Wednesday, November 28, 2007

M.SC. HUSBANDOLOGY (முதுகலை இல்லறவியல்) பாடம் - 1

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒரு பிரபல வாரப் பத்திரிககயில் சொல்லியிருந்த கதையோடு பாடத்தை துவங்கலாமா?

கடற்கரையில் ஒரு பெண், கூழாங்கல் ஒன்றைக் கண்டெடுத்தாள்.
சுத்தம் செய்ய அதைத்தேய்த்தாள். எதிரில் ஒரு பூதம் தோன்றியது.



"என்னை விடுவித்தற்க்காக் உன் விருப்பம் ஒன்றை நிறைவேற்றுகிறேன்.
என்ன வேண்டும்?" என்று கேட்டது.

"என் நாய்க்குட்டி பேசவேண்டும், பாட வேண்டும், பரத நாட்டியம் ஆட
வேண்டும்", என்றாள் அந்தப்பெண்.

பூதம் உதட்டை பிதுக்கியது. "அத்தனை சக்தி எனக்கு இல்லை. வேறு ஏதாவது
கேள்!" என்றது.

"அப்படியானால் அன்பானவனாக, நகைச்சுவை உணர்ச்சி மிகுந்தவனாக, வீட்டு வேலைகளில் உதவி செய்பவனாக, என்னையும் என் குடும்பத்தையும் மதிப்பவனாக, என்னிடம் பொய்யே சொல்லாதவனாக ஓர் ஆண்மகனை
எனக்குக் கணவனாகக் கண்டுபிடித்துக் கொடு!" எனக் கேட்டாள்.

பூதம் பெருமூச்சுவிட்டது... "முதல் ஆசையே பரவாயில்லை. உன் நாய்க் குட்டி எங்கே என்று கேட்டதாம்.

அங்கே என்ன ஒரு வெடிச்சத்தம்? இதயம் வெடிச்சதா? கற்பனை நீர்க்குமிழி
உடஞ்சிடிச்சா? இது தாங்க நிசம்.


சினிமால காட்ற மாதிரி உருகி உருகி காதலிக்கிறது, அன்பாக, அனுசரணையாக பார்த்துக் கொள்வது, "நீயில்லையேல், நானில்லையே",
இதெல்லாம் நிசத்தில சாத்தியம் இல்லீங்கோ!


யாரோ கோடில (கோடி வீட்டுல இல்ல) ஒருத்தர் வேணாம் இருக்கலாம்.


பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு கேட்கற பெத்தவங்க ரொம்ப குறைவு. " மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்காம். அதிர்ஷ்டக்காரி!!!!!!!!!!", "பெரியவங்களுக்கு தெரியாதா? பொண்ண என்ன கேட்டுகிட்டு" ங்கிற டயலாக்குகள் சர்வ சாதாரணம்.

பல திருமணங்கள் "லொளகீக" சமாசாரங்கள் ஒத்துப்போகிற காரணங்களால் மட்டுமே நடக்கிறது. அதுதான் உண்மை.

அதனால் தங்கமணிகள் எதிர்பார்ப்புகளை தவிர்த்துவிட்டு, மனதை
தேற்றிக்கொண்டு, " இது இப்படித்தான்"
என்பதை புரிந்துகொள்வது மிகமுக்கியமுங்க.



நான் வாழ்க்கையை மட்டும்தான் சொன்னேன். நீங்க ஏதும் தப்பா புரிஞ்சிகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல. :))


ஆனது ஆகிப்போச்சு, வருத்தப்படாம விவரமா இருங்க.அடுத்தவாரங்கள்ள
எப்படி சமாளிக்கிறதுங்க்ற பாடங்களோட வர்ரேன்.

25 comments:

ரசிகன் said...

// "அப்படியானால் அன்பானவனாக, நகைச்சுவை உணர்ச்சி மிகுந்தவனாக, வீட்டு வேலைகளில் உதவி செய்பவனாக, என்னையும் என் குடும்பத்தையும் மதிப்பவனாக, என்னிடம் பொய்யே சொல்லாதவனாக ஓர் ஆண்மகனை
எனக்குக் கணவனாகக் கண்டுபிடித்துக் கொடு!" எனக் கேட்டாள்.

