அழகாக இருக்க யாருக்குத்தான் விருப்பமில்லை.
அழகுக்கு அழகு சேர்ப்பதில் ஆடைக்கும் சரிபங்கு இருக்கிறது.
ஆனால் சிலர் ட்ரஸ்ஸிங் சென்ஸ் இல்லாமல்
ஆடை அணிவதனால் அவரின் அழகு மட்டுமல்ல
எதிராளிக்கு தன்னைப் பற்றின தவறான கருத்தை
தருகிறார்.
அடுத்தவன் எப்படி நினைச்சா எனக்கென்ன???
நான் என் இஷ்டப்படிதான் இருப்பேன் என்பவர்கள்
இந்தப் பதிவை தவிர்த்துவிடலாம். சூழ்நிலைக்கேற்ப
தகுந்த உடையணிபவர்கள், விருப்பமிருப்பவர்கள்
மேற்கொண்டு படிக்கவும்..
ஆண்களுக்கான உடையலங்காரம் பற்றி கொஞ்சம்
பார்ப்போம்.
வேலைக்கு செல்லும் பொழுது மஞ்சள், பச்சை, சிகப்பு
போன்ற ஜிங்குச்சா கலர்களை தவிர்த்து விடுவது நலம்.
காட்டன், டெரிகாட்டன், மிக்ஸ்டு வகைகளில்
உங்களுக்கு பிடித்தமானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
பேண்டுகள் கீழே இருக்கும் இரண்டுவகையில் தைக்கலாம்.
plain:
Pleated:
குண்டாக இருப்பவர்கள் கட்டாம் போட்டவகை, குறுக்கே
கோடுகள் வகை சட்டைகளை தவிர்ப்பது நலம். அது மேலும்
குண்டாக காட்டும். மாறாக நீளக்கோடுவகை கொஞ்சம்
ஒல்லியாக காட்டும்.
உயரமாக இருப்பவர்கள் அதிக நீளக்கோடு வகைகளை
தவிர்க்கவும்.
பகல் நேரங்களில் லைட் கலரும், இரவு நேரங்களில்
டார்க் கலர் உடையும் அணிந்தால் நீங்கள் தான்
செண்டர் ஆஃப் அட்ராக்ஷன்.
கோட் அணியும் பழக்கமுள்ளவர்கள் அதற்குத் தகுந்த
கோட் பின், டை அணிந்தால் கம்பீரமாக இருக்கும்.
கோட்(ப்ளேஜர்) வகைகளில் குட இரண்டு பட்டன்கள்,
3 பட்டன்கள் கொண்டவை என இருக்கிறது.
நீலம், காக்கி, கறுப்பு இந்த 3 நிற பேண்டுகள் உங்கள்
அலமாரியில் நிச்சயம் இருக்க வேண்டும்.
HIGHT PROFILE ல் இருப்பவர்கள் குறைந்த பட்சம்
20 வகை பேண்ட், ஷர்ட்கள், 6 வகை கோட் வைத்திருப்பது
அவசியம். இதனால் அதே உடையை நீங்கள் மறுமுறை
அணிந்து வருவதாக பிறர் நினைக்கும் வாய்ப்பு
குறைவு. கம்பீரமாகவும் இருக்கும். (பார்த்த உடையிலேயே
பார்க்க மற்றவர்களுக்கு போரடிக்கும்.)
உடையுடன் நம் காலணிகளும் நமக்கு அழகு
சேர்க்கிறது. ஷூ அணியும் நண்பர்கள் பெல்ட்டின்
கலருக்கு மேட்சாக ஷு அணிய வேண்டும். சாக்ஸ்
பேண்டின் கலர் ஷேடில் இருத்தல் நலம். இல்லாவிட்டால்
உடை எடுப்பாக இரு்க்காது.
காலுறைகள்
பற்றிய பதிவுக்கு
காலுறைகள் பராமரிப்பது, தேர்ந்தெடுப்பது பற்றிய பதிவுக்கு
கொஞ்சம் மெனக்கட்டால் போதும் உங்கள் தோற்றத்தில்
புது பொலிவும், கம்பீரமும் தானே வரும்.
கம்பீரமானவர்களுக்கு மரியாதையும், அங்கீகாரமும்
கூடவே இலவச இணைப்பாக வரும்.
இவை எல்லாம் இருந்தால் தன்னம்பிக்கை மிளிர
வளைய வரும் நீங்கள் அழகானவர்.
பெண்களுக்கான ஆடை பற்றிய அடுத்த
பதிவில் சந்திக்கிறேன்