Thursday, June 26, 2008

திருப்புமுனை- :( :)

திருப்புமுனை
சர்வேசன் அவர்களின் இந்த ஓபன் இன்விடேஷனுக்காக இந்தப் பதிவு.



(இந்தப் படமும் அங்கே சுட்டது தான்)


வாழ்க்கையையே புரட்டிப்போடும் சந்தர்ப்பம் திருப்புமுனை.
என் வாழ்விலும் அப்படி ஒன்று பூரியால் வந்தது. பூரி சாப்பிட்டு
அல்ல. இது எங்க பாட்டி பூரி சுட்ட கதை.

இதுக்கு முன்னாடி ஒரு சின்ன கொசுவத்தி:

பெத்தவங்க பேச்சை தட்டாத பொண்ணு நான்
என்பது என் படிப்பை வெச்சே சொல்லலாம். :)

5 ஆவது வரை தமிழ் மீடியம்,
10ஆவது வரை ஆங்கில வழி,
மறுபடி +1 & +2 தமிழ் மீடியம். :)

இப்படி மாத்தி மாத்தி படிச்சதுல தமிழ் கொஞ்சம்
தகறாறு ஆகிப்போச்சு. +1 படிக்கும்போது
ராணிஸ்கூலில் என் கிளாஸ் டீச்சர் ஆங்கில
இலக்கியம் படிச்சவங்க. அதனால அட்டெண்ட்ஸ்
ரிஜிஸ்டர் எல்லாம் தமிழில் எழுத மாட்டாங்க.
கிளாஸ் லீடர் என்பதால் நான் தான் எழுதணும்னு
அடம் வேறு பிடிச்சாங்க. இப்படி தமிழில் நிறைய
எழுத வேண்டிய சூழ்நிலை ஆகிப்போச்சு.

நான் தயங்கி தயங்கி எனக்கும் என் நிலையைச்
சொல்ல உடனே அந்த டம்பம் பேக் வெச்ச
டீச்சரம்மா, நான் ஆங்கில இலக்கியம் படிச்சவ்,
என்னால தமிழில் எழுத முடியாது, அப்படின்னு
தெனாவெட்டா சொல்ல,”
நான் மனசுக்குள்ள சபதம் போட்டேன்.
நானும் அதே அங்கில இலக்கியம் படிச்சு,
M.A, M.phil, ph.D செஞ்சு ஒரு காலேஜுல
லெக்சரரா உக்காருவேன்னு”!!!!!!!!!!!!!

+2 வில் நல்ல மார்க் வந்ததும் பள்ளத்தூர்
காலேஜில் ஆங்கில இலக்கியம் தான் வேணும்னு
கேட்டு எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்.
(பிரின்ஸி தான் HEAD OF THE ENGLISH DEPARTMENT.
என்னோட ஆர்வத்தைப் பாத்து என் கூட வந்திருந்த
எங்க அம்மாவை உள்ளே அழைத்து உட்கார வெச்சு
அப்ளிகேஷன் ஃபில்லப் செஞ்சு வாங்கி, குடிக்க
கூல் டிரிங்க் கொடுத்து உபசரிச்சாங்க.)

புதுக்கோட்டையிலிருந்து பள்ளத்தூர் போக 1 மணி நேரம்
ஆகும். தினமும் அலைச்சல் எதுக்குன்னு அம்மா
ஹாஸ்டலில் சேத்தாங்க.

அதுவும் ஒரு மாசம்தான் தாங்கிச்சு!!!!!!!!!!!
ஹாஸ்டலில் சீனியர்ஸ் ராகிங்கற பேர்ல கல்லால
(சின்ன கல்லுதான்) என் வலது கையில
அடிக்க அது ஏற்கனவே தேள் கொட்டின இடத்தில
பட்டு 2 மணி நேரத்துக்கு வலது கை கட்ட விரல்
துடிச்சு கிட்டு இருந்தது. வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.

