Saturday, December 08, 2007

நாணயத்தின் மறுபக்கம்.

நான் பார்த்த வகையில் சில (பல) திருமணமான பெண்களைப் பார்க்கும் போது என் மனதில் எழும் கேள்வி, " இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது"?!

தவறாக எதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்!!

அடிக்கடி அம்மா வீட்டுக்கு போவதைத்தான் கேட்கிறேன். கணவன் - மனைவி சண்டை, மாமியார் சண்டை, உறவுகளைப் பார்க்க, அம்மா, அப்பாவைப் பார்க்க, அது.... இது.... என்று போய் டேரா போட எப்படி முடிகிறது? இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் ஓய்வெடுக்க பிறந்த வீட்டிற்கு போவார்கள். எப்படிங்க?

எனக்குத் தெரிந்த ஒரு பெண். தாய்வீடும் உள்ளூரிலேயே அமைந்து விட
ஒவ்வொரு வெள்ளி இரவும், கணவனோடு பிறந்த வீட்டிற்கு போய்விடுவார்.
சனி,ஞாயிறு இரண்டு நாளும் குழ்ந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு இருவரும் ஊர் சுற்றுவார்கள். என்ன கொடுமை இது? இப்படியே கழியும் ஒவ்வொரு வார விடுமுறையும். சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அந்தப் பெற்றோர்கள்
படும் கஷ்டம். பாவம் அவர்கள்.

வெளியூரில் இருக்கும் பெண்கள் கூட அம்மா வீட்டிற்கு அடிக்கடி போவார்கள். பிறந்த வீட்டு பாசம் இருக்க வேண்டியது தான். ஆனால் நம்
கடமையை விட்டு, பாரமாக (சத்தியமாக திருமணத்திற்கு பிறகு அடிக்கடி போய் தங்கும் பெண்கள் பிறந்த வீட்டிற்கு பாரம்தான். என்ன ?தன் மகளாயிற்றே என்று சொல்ல மாட்டார்கள்) ஏன் போகவேண்டும்.

ஓய்வெடுக்க அம்மா வீட்டிற்கு போபவர்களே!! ஓய்வெடுக்கப் போக அது என்ன ஹோட்டலா? ஓய்வு வேண்டுமானால் குடும்பத்துடன் (முடிந்தால் பெற்றவர்களையும் அழைத்துக் கொண்டு) ஏதேனும் ஊருக்கோ, ஹோட்டலில் தங்கி ஓய்வெடுங்கள்.


வயதான் பெற்றவர்கள் நம் வேலையாட்கள் அல்ல.
நமக்காக பாடுபட்டு, நம்மை வள்ர்க்க ஓடியாடி உழைத்தவர்கள் அவர்கள்.
வயதான காலத்தில் சற்று ஓய்வெடுக்கவேண்டாமா? அவர்களின் தனிமையில், ஆன்ந்தத்தில் குறுக்கிடுவது தவறல்லவா?

அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் உரிமையோடு பிறந்த வீட்டிற்கு செய்யலாமே?

( ஒரு தாய் 4 மணி நேரம் கலங்கிய கண்களுடன் புலம்பிய வார்த்தைகளின் சாராம்சம் இது)

டிஸ்கி: ஒவ்வொரு முறை மனைவி ஊருக்கு கிளம்பியதும் "அக்னிநட்சத்திரம்" ஜனக ராஜ் மாதிரி " என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் கணவன்மார்கள் என்னை மன்னீப்பீர்களாக!!!!



22 comments:

Sanjai Gandhi said...

