்காம இருக்க முடியாதுங்கறது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்.//
அவ்வ் அவ்வ்வ் நான் எனக்கு தெரிஞ்ச வலைபதிவர்கள் லிஸ்டை சொன்னேன் என்றால் என்னை உண்டு இல்லை என்று ஆக்கிடுவாங்க அதனால் எஸ்கேப்:)
நிஜமா எனக்கு தெரிந்த பலர் கல்யாண தேதி பிக்ஸ் செஞ்ச பிறகுதான் சமைக்க கத்துக்கிறாங்க!!!
//அப்படியா சாமி, ஒருநாள் வீட்டு வேலையெல்லாம் செஞ்சு பாருங்க அப்பத் தெரியும்.
உங்களுக்கு சீக்கிரத்தில கல்யாணமாமே, அப்ப பார்க்கலாம்.//
எது நடந்தாலும் வெளியே சொல்லாதடா சரவணா:) மெயின் டெயின் பண்ணு மெயின் டெயின் பண்ணு:))
(ஆமா நீங்க சொல்வது வாழ்த்தா? இல்லை சாபமா?)
வாங்க கோகிலவாணி,
தங்கள் கருத்துக்கு நன்றி.
குசும்பன்,
கல்யாணத்தேதி குறிச்சப்புரமாவது சமையல் கத்துக்கறாங்களே பாராட்டணும்.
ஆண்கள் எத்தனை வயசானாலும் மனைவியிடம் அன்பு செலுத்துவது எப்படின்னு தெரியாமலேயே குடும்பம் நடத்துறாங்க்களே?!!!
குசும்பன் சொன்னது,
//ஆமா நீங்க சொல்வது வாழ்த்தா? இல்லை சாபமா?)//
நல்லபிள்ளையா பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா வாழ்த்து, இல்லைன்னா..................?
மங்களூர் சிவா,
பார்தீங்களா, நமக்குள்ள ஒற்றுமையை.ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி கருத்து/ஒரே சமயத்தில தோணுது.
வாங்க குசும்பன்,
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ட அடிக்கிறீங்க.
இன்னைக்கு முழுக்க நீங்க எடுத்துக்கலாம் "கும்மி அடிக்க"
<==
புதுகைத்தென்றல் said
வாங்க, கல்யாண்த்துக்கு முன்னாடி சமைக்கத் தெரியாதுன்னு யார் சொன்னாங்க? உங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.
==>
நாங்களும் பெண்களுடந்தான் வளர்ந்திருக்கிரோம்.எங்கள் வீட்டுக்கு வந்த தங்கமணியும் எந்த லட்சணத்தில சமைக்க ஆரம்பிச்சாங்கன்னு அத சாப்பிட்டு அனுபட்டவனுக்குத்தான் அதனோட அருமை தெரியும்.
ஹஸ்பண்டாலஜி ரொம்பவே பாதிச்சிருச்சு.
சிவா உங்களுக்கு பாவம் நீங்க.
இந்தத்தனி மனிதத்தாக்குதலை கடுமையா கண்டிக்கிரேன்.
[உங்களோட மத்த பதிவுக்களுக்க வர்ர பின்னூட்டத்தையும், ஹஸ்பண்டாலஜிக்கு வர்ர பின்னூட்டங்களையும் ஓப்பு நோக்கவும். இப்பதிவுலதான் சுவாரஸ்யம்.அம்புட்டுதேன்.]
சாமான்யன் சிவா,
என மனதிற்கு பட்டதை நான் எழுதுகிறேன். எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.
chance-e illa. pinni pedledukkureenga...
thanks raji
இப்பவும் ஒருக்கா படிச்சேன். யப்பா.... வேலைக்கே போகட்டும்..... வூட்டுலே வேணாம்.... இன்னும் தங்கமணி சில இடத்தில் ரங்கமணியாவே இருக்காங்க .
ரங்கமணியாவா??
Post a Comment