Thursday, April 07, 2011

கற்றல் இனிமை ஆகிறது!!!

”பாட்டோட ட்யூன் ஆரம்பிச்சதும் எப்படித்தான் அந்தப் பாட்டை
சரியா பாடுறீங்களோ!! அதே மாதிரி யாராவது பாடத்தையும்
ட்யூன் போட்டுக்கொடுத்தா வசதியா இருக்கும் உங்களுக்குன்னு”
எங்க கண்ணகி டீச்சர் அடிக்கடி சொல்வாங்க. மனப்பாடம்
செய்யணும்னா கஷ்டமா இருக்கும். அதுக்கு பதில் அதையே
காதால கேட்டா எவ்வளவு ஈசியா மனசுல பதியும்.

ஆஷிஷுக்கு இங்கே வந்த புதிதில் ஹிந்தி பாடங்களை
(கேள்வி, பதில்களை)டேப்ரெக்கார்டரில் ரெக்கார்ட்
செய்து கேட்க வைத்து மனதில் பதிய வைத்திருக்கிறேன்.

IIT/IIM Alumniகளான Ram Gollamudi,Prasanna Boni,
Sravan Narasipuram,Ramesh Karra இந்த நான்கு நண்பர்களும்
சேர்ந்து கல்வி கற்பதை இனிதாக ஆக்கியிருக்கிறார்கள்.
இந்த நால்வர்க்குழு சேர்ந்து ஒரு கருவியை கண்டு பிடித்திருக்கிறார்கள்.


இதுதான் அந்தக் கருவி. பெயர் EDUTOR. தற்போது CBSC பாடத்திட்டதில்
உள்ள பாடங்களை கற்கும் வகையில் தயார் செய்திருக்கும் இவர்கள்
ஸ்டேட் போர்ட் மற்றி ஐசிசி பாடத்திட்டங்களையும் தயாரிக்கும் முயற்சியில்
இருக்கிறார்கள். பள்ளிகளில் கலந்து பேசி பாடத்திட்டங்களை எளிதாக
புரியும் வண்ணம் தயாரித்திருக்கிறார்கள்.

ஆப்பிள் என்று சொல்லிக்கொண்டிருப்பதை விட ஆப்பிளையோ,
ஆப்பிளின் படத்தையோ காட்டி சொல்லிக்கொடுக்கும் பொழுது மனதில்
இலகுவாக பதியும். இந்த முறைதான் இவர்கள் பின்பற்றுவது.
இந்த வீடியோவை பாருங்கள். ஐ போன் போலிருக்கும் இந்தச்
சாதனம் எப்படி எல்லாம் உதவுகிறது என்பது புரியும்.


பாடங்களை எளிதாக புரியும் வகையில் அனிமேஷன் செய்து
வழங்குவதால் பிள்ளைகள் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு கேட்ஜட் வாங்கி அதை 2 பிள்ளைகளின் பாடத்திட்டத்தை
படிக்கும் படி செய்ய முடியும்.
தற்போது ஹைதையில் மட்டும் கிடைக்கும் இந்த EDUTOR
விரைவில் சென்னை போன்ற பிற நகரங்களில் கிடைக்குமாம்.

சரி இந்த சாதனத்தில் ஒரு டெமோ பார்க்கலாமா!!
இங்கே சென்று பாருங்களேன்.......


இவர்களை தொடர்பு கொள்ள:

இந்த EDUTORன் விலை 6400. அறிமுக விலையாக 5000ற்கு
கொடுக்கிறார்கள். பாடத்திட்டம் கொண்ட மெமரி சிப் 1400.
ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டத்திற்கு ஏற்ப புதிது
வாங்கிக்கொள்ளலாம்.
பள்ளிகளும் நிர்வாகிகளும் இந்த நல்ல சாதனத்தை
பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தினால் கற்பது என்பது
இனி கடினமாக இருக்காது.


21 comments:

Anonymous said...

அருமையான தகவல் சகோ...........

pudugaithendral said...

பதிவு போட்ட உடன் கமெண்ட்!!

வருகைக்கு மிக்க நன்றி

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நன்றி பதிவுக்கும் செய்திக்கும்...

இது மாதிரியான கல்வி அவசியம் என்று பத்ரி சிறிது காலத்திற்கு முன் ஒரு பதிவிட்டிருந்தார்..