அதனால அப்பா ஹாஸ்டல் வேணாம்னு சொல்லி
தினமும் போய்வர சொல்லிட்டாரு.

சரி நம்ம ஆசைப் பட்டதைப் படிச்சு லெக்சரர்
ஆகக் கஷ்டப்பட்டு படிக்கணும்னு நினைச்சுக்கினு
இருந்தப்ப தாங்க எங்க பாட்டி பூரி சுட்டாங்க!!!!!!!!

பூரி சுட்டதுனால என்ன பிரச்சனை வந்திடப்போகுதுன்னு
கேக்கறீங்களா? நம்ம நேரம் காலம் சரி இல்லைன்னா
அப்படித்தான்.

அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்குப் போறவங்க.
தம்பியும் 6 ஆம் வகுப்பு படிச்சுகிட்டு இருந்தான்.
நான் பள்ளத்தூருக்கு போய்கினு வந்துகினு படிச்சிகிட்டு
இருந்தப்போ நாங்க சாயந்திரம் வரும்போது
சாப்பிட கொடுக்கணும்னு ஆசையா
பாட்டி பூரி செஞ்சிருக்காங்க.

எப்பவும் அவங்கதான் செய்வாங்க. அன்னைக்கு
என் விதி!!!!!

பூரி பொறிச்சுகிட்டு இருக்கும்போது எண்ணைய்
புகை உள்ளே போய் நெஞ்சு அடைச்சு
மைல்ட் அட்டாக் ஆயிட்ச்சு. வீட்டில யாரும்
இல்லாத நேரம். அக்கம் பக்கம் காரங்க
அடிக்கடி வந்து பாப்பாங்க. வீட்டுக்குள்ள
புகையா வர ஓடி வந்து பாத்திருக்காங்க,

மயக்கமாகி கிடக்கற பாட்டியை
தியாகராஜன் டாக்டர் ஆஸ்பத்திரில சேர்த்துட்டு
எதுதாப்லேயே இருக்கற அப்பா ஆபிஸுல போய்
தகவல சொல்லி டீரிட்மெண்ட் கொடுத்து
பாட்டியைக் காப்பாத்திட்டாங்க.

நான் சாயந்திரம் காலேஜுலேர்ந்து வந்து
வீட்டைப் பாத்தா வீட்டுல பூட்டு தொங்குது.
(என் படிப்புக்கும் சேத்துதான் அந்த பூட்டுன்னு
அப்ப தெரியலை!!!)

பக்கது வீட்டுக்காரங்க தகவல் சொல்ல
ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். அப்பா
ரொம்ப டென்ஷனா இருந்தாங்க.
சரின்னு தம்பியை வீட்டுக்கு கூட்டிட்டு
வந்து அவனை கவனிச்சு எல்லாம்
செஞ்சு முடிக்கும்போது ராத்திரி அப்பா
வந்தாங்க. வந்து ஒரு குண்டையும்
சேர்த்து போட்டாரு.

பாட்டியை தனியே விட்டுல விடக்கூடாது.
இனி பாட்டி சமையல கட்டு பக்கமே
போகக்கூடாது. நானும், அம்மாவும்
வேலையை விட முடியாது, தம்பி
ஸ்கூல் போறதை நிப்பாட்ட முடியாது,
அதனால.... அதனாலா?ன்னு நான்
டென்ஷனாகி கேட்ட போது
அப்பா சொன்னது இதுதாங்க...

“காலேஜ் போய்த்தான் படிக்கணும்னு இல்ல.
மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி சிலபஸ்தான்
உங்க காலேஜுல உபயோகிக்கிறாங்க.
அதனால மிச்சம் 2 வருடத்தை கரஸ்பாண்டென்ஸா
வே படிச்சிடு, பாட்டியை பக்கத்துல இருந்து
பாத்துக்கன்னு”. சொல்லிட்டு போயிட்டாரு.