நான் கூட எதோ நாணயம் விகடனோட மறுபக்கத்த சொல்லப் போறிங்களோனு நெனச்சேன் :)

என்ன ஆஷ் அண்ட் அம்ருதாவுக்கு பெட்டிஷனா இல்ல அப்ளிகேஷனா?
:))))))))))))

ஆனாலும் ஒரு நல்ல விஷயத்த வலியுறுத்தி இருக்கிங்க.. வாழ்த்துக்கள். இன்னும் எதிர்பார்க்கிறோம். :)

seethag said...

ver valid point puthugai.somehow indians have a tendency to take lot of thigns for granted.எதுக்கெடுத்தாலும்'நமக்குல்ல என்ன இருக்கு' ஆப்பிடிங்கவேண்டியது
, என் தங்கை சொன்னது,அவளுடய் அலுவலகத்தில் வேலை பர்ர்க்கும் ஒருவர் சொன்னாராம். 'பாவும் தனியாக இருக்கின்ஙளே,அமேரிக்காவுல
எங்க வீட்டுக்கெல்லாம் கூட வாங்க அப்பிடின்னு சொல்லிட்டு, அவருடய நண்பரின் மனைவி நிறை மாத கர்பிணி அவரைக்காட்டி'இவுன்ங்க வீட்டுக்கு கூட நீங்க போகலாமே சாப்பிடறதுக்குன்னாராம்..

இதே attitude தான் பெற்றோர் கிட்டயும். செய்யட்டுமேன்னு ..

pudugaithendral said...

நன்றி பொடியன்.

pudugaithendral said...

நீங்க சொல்றது சரி சீதா. இந்த மன நிலை மாறனும்.

பாச மலர் / Paasa Malar said...

வயதான தாய் தந்தையர் இப்படிப் படும் பாடு அதிகம்தான்...சின்ன வயதில் அவர்களிடம் சலுகைகள் எதிர்பார்த்தது போலவே வயதானாலும் எதிர்பார்ப்பது தவறு...நல்ல பதிவு..

பாச மலர் / Paasa Malar said...

புதுகை மூலமாக சீதாவுக்கு ஒரு செய்தி..சீதா வீட்டுக்கு வர்ற வழி தெரியலியே..
பின்னூட்டங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது...

pudugaithendral said...

வயதான தாய் தந்தையர் இப்படிப் படும் பாடு அதிகம்தான்...சின்ன வயதில் அவர்களிடம் சலுகைகள் எதிர்பார்த்தது போலவே வயதானாலும் எதிர்பார்ப்பது தவறு...நல்ல பதிவு..

கரெக்ட்டா சொன்னீங்க. இப்படி ஒரு கோணம் இருக்கும்னு நினைச்சு பார்க்காம இருக்கறதுதான் பிரச்சினை.

பிறந்தவீட்டுக்கும், புகுந்தவீட்டுக்கும் ஓடி ஓடியே தான் எந்த வீட்டைச்சேர்ந்தவள் என்ற நினைப்பு சிலருக்கு இல்லாமல் துயரத்துக்கு ஆளாகிறார்கள்.

மங்களூர் சிவா said...

//
டிஸ்கி: ஒவ்வொரு முறை மனைவி ஊருக்கு கிளம்பியதும் "அக்னிநட்சத்திரம்" ஜனக ராஜ் மாதிரி " என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் கணவன்மார்கள் என்னை மன்னீப்பீர்களாக!!!!
//
மைண்ட்ல வெச்சிக்கறேன், அனுப்பி வைக்கிறேன்!!!

மத்தபடி என் சிஸ்டர் வீடும் எங்க அண்ணன், அப்பா, அம்மா எல்லாம் ஒரே இடத்துல பக்கத்து பக்கத்து தெருல இருக்காங்க எங்க அப்பா அம்மா அப்படி நினைக்கிறாங்களான்னு தெரியலை.

உண்மையில் திருமணமான என் சிஸ்டர்தான் அவங்க வீட்டுலயும் எல்லா வேலையும் செஞ்சிட்டு வந்து எங்க உடம்பு முடியாத அம்மாவுக்கும் நிறைய வேலை செய்யறா

அதை சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்ளும் நாம் குறைந்த பட்சம் நானும் என் அண்ணனும் சந்தோசப்படுகிறோம்.

அவர்கள் வருவதையும் சந்தோசமாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மற்றபடி பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்த ஒவ்வொரு வாரமும் குழந்தையை அம்மாவீட்டில் விட்டுவிட்டு ஊர் சுற்ற செல்லும் பெண்மணிக்கு அவர் தாயார் அது தவறு என அறிவுறுத்த வேண்டும்.

