Friday, December 05, 2008

நம்மை உணர்ந்தால், நாம் நம்மை உணர்ந்தால் என்றுமே ஆனந்தமே!இது நடந்து 7 வருஷம் ஆச்சு. இலங்கையில் இருந்த
பொழுது


நாங்க ஒரு 6 பேர் தோழிகள்.( என்னைப் போலவே
இங்கேயிருந்து அங்கே வந்திருந்தவங்க.
அவங்கள்ளாம் என்னைய விட
2 வருசம் பெரியவங்க)
நாளை என் வீட்டிற்கு 11 மணிக்கு வந்துவிடு! வரும்பொழுது
கலர் பென்சில், ஸ்கெட்ச் எல்லாம் கொண்டுவா!??!!” அப்படின்னு
சொல்லிட்டு என் தோழி போனை வெச்சிட்டாங்க.

”பசங்க வர்றதுக்குள்ள வந்திடலாம்லன்னு,” கேட்டு கன்பார்ம்
செஞ்சுட்டுதான் போனேன்.

எல்லாரும் உட்கார தோட்டத்தில சேர்லாம் போட்டு அழகா
செட் செஞ்சிருந்தாங்க. கலர் பென்சிலை எடுத்து ரெடியா
எடுத்து வெச்சுகிட்டு எல்லோரும் காத்திருந்தோம்.

ஆளுக்கொரு பேப்பரை கொடுத்து,”உங்க பெயரைக் குறிக்கும்
விதத்தில் படங்கள் வரைங்க பார்க்கலாம்னு!”
தானும் வரைய ஆரம்பிச்சார்.

கொடுத்த 10 நிமிசத்துல என் படங்கள் ரெடி. :)

என்னப்பா! சீக்கரம் முடிச்சிட்ட, எனக்கு பென்சில்
சீவித்தாயேன் அப்படி, இப்படின்னு பேசிகிட்டே
சின்ன வயசுக்கு போயிட்டோம். ஒரு வழியா
20 நிமிசத்துல எல்லோரும் முடிச்சதும்

அவங்கங்க வரைஞ்ச படத்தை எல்லோருக்கும்
காட்டணும். பெயர் தெரியும் என்பதால்
படம் அவங்க பெயருக்கு ஏத்தா மாதிரி வந்திருக்கான்னு
அடுத்தவங்க சொல்லணும்னு விளையாட்டு.

ரொம்ப நல்லா இருந்துச்சு.” எப்பவும் பிள்ளைகளின்
பென்சில்களை எடுத்து அடுக்கும்போது மட்டுமே
பென்சிலைத் தொடரோம். ஒரு மாறுதலுக்கு
கரண்டி பிடிக்கும் கையில் சித்திரம் தீட்டச் சொன்னேன்”
என்றார்.

வீட்டுக்கு வரும் வழியில் எல்லாம் ஒரே யோசனை.
அம்ருதா பி்றந்த பிறகு நான் பென்சிலை பிடித்து
வரையவே இல்லை! இப்படி எனக்குள் எத்தனை
மாற்றம்?!! என யோசித்துக்கொண்டே அன்று
முழுதும் இருந்தேன்.

இரவு 8 மணி வாக்கில் அதே தோழி போன்
செய்தார். ”என்னப்பா! எப்படி இருந்தது
வொர்க் ஷாப் என்று கேட்டார்?”

என்னது வொர்க்‌ஷாப்பா? என்றேன் நான்.

ஆமாம்! எனது சைக்காலஜி படித்த
தோழியிடம் குடும்பம், குழந்தைகள் என்று
மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நம்மை மொத்தமாக தொலைத்துவிட்டு
வாழ்க்கை வெறுமையா இருக்குன்னு
புலம்பகிட்டு இருந்தேன். உன் தோழிகளை
கூப்பிட்டு இந்த மாதிரி செய். அவங்க
மனசுல புதைஞ்சு போயிருக்கற எண்னங்கள்
வெளியே வந்து, தன்னை உணர்ந்து
வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்குவாங்க”
அப்படின்னு சொன்னாங்க. உனக்கு எப்படி
இருக்குன்னு? கேட்டாங்க.


பசங்கள கூட்டிகிட்டு வரும்போது நல்ல
ட்ராயிங்புக், பென்சில் எல்லாம் வாங்கிகிட்டு
வந்துட்டேன். கிட்டத்தட்ட 7 வருஷமா
மறந்தே போயிருந்த ட்ராயிங்கை ஆரம்பிக்கப்போறேன்னு
சொன்னேன்.

