Tuesday, December 02, 2008
ஹோம் மேக்கர்
வீட்டு நிர்வாகம் என்பது “அஷ்டாவதானி” போன்றதொரு
வேலை. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்காவது
ஓய்விருக்கும். ஆனால் வீட்டில் வேலைக்கு ஓய்வே
கிடையாது.
Finanace Management, purchasing, Housekeeping,
cooking..........
டீச்சர், பிள்ளைவளர்ப்பு..
இப்படி பல வேலைகளை உள்ளடக்கியது.
ஒரு ஹோட்டலை திறம்பட நடத்த மேலே நான்
சொல்லியிருப்பது போல பல துறைகளுக்கு என
தனித்தனி துறை தலைவர்கள், அவர்களின்
கீழ் வேலை செய்ய என ஒரு குரூப் இப்படி
நிர்வகித்தால்தான் அங்கு வேலை சரிவர நடக்கும்.
வீட்டு நிர்வாகத்தில் ஹோம் மேக்கரின் கீழ்
வேலை செய்ய ஒரே ஒரு வேலைக்காரம்மாதான்!!!
அவரும் “டும்மா” அடித்தால் அன்றைய தினம்
வேலைக்காரம்மாவாக மாறித்தான் ஆகவேண்டும். :)
வேலைக்காரம்மா அடிக்கடி லீவு எடுப்பது போல்
ஹோம் மேக்கர் லீவு போடத்தான் முடியுமா?
அப்படியே போட்டாலும் போவது எங்கே??!!
அலுவலகங்களில் வாரத்திற்கு 5 அல்லது 6 நாள்
வேலை செய்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை.
வீட்டுவேலைக்கு என்று விடுமுறை?
போலிஸ்காரர் பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பிற்காக
பாடுபடுகிறார் என்றால், பண்டிகை காலங்களில்
ஹோம் மேக்கருக்கு “அதிகச் சுமையான”
வேலைகள் இருக்கிறதே.
டாக்டர்கள் எந்த நேரத்திலும் வேலை வரலாம்
என்பதால் தன்னை எப்போதும் “அவைலபிளாக”
வைத்திருக்கவேண்டும். ஹோம் மேக்கரு்க்கும்
எந்த நேரமும் வேலை வரலாம்.
ஆனா என்ன சொல்வாங்க? வேலைக்கு போகாம
வீட்டுல சும்மா தான இருக்க! வேலைக்கு
போற்வங்களூக்காவது
”சில சமயம்” கருணை காட்டுவாங்க.
வீட்டுல இருக்கற எல்லா பெண்களும், டீவி
பார்த்து, மதியம் தூங்கி சோம்பேறிகளாக
பொழுதை கழிப்பதாக ஒரு எண்ணம் எல்லோருக்கும்
இருக்கிறது.
மத்தவங்க கருணைக் காட்டினா என்ன?
காட்டாட்டி என்ன? நம்மை நாம கவனிச்சுக்கணும்ல?
நாம நல்லா இருந்தாத்தான் நம்ம வேலைகளை
திறம்பட செஞ்சுக்க முடியும்.
DESPARATED HOUSEWIFEவா DEPRESSION தான் வரும்.
என் தோழி எனக்கு சொல்லிக்கொடுத்த சில
விசயங்களை உங்களோடு பகிர்ந்துக்கறேன்.
அப்புறம் நீங்க DELIGHTFUL HOUSEWIFE/HOME MAKER தான்.
அந்த விசயங்கள் அடுத்த பதிவுல....
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
ம்ம்ம்ம்ம் - புரிகிறது - ஹோம் மேக்கரின் துயரம் - ஆனால் இல்லத்தரசிகள் அதனை மகிழ்வுடன் தானே ஏற்றுக் கொள்கிறார்கள் - செய்கிறார்கள். தவறில்லை
ஆனாலும் ஆண்கள் பகிர்ந்து கொள்ளலாம் ( செய்வேனா ? )
ஹோம் மேக்கர் என்பது பழைய ஸ்டைல்ப்பா. இப்பெல்லாம் ஹோம் எக்ஸிக்யூடிவ்.
பழைய பாட்டு ஒன்னு நினைவுக்கு வருது....
''all I am is just a housewife....