சுரேகா.. said...

சிறப்பா சொல்லியிருக்கீங்க...அதுவும் இப்பதான் (4 நாள் முன்புதான்) தங்கமணிகிட்ட இதப்பத்தி சொல்லி அவுங்க அம்மாவ கஷ்டப்படுத்தவேண்டாம்னு சொன்னேன்.ஆனா வழக்கம்போல கிளம்பி போய்ட்டாங்க..!
அதுவும் போனில்..
" நல்லா ஜாலியா இருக்கேங்க..அம்மா என்னை ஒரு வேலையும் செய்யவிடறது இல்லை..நல்லா தூங்கி எழுந்திருக்கிறேன்.."ன்னு சந்தோஷம் வேற..

என்னாத்த சொல்வேனுங்கோ..

pudugaithendral said...

மங்களூர் சிவா said,

//உண்மையில் திருமணமான என் சிஸ்டர்தான் அவங்க வீட்டுலயும் எல்லா வேலையும் செஞ்சிட்டு வந்து எங்க உடம்பு முடியாத அம்மாவுக்கும் நிறைய வேலை செய்யறா

உதவுவது மகளின் கடமை.

அதை சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்ளும் நாம் குறைந்த பட்சம் நானும் என் அண்ணனும் சந்தோசப்படுகிறோம்.

அவர்கள் வருவதையும் சந்தோசமாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.//

எப்போதாவது வருவதற்கும்,அடிக்கடி வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது சிவா.
பிறந்த வீட்டிற்கு அடிக்கடி போகும் பெண்கள் புகுந்த வீட்டில் சரியாக மதிக்கப்படுவதில்லை.

இது நம் வீடு என்ற எண்ணம் இந்தப் பெண்ணிற்கு இல்லையோ என்று கணவன் உற்பட அனைவர்க்கும் தப்பான் அபிப்பிராயம் ஏற்படும்.

இதை எந்த தாயும் ஏற்கமாட்டாள்.
இது குறித்து தெரிந்து கொள்ள உங்கள் அம்மாவுடன் தனிமையில் பேசிபாருங்கள் தெரியும். (அவர்கள் தன்(பொதுவான)கருத்தை கூறுவார்கள்.

pudugaithendral said...

சுரேகா said,

// நல்லா ஜாலியா இருக்கேங்க..அம்மா என்னை ஒரு வேலையும் செய்யவிடறது இல்லை..நல்லா தூங்கி எழுந்திருக்கிறேன்.."ன்னு சந்தோஷம் வேற..

என்னாத்த சொல்வேனுங்கோ//

இது தான் சுரேகா, அறியாமை. இது முள்ளின் மீது சேலை விழுந்தது போல. பக்குவமாக பேசிப்புரிய வைக்க வேண்டிய விஷயம்.

பெண்ணின் பெற்றோருக்கு இதில் பெரும் பங்க இருக்கிறது.

இம்சை said...

டிஸ்கி: ஒவ்வொரு முறை மனைவி ஊருக்கு கிளம்பியதும் "அக்னிநட்சத்திரம்" ஜனக ராஜ் மாதிரி " என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் கணவன்மார்கள் என்னை மன்னீப்பீர்களாக!!!!

சீரியசா சொல்லரேன் நான் உங்களை மன்னிச்சிட்டேன்...

இம்சை said...

ஓய்வெடுக்க அம்மா வீட்டிற்கு போபவர்களே!! ஓய்வெடுக்கப் போக அது என்ன ஹோட்டலா? ஓய்வு வேண்டுமானால் குடும்பத்துடன் (முடிந்தால் பெற்றவர்களையும் அழைத்துக் கொண்டு) ஏதேனும் ஊருக்கோ, ஹோட்டலில் தங்கி ஓய்வெடுங்கள்.

நீங்க சொல்லரதுல இருந்து நான் கொஞ்சம் மாறுபடரேன், ஏன்னா நாங்க கூட அப்படித்தான்...

நாங்க போவது வருடத்துக்கு ஒரு முறை அதனால் அவர்கள் எங்களை எதுவும் செய்ய விடுவதில்லை...

