அதென்னமோ தெரியலை. அப்படி ஒரு இளக்காரம். இல்லாடி
ஒரு பயம். சிலருக்கோ பிடிக்காது. அதனால இதை அதிகமா
உபயோகப்படுத்தவும் மாட்டாங்க. அப்படியே செஞ்சாலும்
பித்ரு காரியங்கள் எனப்படும் திவசம் அன்னைக்குத்தான் செய்வாங்க.
ஆனா இதுல இருக்கும் நலன்களை பத்தி தெரிஞ்சிக்கிட்டா நீங்களும்
கண்டிப்பா உணவுல சேத்துக்குவீங்க.
இந்த எள்ளைத் தாங்க சொல்றேன். கடலை உருண்டை சாப்பிடுவாங்க,
ஆனா எள்ளுருண்டைக்கு “நோ!”நோ”! தான். இதுல இன்னொரு
மேட்டரும் சொல்வாங்க யார் வீட்டுலயாவது எள்ளுருண்டை அல்லது
எள் சம்பந்த பட்டது சாப்பிட்டா அவங்களுக்கு நாம வேலை செஞ்சுக்
கொடுக்கணும். இதெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு பலர் எள்ளை
தொடுவதே இல்லை.
தீவளிக்கு தீவளியாவது எண்ணெய் தேச்சு குளிக்கும் பொழுது
உபயோகிக்கப்படுவது நல்லெண்ணெய் தான். இதுலதான் மஹாலட்சுமி
இருப்பதாக புராணம் சொல்வது. நெய்க்கு அடுத்து பூஜைக்கு பயன்படுவது
நல்லெண்ணெய் தான். ஆயுர்வேதத்தில் எள்ளு மிகச் சிறப்பான இடம் இருக்கும்.
நல்லெண்ணையை தேய்த்து, மசாஜ் செய்து குளிப்பதால்
உடல் சூடு தணியும்.
சாம்பார் செய்யும் பொழுது ரீஃபைண்ட் ஆயில் உபயோகித்து தாளிப்பதற்கு
பதில் நல்லெண்ணெயில் தாளிதம் செய்தால்.... சாம்பார் வாசம்
வீசும். காரக்குழம்பு, வத்தக்குழம்பு, வெந்தயக்குழம்பு இதெல்லாம்
சாப்பிடும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டால் நல்ல ருசி + உடலுக்கும்
நல்லது. சுடச்சுட இட்லி அதன் மேல ஜோதிகா மாதிரி இல்லாட்டியும்
1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிட்டா...... உடலுக்கும் நல்லது,
நாவுக்கும் நல்லா இருக்கும்.
வயிற்றுப்புண் அல்லது வாய்ப்புண் இருந்தால் முதல் கவளமாக
சூடான சோற்றில் நல்லெண்ணெய் + கொஞ்சம் உப்பு சேர்த்து பிசைந்து
சாப்பிட சரியாகும். ஊறுகாய்களுக்கும் நல்லெண்ணெய் தான் பெஸ்ட்.
எள்ளிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய்க்கு இவ்வளவு மருத்துவ
குணம் இருக்கும் பொழுது மூலமான எள்ளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும்.
ஆனா இளைச்சவங்களுக்கு எள்ளு, கொளுத்தவங்களுக்கு கொள்ளுன்னு
வசனம் சொல்லிட்டு எள்ளை தவிர்த்திடுவோம். கொள்ளையும் சாப்பிட
மாட்டோம். (குதிரைக்குத் தானே கொள்ளுன்னு சிலர் கிண்டல் செய்வாங்க)
எள்ளில் இரும்பு, மங்கனீசியம், காப்பர், கேல்சியம் ஆகிய சத்துக்கள்
இருக்கின்றன. விட்டமின் பி1, விட்டமின் இ ஆகியவையும் அடங்கி
இருக்கு. மூர்த்தி சிருசுன்னாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்றாப்ல
இந்தச் சின்ன வித்துக்குள் எவ்வளவு சக்தி கிடைக்குது பாருங்க.
எள்ளு கசப்பா இருக்கும் என்பதால பலர் அதை சாப்பிட மாட்டாங்க.
வெல்லம் சேர்த்து உருண்டை செய்யலாம். காரப்பொடி மாதிரி
செஞ்சு காய்கறில தூவி பிரட்டி எடுத்தா சுவையா இருக்கும்.
இட்லிப்பொடி செய்யும் போது அதுல சேத்துக்கலாம். திருநெல்வேலி
இட்லிப்பொடி சாப்பிட்டிருக்கீங்களா? எள்ளு வாசனையோட சூப்பரா
இருக்கும்.
பூப்படையும் பருவத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு எள்ளை
உணவில் சேர்த்துக்கொடுப்பதால நல்ல பலன் இருக்கும். பெண்களிலிருந்து
எல்லோரும் தினமும் இரண்டு உருண்டை சாப்பிடுவதால் (எள்ளு+ வெல்லம்
சேர்த்தது) உடம்புக்குத் தேவையான கால்சியம், இரும்புச்சத்து
சேர்ந்திடுது. ஆண்களுக்கும் கொடுக்கலாம். தவறே இல்லை.
