Tuesday, December 18, 2012

ENGLISH VINGLISH

இந்தப்படத்தைப்பத்தி பதிவு இவ்வளவு லேட்டா எழுதறேனேன்னு யாரும் “காந்தி செத்திட்டாரா!” ரேஞ்சுக்கு அதிர்ச்சி அடைய வேண்டாம். இங்கே திரைக்கு வந்த உடனேயே போகணும்னு ஆசை. ஆனா வேளை ஆளை முக்கி எடுத்திடுச்சு. அதுலேர்ந்து வெளியில வந்து பார்ப்பதற்குள் நிறைய்ய நல்ல படங்கள் பார்க்கவே முடியலை. :((

 டாடாஸ்கை சோகாஸில் இந்தப்படம் வந்துகிட்டு இருக்கு. அதைக்கூட பார்க்க முடியவில்லை.நேற்று வார நாளா இருந்தாலும் எல்லா வேலையையும் முட்டைகட்டி வெச்சிட்டு (கட்டி வைக்க வேண்டிய கட்டாயம்!!! கால் வலி) அயித்தானை ஆர்டர் செய்ய சொன்னேன். சாயந்திரம் 5.30மணிக்கு படம் பார்த்தோம்.


 படம், ஸ்ரீதேவியின் நடிப்பு,கதா பாத்திரங்கள் எல்லாம் ரொம்ப பிடிச்சிருந்தது. முன்னாடி நம்ம டிடியில் “ஜபான் சம்பால்கேன்னு” ஒரு சீரியல் வரும். ரோஜா புகழ் பங்கஜ் கபூர் தான் ஆசிரியர். நல்லா இருக்கும். இந்தப்படத்துல ஸ்ரீதேவி ஆங்கிலம் கத்துக்கற வகுப்பு அந்த சீரியலை ஞாபக படித்திச்சு. ஃப்ரான்ஸ், பாகிஸ்தான் ஆளூங்களுக்கு இடையே நம்ம தமிழ்நாட்டு ராமா எதுக்கு வந்தாருன்னு புரியலை. சரி விடுங்க. மகளின் பள்ளிக்கு சென்று மகளால் அவமதிக்கப்படும் இடத்தில் அருமையான நடிப்பு
 தனது அக்காள் மகளின் திருமணத்திற்கு உதவி செய்ய அமெரிக்கா செல்லும் ஷஷி, அங்கே 4 வார ஆங்கில வகுப்பில் சேர்ந்து மெல்ல ஆங்கில கற்கிறார். அதற்கு நடுவில் சில காட்சிகள், வசனங்கள் மனசுல உக்காந்திடிச்சு. Laurent ஷஷியை பார்ப்பதற்காகவே வகுப்புக்கு வருவதாக சொன்னபொழுது அவரைத் தவிர்த்து ஓடும் வேளையில், பின்னாலேயே வந்து ட்ரையினில் ஷஷியைப் பார்த்த பொழுது “ரொம்ப நாளைக்கப்புறம் என்னை இப்படி யாரோ புகழ்வது அதிர்ச்சியாக இருக்கிறது. அவ்ளவுதான்!!” என போவது.

 மகள் போன் செய்து அவமரியாதையாக பேசும்பொழுது, குழந்தைகள் தன் அம்மாவை அவமானப்படுத்துவது எவ்வளவு தூரத்துக்கு நியாயம். அடுத்தவர்களின் வலியை, உணர்வுகளை அறிவது எப்போது? என குமுறும் இடம்.

 ஆங்கில ஆசிரியர் டேவிட் ஒரு “கே” என அவரைப்பற்றி சக மாணவர்கள் பேசும்போது, ஷஷியின் ரியாக்‌ஷன் சூப்பர். “உனக்கு அவர் வித்தியாசமென்றால், அவருக்கு நீயும் வித்தியாசம்தான்” என சொல்வது அழகு.

 ஷஷியின் அக்கா மனு மறைந்த தனது கணவரை பற்றி பேசும் இடம் அழகு. தனது மனைவியை புரிந்து கொள்ளாத ஷஷியின் கணவரின் கேரக்டரை வைத்த டைரக்டர், மனு தன் கணவரைப்பற்றி நெகிழ்வதாகா வைத்திருப்பது நல்ல அப்ரோச்.