சரி, கரெஸ்ல படிச்சு நம்ம M.Phil, ph.D
கனவை நனவாக்கிகலாம்னு பாட்டிக்காக
காலேஜ் வாழ்க்கையை தியாகம் செஞ்சுட்டு
மிச்சம் 2 வருட படிப்பை படிச்சிகிட்டு
இருக்கும்போது..

தற்செயலா மும்பைக்கு போன எனக்கு
வேலை கிடைக்க, வேலையை பாத்துகிட்டே
B.A முடிச்சேன். உடனே கல்யாணமாகி
13 வருடம் ஓடியே போச்சு.

லெக்சரரா வேலைப் பார்க்கனும்னு கனவு
கண்டேன். அடிப்படையை பலமா
கொடுக்கறதுக்காக ஆண்டவன் என்னை
மாண்டிசோரி டீச்சர் ஆக்கினான்.
என் சேவை இங்கே தான் தேவைன்னு
முடிவு பண்ணிட்டான் அந்த ஆண்டவன்.

பூரியால் என் வாழ்வில் பெரிய திருப்புமுனை
ஆயிடுச்சு.
ஒரேடியா திருப்பி போட்டுடிச்சு போங்க.

”எது நடந்ததோ அது நம் நன்மைக்காகவே”- பகவத் கீதை.

62 comments:

சரவணகுமரன் said...

//புகை உள்ளே போய் நெஞ்சு அடைச்சு
மைல்ட் அட்டாக் ஆயிட்ச்சு

அச்சச்சோ

ஒரு பூரி உங்க வாழ்க்கையே திருப்பி போட்டது ஆச்சரியமா இருக்கு.

pudugaithendral said...

வாங்க சரவணகுமரன்,தங்களின் முதல் வருகைக்கு நன்றி.அதனாலதாங்க எனக்கு பூரின்னாலேஆகாது :)))))))

மங்களூர் சிவா said...

/
இது எங்க பாட்டி பூரி சுட்ட கதை.

/

பாட்டி வடை சுட்ட கதை தெரியும் இது என்ன புதுசா இல்ல மாத்தீட்டாங்களா??

மங்களூர் சிவா said...

/
பெத்தவங்க பேச்சை தட்டாத பொண்ணு நான்
/
ஹி ஹி
உங்க தன்னடக்கம் புல்லரிக்க வைக்குதுங்கோ!!

:)))))))))))))

pudugaithendral said...

புதுசு எல்லாம் இல்ல சிவா,

பழசுதான் :)

மங்களூர் சிவா said...

/
இப்படி மாத்தி மாத்தி படிச்சதுல தமிழ் கொஞ்சம்
தகறாறு ஆகிப்போச்சு
/

தமிழ் மட்டுமா ?
மிச்சத்தையும் சொல்லிப்புடுங்க!

:))))))

pudugaithendral said...

உங்களுக்கு புல்லரிக்கதாக்கும்.

என் நேரம் தான்.

மங்களூர் சிவா said...

/
நான் மனசுக்குள்ள சபதம் போட்டேன்.
நானும் அதே அங்கில இலக்கியம் படிச்சு,
M.A, M.phil, ph.D செஞ்சு ஒரு காலேஜுல
லெக்சரரா உக்காருவேன்னு”!!!!!!!!!!!!!
/

அது என்ன கணக்கு பொண்ணுங்கன்னாலே டீச்சர், லெக்சரர்னு சபதம் ஒரு பைலட், ரிசர்ச் அனலிஸ்ட் அது இதுன்னு எவ்ளோ இருக்கு!!??

மங்களூர் சிவா said...

/
என்னோட ஆர்வத்தைப் பாத்து என் கூட வந்திருந்த
எங்க அம்மாவை உள்ளே அழைத்து உட்கார வெச்சு
அப்ளிகேஷன் ஃபில்லப் செஞ்சு வாங்கி, குடிக்க
கூல் டிரிங்க் கொடுத்து உபசரிச்சாங்க.)
/

இப்ப பசங்களை ஸ்கூல் சேத்தப்ப ப்ரின்ஸி உங்களுக்கு டிபன் வாங்கி குடுத்தாங்களே அதெல்ல்லாம் பெருசா தெரியலை :(

மங்களூர் சிவா said...