கேன்சரை தடுக்கும் காரணிகள் எள்ளில் இருக்கு. கறுப்பு எள்ளு +
வெள்ளை எள்ளு இரண்டையும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்து
உட்கொண்டால் ரொம்பவும் நல்லது.
பெண்மையின் அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எள்ளு ஆண்மைக்கு
வளத்தையும், எனர்ஜியையும் தருகிறதுன்னு மருத்துவர்கள்
சொல்றாங்க.
மேலை நாடுகளில் ப்ரட்டில் எள்ளு போடுவார்கள். மெக்டொனால்ட்
ப்ரட்டில் பார்க்கலாம். நம் நாட்டில் மட்டுமில்லாமல் மேலை நாடுகளில்
கூட எள் சர்வ சாதரணமாக உபயோகிக்கப்படுகிறது.
இனியாவது எள்ளை உணவில் சேர்த்துக்கொள்வோம், ஆரோக்கியமான
வாழ்க்கை வாழ்வோம்.
15 comments:
'எள்ளி'நகைக்கக்கூடிய விஷயமில்லை இது.பயனுள்ள தகவல்.
வருகைக்கு நன்றி முருகன்
பயனுள்ள தகவல்
பயனுள்ள தகவல்
எள்ளைப் பத்தி எள்ளைப்போல் பொறிஞ்சி தள்ளீட்டீங்க. எள்ளு போட்டால் எள் விழாதபடி பதிவு நெரஞ்சிருக்கு.
நான் எள்ளுன்னு சொல்லு முன்னே எண்ணையாய் நின்னுட்டீங்க.
எல்லாஞ்சரி....எள்ளுபுண்ணாக்கு சாப்பிட்டிருக்கீங்களா? சூப்பராயிருக்கும், எண்ணை வழிய வழிய.
நம் நாட்டில் மட்டுமில்லாமல் மேலை நாடுகளில்
கூட எள் சர்வ சாதரணமாக உபயோகிக்கப்படுகிறது.
//
ஆமா. அனேக டெசர்டில் எள்ளு தூவியிருப்பாங்க.. நல்லதொரு விளக்கம்.
பயனுள்ள தகவல். இட்லிப்பொடிக்கு எள் சேர்ப்பதுண்டு. வத்தக்குழம்புக்கு நல்லெண்ணெய் தான். இங்கு குளிர்காலத்தில் ”கஜக்” என்ற எள்ளு மிட்டாய் எல்லாருமே சாப்பிடுவார்கள்.
பெண்களுக்கு மிக நல்லது சொன்னது போல..
திருநெல்வேலி
இட்லிப்பொடி சாப்பிட்டிருக்கீங்களா? எள்ளு வாசனையோட சூப்பரா
இருக்கும்.
...mouth watering....... ஊரு நினைப்பு வந்துடுச்சு!
எனது வோட்டு நல்லெண்ணெய்க்கே. அபூர்வமாக நெய் / தேங்காய் எண்ணெய் பாவிப்போம். மத்த எண்ணெய்க்கெல்லாம் பெரிய நோ சொல்லிட்டேன். எள்ளை இடித்து, வறுத்து (கோது நீக்கிய) உளுந்தை மாவு பண்ணி கலந்து, பனங்கட்டி அல்லது சீனி போட்டு இடித்து பூப்பெய்யும் பெண்ணுங்களுக்கு கொடுப்பார்கள். அப்புறம், களின்னு வறுத்து இடித்த தோல் நீக்கிய உளுந்து மாவினை அவித்து தேங்காய்ப்பால் வெல்லம் போட்டு செய்வார்கள். சிலவேலை பாட்டி நல்லெண்ணெய் ஊற்றியும் செய்வார். நல்லெண்ணெய்யை சூடு பண்ணி, கொஞ்சம் உப்பும் மிளகும் போட்டு மட்டுமே சாதம் பிசைந்து சாப்பிடுவேன். =))
நல்ல தகவல்கள். இங்கே வடக்கில் “தில் கா லட்டு” என்று எள் பயன்படுத்தி செய்யப்படும் லட்டு கிடைக்கும். பகிர்வுக்கு நன்றி.
நன்றி சிநேகிதி,
நன்றி சமுத்ரா
சாப்பிட்டிருக்கேன். அத்தோட கொஞ்சம் வெல்லம் வெச்சு என் வகுப்புத் தோழி கொண்டு வந்து கொடுத்தது ஞாபகம் இருக்கு நானானி.
நன்றி எண்ணங்கள்
மஹாராஷ்ட்ரத்தில் சங்கராந்திக்கு தில்லட்டு உண்டு. வருகைக்கு நன்றி கோவை2தில்லி,
ஆஹா... கொசுவத்தி சுத்த வச்சிட்டேனா சித்ரா :)
சூப்பர் அனாமிகா
நன்றி சகோ
இவ்வளவு விஷயம் இருக்கா?. தகவலுக்கு நன்றி
Post a Comment