All I am is just a housewife
Nothing special, nothing great
What I do is kinda boring
If you'd rather, it can wait
All I am is someone's mother
All I am is someone's wife
All of which seems unimportant
All it is is
Just my life
Do the laundry, wash the dishes
Take the dog out, clean the house
Shop for groceries, look for specials
God it sounds so, Mickey Mouse
Drop the kids off, pick the shirts up
Try to lose weight, try again
Keep the troops fed, pick their things up
Lose your patience, count to ten
(2..3..4..5..6..7..8..9..10
4..5..6..7..8..9..)
All I am is just a housewife
Just a housewife, nothing great
What I do is "out of fashion"
What I feel is out of date
All I am is someone's mother
Right away I'm not too bright
What I do is unfulfulling
So the T.V. talk-shows tell me every night
I don't mean to complain at all
But they make you feel like you're two feet tall
When you're just a wife
(Just a housewife)
All they see are the pots and pans
And the Pepsi cans of a person's life
(My life)
You're a "whiz" if you go to work
But you're just a jerk if you say you won't
(Just a housewife)
People say that they think it's fine
If the choice is mine
But you know they don't
What I do, what I choose to do
May be dumb to you
But it's not to me
Is it dumb that they need me there?
Is it dumb to care?
Cause I do, you see
And I mean, Did ya ever think,
Really stop and think
What a job it was-
Doing all the things
That a housewife does?
I'm afraid it's unimpressive
(All I am is someone's mother
nothing special)
What I do is
(What I do is)
Unexciting
(Kinda dull)
Take the kids here,
Take the kids there
("Mommy..."
I don't mean to complain at all
(All I am is...
All I am is...)
Busy, busy...
(Everyday
All I am is...)
Like my mother...
(All I am is...)
Just a housewife
/* வீட்டு நிர்வாகம் என்பது “அஷ்டாவதானி” போன்றதொரு
வேலை. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்காவது
ஓய்விருக்கும். ஆனால் வீட்டில் வேலைக்கு ஓய்வே
கிடையாது.*/
/*வீட்டுவேலைக்கு என்று விடுமுறை?*/
100% உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.
ஆனால் இல்லத்தரசிகள் அதனை மகிழ்வுடன் தானே ஏற்றுக் கொள்கிறார்கள் - செய்கிறார்கள். தவறில்லை//
செய்யும் வேலையை மகிழ்வுடன் செய்தால்தானே அந்த வேலையை நிறைவுடன் செய்ய முடியும்?
வீட்டு வேலை பெண்களுக்கு மட்டும் என்பது எழுதப்படாத சட்டமாயிடுச்சே சீனா சார்.
அதைப் பத்தி எல்லாம் பேசி ஆகப்போவது ஏதும் இல்லை.
:))))
ஆனாலும் ஆண்கள் பகிர்ந்து கொள்ளலாம் ( செய்வேனா ? )//
எனக்குத் தெரிந்த வரை சென்ற தலைமுறை ஆண்கள் வீட்டுவேலை செய்தால் அது மகா பாவம்.
இந்தத் தலைமுறையில் கொஞ்சமே கொஞ்சம் மாறுதல்கள் அங்கங்கே பார்த்திருக்கிறேன்.
இப்பெல்லாம் ஹோம் எக்ஸிக்யூடிவ்.//
ஹா ஹா
டீச்சர். ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு ஒவ்வொரு வருடமும் பதிவி உயர்வு கொடுப்பாங்க.
சம்பள உயர்வு மாதிரி சின்னசின்ன மாறுதல்கள் இருக்கும்.
ஆனா அவங்க செய்யக்கூடிய வேலை அதேதான் அல்லது இன்னும் கொஞ்சம் கூடுதல் வேலையாக இருக்கும்.
ஹோம்மேக்கர், ஹோம் எக்ஸிக்யூடிவோ வேலை மாறப்போவது இல்லையே!!
:))))))
ம்ம் நீங்க சொல்லியிருக்கற பாட்டு நல்லா இருக்கு. நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.
வாங்க அமுதா,
(வீட்டுல நீ என்ன செஞ்சு கிழிக்கற?