/
புதுக்கோட்டையிலிருந்து பள்ளத்தூர் போக 1 மணி நேரம்
ஆகும். தினமும் அலைச்சல் எதுக்குன்னு அம்மா
ஹாஸ்டலில் சேத்தாங்க.
/

நிம்மதியா கொஞ்ச நாள் இருந்திருப்பாங்களே

:))))))))))









மீ தி எஸ்க்கேப்பு

மங்களூர் சிவா said...

/
ஹாஸ்டலில் சீனியர்ஸ் ராகிங்கற பேர்ல கல்லால
(சின்ன கல்லுதான்) என் வலது கையில
அடிக்க
/

ஆஷிஷ் புறப்படுடா ரிவென்ஜூ

மங்களூர் சிவா said...

/
நான் சாயந்திரம் காலேஜுலேர்ந்து வந்து
வீட்டைப் பாத்தா வீட்டுல பூட்டு தொங்குது.
(என் படிப்புக்கும் சேத்துதான் அந்த பூட்டுன்னு
அப்ப தெரியலை!!!)
/

:((((((((((

Unknown said...

ஒரு நல்ல English lecturer ஐ இந்தியா இழந்திடுச்சு :-(

மங்களூர் சிவா said...

/
அதனாலா?ன்னு நான்
டென்ஷனாகி கேட்ட போது
அப்பா சொன்னது இதுதாங்க...

“காலேஜ் போய்த்தான் படிக்கணும்னு இல்ல.
மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி சிலபஸ்தான்
உங்க காலேஜுல உபயோகிக்கிறாங்க.
அதனால மிச்சம் 2 வருடத்தை கரஸ்பாண்டென்ஸா
வே படிச்சிடு, பாட்டியை பக்கத்துல இருந்து
பாத்துக்கன்னு”. சொல்லிட்டு போயிட்டாரு.
/

நல்ல அப்பா!

மங்களூர் சிவா said...

/
தற்செயலா மும்பைக்கு போன எனக்கு
வேலை கிடைக்க, வேலையை பாத்துகிட்டே
B.A முடிச்சேன். உடனே கல்யாணமாகி
13 வருடம் ஓடியே போச்சு.
/

அடுத்த ட்விஸ்ட்டு!?!?

மங்களூர் சிவா said...

/
லெக்சரரா வேலைப் பார்க்கனும்னு கனவு
கண்டேன். அடிப்படையை பலமா
கொடுக்கறதுக்காக ஆண்டவன் என்னை
மாண்டிசோரி டீச்சர் ஆக்கினான்.
என் சேவை இங்கே தான் தேவைன்னு
முடிவு பண்ணிட்டான் அந்த ஆண்டவன்.
/

அதுதான் ஹஸ்பண்டாலஜி க்ளாஸ் எடுத்துட்டீங்களே எல்லாருக்கும்!!

மங்களூர் சிவா said...

/
”எது நடந்ததோ அது நம் நன்மைக்காகவே”- பகவத் கீதை.
/

அதே அதே!!

pudugaithendral said...

ரிசர்ச் அனலிஸ்ட் எல்லாம் சரி.

ஐ.ஏ.எஸ் அதிகாரியா இருந்தாலும் வீட்டில கரண்டி பிடிக்கத்தானும் வீட்டை நிர்வாகம் செய்யத்தான் வேணும்னு சொல்லிக்கொடுத்து
தப்பா வளர்த்துட்டாங்க அம்மம்மா.

அதனால டீச்சர், புரபஸர் வேலைதான் நமக்குன்னு நினைச்சேன். அதுவே
நடக்கலையாம். இதுல ரிசர்ச்சாம் ரிசர்ச். :)

pudugaithendral said...

