Saturday, December 29, 2007

இது அற்புத பிரபஞ்சம்!!!!

ஹைதராபாத்திலிருந்து விஜயவாடா செல்லும் ஹைரோடில், 28 கி.மி தொலைவில் 2000 ஏக்கர் நிலபரப்பில் பரந்து விரிந்து இருக்கிறது இந்த அற்புத பிரபஞ்சம். 1991 ஆம் ஆண்டு திரு.ராமோஜி ராவ் அவர்களால் உருவாக்கப்பட்டது "ராமோஜி பிலிம் சிட்டி".

திரைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்றவகையில் பிலிம் சிட்டியின் உள்ளே பல தோட்டங்கள், லண்டனில் இருப்பது போன்ற தெருக்கள், கடைவீதி, சிலை இல்லா கோயில் (தேவையான சிலையை வைத்தால் அந்த கடவுளின் கோயிலாக மாற்றிக்கொள்ள வசதியாக இருக்குமாம்), எல்லாம் "பிளாஸ்டர் ஆப்ஃ பாரிஸில் செய்து வைத்திருக்கிறார்கள்.
படத்தை முழுதுமாக முடித்து படப்பெட்டியை கையில் எடுத்துச் செல்லும் அளவிற்கு ரெடியாக, அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் நிற்கிறது ராமோஜி பிலிம் சிட்டி.
பிலிம் சிட்டியின் உள்ளே, ராமோஜி அவர்களுக்கு சொந்தமான "இ-டீவி" (11 மொழிகளில் 12 சானல்கள்) ஒளி-ஒலிபரப்படுகிறது. உஷாகிரண் மூவீஸ் அலுவலகமும் அமைந்திருக்கிறது.
துணை நடிகர்கள் தங்குவதற்காக பிரத்யேக தங்கும் விடுதிகள், நடிகர்கள் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக "தாரா" "சிதார" என இரண்டு நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கின்றன.
மெயின் ரோடில் இருந்து "யுரேகா" ஸ்டார்டிங் பாயிண்ட் வரை பேரூந்தில் அழைத்துச் செல்கிறார்கள். யுரேகாவிலிருந்து செட்டிங்குகளைப் பார்க்க மற்றொரு பேரூந்தில் அழைத்துச் செல்கிறார்கள். (கைடட் டூர்)
இப்போது நாம் யுரேகா, வைல்ட் வெஸ்ட் (தீனா படப்பாடல் படமாக்கப்பட்ட இடம்), வெளியே மொகல் கார்டன் உள்ளே மைசூர் கார்டன், ஏர்போர்ட், பஸ்ஸ்டாண்ட், போன்ற பல அற்புதங்களை பார்க்கலாம்.
ஏர்போர்ட் செட்டிங்க தத்ரூபமாந் இருக்கிறது. செக்கிங் கொவுண்டர், விமானத்தின் உள்ளே சீட்டிங் எல்லாம் ரியலாக இருப்பது போல் அமைத்திருக்கிறார்கள். விமான நிலையத்தின் கீழே பஸ்ஸ்டாண்ட்.
(ஹீரோவின் விமானம் மிஸ்ஸானால் பஸ் பிடித்து போக வசதியாக:)) )
பிலிம் சிட்டியை சுத்தி பார்க்க வருபவர்களுக்காக பலவித நிகழ்ச்சிகள் இருக்கின்றன். துவக்கவிழா மற்றும் 5.30 மணிக்கு என்டிங் ஷோ கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.
குழந்தைகள் விளையாட " பஃன் தூஸ்தான் ", கோகார்ட் மற்றும் பல இடங்கள் இருக்கின்றன.
1 நாள் டிரிப் ஆகவும் செல்லலாம். விரும்பினால் அங்கே ஹோட்டலில் தங்கி பொறுமையாக சுற்றி பார்க்கலாம். ஹோட்டலில் தங்கும் விருந்தினர்களுக்கு சுற்றி பார்க்கும் கட்ட்ணம் தனியாக வசூலிப்பது இல்லை. 1 நாள் டிரிப் செல்வதற்கு பெரியவர்களுக்கு 300/-, சிறியவர்களுக்கு 250/-.

7 comments:

pudugaithendral said...

இந்தப்பதிவு சற்று பெரிதாக இருப்பதாலும், பிளாக்கரில் புகைப்படங்கள் சரியாக அப்லோட ஆகததாலும் ராமோஜி பிலிம் சிட்டி புகைப்படங்கள் தனிப் பதிவாக வரும் என்பதை அனைவருக்கும் அறியத் தருகிறேன்.

மங்களூர் சிவா said...

ஹலோ ராமோஜிராவ் பிலிம் சிட்டி எல்லாம் போட்டோ போடுங்க !!

அப்புறம் அப்பிடியே அங்க வந்திருந்தவங்க "நல்லதா நாலு பேர்" போட்டோவும் போடுங்க!!!!

நிஜமா நல்லவன் said...

/விமான நிலையத்தின் கீழே பஸ்ஸ்டாண்ட்.
(ஹீரோவின் விமானம் மிஸ்ஸானால் பஸ் பிடித்து போக வசதியாக:)) )/ பஸ் பிடித்து திரும்பி போறதுக்கா இல்ல பஸ்ல போய் விமானத்த விரட்டி பிடிக்கவா?

சுரேகா.. said...

ரொம்ப சந்தோஷம்...!

ஹைதராபாத்தில் சுற்றுவதற்கு ஒரு அற்புத இடம் சொல்லியிருக்கிறீர்கள்.

நன்றி..!

ராமோஜி ராவ்தான், ஈநாடு தினசரி,
மார்கதர்சி சிட்ஸ்,
ப்ரியா உணவுகளுக்கும் தலைவர் !
மேலும் டால்பின் சங்கிலித்தொடர் விடுதிகள், கலாஞ்சலி போன்றவையும் அவருடையதுதான்.!

அதான் இந்த கலக்கு கலக்குறாரு!

pudugaithendral said...

வாங்க சுரேகா,

நீங்கள் சொல்வது சரி, பிலிம் சிட்டியில் இருக்கும் ஹோட்டல்கள் கூட டால்பின் குழுமத்தை சேர்ந்தது தான்.

Geetha Sambasivam said...

5 பின்னூட்டம் போட்டிருக்காங்க, அப்ப நீங்க?:

நாங்களும் வந்து பின்னூட்டம் போடுவோமில்ல?
உங்க ஊர் புதுக்கோட்டையில் ஒரு இரவு தங்க நேர்ந்த அனுபவத்தை எழுதப் போகிறேன்.

pudugaithendral said...

vaanga geetha

unga pathivukkaga kathirukom