Monday, November 26, 2007

saawariya?!


நேத்து சாவரியா பார்க்க போனேன்.

பாடல்கள் ரொம்ப நல்லாஇருக்கு,

சஞ்சய் லீலா பன்ஸாலியின் படம்,

நம்ம Tezab புகழ் அனில்கபூர் பொண்ணும்,

Bobby புகழ் ரிஷிகபூர் மகனும்

நடிச்சிருக்காங்லேன்னுதான் போனேன்.


பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு." மாஷா அல்லா",

"ஜப்ஸே துமே தேகா" " சாவரியா" அகிய பாடல்கள்

நல்லாவே இருக்கு.


கத என்னங்கிரீங்களா? கத பெருசா ஒன்னும் இல்ல.

தமிழ்ல்ல "இயற்கை" அப்படின்னு ஒரு படம் வந்துச்சே

அதே தான் இது.


ராணிமுகர்ஜி "அந்த" மாதிரி பெண்ணாக வருகிறார், அந்த

பகுதியில் இருக்கும் பார் ஒன்றில் பாடும் இளைஞன்

தான் ஹீரோ. பெற்றோரை இழந்த, கண் தெரியாத பாட்டியின்

வள்ர்ப்பில் இருக்கும் ஹீரோயின், அந்த வீட்டில் வாடகைக்கு வரும்
"சல்மான்" இடம் மனதை பரிகொடுக்கிறார். இது தெரியாமல் ஹீரோ
காதலிக்க மீதி கதை அண்ட் கிளைமாக்ஸ் " இயற்கை" படம் போலத்தான்.

மிக மோசமான விஷயம் - "பாய்ஸ்" படத்தில் சித்தார்த் மவுண்ட் ரோடில் ஓடுவது போல், இந்த படத்தில் இடுப்பில் கட்டியிருக்கும் ஒரு டவலையும்
ஹீரோ எடுப்பது போன்ற ஒரு காட்சி நெருடுகிறது.


படத்தில் ஹீரோ தங்கி இருக்கும் வீட்டு பாட்டி தான் சூப்பர்.
மிக நன்றாக நடித்திருக்கிறார். இதைத் தவிர
சொல்லிக்கும்படி ஏதும் இல்ல.


இந்த படத்தின் மொத்த காட்சிகளும் செட்டிலேயே
எடுத்திருக்கிறதனாலயும் , வலுவில்லாத கதையினாலயும்

படம் நடுவில் போரடிக்க ஆரம்பிச்சுடுது.



சாவரியா என்றால் - அன்பான்வள்/ன் அப்படின்னு அர்த்தம்.

சஞ்சய் லீலா பன்ஸாலியின் இந்த படம் பார்க்க போறவங்களை பார்த்து "சாவரியா" (சாகறியா?) ன்னு கேக்கறமாதிரி இருக்கு.
இதுக்கு "ஒம் சாந்தி ஓம்" எவ்வளவோ பரவாயில்லை.

4 comments:

ரசிகன் said...

// இந்த படம் பார்க்க போறவங்களை பார்த்து "சாவரியா" (சாகறியா?) ன்னு கேக்கறமாதிரி இருக்கு.//

ஹா..ஹா.. இது சொம்மா நச்சுன்னு இருக்கு....

pudugaithendral said...

//ஹா..ஹா.. இது சொம்மா நச்சுன்னு இருக்கு....//

பின்னூட்டதுக்கு நன்றி

மங்களூர் சிவா said...

சாவரியா,OSO ரெண்டுமே நல்லா இருக்கறதா சொல்லறாங்க!

பாக்கணும்!!

பதிவு நல்லா இருக்கு!

pudugaithendral said...

சிவா,

பார்த்துட்டு சொல்லுங்க.