பசங்களை ஸ்கூலில் சேர்த்தப்போ
டிபனா அபாண்டமால்ல இருக்கு சிவா.

pudugaithendral said...

ஹாஸ்டலில் சேத்ததுல நாந்தான்
சந்தோசப்பட்டேன்.

கடவுள் அதுக்கும் ஆப்பு வெச்சுட்டான்.

ஜெபா said...

thank you for visiting my blog...

keep touch with me.....

thank you...

ur blog is really super....

i have added ur blog to my list...

இறக்குவானை நிர்ஷன் said...

//எது நடந்ததோ அது நம் நன்மைக்காகவே//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய் :)

pudugaithendral said...

ஹஸ்பண்டாலஜி எடுத்து நெட்டுலதான் ஃப்ரபஸரா ஆனது.

யுனிவர்சிட்டி ஆஃப் மைசூர் இலங்கை பிரான்ச்லையும் 1 வருடம் ஹிந்தி, ஆங்கிலம் சொல்லிக்கொடுத்டு அந்தக் கனவு நனவானது தனிக்கதை சிவா.

புதுகை.அப்துல்லா said...

அக்கா! ஒரு ராஜா காட்டுக்குப் போனப்ப ஒரு முள்ளுச் செடில சிக்கி அவருக்கு கை நல்லா கிழிந்து விட்டதாம். அப்போ பக்கத்துல இருந்த மந்திரி ராஜாகிட்ட எல்லாம் நல்லதுக்குதான் ராஜா அப்டின்னாராம்.உடனே ராஜாவுக்கு கோவம் வந்து எனக்கு கைக் கிழிந்து வலிக்கிறது உனக்கு நல்லதா படுதான்னு கேட்டு அவரை அங்க இருந்த ஒரு கேணில தள்ளி விட்டு போய்ட்டாராம்.அப்படி போறப்ப நரபலி குடுக்க ஆள் தேடி வந்த காட்டுவாசிங்க ராஜாவ புடுச்சு தூக்கிட்டு போய் அவங்க பூசாரிகிட்ட நிறுத்தி இருக்காங்க.அவரு நரபலி குடுக்கனும்னா காயம் இல்லாத ஆளா வேணும்,இந்த ஆளுக்கு கைல காயம்னால அவன விட்ருங்கன்னு சொல்லிட்டாரு. ராஜா ஓடி வந்து கேணில கிடந்த மந்திரிய காப்பாத்தி, என்னய மன்னிச்சுருங்க வெரி சாரி..நீங்க சொன்ன மாதிரி எனக்கு காயம் பட்டதும் நல்லதுக்குதான்.இல்லாட்டி என்ன நரபலி குடுத்து இருப்பாங்கன்னாரு. அதுக்கு மந்திரி நீங்க சாரியெல்லாம் கேக்க வேணாம்.ஏன்னா நீங்க தள்ளி விடாட்டி நா உங்களோட வந்து இருப்பேன்.என்னைய கொன்னு இருப்பானுங்க..என்னைய தள்ளி விட்டதும் நல்லதுக்குதான்னாரு.

”எது நடந்ததோ அது நம் நன்மைக்காகவே”- பகவத் கீதை.


(உஸ்..அப்பாடா டீச்சருக்கே கதை சொல்லியாச்சு)

pudugaithendral said...

வாங்க ஜெபா,

தங்களின் வருகை, பின்னூட்டம் மற்றும் வாழ்த்திற்கு நன்றி.

pudugaithendral said...

வாங்க நிர்ஷான்,

வருகைக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ ரொம்ப பெரிய திருப்புமுனை...அதுவும் பூரியால.. :)

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

எல்லாம் அப்படித்தான்.

எது நடந்ததோ அது என் நல்லதுக்குத்தான்.

அப்படின்னு நினைச்சுகிட்டு போய்க்க வேண்டியதுதான்.