சபாஷ்! அடுத்த ஃப்ரண்ட்சுக்கு போனப் போட்டு
நிலமையை கேக்கணும்னு வெச்சிட்டாங்க.
ஓடும் ட்ரெயினில் க்ரோஷா பின்னுவோமே
அதையும் செய்யலாம்னு வாங்கிகிட்டு வந்தேன்.புதுசா புத்தகம் வந்திடக்கூடாதே! அதைப் படிச்சு
முடிச்சு கீழே வெச்சாதான் ஆச்சா! என்று திட்டும்
அம்மாவுக்கு”சுடச்சுட படிக்கணும் அம்மான்னு” பதில்
சொல்லிகிட்டே சாப்பிடும்போது கூட புத்தகம் படித்த
நான் தொலைந்து போயிருந்தது உணர்ந்தேன்.

தினமும் எப்படியாவது புத்தகம் படிக்கவேண்டும்
என்று முடிவு செய்து அதை நடை முறையும்
படுத்தினேன். (அதுக்காக பிள்ளைகள் எழுமுன்
சீக்கரமே எழுந்து படிப்பேன், அல்லது
தூங்கும் முன், என டைம் வெச்சுகிட்டேன்.
இப்ப ஹிந்தி, தமிழ், ஆங்கில இதழ்கள்
எம்புட்டு படிக்கிறேன் தெரியுமா!)
பாட்டுக்கேக்கறன்னு அப்பா திட்டினா டேக் இட் ஈஸி பாலிசின்னு
பாட்டு, பாட்டுன்னு பாட்டு கேப்போமே, அதுவும்
இருந்தா நல்லா இருக்குமே! அப்படின்னு
அயித்தான் கிட்ட சொல்ல
கிச்சனிலும் ரேடியோ வெச்சு கொடுத்தாங்க.
ஆனந்தமா பாட்டுத்தான்.

(பாட்டு எங்க ரெண்டு பேருக்குமே உயிர் :) )15 நாளுக்கு ஒரு முறை பிள்ளைகள் மற்றும்
நாங்கள்(ஒன்லி லேடீஸ் :) ) மட்டும் அவுட்டிங்
போவோம்.

ஸ்லோகம் தெரிந்தவர்கள் பிள்ளைகளுக்குச்
சொல்லிக்கொடுக்க கூடுவோம்.

இப்படி எங்களுக்குள் இருந்த திறமைகள்
வெளிப் படுத்திகிட்டோம்.

இந்தியாவிலிருந்து மாஸ்டரை
வரவழைச்சு ஒரு ப்ரெண்ட் ரெய்கி
கத்துக்க ஏற்பாடு செஞ்சாங்க. இன்னைகு
அந்த ரெய்கியால எனக்கும் அனைவருக்கும்
ரொம்பவே உதவியாய் இருக்கு.


மத்த ப்ரெண்ட்ஸ்ங்கள்லாம் என்ன செஞ்சாங்கன்னு

ஒருத்தங்க 15 வருஷத்துக்கப்புறம் காலில் சலங்கையை
கட்டிகிட்டு நடனம் ஆடத் துவங்கிட்டாங்க!

வீட்டுல என்ன பாட்டு வேண்டிகிடக்கு!!” கேட்ட
கணவருக்காக தன் குரலை மறந்து இருந்தவர்
பாட ஆரம்பித்த பொழுது அவரின் பிள்ளைகள்
தந்த கரவொலி!!!!!

பாட்டரி பெயிண்டிங்க் செஞ்சு கொண்டுவந்து
எல்லோருக்கும் கொடுத்து அசத்தினாங்க
ஒரு ப்ரெண்ட்!

சல்லுன்னு காரோட்டின சந்தோஷத்தைப்
பகிர்ந்துகிட்டாங்க இன்னொருத்தங்க.

இப்படி எங்க எல்லோர்கிட்டயும் நிறைய
மாறுதல்கள். :)


நம்மை நாம் தொலைத்ததால்தான் வாழ்க்கையில்
வெறுமை வருதுன்னு புரிய வெச்சத் தோழிக்கு
இதன் மூலம் நன்றி சொல்லிக்கறேன்.

இப்ப என் கடைமைகளை முடிஞ்சதும்,
எனக்கே எனக்காக நேரம் ஒதுக்கிட்டு
என்னை நான் நல்லா கவனிச்சுக்கறேன்.
அதனால நான் சந்தோஷமா இருக்கறேன்.

