Tuesday, November 27, 2007

அம்ச்சி மும்பை!!!!


கல்லூரி விடுமுறைக்கு மும்பையில் இருக்கும்
பாட்டி வீட்டிற்கு போயிருந்தபோது எனக்கு
வேலை கிடைக்க (மிச்ச 2 வருஷத்தை
அஞ்சல் வழியில் முடித்தேன்) சந்தோஷமா
ஜாயின் செஞ்சேன். மும்பையில் வாழ்ந்த
அந்த 3 வருடங்களும் என் வாழ்வில் பொற்காலம்.
அம்மம்மா இருந்தது " வசாய் ரோடு" எனும் இடத்தில்.
வேலை stock exchange building - ற்கு எதிரில். தினமும்
வசாய் - சர்ச்கேட் 1 1/2 மணி நேரம் காலை, மாலை
பயணம். சர்ச்கேட்டில் இறங்கி 15 நிமிட நடை.
முதல் நாள் டிரெயினில் ஏறத்தெரியாமல்
கஷ்டப்பட்ட நான் 3ஆம் நாளே ஓடும்
ரயிலில் ஏறி சன்னல் சீட் பிடித்து பயணம்
செய்ய ஆரம்பித்தேன்.
(காலை 8.21 வசாய் லோக்கல், மாலை 6.38 விரார் வண்டி
(சர்ச்கேட்டிலிருந்து)சன்னல் சீட் என்னுடையது
என்பது எழுதப்படாத சட்டம். )
1 1/2 மணி நேரப்பயணம் போரடிக்காமல்
நல்ல தோழிகள் கிடைத்தார்கள்.
காலை டிரெயினில் உடன் வருபவர்கள்
பெரும்பாலும் திருமண மானவர்கள்.
அதனால் என் சீட்டை அவர்களுக்கு
கொடுத்துவிட்டு அவர்கள் மடியில் அமர்ந்து
பயணம். (பாவம் வீட்ல வேலை செஞ்சுட்டு
வர்றாங்கல்ல அதனால. ) பொதுவா காலை
நேரங்கறதனால் ஸ்லோகம் படிக்கிறது
இப்படி பொழுது போகும்.
மாலை சீனே வேற. லேடிஸ் டப்பாவே அதிரும்படி
பெட்டியைத் தட்டிக்கொண்டு "அந்தாக்ஷரி"
பாடிக் கொண்டு போகும் இன்னோரு செட் தோழிகள்.
( என் பெரிய மாமா கூட சொல்வார், " நீயூசன்ஸ்
கேசில் உள்ளே போட்டுடப்போறாங்கன்னு. ஹி ..ஹி..
நாம் அதுக்கெல்லாம் அசர்ர ஆளா? கூட பாடற
தோழிகள்ல ஒருத்தி போலிஸ், இன்னொருத்தி
வக்கீலாச்சே!!!!!!!)
இப்படி எல்லாம் எஞ்சாய் பண்ணாலும் கத்துகிட்டது நிறையை...........
ஓடும் ரயிலில் இரவு சமயலுக்கு காய்கறி நறுக்கி
போட்டுக்கொண்டு,வீட்டுக்கு போய் சமைத்து
சாப்பிட்டு திரும்பவும் அடுத்தநாளுக்கு ஓட்டம்.
இவர்களைப் பார்த்து நானும் வேலைகளுக்கு
அசராமல் நேரத்தை திட்டமிடகற்றுக் கொண்டேன்.
ஸ்வெட்டர், மற்றும் இன்ன பிற கைவேலைகளை
ஓடும்ரயிலில் செய்யும் லாவகம் எனக்கும் வந்தது.
எலெக்டிரிக் டிரெயின் தான் அங்கு எல்லாம்.
மழையினால் மும்பை ஸ்தம்பித்துவிதும். டிரெயினில்
போனால் 1/2 மணி நேரத்தில் சேர்ந்துவிடும் "அந்தேரி"
டிரெயின் கேன்சல் ஆனால் பஸ்சில் 3 மணி நேரம் பயணித்து
அதன் பிறகு வசாய் செல்லும் டிரெயின் start ஆகும் வரை
ஸ்டேஷனிலேயே உட்கார்ந்திருக்கணும்
(சில நேரம் என் மாமாக்கள் உடன் இருப்பர்)
லுவலகத்திலிருந்து வீடு திரும்ப முடியாமல் திண்டாடி,
தடம்புரண்ட ரயிலால்4 கி.மீ நடந்தது போன்றவை என்
தன்னம்பிக்கைக்கு உரம் சேர்த்தன.
கூட்டம், அவசர யுகம் என்பதாலேயே எனக்கு
மும்பை மிகவும் பிடிக்கும். (சில பேருக்கு இதனாலேயே
பிடிக்காது.
மொத்தத்தில் மும்பையில் நான் இருந்த அந்த
3 வருடங்களால் தான் எனக்கு, உலகம் என்பது
என்ன? என்று தெரிந்தது. பலதரப்பட்ட மக்கள்,
பழகும் விதம் புரிந்தது. நல்லவர், கெட்டவர் யார்
பாகுபடுத்திக் கொள்ள தெரிந்தது. பொதுவாக "மதறாஸி"
என்று தனிமைப்படுத்தாத நல்ல நட்பு கிடைத்தது
ஆண்டவன் அருள். முன்பே சரளமாக இந்தி பேசினாலும்
(visharad poorvaradh முடிச்சிருக்கேன்) பாஷை சுத்தமாக
மேலும் இலகுவாக, இயல்பாக பேச முடிந்தது.
என்னை எனக்கு உணர்த்தியது மும்பை.
இன்று நான் என்னவாக இருக்கிறோனோ
அது மும்பை கற்றுக்கொடுத்தது. தைரியசாலியாக,
இனிமையான தோழியாக என்னை அறிந்தவர்கள்
சொல்கிறார்கள். நான் மும்பைக்கு நன்றி சொல்கிறேன்.

