Thursday, March 10, 2011

எங்கே செல்லும் இந்தப் பாதை???!!!!!!!!!

தெலங்கானா வழங்கக்கோரி இன்று மில்லியன் மார்ச் எனும்
நிகழ்ச்சி ஒன்றை தெலங்கான கூட்டு கட்டமைப்பு நடத்த
அழைப்பு விடுத்திருந்தது. எல்லோரும் ஒன்று கூடி
டாங்க் பண்ட் மீது வரவேண்டும் என அழைக்க அந்தப் பக்கம்
செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி வைத்திருந்தது
போலீஸ்.

ஆனால் அவர்களுக்கு சவால் விடும் வகையில் திரள் திரளாக
வந்து குவிந்தனர். நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்குன்னு
நினைக்கு நேரத்தில் சாயந்திரமாக வன்முறை ஆரம்பமாகிடிச்சு.
துளசி டீச்சர் தன் பதிவில் சிலாகித்து சொல்லியிருந்த
டாங்க்பண்ட் மீது அழகாக இருக்கும் சிலைகளை உடைத்து
பக்கத்தில் இருக்கும் ஹுசைன் சாகரில் போட்டதை
படம் பிடித்த மீடியாக்களைத் தாக்க ஆரம்பித்தனர்.

25 காமிராக்களை உடைத்தனர். சிலவற்றை ஹுசைன்சாகரில்
போட்டனர். அங்கேயிருந்த ஒளிபரப்பு வாகனத்தை அடித்து
துவம்சம் செய்தனர். ஒரு பெண் நிருபரை காயமடையச்
செய்தது பத்தாமல், போலீஸ் வாகனத்தை எரித்தனர்.
வன்முறை கட்டவிழ்க்கப்பட்ட சூழலில் அழகான டாங்க்பண்ட்,
இதுவரை விநாயகசதுர்த்திக்கும், பதுக்கம்மாவுக்கும் மட்டுமே
திரள்திரளாக மக்களை கண்டது போய் தனக்கு இப்படி ஒரு
நிலை ஏன் என அழுதிருக்கும்.


மில்லியன் மார்ச்சில் கலந்துகொள்ள புறப்பட்ட உஸ்மானியா
பல்கலைக்கழக மாணவர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்டனர்
போலீசார். கதவை உடைத்து வந்து அவர்கள் மீது கல் மழை
வீச போலீசார் கண்ணீர்புகை செலுத்த வேண்டி வந்து அந்த
இடம் அல்லோகல்ல பட்டது.


இன்று எத்தனையோ லட்சங்கள் நஷ்டம்!!! பத்தாம் வகுப்பு
பரிட்சை எழுதிய மாணாக்கர்கள் பரிட்சை ஹாலுக்கு செல்ல
தாமதமானது. ஐசிஎஸ்ஸி மதியம் 2 -5 பரிட்சை நடத்தியது.
நாடு முழுதும் ஒரே நேரத்தில் பரிட்சை நடப்பதால் தேதிகளை
ஒத்திவைக்கவும் முடியாமல் தெலங்கானா தலைவர்களிடம்
பெற்றோர்கள் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

இந்த விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டில்தான் கேசிஆர்
சீனுக்கே வரவில்லை என்று தகவல். அவர் இன்று நடத்தாமல்
ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைக்க நினைத்தார். கேட்கும் ரகங்களா?
இவர்கள். நாங்கள் மக்களை ஒன்றும் செய்ய மாட்டோம் என்று
சொல்லிக்கொண்டு இவர்கள் நடத்தும் அராஜாகங்கள், நாசாமாக்கும்
பொதுச்சொத்துக்களால் ஒன்றும் செய்யாத அப்பாவி சாமானியனுக்கும்
ஒரு பாரமாக இது அமைகிறது. இதை தன் தொண்டர்களுக்கு
புரிய வைக்காத கட்சிகளின் தலைவர்கள் தலைவர்களே அல்ல!!!

எந்த பாவமும் அறியாத எக்ஸ்போடெல் ஹோட்டல் லோயர் டாங்க்பண்டில்
கல்லடிபட்டு அழுதுக்கொண்டிருக்கிறது. ரணகள் பூமியாக
காட்சியளித்த டாங்க்பண்டை பார்க்கும் பொழுது மனது வலித்தது.

காணொளியில் பாருங்கள் கோரம் தெரியும்.


2 comments:

pudugaithendral said...

,

சாந்தி மாரியப்பன் said...

//இவர்கள் நடத்தும் அராஜாகங்கள், நாசாமாக்கும்
பொதுச்சொத்துக்களால் ஒன்றும் செய்யாத அப்பாவி சாமானியனுக்கும்
ஒரு பாரமாக இது அமைகிறது. இதை தன் தொண்டர்களுக்கு புரிய வைக்காத கட்சிகளின் தலைவர்கள் தலைவர்களே அல்ல//

மக்களோட வரிப்பணமல்லவா வீணாகுது.. நாட்டுக்கும் இழப்புதானே.