அப்படின்னு கேக்கற ரங்கமணிகள்தான் ஜாஸ்தி)
இது உன் வேலை அப்படின்னு சொல்லி சொல்லியே அதிக வேலை வாங்கறாங்க.
நாம இம்புட்டு வேலை செய்யறோமா, திறமை இருந்தாத்தானே இதெல்லாம் செய்யறோம் அப்படின்னு யோசிக்காமலே பல பெண்கள் இருக்காங்க.
:) அடுத்த தொடரா?
பதிவில் இடம்பெற்றிருந்த படங்கள் அழகு.!
இன்னும் முடிவு செய்யவில்லை முத்துலெட்சுமி.
:))
வருகைக்கு மிக்க நன்றி தாமிரா.
அக்கா நீங்க கூப்பிட்டதும் வந்துட்டேன் எங்க ஹஸ்பண்டாலஜி?? ;)))))
நீங்க சொல்றது உண்மை தான் அக்கா.. மழைவந்தா நாங்கல்லாம் ஹால்ல உட்கார்ந்துகிட்டு ஜில்லுன்னு மழைக்கு சூடா பஜ்ஜி சாப்பிடுவோம் அதுக்காக கஷ்டப்பட்ட அம்மாவ மறந்துடுவோம்... ஹோம் மேக்கர்ங்கறது சாதாரணமான வேலை இல்ல... சதாரணமான வேலை.. :((
http://pudugaithendral.blogspot.com/2008/11/msc-husbandology-2.html
http://pudugaithendral.blogspot.com/2008/11/m-sc-husbandology-3.html
intha linkula parunga srimathi.
cheena (சீனா) said... //ஹோம் மேக்கரின் துயரம் - ஆனால் இல்லத்தரசிகள் அதனை மகிழ்வுடன் தானே ஏற்றுக் கொள்கிறார்கள் //
hahaha....ஏற்றுக் கொள்கிறார்களா???
வேறு வழி???
அன்புடன் அருணா
எச்சூஸ் மி மே ஐ கம் இன்சைடு???
/
வீட்டு நிர்வாகத்தில் ஹோம் மேக்கரின் கீழ்
வேலை செய்ய ஒரே ஒரு வேலைக்காரம்மாதான்!!!
/
வீட்டுல இருக்கறது மொத்தம் ரெண்டு பேரோ இல்ல மூனு பேரோ இதுக்கு எத்தனை வேலைக்காரம்மா வேணும்!?!?
:)))))))))))
(இன்னொன்னு இருந்தா வசதிதான்னு நான் சொல்லி அடி வாங்க ரெடி இல்லை தங்கமணி கவனத்திற்கு)
அந்த காலத்துலமாதிரி ஆட்டுக்கல் அம்மிக்கல்லுன்னு வெச்சிகிட்டா கஸ்டப்படறாங்க சுச்சு போட்டா எல்லாம் ஆகுது அதுக்கு என்னா பில்டப்பு! பில்டப்பு!!
/
வேலைக்காரம்மா அடிக்கடி லீவு எடுப்பது போல்
ஹோம் மேக்கர் லீவு போடத்தான் முடியுமா?
அப்படியே போட்டாலும் போவது எங்கே??!!
/
ஹோட்டெல்க்குதான்!
இதுதான் அடிக்கடி எல்லார் வீட்டுலயும் நடக்குதே!
/
ஆனா என்ன சொல்வாங்க? வேலைக்கு போகாம
வீட்டுல சும்மா தான இருக்க! வேலைக்கு
போற்வங்களூக்காவது
”சில சமயம்” கருணை காட்டுவாங்க.
/
காலைல தோசை வார்க்க 30 நிமிசம் அப்பவே குக்கர் வைக்க எல்லாத்துக்கும் சேர்த்து 1 மணி நேரம் மீதி 23 மணி நேரம் என்ன செய்யறாங்க இந்த ஹோம் எக்சிக்கூட்டிவ்ஸ் ஒரு பேப்பர் எடுத்து எழுதி பார்த்துக்கொள்ளவும்
:)))))))))
/
வீட்டுல இருக்கற எல்லா பெண்களும், டீவி
பார்த்து, மதியம் தூங்கி சோம்பேறிகளாக
பொழுதை கழிப்பதாக ஒரு எண்ணம் எல்லோருக்கும்
இருக்கிறது.
