Wednesday, December 19, 2012

கிட்டுமணிகளுக்காக :)))

ஜலீலா தனது வலைப்பூவில் கிட்டுமணிகளுக்காக ஷ்பெஷல் உணவுன்னு போட்டி வெச்சிருக்காங்க. அதுக்காக என்னுடைய இந்தப் பதிவு. (கிட்டுமணி!!!!- அதாங்க பேச்சிலர்கள் :) )

 பதிவைப்பாப்போம். சிம்பிள் ஆனால் அதே சமயம் ஹெல்த்தியான உணவு. கறி தனியா, சோறுதனியான்னு சமைச்சுகிட்டு இருக்காம டூ இன் ஒன் இந்த பாலக் பனீர் ரைஸ்.

 இப்ப என்னன்ன தேவைன்னு பாப்போமா!!
தேவையான பொருட்கள்:
மிளகாய்ப்பொடி - 1/2 ஸ்பூன் (உங்க தேவைக்குத் தக்க கூட்டிக்கலாம்) கரம்மசாலா பொடி - 1/2 ஸ்பூன்
 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தயிர் - 1 கப்
ஜீரகம் - 1/4 ஸ்பூன்
 ஏலக்காய் - 1
லவங்கம் - 1
 பிரிஞ்சி இலை - கொஞ்சம் (மேலே சொல்லியிருக்கும் 3ம் வேணும்னா சேக்கலாம். இல்லாட்டி கரம்மசாலாதான் சேக்கறமே!)
 பாலக் இலை - 2 கட்டு (கழுவி பொடியா அறிஞ்சு வெச்சுக்கணும்)
 வெங்காயம் 2 - நீளவாக்கில் அரிஞ்சு வெச்சுக்கணும்.
 பனீர் துண்டுகள் - 200 கிராம்
இஞ்சிப்பூண்டு விழுது - கொஞ்சம்
 பாஸ்மதி அரிசி அல்லது சாதாரண அரிசி - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப

 இப்ப செய்முறை எப்படின்னு பாப்போம்: காடாய் எடுத்துகிட்டு நெய் அல்லது எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து காய்ந்ததும் ஜீரகம், ஏலக்காய், லவங்கம், பிரிஞ்சி இலை சேர்க்கவும். சற்றே வறுத்ததும்
வெங்காயம், இஞ்சிப்பூண்டு சேர்த்து வதக்கணும்
அப்புறம் வெட்டி வெச்சிருக்கும் பாலக்கீரையை சேர்த்து வதக்கணும்
அடுத்தாப்ல பனீர் துண்டுகளை சேர்த்து வதக்கும் போது உப்பு, மஞ்சள், மிளகாய்த்தூள், கரம்மசாலா எல்லாம் சேர்க்கணும்.
தயிர் சேர்த்து வதக்கி 1 கப் தயிர் இருப்பதால 2 1/2 கப் தண்ணீர் ஊத்தி கொதிக்க விடணும்
இப்ப சுடச்சுட பாலக் பனீர் ரைஸ் ரெடி.
இந்தப் பாலக் பனீர் ரைஸில் பனீர் பிடிக்காதவங்க பனீரைத் தவிர்த்து வெறும் பாலக் ரைஸா செஞ்சுக்கலாம். மைக்ரோ அவன் இருக்கறவங்க மேலே சொன்ன அதே முறையில் மைக்ரோ அவன் பாத்திரத்தில் வெச்சு வெங்காயம், பாலக், பனீர் எல்லாம் சேர்த்து வதக்கி அவனில் 30 நிமிஷம் வெச்சா ரெடி.

(பாஸ்மதி அரிசியா இருந்தா மைக்ரோஅவனில் 2 கப் அரிசிக்கு மேலே சொல்லியிருக்கும் அளவு தண்ணீரும், தயிரும் போதும். பொன்னி அரிசியா இருந்தா இன்னும் 1/2 கப் தண்ணி கூட சேக்கணும்.) இந்த ரெசிப்பிக்கு ரய்தா தேவையில்லை. சிப்ஸ்/அப்பளம் இருந்தாக்கூட போதும்.

 வீக் எண்டுக்கு செஞ்சு உங்க நண்பர்களை அசத்துங்க :))

12 comments:

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, கிட்டுமணிங்க எல்லாம் இத்தனை பொறுமையா நறுக்கி, வதக்கிச் செய்வாங்க??? எனிவே, முன் கூட்டிய வாழ்த்துகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். :))))

Geetha Sambasivam said...

தீனி தின்னலைனா இதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. :)))))

நட்புடன் ஜமால் said...

யக்கோவ்!

எல்லோரும் / எல்லாமும் நலம் தானே!

அப்பப்ப எட்டி பாருங்க :)

Jaleela Kamal said...

கலா பேச்சுலர் ஈவண்டில் கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

உங்கள் குறிப்பை இணைச்சுட்டேன்.

கோமதி அரசு said...

அருமையாக இருக்கிறது. இந்த தங்கமணி குறிப்பு எடுத்துக் கொண்டேன்.
நன்றி புதுகை.

pudugaithendral said...

வாங்க கீதா சாம்பசிவம்,

இப்ப நிறைய்ய கிட்டுமணிங்க சமைக்க கத்துக்கிடறாங்க. அதுலயும் வெளிநாட்டுல இருக்கறவங்க நாக்கு செத்துப்போய் இருப்பதால இப்பல்லாம் “சுயபாகம்” தான். (என் தம்பியும் சிங்கையில தானே சமைச்சு சாப்பிட்டுகிட்டு இருக்காரு)

வெட்டு்றது வதக்கறது என்ன எல்லாம் சேரிங்கா செஞ்சுக்கறாங்களே!!

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

தீனி தின்னலைனா இதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை//

அதனாலத்தான் அங்கே ஒரு லிங்க் கொடுத்தேன் :))

pudugaithendral said...

வாங்க ஜமால்,

அப்பப்ப எட்டி பாத்துக்கிட்டு தான் இருக்கேன். ஆனா பழைய லெவல்ல இல்லை :(

இனி கண்டிப்பா இருப்பேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஜலீலா,

மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோமதிம்மா,
இந்த தங்கமணி குறிப்பு எடுத்துக் கொண்டேன்.//

:)) ரொம்ப சந்தோஷம்.

வருகைக்கு மிக்க நன்றி

ஆத்மா said...

இதையெல்லாம் செய்து பார்க்க நமக்கென்று ஒரு நாள் வராமலா போய்விடும்...

pudugaithendral said...

வாங்க ஆத்மா,

விடுமுறை நாள்ல செஞ்சு பாருங்க.

வருகைக்கு மிக்க நன்றி