இவ்வளவு சீக்கிரம் இது வருமென்று நானும் எதிர்பார்க்கவில்லை..

இந்தியா வேகமாகவே முன்னேறிக் கொண்டிருக்கிறது..sans politicians !

Chitra said...

Cool!!! Thank you for sharing this info. :-)

pudugaithendral said...

வாங்க அறிவன்,

அரசியல்வாதிகளை விடுங்க. அவங்களால ஆகப்போவது ஏதுமில்லை. இப்படி யாராவது ஏதாவது செய்தால் தான் உண்டு. இப்போது ஹைதையில் கிடைக்கும் இந்தச் சேவை சீக்கிரம் எல்லா மாநிலங்களிலும் கிடைத்தால் போதும். ஆரோக்கியமான கல்வி, அதிகம் ஸ்ட்ரெஸ் இல்லாமல் கிடைத்துவிடும்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சித்ரா

சாந்தி மாரியப்பன் said...

நல்ல தகவல் தென்றல்.. கற்றல் ரொம்பவே சுமையுள்ளதா ஆகிக்கிட்டுருக்கும் இந்தக்காலத்துல ரொம்பவே உதவியாயிருக்கும்.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

ஆமாம்பா... இப்பத்த சிலபஸ் பலபஸ்ஸா இருக்கு. அதுக்கு இந்த மாதிரி சாதனங்கள் உதவியாய் இருக்கு.

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சகோ. பகிர்வுக்கு நன்றி. தில்லியில் எப்போது வருகிறதோ தெரியவில்லை :) ஆனால் பார்த்தால் போதும், உடனே நகல் கிடைக்க ஆரம்பித்து விடும் :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப நல்ல விசயத்த பகிர்ந்து இருக்கீங்க... பிள்ளைகளுக்கு கிப்ட் செய்யவும் ரெம்ப அருமையான ஒண்ணு... மிக்க நன்றி...:)

பரிசல்காரன் said...

Wow! Nice:)

நானானி said...

தேவாரம்,திருவாசகப் பாடல்கள் இளையராஜாவின் இசையில் பள்ளிக் குழந்தைகள் மனதிலும் பதிந்தது. அந்த வகையில் நீங்க சொன்னா மாதிரி இசையோடு பாடங்கள்...நிச்சயம் எடுபடும்.

ADHI VENKAT said...

நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

தகவலுக்கு நன்றி புதுகை! இங்கே பள்ளிகளில் இதே முறையில் கற்றுத் தர முடிகிறது.இதே மாதிரி சிலபஸை லோட் பண்ணிய LCD T.V யில் இப்படியே காட்டி பாடம் நடத்த முடிகிறது.இதற்கு நிறைய கம்பெனிகள் சிலபஸ் லோடட் காப்ஸ்யூல் கொடுக்கிறார்கள்.

pudugaithendral said...

தில்லியில் எப்போது வருகிறதோ தெரியவில்லை :) ஆனால் பார்த்தால் போதும், உடனே நகல் கிடைக்க ஆரம்பித்து விடும் :)//

என்னத்த சொல்ல. நீங்களே ஸ்மைலியையும் போட்டுட்டீங்க. :))))

வருகைக்கு நன்றி சகோ

pudugaithendral said...

வாங்க புவனா,

ஆமாம். நல்லதொரு பரிசாக இருக்கும்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி பரிசலாரே.

pudugaithendral said...

வாங்க நானானி,

சரியா புரியாம, அதனால மண்டைல ஏறாம பசங்க கஷ்டப்பட மாட்டங்களே. அதனலாயே இந்த சாதனம் எனக்கு பிடிச்சிருக்கு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கோவை2தில்லி

pudugaithendral said...

வாங்க அருணா,

இங்கேயும் அப்படி நடத்தும் பள்ளிகள் இருக்கு. ஆனா இந்தச் சாதனம் வீட்டுக்கு வந்ததற்கப்புறம் ரிவைஸ் செய்து கொள்ள உதவியாய் இருக்கு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

இதே மாதிரி சிலபஸை லோட் பண்ணிய LCD T.V யில் இப்படியே காட்டி பாடம் நடத்த முடிகிறது.//

அருணா இதைப்பத்தி கொஞ்சம் விவரமா பதிவு போட முடியுமா. பலருக்கு தெரிந்துக்கொள்ள உதவியாய் இருக்கும்.

நன்றி