காலுறைகள் பற்றிய எனது முந்தைய பதிவு இது.
காலுறைகள் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய
சில விடயங்களைக் காண்போம்.
உடைகளில் சைஸ் இருப்பது போலவே
காலுறைகளுக்கும் சைஸ் உண்டு. நமது காலின்
சைஸிற்கு தகுந்தவாரு தெரிவு செய்து
வாங்குவது அவசியம்.
ஃப்ரீ சைஸ் என்று சொல்லப்படும் சாக்ஸ்களை
தவிர்க்கவும்.
அடர்த்தி அதிகமாக நெய்யப்பட்ட வகைகளை
வாங்குவது நல்லது. அடக்கமாக நெய்யப்பட்டிருப்பதால்
பாதத்தை பாதுகாக்கவும், இதமாகவும் வைத்திருக்கும்.
நல்ல கம்பெனி சாக்ஸ்கள் குறைந்தபட்சம்
4 சைஸ் சாக்ஸ்கள் வழங்குகின்றன்.
பாதங்களில் வலி, பாதங்களில் துர்வாசனை
ஆகியவை நல்ல சாக்ஸ் அணிவதால் தவிர்க்கப்படுகின்றன.
குறைந்த விலையில் கிடைக்கும் சாக்ஸ்கள்
நீண்ட காலம் உழைக்காது. தரமும் சுமாரகத்தான்
இருக்கும். அத்தகைய காலுறைகளைத் தவிர்த்து
தரமானதாக வாங்கவும்.
காலுறைகள் அணியாமல் ஷூக்கள் அணியக்கூடாது.
காலில் ஏற்படும் வியர்வை, தோலினால் செய்யப்பட்ட
ஷூக்களில் பட்டு பேக்டீரியா உறுவாக வழி செய்யும்.
இதனால் பாதங்களில் புண் ஏற்பட சாத்தியம் உண்டு.
முறையான பராமரிப்பு எல்லாவற்றிற்கும் மிக
முக்கியமானது. காலுறைகளை எப்படி
பராமரிக்க வேண்டும் என்பதை இங்கே காணலாம்.
குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும்.
பிழியக்கூடாது (விரிவடைந்து விடும்)
தண்ணீரை வடியவிட்டு காய விடலாம்.
டிரைகீளீன் செய்யக்கூடாது.
அயர்ன் செய்யக்கூடாது.
துவைத்து, உலர்ந்த காலுறைகளை ஜோடியாக
மடித்து வைத்தால் தேடும் பிரச்சனை இல்லை.
மடிப்பது எப்படி என்று சில வீடீயோக்கள்
பாருங்களேன்.
காலுறைகள் மடிப்பது எப்படி? கிளிக்கி பாருங்களேன்.
வெயில் காலத்திற்கு, குளிர் காலத்திற்கு
எனத்தனித்தனி காலுறைகள் வைத்துக்கொள்ளலாம்.
கால் நகங்களை ட்ரிம் செய்து வைத்துக்கொள்வதால்
காலுறைகளை பாதுக்காக்கலாம்.
சரியாக காயவில்லை என்பதற்காக காலுறைகளுக்கு
டிரையர் போடக்கூடாது. டிரையரில் இருந்து
வெளியாகும் வெப்பக்காற்று காலுறைகளின்
உபயோகிக்கும் காலத்தை குறைத்துவிடும்.
அழகாக தேர்ந்தெடுத்த காலுறைகளை முறையாக
கவனித்துக்கொண்டால் நம் பாதத்திற்கும் பாதுகாப்பு,
நம் பர்ஸிற்கும் பாதுகாப்பு.
ஆரோக்கியம் துவங்குவது நம் பாதத்திலிருந்து தானே!
18 comments:
பயனுள்ள பதிவு. நன்றி தென்றல்.
நன்றி. பிள்ளைகள் காலுறைகளைப் பாதுகாக்க தெரியாத விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
வாங்க ராமலட்சுமி,
நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்.
தெரியாத விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
மனதிற்கு சந்தோஷமா இருக்கு அமுதா, தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
:) good...
good...
THANKS muthulekshmi.
தெரியாத விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
ஒரு தடவை ரொம்ப அவசரம்னு தோசைகல்லுல போட்டு காய வெச்சேன். ஹிஹி. :))
ஒரு தடவை ரொம்ப அவசரம்னு தோசைகல்லுல போட்டு காய வெச்சேன். ஹிஹி.//
தோசைக்கல்லை மல்டி பர்பஸா உபயோசிசிருக்கீங்க.
:))
உபயோகமான நல்ல பதிவு
நன்றி
//
நம் பர்ஸிற்கும் பாதுகாப்பு.
//
அது மேட்டரு :)
முதல் விடியோவில் சாக்ஸ் மடிக்கும் பாப்பா போட்டிருக்கும் டாப்ஸ் நல்லா இருக்கு அதை (டாப்ஸை) எப்பிடி மடிப்பது என டிப்ஸ் குடுங்களேன்!!
:)))))))))))))))))
ரெண்டாவது விடியோல யாரோ ஒரு பாட்டி அதனால பாக்கலை :(
//
ambi said...
தெரியாத விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
ஒரு தடவை ரொம்ப அவசரம்னு தோசைகல்லுல போட்டு காய வெச்சேன். ஹிஹி. :))
//
ஆஹா அம்பி கலக்கறீங்க போங்க!!
:))))))))))
நன்றி!
வாங்க சுபாஷ்,
தங்களின் வருகைக்கு நன்றி.
அதை எப்பிடி மடிப்பது என டிப்ஸ் குடுங்களேன்!!
//
நீங்க என் தம்பிதான் என்றாலும் ஹஸ்பண்டாலஜி பேராசிரியரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு பிரச்சனைக்குள் நீங்களே காலை விட்டுடீங்க சிவா.
இந்தோ பூங்கொடிகிட்ட பேசறேன்.
அப்புறம் அவங்க உங்களை துவைச்சு, காயப்போட்டு மடிப்பாங்க.
:))))))))))))))))))))))
வாங்க அப்துல்லா,
வருகைக்கு நன்றி.
ஆஹா தம்பி நிஜமா நல்லவன்,
உங்க நிலமை இப்படி ஆகிடுச்சே.
இருங்க உங்களுக்கு ஒரு பதிவு போடறேன்.
:)))))))))))))))
Post a Comment