வாழ்க்கை என்பது ஓடம் ஆச்சே.

pudugaithendral said...

vaangga kayal vizi,

poori en kanavai posukiduchu.

ambi said...

ஒரு பூரி உங்க வாழ்க்கையே திருப்பி போட்டது ஆச்சரியமா இருக்கு.

இத தான் கயாஸ் தியரினு கமல் சொல்றாரு, ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.

@அப்துல்லா, கதை சூப்பர்.

Azeez Luthfullah said...

tiruppu munai piramadhama irunduchu...! Soodana, thickkaana, suvaiyaana theyneer arundhiya piragum nedu neram naavil adhan suvai ottikkondiruppadhaip pondru thangalin thiruppumanai yen manathiraiyil nilaithu vittathu.
vere yennathai solla..
Partheergala, ungaludaiya nadai yanakkum vandhu vittadhu.

கானா பிரபா said...

நல்லாயிருக்கு, பூரி கொடுத்த திருப்புமுனை அப்படி ஒரு படமே எடுக்கலாம் போல. விக்ரமன் தான் இயக்கம் ஆம்மா.

Unknown said...

///அட்டெண்ட்ஸ்
ரிஜிஸ்டர் எல்லாம் தமிழில் எழுத மாட்டாங்க.
கிளாஸ் லீடர் என்பதால் நான் தான் எழுதணும்னு
அடம் வேறு பிடிச்சாங்க.///
????????????

pudugaithendral said...

வாங்க தேவதையே!

இந்தியா நல்ல லெக்சரரை இழந்ததுன்னு சொல்லி ரொம்ப டச் பண்ணிட்டீங்க.

நன்னி.

மங்களூர் சிவா said...

@அப்துல்லா, கதை சூப்பர்.

மங்களூர் சிவா said...

/
ambi said...

ஒரு பூரி உங்க வாழ்க்கையே திருப்பி போட்டது ஆச்சரியமா இருக்கு.

இத தான் கயாஸ் தியரினு கமல் சொல்றாரு, ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.
/

விட்டுடுங்கப்பா பாவம் அவரு

:)))))

pudugaithendral said...

ஆச்சரியமா இருக்குல்ல.

என்ன செய்ய அதனாலேயே எனக்கு பூரின்னா கொஞ்சம் அலர்ஜி ஆயிடிச்சு
அம்பி.

pudugaithendral said...

வாங்க அஜீஸ்,

தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மங்களூர் சிவா said...

/
ஐ.ஏ.எஸ் அதிகாரியா இருந்தாலும் வீட்டில கரண்டி பிடிக்கத்தானும் வீட்டை நிர்வாகம் செய்யத்தான் வேணும்னு சொல்லிக்கொடுத்து
தப்பா வளர்த்துட்டாங்க அம்மம்மா.
/

இதுல எங்கங்க தப்பு இருக்கு !?
நல்ல அம்மா.

மங்களூர் சிவா said...

/
புதுகைத் தென்றல் said...

பசங்களை ஸ்கூலில் சேர்த்தப்போ
டிபனா அபாண்டமால்ல இருக்கு சிவா.
/

சரி சரி ஃபீல் பண்ணாதீங்க சேத்தறப்பவே நீங்க பேசியிருக்கணும்!! பசங்களை இங்க சேத்தணும்னா எனக்கு டிபன் வாங்கி குடுக்கணும் அப்படின்னு அப்ப விட்டுட்டு........

:)))))))))))

மங்களூர் சிவா said...

/

யுனிவர்சிட்டி ஆஃப் மைசூர் இலங்கை பிரான்ச்லையும் 1 வருடம் ஹிந்தி, ஆங்கிலம் சொல்லிக்கொடுத்டு அந்தக் கனவு நனவானது தனிக்கதை சிவா.
/

அதையும் ஒரு பதிவு போடுங்க சீக்கிரம்.

pudugaithendral said...