பூதம் பெருமூச்சுவிட்டது... "முதல் ஆசையே பரவாயில்லை. உன் நாய்க் குட்டி எங்கே என்று கேட்டதாம்.//

அப்பாவி ஆண்களின் சார்பில் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. முதல் வகுப்பிலேயே பெண்ணிய தென்றல் வீசுதுங்க்கோ....

ரசிகன் said...

//பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு கேட்கற பெத்தவங்க ரொம்ப குறைவு. " மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்காம். அதிர்ஷ்டக்காரி!!!!!!!!!!", "பெரியவங்களுக்கு தெரியாதா? பொண்ண என்ன கேட்டுகிட்டு" ங்கிற டயலாக்குகள் சர்வ சாதாரணம்.

இது நெசந்தானுங்க... அப்பத்தேன் படிச்சி முடிச்ச என்னோட தோழிக்கு திருமணம் நிச்சயமானபோது , மாப்பிள்ளையை பிடிச்சிருக்கான்னு சொம்மா வெளையாட்டுக்காகதேன் கேட்டேனுங்க.. "ரொம்ப தேங்க்ஸ்டா ..அட்லிஸ் நீ ஒருத்தனாவது கேட்டியே"..இன்னு ரொம்ப சீரியஸ்ஸா சொன்னா.. . (படிப்பு முடிஞ்சதும் யாராவது ஒருத்தன்(?) கையில புடிச்சி குடுத்தடுனும்ன்னு படிக்க வைக்கிறதுக்கு முன்னாடியே அவிங்க அப்பா எடுத்த முடிவாம்..)
"அதென்ன பொண்ணு பாக்கறது?.. நாந்தேன் மாப்பிள்ளை பாப்பேன் "னு சொல்லி சாதிச்சு காட்டிய ஒரு தோழியும் எனக்கு உண்டு(மாட்டனது நம்ம சுரேஷுதான்..மச்சான், சமைக்கத்தெரியுமா? ஆடத்தெரியுமான்னெல்லாம் கேய்ப்பாய்ங்களா? ன்னு பயந்துக்கிட்டிருந்தான்.)..

ரசிகன் said...

பல திருமணங்கள் "லொளகீக" சமாசாரங்கள் ஒத்துப்போகிற காரணங்களால் மட்டுமே நடக்கிறது. அதுதான் உண்மை.//
நிதர்சனமான உண்மை.. பொருத்தங்கள்.. வாழபோகின்ற ரெண்டு பேருக்குமே கொஞ்சமும் சம்பந்தமில்லாத.. ஒரு மனிதரால் (கேட்டாக்கா ஜோசியருங்கராய்ங்க..)நிர்ணயம் செய்யப்படுகின்றன..

ரசிகன் said...

// எப்படி சமாளிக்கிறதுங்க்ற பாடங்களோட வர்ரேன்//
அதெல்லாம் சரிங்க தெனறல்.. மொதல்ல நீங்க யாரு கட்சின்னு சொல்லுங்க.. தங்கமணியா?..ரங்கமணியா?..ஹிஹி..
ஆரம்பத்துலயே கிளியர் பண்ணிகோனுமில்லையா?..(ரெண்டு பேரோடதுமுன்னு சமாளிக்கப்டாதுங்க்கோ...)..

ஆரம்பமே அசத்தலாயிருக்கு... கலக்குங்க...

(ஆமா தமிழ்மணத்துல சேந்துருச்சா?..)

pudugaithendral said...

ரசிகன்

//அப்பாவி ஆண்களின் சார்பில் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. முதல் வகுப்பிலேயே பெண்ணிய தென்றல் வீசுதுங்க்கோ....//

வன்மையாக கண்டித்தாலும் உண்மை அதானே?

pudugaithendral said...

