என் தோழியிடம் இருந்து ஒரு போன் வந்தது.
ஒரு பெண்ணிற்கு உதவ வேண்டும் என்னுடன்
வருகிறாயா? என்று கேட்டார்.
விவரம் கேட்டு அதிர்ந்து போனேன்.
மத்தியக்கிழக்கு நாட்டில் வீட்டு வேலைப் பார்த்து வந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக,
விமானம் ஏறி, இலங்கையிலிருந்து சென்னை
செல்வதற்கு முன் இங்கு பிரசவம் ஆகிவிட்டது.
(23 வருடங்களாக பிள்ளை இல்லை. அங்கு சென்ற
பிறகுதான் தாய்மை அடைந்தது தெரியவந்திருக்கிறது.
9 மாதம் முடிந்தபின்தான் அனுப்ப முடியும்
என்று வீட்டுக் காரர்கள் சொல்லிவிட்டார்களாம்)
தெலுங்கைத் தவிர வேறு பாஷை அறியாத பெண்.
அவரிடம் பேசத்தான் என்னை அழைத்திருந்தனர்.
போன் செய்த அந்தத் தோழி, இன்னொரு தோழி
(ஆந்திராவைச் சேர்ந்தவர்) நாங்கள் மூவரும் சென்றோம். தூதரகம் சொல்லித் தெரிய வந்து சென்றோம்.
தன் தேவையென்ன, தன் வீட்டு விவரம் ஏதும் சொல்ல இயலாமல் தவத்துக் கொண்டிருந்தார்.
விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் அரசாங்க மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.
அந்தப் பெண்ணிடம் தெலுங்கில் பேசி விவரங்கள்,
கேட்டு எனது தோழியும் நானும் எங்களின்
செல்லிருந்து அவரின் ஊருக்கு போன் செய்து
சொன்னோம்.
பாவம் அந்தப் பெண்ணின் கணவரும், தாயும்
சென்னையில் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து
வீட்டுக் காரரிடம் சொல்லி விவரத்தை
சொல்லச்சொல்லி, இங்கு யாருடன்
தொடர்பு கொள்ள வேண்டும்,
போன்ற விவரங்களைச் சொல்லி விட்டு,
அந்தப் பெண்ணிற்குத்
தேவையான உதவிகளை செய்துவிட்டு வந்தோம்.
அந்நிய நாட்டில் அந்தப் பெண் கவலைப்
பட்டுக்கொண்டு கிடக்க, தன் தாய்மொழியில்
பேசிய எங்களைப் பார்த்து கண்ணில் கண்ணீர் ஆறு.
23 வருடத்திற்கு பிறகு தாயான பூரிப்பு, பகிர்ந்து கொள்ள
ஆள் இல்லாத தவிப்பு எல்லாமாக சேர்ந்து
எங்களுடன் மாட்லாடினார்.
ஹிந்தி, ஆங்கிலம் போன்ற நானறிந்த
பாஷைகள் எனக்கு உதவியாய் இருந்திருக்கிறது.
தமிழால் நானும் சிலருக்கு உதவி இருக்கிறேன்,
எனக்கும் தமிழ் தெரியும் என்பதால்
உதவி கிட்டியிருக்கிறது.
முதன் முதலில் என் தாய்மொழியான தெலுங்கால்
நான் ஒருபெண்ணிற்கு
உதவியது மனதில் மறக்க முடியாத
ஞாபகம் ஆகிவிட்டது.
நாம் இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும்
நம் தாய் மொழியை பிள்ளைகள் அறிந்திருக்க
வேண்டும் என்பது என் குறிக்கோள்.
அதனால் என் பிள்ளைகளும் சரளமாக
தெலுங்கும், தமிழும் பேசுவார்கள்.
என்னுடைய மற்றொரு தோழி இனி
நானும் என் பிள்ளைகளுக்குத்
தாய்மொழியைப் பேசக் கற்றுக்
கொடுக்கிறேன் என்றார்.
13 comments:
இதை ஒரு சிறந்த பதிவாகக் கருதுகிறேன்.
உங்கள் பணி பாராட்டத்தக்கது.
உங்கள் தோழிக்கு எனது அன்பு கலந்த பாராட்டுக்கள்!!!
யாருக்கும் எப்பவும் எதுவும் நடக்கலாம்!!!
தொடரட்டும் உங்கள் சேவை!!!
அன்புடன்,
ஜோதிபாரதி.
வாங்க ஜோதி பாரதி,
தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
தங்களின் பாராட்டை என் தோழிக்கும் சொல்லிவிட்டேன். தனது நன்றியைத்
தெரிவிக்கச் சொன்னாள்.
வாழ்த்துக்களும் தொடரட்டும்!
அன்புடன்,
ஜோதிபாரதி.
உதவிய உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்..
நன்றி பாசமலர்.
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி,
உதவும் போது கிடைக்கும் திருப்தி வேறொன்றிலும் வராது.
உதவும் போது கிடைக்கும் திருப்தி வேறொன்றிலும் வராது.
ரொம்ப கரெக்ட் பிரபா,
100% ரிப்பீட்ட்டேய்
நிஜமாவே கண்ல தண்ணி.
பாராட்டுகள். உங்களூக்கு இறையருள்/ஆசி எல்லாம் இருக்குபோல.
நல்ல மனம் கொண்ட நீங்களும் உங்கள் தோழிகளும் வாழ்க பல்லாண்டு.
வாங்க சாமன்யன்,நிஜமா நல்லவன்
பாராட்டுக்கு நன்றி.
முற்பகல் (நன்மை) செய்யின் பிற்பகல் (நன்மை) விளையும்.
வாழ்க வளமுடன்.
உதவிய எல்லாருக்கும் ஒரு சூப்பர் சபாஷ்!
சிவா & சஞ்சய்
நன்றி.
Post a Comment