குட்டி இம்சையை அவர்களிடம் விட்டு விட்டு தான் ஊர் சுத்துகிறோம் ஆனா அதில தான் அவங்களுக்கு மகிழ்ச்சி

இம்சை said...

வயதான் பெற்றவர்கள் நம் வேலையாட்கள் அல்ல.
நமக்காக பாடுபட்டு, நம்மை வள்ர்க்க ஓடியாடி உழைத்தவர்கள் அவர்கள்.
வயதான காலத்தில் சற்று ஓய்வெடுக்கவேண்டாமா? அவர்களின் தனிமையில், ஆன்ந்தத்தில் குறுக்கிடுவது தவறல்லவா?

அது தவறு இல்லங்க அதில் தான் அவங்களுக்கு ஆனந்தம், பேரன், பேத்திக்கு செய்யாம வெற யாருக்குங்க செய்ய போறாங்க

இம்சை said...

( ஒரு தாய் 4 மணி நேரம் கலங்கிய கண்களுடன் புலம்பிய வார்த்தைகளின் சாராம்சம் இது)

இது ஒரு 5% தான் மற்ற 95% அப்படி இல்லை என்று நான் நினைக்கிறேன்

pudugaithendral said...

இம்சை,

//சீரியசா சொல்லரேன் நான் உங்களை மன்னிச்சிட்டேன்...//

மிக்க நன்றிங்க

pudugaithendral said...

இம்சை சொன்னது

//நீங்க சொல்லரதுல இருந்து நான் கொஞ்சம் மாறுபடரேன், ஏன்னா நாங்க கூட அப்படித்தான்...//

//நாங்க போவது வருடத்துக்கு ஒரு முறை அதனால் அவர்கள் எங்களை எதுவும் செய்ய விடுவதில்லை...//

நாங்களும் அப்படித்தாங்க. இது நம்மை போன்றவர்களுக்கல்ல.


//குட்டி இம்சையை அவர்களிடம் விட்டு விட்டு தான் ஊர் சுத்துகிறோம் ஆனா அதில தான் அவங்களுக்கு மகிழ்ச்சி//

தாத்தா, பாட்டியின் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு கிடைக்கவேண்டும்.

எப்போதோ போபவர்களைப் பற்றி இல்லை பிரச்சினை. அடிக்கடி போகும் அம்மணிகளுக்காகத்தான்.

pudugaithendral said...

இம்சை சொன்னது,
//அது தவறு இல்லங்க அதில் தான் அவங்களுக்கு ஆனந்தம், பேரன், பேத்திக்கு செய்யாம வெற யாருக்குங்க செய்ய போறாங்க//

அய்யோ! நான் தவறுன்னு சொல்லவில்லை.

ஆனந்தமா செய்யட்டும். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. நான் சொல்வது அதைத்தான்.

pudugaithendral said...

இம்சை சொன்னது,
//இது ஒரு 5% தான் மற்ற 95% அப்படி இல்லை என்று நான் நினைக்கிறேன்//

நீங்கள் சொல்லும் குறைவான் விழுக்காடு இல்லை. 50 சதவிகிதம் இருக்கும். நான் பலர் சொல்ல கேட்டிருக்கிறேன்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நல்ல வேளை இதுக்கெல்லாம் ரங்கமணிகள்தான் காரணம்னு சொல்லாம விட்டீங்களே.நன்றி.

pudugaithendral said...

சாமான்யன் சொன்னது,
//நல்ல வேளை இதுக்கெல்லாம் ரங்கமணிகள்தான் காரணம்னு சொல்லாம விட்டீங்களே.நன்றி.//

இந்த பிளாக்கென்ன ரங்கமணிகள் எதிர்ப்புக்காக ஆரம்பிச்சேனா?

pudugaithendral said...

சாமான்யன் சொன்னது,
//நல்ல வேளை இதுக்கெல்லாம் ரங்கமணிகள்தான் காரணம்னு சொல்லாம விட்டீங்களே.நன்றி.//

இந்த பிளாக்கென்ன ரங்கமணிகள் எதிர்ப்புக்காக ஆரம்பிச்சேனா?