நம்ம சந்தோஷமா இருந்தா நம்மளை சுத்தி
இருக்கறவங்களையும் சந்தோஷமா வெச்சுக்க
முடியும்ல!!

தொலைஞ்சு போயிருக்கும் உங்களைத்
தேடுங்க!

கல்யாணம் ஆயிடிச்சு, வயசாயிடுச்ச்
அப்படிங்கற நினைப்பெல்லாம் எடுத்து
ஓரம் கட்டி வெச்சிடுங்க!


உங்களுக்கே உங்களுக்கு நேரம்
ஒதுக்கி உங்களை நல்லா பாத்துக்கோங்க.

MUMMY ALSO NEEDS TIME OUT!!!! :)

பிள்ளைகள் பள்ளி/கல்லூரிக்கு போன பிறகு,
கணவர் அலுவலகம் போன பின்பு உங்களுக்கென
ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

தோழியை சந்திப்பது, கடைக்குச் செல்வது
(விண்டோ ஷாப்பிங்), அதிக நேரம்
இருந்தால் தோழியுடன் ஒரு சினிமா!
மதியம் லன்ச் தோழிகளுடன்....
என நமக்காக நேரம் வெச்சுக்கலாம்.


குடும்பத்துக்காக எம்புட்டு செய்யறோம்!
பிள்ளைகள் பள்ளிக்கும், கணவர் அலுவலகத்தும்
போன பிறகு எல்லா வேலைகளும் முடித்து
விட்டு பார்லர் போய் பெடிக்யூர் செஞ்சுக்கோங்க.

கால்கள் பரமாரிப்பது மிக முக்கியம். அதைப்
பத்தின பதிவு கூட இங்க இருக்கு.
ஆனந்தமா ஒரு ஆயில் மசாஜ் செஞ்சுக்கலாம்.

நம்மளை நாமே கவனிச்சுக்காட்டி போனா
வேற யாரு கவனிக்கப்போறாங்க??!!!

உங்களைத் தேடி் கண்டுபிடிச்சிட்டீங்களா?
தனியா பதிவு போட்டாலும், சரி
மெயில் எழுதினாலும் சரி.

ஆவலுடன் காத்திருக்கிறேன்.

23 comments:

புகழன் said...

சூப்பர் பதிவு

நேரம் இல்லை என்று சொல்வதை விட நேரத்தை முறைப்படுத்தி வேலைகளைச் செய்தால் இதைவிட எவ்வளவோ அதிகம் சாதிக்கலாம்.

அதிரை ஜமால் said...

நாந்தான் 1st.

பெருசா இருக்கு

படிச்சிட்டு வர்ரேன்.

புதுகைத் தென்றல் said...

நேரம் இல்லை என்று சொல்வதை விட நேரத்தை முறைப்படுத்தி வேலைகளைச் செய்தால் இதைவிட எவ்வளவோ அதிகம் சாதிக்கலாம்.//

ஆமாம் புகழன்.

புதுகைத் தென்றல் said...

ஜ்ஸ்ட் மிஸ் ஜமால்,

புகழன் தான் முதலில் வந்தது.

ஆயில்யன் said...

அருமையான விசயங்கள் சைக்காலஜி பார்வையோட


நல்லா இருக்கு! சில விசயங்கள் எனக்கும் கூட டிரை பண்ணி பாக்கலாம்போல திங்க வைச்சிருக்கு :))

அமுதா said...

நல்ல பதிவு.

புதுகைத் தென்றல் said...

சில விசயங்கள் எனக்கும் கூட டிரை பண்ணி பாக்கலாம்போல திங்க வைச்சிருக்கு :))//

ஆஹா சூப்பர் பாஸ்

புதுகைத் தென்றல் said...

பாராட்டுக்கு மிக்க நன்றி அமுதா

ராமலக்ஷ்மி said...

உங்களிடம் கற்றுக் கொண்டவற்றை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இப்போது கற்பது தொடர்கிறது. செயல் படுத்தி விட்டு மெயிலுகிறேன்:)!

சுரேகா.. said...

ஒரு விஷயத்தை எடுத்தால், அதை மிகவும் அழகாகச்சொல்வது உங்களுக்கு கைவந்த கலைங்க!

அதையும் லிஸ்ட்ல சேத்துக்குங்க!