 அதிகம் அக்கறை எடுத்துக்கொள்ளாத கணவர், ஆனால் அதேவீட்டில் அனுசரணையான மாமியார். இதுவும் பாசிடிவ் அப்ரோச். பிடிச்சிருக்கு.

ஷஷியின் லட்டுவை ஊரே புகழுது. நிறைய்ய ஆர்டர்கள் குவியுது. ஆனா அதை கணவரிடம் பகிர்ந்துக்க நினைக்கறப்ப அவர் இதை ஒரு பெரிய விஷயமாவே எடுத்துக்கலை. முதல் நாளே ஷஷிக்கு ஆங்கில வகுப்பில் பாராட்டு.

 Laurent தான் ஒரு சமையல்கலைஞர் என்று சொல்ல, ஆண்கள் சமைத்தால் அது கலை, ஆனால் அதுவே பெண் சமைப்பது சாதாரண விஷயம் என்று சொல்லுமிடத்தில் பல பெண்கள் தன்னை அந்த இடத்தில் வைத்து பார்த்திருப்பார்கள். நீங்கள் வீட்டில் சமைப்பதில் அன்பு இருக்கிறது. அது உணவுக்கு மேலும் ருசியைக்கூட்டுகிறட்து என Laurent வசனமும் ரொம்ப அருமை.

 Laurent தனது அன்பை ஷஷியிடம் வெளிப்படுத்தியதும் ஷஷி தனது அக்காள் மகளிடம்,” நான் எதிர்பார்ப்பது காதலை அல்ல, ஆங்கிகாரத்தை, மரியாதையை” என சொல்வது அழகு்.


ஆங்கிலத்தில் 5 நிமிடம் பேசினால் அந்த வகுப்புக்களில் கலந்து கொண்டதற்கான சர்டிபிகேட் கிடைக்கும். ஆனால்  போகமுடியாத சூழல் உருவாக, ஷஷியின் அக்கா மகளாக வரும் ப்ரியா ஆனந்த் ஷஷியின் வகுப்பு நண்பர்களையும், ஆசிரியரையும் திருமணத்திற்கு அழைத்து, அங்கே ஷஷி ஆங்கிலத்தில் பேச ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறார். அங்கே ஷஷியின் பேச்சு சிம்பிளி சூப்பர்ப். வசன கர்த்தாவுக்கு என் பாராட்டுக்கள்.

திருமணத்திற்த்திற்கான அர்த்தம் தரும் மெசெஜ்:

 Laurent தனது அன்பை ஷஷியின் ஏற்பாளா என கேட்கும் முன்பாகவே “ என்னை எனக்கு உணரவைத்ததற்கு நன்றி” என நாசுக்காக சொல்வது சூப்பர். ஆனாலும் படம் பார்த்து முடித்தபின் மனது கொஞ்சம் கனமாகவே இருக்கிறது. அதுதான் படத்தின் வெற்றியோ!!!!


 தரமான படத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே வேளையில் இனி ஸ்ரீதேவி தொடர்ந்து நடிக்கும் பட்சத்தில் இவ்வளவு ஹெவியான, அதே சமயம் நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 14 வருடங்களுக்கு பிறகான அவருடைய இந்தப் படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்திருப்பதால் வந்திருக்கும் எதிர் பார்ப்பு அது.

 படத்தில் இந்தக்காட்சிகளை நீக்கிவிட்டார்களாம். நல்லாத்தானே இருக்கு!!!
 

4 comments:

ஆத்மா said...

நீங்க இவ்வளவு நாளுக்கப்புரமாவது விமர்சனம் எழுதிறீங்க,,,
நான் இன்னமும் இந்தப் படம் பார்க்கவேயில்லை...

நல்ல அலசல்

புதுகைத் தென்றல் said...

வாங்க ஆத்மா

ஆஹா.... நீங்களும் என்னமாதிரிதானா!!! உங்களுக்கு இந்த படம் பார்க்க வாய்ப்பு சீக்கிரமா கிடைக்க வாழ்த்துக்கள்.

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

பார்க்க நினைத்திருக்கும் படம்....

எப்போது என்பது தான் பெரிய கேள்விக்குறி! :)

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

நானும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா எப்படி பாத்திட்டேன்.

வருகைக்கு மிக்க நன்றி