என் சப்போர்ட் தங்கமணிகளுக்காகத்தான் ரசிகன். தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி.

பாடம் ஆரம்பிக்கிறோம்னு சொல்லிட்டோமேன்னு ஜுரத்துடன் பதிவு போட்டேன். (காலையிலேதான் அப்பலோ கூட்டிட்டு போனேன். டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொன்னா நீ கணிணீல என்ன பண்றன்னு அய்த்தான் சவுண்ட் விட்டதையும் கேட்கல). பின்னூட்டத்தை காணமே. நல்லா இல்லையோன்னு நினைச்சேன். நன்றி

தமிழ்மணத்துலேர்ந்து பதில் வரலே.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
அப்பாவி ஆண்களின் சார்பில் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
==>

வழிமொழிகிறேன்.

//பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு கேட்கற பெத்தவங்க ரொம்ப குறைவு. //
இதெல்லாம் மாறிட்டு வருதுன்னு நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண் "பையன் ரொம்ப குள்ளம்.கல்யாணத்துக்கப்புரம் என் சம்பளம் எங்க வீட்டுக்குன்னு பையன் ஒத்துக்கலை"ன்னு பையனை நிராகரிச்சுட்டார்.

<=
தமிழ்மணத்துலேர்ந்து பதில் வரலே.
=>
தமிழ்மணத்திலிருந்து தேர்வு எதுவும் வைப்பர்களோ?!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
"அப்படியானால் அன்பானவனாக, நகைச்சுவை உணர்ச்சி மிகுந்தவனாக, வீட்டு வேலைகளில் உதவி செய்பவனாக, என்னையும் என் குடும்பத்தையும் மதிப்பவனாக, என்னிடம் பொய்யே சொல்லாதவனாக ஓர் ஆண்மகனை
எனக்குக் கணவனாகக் கண்டுபிடித்துக் கொடு!" எனக் கேட்டாள் =>

இது ரொம்ப ஓவர்.

ரங்கமணி நகைச்சுவை நடிகனாகவும், சமயற்காரனாகவும், வேலைக்காரனாகவும், கார் டிரைவராவும் இன்னும் பிற வேலைகள் தெரிந்தவனா இருக்கணும்னா எப்படிங்க?

இப்படித்தான் (மகாபாரத) திரௌபதி வரம் கேட்டாராம்.பிறகு நிலைமைப் பார்த்திங்கள்ள.

pudugaithendral said...

வாங்க சாமான்யன்

//ரங்கமணி நகைச்சுவை நடிகனாகவும், சமயற்காரனாகவும், வேலைக்காரனாகவும், கார் டிரைவராவும் இன்னும் பிற வேலைகள் தெரிந்தவனா இருக்கணும்னா எப்படிங்க?

இப்படித்தான் (மகாபாரத) திரௌபதி வரம் கேட்டாராம்.பிறகு நிலைமைப் பார்த்திங்கள்ள.//

அப்ப ரங்கமணிகள் மட்டும் தங்கமணிகள் சமையல்காரியாக, சம்பளம் இல்லா வேலைக்காரியாக, மதியுக மந்திரியாக, பிள்ளை பெறும் எந்திரமாக, பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்கும் தாயாக, குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து சுமக்கும் சுமை தாங்கியாக இருக்கணும்னு எதிர்பார்க்கலாமா?

எந்த ஊர் ஞாயம்ங்க இது????!!!!!!!!

pudugaithendral said...

சாமான்யன் said,

//எனக்குத் தெரிந்த ஒரு பெண் "பையன் ரொம்ப குள்ளம்.கல்யாணத்துக்கப்புரம் என் சம்பளம் எங்க வீட்டுக்குன்னு பையன் ஒத்துக்கலை"ன்னு பையனை நிராகரிச்சுட்டார்.//

நல்ல முன்னேற்ங்க. அங்கங்கே ஏதோ ஒன்னு, ரெண்டுதான் இப்படி ஆகிறது.

ரசிகன் said...

