இந்தியாவிலேயே முதல் நகரம் என்கின்ற பெருமையை ஹைதராபாத்
பெற்றுள்ளது. எதற்கு என்று கேட்கிறீர்களா?
ஹைதராபாத்தில்தான் முதன் முதலாக கூகுள் தொலைபேசியில்
தகவல் பெறும் சேவையை துவக்கியுள்ளது.
யெல்லோ பேஜஸ் போல் இப்போது தொலைபேசி அல்லது
செல்லிடைபேசியிலிருந்து அழைத்து நமக்குத் தேவையான
தகவலை பெற்றுக்கொள்ளலாம்.
அருகில் இருக்கும் சிறந்த உணவகத்தின் நம்பர்,
பிளம்பர், எலக்டிரீஷியன் ஆகியோர்களின் நம்பர்
எல்லாம் என நமக்குத் தேவையான விவரங்களைச்
சொன்னால் நமது மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் ஆகவோ
அல்லது போனில் தகவலோ சொல்கிறார்கள்.
நாம் விரும்பினால் நமக்கு வேண்டிய எண்ணிற்கு
அவர்களே தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.
அதாவது, பெல்சன் & தாஜ் ஹோட்டலின் நம்பர்
தேவையெனச் சொன்னால் அந்த நம்பரை நமக்குத்
தந்து விட்டு நாம் விரும்பினால் நாம் செய்திருக்கும்
அழைப்பையே அந்த ஹோட்டலுக்கு தொடர்பு செய்து
தருகிறார்கள். இப்படி தரும் சேவைக்கு கூகுளிற்கு
பணம் கிடைக்கிறது. ஆனால் நமக்கு இது
இலவச சேவை.
டோல் ஃப்ரீ நம்பர்:1800 41 999 999 டயல் செய்தால்
போதும், ஹைதராபாத்தில் தேவையான
விவரங்களை பெறலாம்.
இந்தியாவிலேயே முதன் நகரமாக ஹைதராபாத்தை
தேர்ந்தெடுத்து இந்தச் சேவையை துவங்கக் காரணம்
கூகுளிற்கு இங்கே ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
வர்த்தக மையம் இருபதுதான் காரணம்.
ஜஸ்ட் டயல் என்றொரு சேவை நிறுவனமும்
இத்தகைய சேவையை செய்து வருகிறது.
அதன் எண்: 040-24444444.
18 comments:
தகவல் //பெரும்//
திருத்தவும்
ஹைதராபாத் போனாலும் போனீங்க ஒரே தெலுங்கு புராணம் தான் ;-)
வாழ்க
வருகைக்கு நன்றி
திருத்தம் எதற்கு பிரபா?
தெளிவா சொல்லுங்க.
இது தெலுங்கு புராணம் அல்ல பிரபா
தெலுங்கு தேச புராணம்.
:)))))))))))))))))))
எங்க கூகுள் சேவை மூலமா மங்களூர் சிவா மொபைல்-க்கு ஒரு ஃப்ரீ எஸ்டிடி கால் செஞ்சு பேசுங்க பாப்போம்!!
:)))
தகவலுக்கு நன்றிங்க
///மங்களூர் சிவா said...
எங்க கூகுள் சேவை மூலமா மங்களூர் சிவா மொபைல்-க்கு ஒரு ஃப்ரீ எஸ்டிடி கால் செஞ்சு பேசுங்க பாப்போம்!!
:)))///
ஹா ஹா ஹா....அப்படியே முடிஞ்சா எனக்கு ஒரு ஃப்ரீ ஐ எஸ் டி கால் பண்ணுங்க பார்ப்போம்:)
//தகவல் "பெரும்" சேவையை துவக்கியுள்ளது.// எழுத்துப் பிழை
நல்ல தகவல்
தென்றல் அக்கா!
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்!ஹைதராபாத் வந்து எங்க கலா அக்கா வீடு எங்க இருக்குன்னு கேட்டா கூகிளில் சொல்வார்களா?
:)
கானா பிரபா said...
தகவல் //பெரும்//
திருத்தவும்//
பிரபா திருத்தவும் என்று சொன்னது என்று சொன்னது" பெரும்" என்பதில் உள்ள எழுத்துப் பிழையை."பெறும்" என்று இருக்க வேண்டும். நாம் இங்கு இருப்பது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத்தானே தவிர இலக்கியம் படைக்க அல்ல. நம் தாய் மொழியில் தவறின்றி எழுதுவது நம் கடமை. அதே நேரத்தில் அவசரத்தில் அறியாமல் ஏற்படும் பிழைகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை, நமக்குப் புரிந்தால் சரி என்பது என் கருத்து.
ஹா ஹா ஹா
நல்ல ஜோக் சிவா.
வாங்க அதிஷா,
வருகைக்கு நன்றி.
நல்லா ஜோக் அடிக்கறீங்க நி.நல்லவன்.
வாங்க ஜீவ்ஸ்,
திருத்திடறேன். வருகைக்கு நன்றி.
வாங்க த.தலைவன்,
வருகைக்கு நன்றி.
கூகுளில் சொல்ற அளவுக்கு நான்
பெரிய ஆளா அப்துல்லா!!!
:)))))))))))))))
எங்க வீடு எங்க இருக்குன்னு என்ன கேட்டா சொல்லிட்டுப்போறேன்.
பிரபா எனது நண்பர் தான் அப்துல்லா,
நண்பர்கள் தான் நம்மை பெர்பக்ஷனிஷ்ட் ஆக்குவார்கள். அதனால் தான் எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டியுள்ளார்.
//கூகுளில் சொல்ற அளவுக்கு நான்
பெரிய ஆளா அப்துல்லா!!!//
எங்க அக்கா எனக்கு பெரிய ஆள்தான்
பிரபா எனது நண்பர் தான் அப்துல்லா,
//நண்பர்கள் தான் நம்மை பெர்பக்ஷனிஷ்ட் ஆக்குவார்கள். //
100% உண்மை அக்கா
Post a Comment