வாழ்த்துக்கள் !

புதுகைத் தென்றல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

நானும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.

என்னை எனக்கு உணர்த்திய தோழி கிடைத்தது போல் இந்தப் பதிவும் யாருக்காவது உதவியாய் இருந்தால் சந்தோஷம்.

புதுகைத் தென்றல் said...

செயல் படுத்தி விட்டு மெயிலுகிறேன்:)!//

ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள் !//

ஆஹா வாங்கத் தல. என்ன ரொம்ப நாளாக் காணோம்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி.

புதுகை.அப்துல்லா said...

அவங்கள்ளாம் என்னைய விட
2 வருசம் பெரியவங்க
//

அப்ப அவங்களுக்கெல்லாம் 60 வயசாக்கா???
எப்படி கரெட்டா கண்டு புடுச்சுட்டேன் :)))

புதுகை.அப்துல்லா said...

சுரேகா.. said...
ஒரு விஷயத்தை எடுத்தால், அதை மிகவும் அழகாகச்சொல்வது உங்களுக்கு கைவந்த கலைங்க!

//

அந்த விஷயத்துல எங்க அக்கா அக்காதான் :))

புதுகைத் தென்றல் said...

எப்படி கரெட்டா கண்டு புடுச்சுட்டேன் :)))//

என் தம்பி ஒரு அறிவுக் களஞ்சியம் என்பதில் எனக்கும் பெருமை தான்.

:)))

தாமிரா said...

முந்தைய‌ ப‌திவில் த‌னியாக‌ மாட்டிக்கொண்ட‌ ம‌ங்க‌ளூர் சிவாவை ர‌வுண்டு க‌ட்டிய‌டித்த‌ தாய்மார்க‌ளை வ‌ன்மையாக க‌ண்டிக்கிறேன். நான் இல்லாத‌தால் இதே போல‌ ஒரு ச‌ம்ப‌வ‌ம் இன்னொரு ப‌திவிலும் ந‌ட‌ந்த‌தாக‌ அறிகிறேன். அங்கிள் வெண்பூ தலைமையில் பெரும்ப‌டையோடு திர‌ள்வோம் என‌ எச்ச‌ரிக்கிறேன்..

புதுகைத் தென்றல் said...

வாங்க ராசா வாங்க,

தனியா மாட்டிகிட்டதால சிவா ரவுண்டடிக்கப்படல!!

அவங்க வீட்டு அம்மணி பக்கத்துல இருக்கும்போதே தெகிரியமா கமெண்ட் (அவங்களுக்கு எதிரா அதுவும் பொய் பொய்யா) போட்டதுனால மாட்டிகிட்டாரு.

:)))))))))))

புதுகைத் தென்றல் said...

அங்கிள் வெண்பூ தலைமையில் பெரும்ப‌டையோடு திர‌ள்வோம் என‌ எச்ச‌ரிக்கிறேன்..//

தெகிரியம் இருந்தா எல்லோரும் படை திரண்டு திங்கள்கிழமை ஹஸ்பண்டாலஜிக்கு வந்து பாருங்களேன்!!

:))))))))))

நானானி said...

நிறைய விஷயங்களில் என்னைத் தொலைத்த நான் இப்போது என்னை தூசு தட்டி எடுத்துக்கொண்டிருக்கிறேன்.ட்ராயிங் மறந்து போச்சு, வீணை வாசிப்பு நினைவேயில்லை, ட்ரைவிங் என்னை விட்டு நழுவி விட்டது. புகைப் படம் எடுத்தலும் ப்ளாக்கில் எழுதுவதுவதிலுமே நான் நான் நானாக இருக்கிறேன். என்னைப் போல் பலரை விழிக்க வைத்திருக்கும் நல்ல பத்ஹிவு...புதுகைத் தென்றல்!!!

மங்களூர் சிவா said...

/
நம்மை நாம் தொலைத்ததால்தான் வாழ்க்கையில்
வெறுமை வருது
/

மிக அருமையான வரிகள். நன்றி.
உங்களுக்கு இதை சொன்ன உங்கள் தோழிக்கும் நன்றி.

புதுகைத் தென்றல் said...

என்னைப் போல் பலரை விழிக்க வைத்திருக்கும் நல்ல பத்ஹிவு...புதுகைத் தென்றல்!!!//

தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா,

என்னை மீட்டுக்கொடுத்த என் தோழிக்கு நான் அனுதினமும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.