// பாடம் ஆரம்பிக்கிறோம்னு சொல்லிட்டோமேன்னு ஜுரத்துடன் பதிவு போட்டேன். (காலையிலேதான் அப்பலோ கூட்டிட்டு போனேன். டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொன்னா நீ கணிணீல என்ன பண்றன்னு அய்த்தான் சவுண்ட் விட்டதையும் கேட்கல).//

லேட்டாத்தேன் இதப் பாத்தேன்.இப்ப எப்படி இருக்கு?.மொதல்ல உடல் நலத்த பாத்துக்கோங்க.. பாடமெல்லாம் திரட்டில சேந்தப்பறம் பாத்துக்கலாம்.
அப்பறம் ஹஸ்பண்டாலஜி பாடங்களை உங்க ஜத்தானுக்கும் காட்டி ஒப்பினியனை கேட்டுக்கிட்டாக்கா..எங்க ரங்கமணி சைடுலயும் சப்போர்ட் இருக்குமில்ல..ஹிஹி...

அன்புடன் நண்பன்

pudugaithendral said...

ரசிகன்

//பாடமெல்லாம் திரட்டில சேந்தப்பறம் பாத்துக்கலாம்.//


உடம்பு நல்லா இருக்கு. அய்த்தானும் பாடங்களைப் பார்த்துகிட்டு தான் இருக்கிறார். திரட்டில எப்போ சேர்றது?
பாடம் வாட்டுக்க நடக்கட்டும்.

MyFriend said...

:-))))))

MyFriend said...

////பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு கேட்கற பெத்தவங்க ரொம்ப குறைவு. " மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்காம். அதிர்ஷ்டக்காரி!!!!!!!!!!", "பெரியவங்களுக்கு தெரியாதா? பொண்ண என்ன கேட்டுகிட்டு" ங்கிற டயலாக்குகள் சர்வ சாதாரணம்.
//

எல்லா இடத்துலேயும் இப்படித்தான் போல.

pudugaithendral said...

வாங்க மைஃபிரண்ட்,

எல்லா ஊர்லயும் இப்படித்தான்.

பாச மலர் / Paasa Malar said...

Husbandology நல்லாருக்குதுங்க...ஆனாலும் பெண்கள் செய்யற தப்பையும் அப்பப்ப சுட்டிக்
காண்பிக்கனும்...இரண்டு பக்கமும் காமிங்க..சுவாரசியாமாருக்கும்..

வாழ்த்துகள்

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

சொல்லிட்டீங்கள்ள கலக்கிடுவோம்.

ஒவ்வொரு புதனும் பாருங்க. உங்க ஐடியாவையும் மெயிலுக்கு அனுப்புங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
பாச மலர் said...
ஆனாலும் பெண்கள் செய்யற தப்பையும் அப்பப்ப சுட்டிக்
காண்பிக்கனும்... ==>
பெண்கள் என்னைக்கைகுதான் தவறு செஞ்சிருக்காங்க =)) அவங்க எல்லாம் ரொம்ப சரியாய்த்தானே செய்றாங்க. =)))

pudugaithendral said...

சாமான்யன் said
//பெண்கள் என்னைக்கைகுதான் தவறு செஞ்சிருக்காங்க =)) அவங்க எல்லாம் ரொம்ப சரியாய்த்தானே செய்றாங்க. =)))//

இதுல உள்குத்து ஏதும் இல்லாமல் இருந்தால் சரி.

நாளைக்கு பாடத்தில் சந்திக்கலாம்

பினாத்தல் சுரேஷ் said...

//இதெல்லாம் நிசத்தில சாத்தியம் இல்லீங்கோ!// இதுவரைக்கும் ஓக்கேதான்.. அதுக்கு காரணம் யாருன்னுதான் கேள்வி கேக்கிறோம்.

ஜக்கி வாசுதேவ் பழைய ஆணீய ஜோக்கை டெண்டிங் பண்ணி பெண்ணீயமா உலவவிட்டா எங்களுக்குத் தெரியாதா? ஒரிஜினல் லின்க் நாளைக்கு தேடி தரேன்.