வாங்க பிரபா,

படம் எடுத்திடலாம். விக்ரமனை விட திருமுருகன் பெட்டரா இருக்கும்னு தோணுது. :)))))))))

pudugaithendral said...

வாங்க தமிழகத்தின் தலைவன்,

டீச்சர் ஏன் எழுத மாட்டங்கன்னு தானே கேக்கறீங்க.

அவங்க ஆங்கிலம் படிச்சவங்க. அதனால தமிழ் எழுத வராதாம்.

அதனால கிளாஸ் லீடர் ஆகிய நாந்தான் எழுதணும்னு சொல்லிட்டாங்க.

கவர்ன்மெண்ட் ஸ்கூல்.

pudugaithendral said...

சொல்லிக்கொடுததது அம்மம்மா (அம்மாவின் அம்மா).

தப்பு இருக்கே சிவா,

மத்த வேலைக்கெல்லாம் போனா குடும்பத்தை அக்கறையோட கவனிக்கறது ரொம்ப கஷ்டம். அந்த வேலைகளுக்கு நாம் செலவிட வேண்டிய நேரம் ரொம்பவே...

இப்ப பொண்ணுங்களைப் பாக்கணும். கல்யாணத்துக்கே அம்புட்டு கண்டீஷன்ஸ்!!!!!!

வயதான மாமியார், மாமனார் வீட்டில் சமையல் எல்லாம் பாத்துக்கொள்ள் (இது கதையல்ல நிஜம்) வேலைக்குப் போகிறேன் என்று வீட்டில் ஒன்றும் செய்வதில்லை (எல்லோரும் அல்ல. இதில் விதிவிலக்கு உண்டு)

pudugaithendral said...

நிலமை இப்படி இருக்க

வேலைக்குபோகிறேன் என்பதற்காக வீட்டில் வேலை செய்யாமல் இருக்கக்கூடாது என்று அம்மம்மா சொல்லிக்கொடுதது தப்புதானே!!!!

வீட்டை திறம்பட நிர்வாகிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததும் தப்புதானே!!!!

நிஜமா நல்லவன் said...

///Heidi ~ The Angel said...

ஒரு நல்ல English lecturer ஐ இந்தியா இழந்திடுச்சு :-(///


அதனாலென்ன ஒரு நல்ல மாண்டிசோரி ஆசிரியை கிடைச்சு இருக்காங்களே:)

வல்லிசிம்ஹன் said...

தென்றல், ஒரு பூரியினால படிப்பே வீட்டில படிச்சீங்களா. நல்ல உள்ளம்ம்மா உங்களுக்கு. பாட்டி மனசு ஆசீர்வாதம் செய்திருக்கும்.

நம்ம ஊரு வழக்கம் இப்படித்தான்.
யாரையாவது காவு கொடுக்கணும்னா அது பெண்ணாகத்தான் இருக்கும்.:)

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

பச்சை மண்ணிலே தானே சிலை செய்ய முடியும். அதனால் தான் மாண்டிசோரி ஆசிரியை ஆனேன்.

வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

வாங்க வல்லிசிம்ஹன்,

பாட்டி ஆசிர்வாதம் நிறைய இருக்கு.

அப்பா அம்மா சந்தோஷமாக இருக்க வேண்டும். தவிரவும் பெரியவங்க பெத்தவங்க பேச்சுக்கு மறுபேச்சு ஏது?

நான் வீட்டிலிருந்து படிச்சதுனால எதுலையும் குறைஞ்சு போகலையே.
ஆண்டவன் அருள் அது.

pudugaithendral said...

தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி
வல்லிசிம்ஹன்.

இவன் said...

//
பெத்தவங்க பேச்சை தட்டாத பொண்ணு நான்
//

நம்பீட்டோம் நாங்க

//நான் மனசுக்குள்ள சபதம் போட்டேன்.
நானும் அதே அங்கில இலக்கியம் படிச்சு,
M.A, M.phil, ph.D செஞ்சு ஒரு காலேஜுல
லெக்சரரா உக்காருவேன்னு”!!!!!!!!!!!!!

