தெலுங்கில் ”கண்லு ஜுல்லுமனே” அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கு.
அதற்கு அர்த்தம் ”கண்கள் தெறிக்க”. பார்த்ததும் கண்கள் கவர்ந்திழுக்கும்
நிறங்கள், அழகான டிசைன்கள்... இப்படி எத்தனையோ இதன் மேல்
காதல் கொள்ள. ஆமாங்க பாந்தினி புடவைகளைச் சொல்றேன்.
குஜராத்தியர்களின் கர்பா நடனத்தின் போது இந்தப் புடவை கட்டினாத்தான்
அதற்கான லுக்கே வரும். ஆனா இது ராஸ்தான் படைப்பு. இன்றும்
ஜெய்பூர், உதய்பூர், பிகேனர், அஜ்மர், ஆகிய இடங்களில் தான் அதிகமா
தயாராகுது.
இதுல தயாராகும் கலர்களை அணிவதுல கூட காரணம் இருக்காம்.
சுகாக்தி- சாக்லேட் நிறத்தில் மஞ்சள் புள்ளிகள் வைத்த புடவை
திருமணத்திற்கு அப்புறம் கட்டுவாங்களாம்.கறுப்பில் சப்தேலி சிகப்பு
புள்ளிகள் வைத்தப்புடவை முதல் குழந்தை பிறந்த பின் அணிவதாம்.
பொதுவாக இந்தப் புடவைகள் புள்ளியில் தான் இருக்கும். அதை
தானா பேட்டன் (dana pattern) என்று சொல்வார்கள். பல்லுவில்
வட்டமாக இதே டிசைன் செய்வார்கள்.
பாந்தினி ரகப்புடவைகள் பருத்தி,மஸ்லின் மட்டுமல்லாமல் பட்டிலும்
தயாராகிறது. டையிங் செய்யும் போது சின்னச் சின்ன முடிச்சுகளாக கட்டி
டையிங் செய்ந்து டிசைன் வரவழைப்பார்கள்.
டிசைன்களுக்கு ஏற்ப dye செய்வதற்குமுன் tyeற்காக (முடிச்சு)
காபூலி சன்னா, பருப்பு முதல் சிலசமயம் காயின்களைக்
கூட உபயோகப்படுத்துவார்களாம். பாந்தினி டிசைனில்
புடவைகள் மட்டுமல்ல, காக்ரா சோளி, சுடிதார் செட்கள்,
ஷால்களுடன் டர்பன்களும் தயாராகிறது.
நல்ல அடர் கலரில் புடவை/சுடிதார் உடுத்தி அதற்கு
மேச்சிங் நிறத்தில் நகைகள் (குந்தன்,போல்கி, முத்து) செட் போட்டால்
போதும். சூப்பராக இருக்கும். ஃபக்ஷன்களுக்கும்
ஏற்றது.
ராஜஸ்தானில் தயாரிக்கப்படும் இந்த புடவை,சுடிதார் ரகங்கள் இப்பொழுது
எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது. சென்னையில் பாந்தினி ரகங்களுக்காகவே
ஒரு ஏரியா இருப்பதாக சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்தேன். (விவரம்
தெரிஞ்சவங்க விவரமா பின்னூட்டத்துல சொல்லுங்களேன்.)
16 comments:
உங்கள் புடவைப் பகுதிகள் நல்ல தகவல்கள்...நம் நாட்டுக்கு வெளியே இருக்கும் என்னைப் போன்றோருக்கு நல்லதொரு அறிமுகம்...
நல்ல ரிச்லுக் கொடுக்கக்கூடிய ஒரு வகை..
உங்கப் பதிவு எல்லாம் ஆபிஸ்ல இருந்து படிக்கறதுதான் நல்லது. வீட்ல இருந்துபடிச்சா பர்ஸ் காலி
வாங்க பாசமலர்,
உங்கள் புடவைப் பகுதிகள் நல்ல தகவல்கள்..//
மிக்க நன்றி
ஆமாம் அமைதிச்சாரல்,
வருகைக்கு நன்றி
வாங்க எல்கே,
//வீட்ல இருந்துபடிச்சா பர்ஸ் காலி//
:))))
I really love these colors, designs and rich look. :-)
எனக்கும் பாந்தினி துணிகளின் கலர் காம்பினேஷன் ரொம்பப் பிடிக்கும். ஒரே பிரச்சனை எக்கச்சக்கமா சாயம் போகும். சமீபத்தில் பச்சையும், சிகப்பும் கலந்து ஒரு சல்வார் செட் வாங்கினேன்:))
வாங்க சித்ரா,
அப்படின்னா சேம் ப்ளட்ன்னு சொல்லுங்க
வருகைக்கு நன்றி
வாங்க வித்யா,
ஒரே பிரச்சனை எக்கச்சக்கமா சாயம் போகும். //
அப்படியா?? நான் பின்பற்றும் முறையைச் சொல்றேன். 2 தடவை ட்ரைவாஷ் கொடுத்து அப்புறமா ஷாம்பு தண்ணீரில் துவைச்சா நல்லா இருக்கும்.
நல்ல தகவல்கள்.
ஆமாம் சூப்பர் கலர்கள்
//உங்கள் புடவைப் பகுதிகள் நல்ல தகவல்கள்...// இதுக்காக ஒரு பெரிய ரிப்பீட்டு:-)
எனக்குப் பாந்தினி பிடிக்கும், இந்த சாயம் போகிற பயத்தில் இது வரை வாங்கினது இல்லை.
//சென்னையில் பாந்தினி ரகங்களுக்காகவே
ஒரு ஏரியா இருப்பதாக சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்தேன். (விவரம்
தெரிஞ்சவங்க விவரமா பின்னூட்டத்துல சொல்லுங்களேன்.)// இதுக்காக ஒரு ஃபால்லோ அப்.
வருகைக்கு நன்றி கோவை2தில்லி
வருகைக்கு நன்றி அமுதா
வருகைக்கும் ஃபாலோஅப்புக்கும் நன்றி கெக்கேபிக்குணி
Post a Comment