/
அடடா உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சா????
:))))))))))))
/
வீட்டுல இருக்கற எல்லா பெண்களும், டீவி
பார்த்து, மதியம் தூங்கி சோம்பேறிகளாக
பொழுதை கழிப்பதாக ஒரு எண்ணம் எல்லோருக்கும்
இருக்கிறது.
/
இதுகூட இப்ப இன்னொன்னு சேத்துக்கங்க இன்டெர்நெட்ல டைம் வேஸ்ட் பண்றது!!
மேலே என் பெயரில் உள்ள பின்னூட்டங்கள் எல்லாம் கற்பனையே
(சோத்து பிரச்சனைங்க ஐயா)
துளசி மேடம் நீங்க சொன்னது பிடிச்சிருக்கு. தென்றல் தலைப்பை மாத்திடுங்க அடுத்த பாகத்துக்கு:
“ஹோம் எக்ஸிக்யூடிவ்”:).
hahaha....ஏற்றுக் கொள்கிறார்களா???
//
வேறு வழி???//
:) அதுதானே உண்மை
எச்சூஸ் மி மே ஐ கம் இன்சைடு???//
என்ன கேள்வி இது?
:)))))))))
(இன்னொன்னு இருந்தா வசதிதான்னு நான் சொல்லி அடி வாங்க ரெடி இல்லை தங்கமணி கவனத்திற்கு)//
உங்க தங்கமணிக்கு தாக்கல் சொல்லியாச்சு.
:)))))))))))))
அந்த காலத்துலமாதிரி ஆட்டுக்கல் அம்மிக்கல்லுன்னு வெச்சிகிட்டா கஸ்டப்படறாங்க//
அந்த காலத்துல கைஒடிய எழுதினா மாதிரியா இப்ப ஆபிஸ்ல எழுதிக்கிட்டு இருக்கீங்க? எழுதினத கூட்ட கால்குலேட்டர்ல கூட தட்ட வேணாம்.
நீங்களும் ஆபிஸ்ல பொட்டித்தானே தட்டறீங்க. அப்புறம் பெரிசா வெட்டி முறிச்சா மாதிரி நீங்க கொடுக்கறதை படா...... பில்டப்புன்னு சொல்லவா?
1 மணி நேரம் மீதி 23 மணி நேரம் என்ன செய்யறாங்க //
அருத பழசான இந்தக் கேள்வியையே கேட்டுகிட்டு இருக்காதீங்க.
ரங்கமணிகளே டயலாக்க மாத்துங்கப்பா!!
இன்டெர்நெட்ல டைம் வேஸ்ட் பண்றது!!//
ஆஹா தங்கமணி நெட்ல உக்காந்தா அது டைம்வேஸ்ட், அதுவே ரங்கமணி நெட்லா உக்காந்து உலக சமாதானமா செய்யறாங்க?
(சோத்து பிரச்சனைங்க ஐயா)//
இப்படி சொல்லிட்டு பில்டப்பு கொடுக்கறது நீங்கதான் சாமி.
வாங்க ராமலக்ஷ்மி,
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி,
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.
//
புதுகைத் தென்றல் said...
(இன்னொன்னு இருந்தா வசதிதான்னு நான் சொல்லி அடி வாங்க ரெடி இல்லை தங்கமணி கவனத்திற்கு)//
உங்க தங்கமணிக்கு தாக்கல் சொல்லியாச்சு.
:)))))))))))))
//
ஆப்பு வெச்சாச்சா :(((((
சந்தோசமா சந்தோசமா :((((((
//காலைல தோசை வார்க்க 30 நிமிசம்.....//
அந்தத் தோசை மாவு, அதுக்குண்டான சாமக்கிரியைகளான சட்னி சாம்பார் இத்தியாதிகள் உட்பட வானத்துலே இருந்து அப்படியே குதிச்சு நம்ம அடுக்களையில் வந்துருது. இல்லே சிவா?
மங்களூரில் மட்டும் இப்படித்தான் நடக்குது:-))))
ஏங்க சிவா,
வீட்டுலே ஆள் கணக்கா முக்கியம்?
சின்னக் கட்டில் என்பதால் நாலு கால் தேவை இல்லையா?