மத்தபடி 1960லே வந்திருக்கவேண்டிய தொடர் இது. ஆண்டிக் வேல்யூபடி நல்லா இருக்கு!

(ஒரு அட்வைஸ்: தமிழ்மணத்துல வரவரைக்கும், இதை கோட் பண்ணிப் போடற கமெண்டுகளில் லின்க் கொடுங்க)

pudugaithendral said...

பினாத்தல் said
//இதெல்லாம் நிசத்தில சாத்தியம் இல்லீங்கோ!// இதுவரைக்கும் ஓக்கேதான்.. அதுக்கு காரணம் யாருன்னுதான் கேள்வி கேக்கிறோம்.

ஜக்கி வாசுதேவ் பழைய ஆணீய ஜோக்கை டெண்டிங் பண்ணி பெண்ணீயமா உலவவிட்டா எங்களுக்குத் தெரியாதா? ஒரிஜினல் லின்க் நாளைக்கு தேடி தரேன்.

மத்தபடி 1960லே வந்திருக்கவேண்டிய தொடர் இது. ஆண்டிக் வேல்யூபடி நல்லா இருக்கு!//

வாங்க, வாங்க
எதிர்கட்சி பொரொபசர் வாங்க.

லேட்டா வந்துட்டீங்க.
1960 ல வந்திருக்க வேண்டிய தொடர் அப்படிங்கறதை வன்மையா கண்டிக்கிறேன். (கணிணிஐ ஒழுங்கா எல்லோரும் உபயோகிக்க ஆரம்பிச்சதே கடந்த 13 வருஷமாத்தான்)

எதிர்கட்சியில இருக்கிறதுனால எதிரிகணுமேனு ஏதாவது சொல்லிடறதா?
ஆன்டிக் வேல்யுபடி நல்லா இருக்கறதா சொன்னதைச் சொன்னேன்.

நீங்க எழுதறதில மாத்திரம் புதுமை இருக்கிற மாதிரி நினைப்பா.

ரிப்பீட்டு அப்படின்னு பதிவு போட்டுட்டு வர்றேனெ வேற எதுனாலன்னு நினைச்சீங்க?

நீங்க லின்க் தேடுங்க இல்ல என்ன வேணாம் பண்ணுங்க எனக்கு மாத்திரம் சந்தேகமாக இருக்கு,

பாடம் ஆரம்பிச்சு ஒருவாரம் கழிச்சு லேட்டா வந்து பரபரப்பா பின்னூட்டம் போட்டுட்டா நீங்க சொல்றதை எல்லோரும் நம்பிடுவாங்களா என்ன?

pudugaithendral said...

//ஒரு அட்வைஸ்: தமிழ்மணத்துல வரவரைக்கும், இதை கோட் பண்ணிப் போடற கமெண்டுகளில் லின்க் கொடுங்க)//
இதெல்லாம் இன்னும் பழகணும். யாராவது சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்கும்

மங்களூர் சிவா said...

//
நீங்க ஏதும் தப்பா புரிஞ்சிகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல. :))
//
ஓ தங்கம்ணிகளே ஃப்யூச்சர் தங்கமணிகளே நீங்க புரிஞ்சிப்பீங்களா?? (தப்பாவோ சரியாகவோ அது அடுத்த விசயம்)

மங்களூர் சிவா said...

//
டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொன்னா நீ கணிணீல என்ன பண்றன்னு அய்த்தான் சவுண்ட் விட்டதையும் கேட்கல
//
நம்ப என்னைக்கு அவர் சொல்றத எல்லாம் காதுல வாங்கியிருக்கோம்!?!?!?!?!?

(இந்த பின்னூட்டம் வெளிவரும் என்ற நம்பிக்கையில் ஓர் அப்பாவி ஃப்யூச்சர் ரங்கமணி)

நந்து f/o நிலா said...

எனக்கொரு டவுட் கல்யானம் ஆகிட்டாலே கனவன் லாம் நாய்குட்டிதானே? :O