Sunday, December 23, 2007

மெகா ஸ்டார் தோசை.


இங்கே ஒரு ஹொட்டலக்கு போயிருந்தோம். மெனு கார்டில் வித்தியாசமாய் இருந்தது "ஸ்டீம்டு தோசா". மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு பிடித்தமான தோசை என்று வேறு போட்டிருந்தார்கள். எண்ணெய் இல்லா தோசை, அவித்தது என்று இருப்பதால் சாப்பிட்டு பார்கலாமே என்று ஆர்டர் செய்தேன்.
10 நிமிடத்தில் ஆவி பறக்க வந்தது தோசை. ஊத்தப்பம் மாதிரி இருந்தது. மிருதுவாக, வாயில் போட்டதும் கறைந்து போனது. (தொட்டுக்கொள்ள 4 வகை சட்னி தந்தார்கள். )சுவை என்றால் அப்படி ஒரு சுவை.சட்னியுடன் தரும் காரமில்லா சாம்பார் அந்த தோசைக்கு நல்ல காம்பினேஷன்.மைசூருக்கு ஷூட்டிங்கிற்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி போயிருந்த போது ஒரு சிறிய கடையில் இந்த ஸ்டீம்டு தோசா சாப்பிட்டாராம். சுவையில் மயங்கி செய்முறை கேட்ட போது அந்த ஹோட்டல் காரர்," இலவசமாக எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், ஆனால் செய்முறை சொல்ல மாட்டேன்"! என்றாராம்.
வீட்டிற்கு வந்து மனைவியிடம் தான் சாப்பிட்ட தோசை குறித்து சொல்லி கணவனும் மனைவியும் சேர்ந்து செய்து பார்த்தார்களாம். 3 முறை தோற்று 4ஆவது முறை வெற்றி கண்டார். தனது திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் செய்து கொடுத்து மகிழ்ந்தாராம். நம் பிரபுதேவா இந்த தோசையை மிகவும் விரும்பி சாப்பிடுவகாக (சும்மா 20 தோசை சாப்பிட்வாராம்.!!!!) மெகா ஸ்டார் சொல்லியிருக்கிறார்.
இப்போ இந்த தோசை சிரஞ்சீவி வீட்டில் தினமும் தாயாரிக்கப்படுகிறதாம். நாம அங்கெல்லாம் போய் சாப்பிட முடியாது. அதனால நாமஎல்லாம் சாப்பிடனும்னு நினைச்சு தான் சிரஞ்சீவி இந்க ரெசிபியை ஹோட்டல் சட்னீஸுக்கும் சொல்லிக்கொடுத்து இருக்காரு. அதனாலஅடுத்தமுறை ஹைதராபாத் வரும்போது இருக்கும் "சட்னீஸ்" ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு பாருங்கள்.
இந்த தோசை லஞ்சுக்கு கூட சாப்பிடலாம். ஒரு தோசை சாப்பிட்டாலும் போதும். சும்மா ருசிக்குதுல்ல!!!.:))


address:


CHUTNEY'S

SHILPA ARCADE,

ROAD NO.3

BANJARA HILLS,

NEAR ANDHRA JYOTHI,

BANJARA HILLS,

HYDERBAD.

PHONE NO: 040-23350569

12 comments:

சுரேகா.. said...

ஆஹா..!!!

நீங்கபாட்டுக்கும் சாப்புட்டுப்புட்டு..

அற்புதமா பதிஞ்சுவுட்டுர்றீங்க..!

இங்க நாக்கு காயுது..!
(இதுக்கு எப்புடி
மண்டைகாயுதுன்னு சொல்லமுடியும்?)

வாழ்த்துக்கள்..!
(புகையும் வாடை)

மங்களூர் சிவா said...

nalla irundhichaaaaaa!!

still in Hyderabad or back to home town?

ரசிகன் said...

ஆஹா.. இப்பிடி சாப்பாடு ஜட்டமாவே போட்டுத் தாக்கறிங்களே..

pudugaithendral said...

vaanga sureka,

naam petra inbam peruga iv vaiyagamnu oru aasai. adan ellorkum sonneen

pudugaithendral said...

siva new year kooda hyderabad than.

programme il chinna change. aduthavaram pdkt poitu 14th than colombo poren.

pudugaithendral said...

rasigan,

manishan ashta kashtam pattu samparikrathu intha vayathu paatuku thaane?

நிஜமா நல்லவன் said...

படிக்கும் போதே பஞ்சரா ஹில்ஸ் போகணும் போல இருக்கு. பிரபு தேவா இருபது தோசை சாப்பிட்டது இருக்கட்டும் நீங்க எத்தனை சாப்ட்டீங்க?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

.

pudugaithendral said...

muthal varugaikku nandri nijama nallavan.

uthappam sizela irukara dosai onnu sapidave kashtapattuten.

pudugaithendral said...

saamanyan siva,

enna mutrupulli mathiri etho sankethama solliirukeenga? puriyalaye!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

=))))
இது பின்னூட்டத்தில் ஒரு புது வகை(???) - "கோடிட்ட இடங்களை நிரப்பிக்கொள்க"ங்ற மாதிரி. குறைந்தபட்ச அர்த்தம் "உங்க பதிவைப் படிச்சாச்சு" . மென்பொருளில் சில இடங்களில் சில தகவல்களை கட்டாயமா தர வேண்டியிருக்கும்.அது தரலேன்னா,அந்த காரியத்தை,அந்த மென்பொருளில் தொட்ர்ந்து செய்ய முடியாது. அதாவது,விடுப்பு விண்ணப்பத்தில், விடுப்புக்கான காரணம் கேட்கும்னு வச்சுக்குவோம்.காரணம் கொடுக்கலைனா,விடுப்பு விண்ணப்பம் பூர்த்தியாகாது.அதை தவிர்க்கறதுக்காக,இப்படி புள்ளியோ அல்லது ஏதாவது ஒற்றை எழுத்து/வார்த்தையோ கொடுக்கிறதுதான்.
[அப்பாடி இவ்வளவு தட்டச்சு செய்றதுக்குள்ள தாவு தீர்ந்துபோச்சு].

Vinitha said...

ஏற்கனவே கேட்டது தான், பள்ளி விடுமுறை ( கிறிஸ்துமஸ், நியூ இயர் ) சமயம் அங்கு குடும்பத்தோடு எங்கு வந்து தங்கலாம்?

ரிசசென் சமயம், பெங்களூரிலிருந்து பட்ஜெட் வைத்து தான் வருவோம்!

ஒரு ரிப்பீட்டு பதிவு போடுங்க ப்ளீஸ்!