கட்டில் சிறிதானாலும் கால் நாலு வேணுமுல்லே?
//ஹோட்டெல்க்குதான்!
இதுதான் அடிக்கடி எல்லார் வீட்டுலயும் நடக்குதே!//
but நம்ம வீட்டில கிடையாது :(((
//காலைல தோசை வார்க்க 30 நிமிசம் அப்பவே குக்கர் வைக்க எல்லாத்துக்கும் சேர்த்து 1 மணி நேரம் மீதி 23 மணி நேரம் என்ன செய்யறாங்க//
தோசை கருகிப் போகும், பரவயில்லையா????
//காலைல தோசை வார்க்க 30 நிமிசம் அப்பவே குக்கர் வைக்க எல்லாத்துக்கும் சேர்த்து 1 மணி நேரம் மீதி 23 மணி நேரம் என்ன செய்யறாங்க//
பாத்திரம் தேய்க்கிறது, துணி தோய்க்கிறது etc etc எல்லாம்?????
//மேலே என் பெயரில் உள்ள பின்னூட்டங்கள் எல்லாம் கற்பனையே //
anyway,அடுத்த செவ்வாய் நான் செய்யுற எல்லா வேலையும் செய்யுங்க....23 மணி நேரம் உங்களுக்கு கிடைக்குதான்னு பாக்கலாம்...
ஆஹா டீச்சர் சூப்பர்.
தேவதையின் கேள்விகளுக்கு பதில் என்ன சிவா?
ஹை ஜாலி....
பதிவில் தங்கமணிகளின் துயர ரணங்களைப் பற்றியே குறிப்பிட்டு விட்டு அதற்கு தீர்வு சொல்லாமல் விட்டுட்டீங்களே தென்றல்?
மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும்.
என் ஃப்ரெண்டு வீட்டுல வீட்டு வேலைகளை இருவருமே பகிர்ந்து கொள்வார்கள்.
தீர்வு சொல்லாமல் விட்டுட்டீங்களே தென்றல்?//
அடுத்த பதிவு போட்டாச்சு புகழன்
:))
மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும்//
100% உண்மை
என் ஃப்ரெண்டு வீட்டுல வீட்டு வேலைகளை இருவருமே பகிர்ந்து கொள்வார்கள்.//
ஊரில் இருக்கும் நாட்களில் அயித்தானும் உதவியாய் இருப்பாங்க. :)
என்ன அவருக்கு டூர் ரொம்பவே ஜாஸ்தி. :(
/Heidi said...
//மேலே என் பெயரில் உள்ள பின்னூட்டங்கள் எல்லாம் கற்பனையே //
anyway,அடுத்த செவ்வாய் நான் செய்யுற எல்லா வேலையும் செய்யுங்க....23 மணி நேரம் உங்களுக்கு கிடைக்குதான்னு பாக்கலாம்.../
ஆஹா...சூப்பர்..!
//
புதுகைத் தென்றல் said...
ஊரில் இருக்கும் நாட்களில் அயித்தானும் உதவியாய் இருப்பாங்க. :)
என்ன அவருக்கு டூர் ரொம்பவே ஜாஸ்தி. :(
//
ஹிஹி சார் டூர் போவது அக்காகிட்ட தப்பிக்கிறதுக்காக அப்படின்னு யாரும் தப்பா நினைக்கலைதானே?
நானும் நினைக்கலை :))))))))
@வாழ்க்கை
யோவ் ஆயில்யா இது என்னய்யா புது பேர் புது ப்ரொபைல் போட்டோ நான் என் தங்கமணிதான் மாறுவேசத்துல வேவு பாக்கிறாங்களோன்னு பயந்துட்டேன் :((((((((
அய்யா/அம்மா வாழ்க்கை, இன்னொரு வாட்டி என் profile photo-வ copy அடிச்சிடாதீங்க.....
// புதுகைத் தென்றல் said...
தேவதையின் கேள்விகளுக்கு பதில் என்ன சிவா?
ஹை ஜாலி....//
வர்ற செவ்வாய் கிழமை எல்லா வேலையும் செஞ்சு 23 மணி நேரம் மிச்சம் இருக்கும்னு proof பண்றேன்னு சொல்லி இருக்கார் :-))))
Post a Comment