4 comments:

ரசிகன் said...

உங்களோட மலரும் நினைவுகள் ரொம்ப அருமையா இருக்குங்க.. இத்தனை சுவரஸ்யமா எழுதறதுக்கு.. ரொம்ப திறமை வேனுங்க.. அருமையா இருக்கு.. உங்க நினவுகளை படிக்கும் போது.. அதை ஒத்த சுய மலரும் நினைவுகளை எல்லாருக்கும் நினைவுப்படுத்தும்/..

நிறைய இதுபோல நீங்க பாத்த,ரசிச்ச சம்பவங்களை எழுதுங்க.. சூப்பராயிருக்கு..

pudugaithendral said...

தங்களின் ஊக்குவித்தலுக்கு மிக்க நன்றி.

இன்னும் வரும் பாருங்க.

- யெஸ்.பாலபாரதி said...

அட! நீங்களும் நம்ம ஏரியா தானா? நானும் நல்லசோபாரா-வில் இருந்தேன். அதே காலை 8.21 விரார் லோக்கல் டவுனில் தான் பயணம் செய்திருக்கிறேன். ஆறாவது டப்பாவில் இரண்டாவது கேட் எங்கள் குழுவினுடையது. :)

அம்ச்சி மும்பய்யும், “மஹாராஷ்ட்ர மாஜா” பாடலும்.. அந்த ரயில் நட்புகளும் இன்னும் மறக்க முடியாதவை!

pudugaithendral said...

வாங்க பாரதி,

நான் வசாய் லோக்கலில் முன் லேடீஸ் டப்பாவில் தான் கொட்டம் அடித்து பயணித்தேன். உங்களுக்கும் அதே போன்ற இனிமையான ஞாபகம் இருப்பது மகிழ்ச்சி.