“காலேஜ் போய்த்தான் படிக்கணும்னு இல்ல.
மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி சிலபஸ்தான்
உங்க காலேஜுல உபயோகிக்கிறாங்க.
அதனால மிச்சம் 2 வருடத்தை கரஸ்பாண்டென்ஸா
வே படிச்சிடு, பாட்டியை பக்கத்துல இருந்து
பாத்துக்க"
//
இந்த வசனத்தாலேயே பல பேர் எதிர்காலத்தைக்காப்பத்தீட்டாரு உங்க அப்பா


//லெக்சரரா வேலைப் பார்க்கனும்னு கனவு
கண்டேன். அடிப்படையை பலமா
கொடுக்கறதுக்காக ஆண்டவன் என்னை
மாண்டிசோரி டீச்சர் ஆக்கினான்.//

விதி வலியது என்குறத நான் ஒத்துக்குறேன்.....

SurveySan said...

என்ன கொடுமைங்க இது?

இனி பூரி சாப்பிடும்போதெல்லாம், உங்க 'திருப்புமுனை' நினைவில் வரும் :)

ஹ்ம். PhD எல்லாம் என்னாச்சு?
அதுக்கு ஏதாவது திருப்புமுனை வரும்னு வெயிட்டிங்கா?

நெல்லை சிவா said...

ஒரு வகையில இந்த மீடியம் விசயம் நம்ம ரெண்டு திருப்புமுனையிலயும் பொதுவா அமைஞ்சிடுச்சு. நல்லாயிருக்கு

http://pudugaithendral.blogspot.com/2008/06/blog-post_26.html

pudugaithendral said...

வாங்க இவண்,

தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

pudugaithendral said...

வாங்க சர்வேசன் சார்,

பி.எச்.டி எல்லாம் ஏற கட்டிட்டு
மாண்டிசோரி & பீரீ ஸ்கூலில் மும்மூச்சா இறங்கிட்டேன்.

அதுல சாதிக்க எவ்வளவோ இருக்கு.

pudugaithendral said...

சர்வேசன் சார்,

காலேஜ் பசங்களுக்கு சொல்லிக்கொடுக்கறாது கம்ப சூத்திரம் இல்ல. பூக்களாக சிரிக்கும் குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வியை போதிப்பதுதான் சேலஞ்சான வேலைன்னு என்பது அனுபவத்தில் உணர்ந்து ஆண்டவன் எனக்கு நல்லதுதான் செய்திருக்கிறான் என்று மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

pudugaithendral said...

உங்க பதிவைப் படிச்சு பின்னூட்டம் போட்டுட்டேன் நெல்லை சிவா,

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

Sathiya said...

நான் என்னமோ காமெடி கதையாக்கும்னு வந்தேன். இவ்வளோ பெரிய விஷயத்த ரொம்ப சிம்பிளா எடுத்துட்டு இருக்கீங்க. பாராட்ட பட வேண்டிய விஷயம்.(Take life as it goes...)

pudugaithendral said...

வாங்க சத்தியா,

வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா!!!

கிடைததைக்கொண்டு சந்தோஷமாக வாழலாமேன்னு ஒரு பாலிசி வெச்சிருக்கேன்.

ராமலக்ஷ்மி said...

//”எது நடந்ததோ அது நம் நன்மைக்காகவே”- பகவத் கீதை.//

ஆமாங்க!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி

சுசி said...

நீங்களாவது பரவாயில்ல காலேஜ் லெக்சரர் ஆகணும்ன்னு ஆசைப்பட்டீங்க. நான் பிரதம மந்திரி ஆகணும்ன்னு ஆசைப்பட்டேங்க, முடியாததால "தானே" தலைவி ஆகிடேங்க. :)))