சொன்னதை செய்யாத கிளிப்பிள்ளை
தங்கமணிகள் எது சொன்னாலும் செய்யப்பிடாதுன்னு
கல்யாணத்தன்னைக்கே கங்கணம் கட்டிக் கொள்வார்கள் போல.
என்ன வேலையாக இருந்தாலும் சரி, செய்ய மாட்டார்கள்.
நாம் ஒரு உதவி கேட்டிருந்தாலோ, இல்லை மற்ற எந்த வேலையாக இருந்தாலும் சரி அது அவ்வளவுதான். (போன், எலக்டிரிக் பில், குளித்த பின் கட்டிலின் மீது போடப்படும் துண்டு, எதை விடுப்பது, எதை எடுப்பது என்று அவர்களே குழம்பி போய் வார இறுதியில் செய்வதாக சொன்ன கப்போர்டு கிளீனிங்!! இப்படி எதுவேண்டுமானுலும் இருக்கலாம்.)
ரங்கமணிகள் அகராதியில் இவ்வாறான வேலைகளுக்கு இருக்கும் கெடு மனதிற்குள் வைத்திருப்பார்கள்.ஆனால் அது எப்பன்னு அவங்களுக்கேத் தெரியாது.மெதுவா செஞ்சா போச்சு. என்ன அவசரம் என்ற மன நிலை தான் காரணம்.அலுவலக வேலைகள் மட்டும் தான் ஆன் டைமில் முடிக்கப்படும். வீட்டில் உதவுவது என்பதெல்லாம் ரொம்ப தப்பு.
இதுக்கு டீரீட்மென்ட் என்ன?
ரங்கமணிகள் வீட்டு வேலைகளை செய்யாமல் இருப்பதில் பல காரணம் இருக்கிறது.
1. அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு வ்ந்து தான் ரொம்ப பிசி என்று காட்டிக் கொண்டிருப்பார்கள்.
2. ரங்கமணிகள் செய்யாமலே காத்திருந்து, தங்கமணிகளுக்கு டென்ஷன் கொடுக்கலாமே!
3. மிக முக்கியமாக வேலை பளுவை தங்கமணிகள் மேல் சுமத்த திட்டம்.
4. யாராவது செய்யனுமே அப்படின்னு நினைச்சு தங்கமணிகள் செஞ்சு முடிச்சிட்டா அப்பாடின்னு நிம்மதி பெருமூச்சு விட்டுக்கிட்டு வேலை செய்யாம தப்பிக்கலாமே அது தான் முக்கியமான திட்டம்.
தங்கமணிகள் செய்யவேண்டியது ரங்கமணிகள் செய்யாவிட்டால், நமக்கென்ன என்று தங்கமணிகளும் செய்யாமல் காலம் தாழ்த்த வேண்டியது தான்.
நாமலே இழுத்து போட்டுகிட்டு வேலை செஞ்சா பாராட்டுராங்களேன்னு நினைச்சு செய்யப்பிடாது.
அது பாராட்டு இல்லை தங்கமணிகளே! உஷார். வேலை பளுவை தங்கமணிகளுக்கு அதிகமாக்கி ரங்கமணிகள் வேலை செய்யாமல் தப்பித்து கொள்ளும் திட்டம்.
64 comments:
//
தங்கமணிகள் செய்யவேண்டியது ரங்கமணிகள் செய்யாவிட்டால், நமக்கென்ன என்று தங்கமணிகளும் செய்யாமல் காலம் தாழ்த்த வேண்டியது தான்.
//
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் திட்டம்!!!
சபாஷ்
//
இதுக்கு டீரீட்மென்ட் என்ன?
//
ஹஸ்பண்டாலஜி க்ளாஸ் 'ட்ரீட்மெண்ட்ஸ் / பனிஷ்மெண்ட்' மட்டுமே போட்டு ஓட்டிகிட்டிருக்கீங்களே மத்த Chapters எல்லாம் எதும் நடத்தற ஐடியா இருக்கா இல்லியா!?!?!?
//
தங்கமணிகள் எது சொன்னாலும் செய்யப்பிடாதுன்னு
கல்யாணத்தன்னைக்கே கங்கணம் கட்டிக் கொள்வார்கள் போல.
//
பாயிண்ட் நோட்டட் வில் பி ஃபாளோட்
வாங்க சிவா,
பாடத்திட்டம் அப்படித்தான் இருக்கும். எல்லாம் வரும். பொறுத்திருந்து பாருங்க.
இந்த தொடரை ஆரம்ப பகுதியிலே இருந்து இப்போதான் வாசிச்சிட்டு வந்தேன்... என்ன கருத்து சொல்லயிருக்கு??? :((
வர்றப்போற தங்கமணிக்கிட்டே சத்தியமா இப்பிடியொரு பிளாக் இருக்குன்னு சொல்லவே மாட்டேன்.... :)
பாடத்தோட 'திட்டம்' பயங்கரமா இருக்கு.
கொஞ்சம் பயமாவும் இருக்கு.
தெரியாம இங்க வந்துட்டேனோ?
நான் ரொம்ப சின்ன பையன்ங்க..அதனால நான் வேடிக்கை பார்க்கிறேன்.. தங்கமணிகளும், ரங்கமணிகளும் விளையாடுங்க..
நீங்க இப்புடி பதிவு போடற நேரத்துக்கு ,
கட்டிலில் கிடக்கும் துண்டை எடுத்துப்போட்டுட்டு..
கப்போர்டில் கிடக்கும்..7,8 பேப்பர்களை அடுக்கி வச்சுரலாம்ல..
- இதையே தினமும் செஞ்சு பாருங்க..! வேலையாவே தெரியாது.!
அப்புறம்.. அன்பா , அழகா உங்களாலதாங்க செய்யமுடியும். அதுதான் உண்மை.
ரங்கமணிங்க..'நம்ம சொத்ப்பறதவிட தங்கமணிங்க செஞ்சாத்தான் நல்லா இருக்கும்'னு நினைக்கிறாங்க- அதப்போய்...!
இன்னிக்கு டிரீட்மெண்ட் ஒண்ணும் வெய்ட்டா இல்லையே..!
எப்படி இருந்தாலும் தங்கமணிக்கு மனசு கேக்காதுங்க.! (இப்ப பாருங்க..நீங்களே சிரிக்கிறீங்க..)
என்ன ராம் இப்படி சொல்லீட்டா விட்டுடுவோமா?
உங்க திருமணத்திற்கு ஹஸ்பண்டாலஜி பாடத்திட்டம் மொத்தத்தையும் பீடீஎஃ -இல் போட்டு பரிசா கொடுத்திட மாட்டோம்.
பயப்படாதீங்க ஜே.கே
வாங்க ரூபஸ். வேடிக்கை பார்த்தாலும் நல்லதை தெரின்ஞ்சுக்கலாம்
வாங்க சுரேகா,
தெரியுமே. நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு (நீங்கன்னா ரங்கமணிகள்)
நான் சிரிக்கவே இல்லை. நான் பாடத்தில் சொல்லியிருந்தைப் உண்மையாக்கி விட்டீர்கள். புகழ்ச்சிக்கு மயங்கி தங்கமணிகள் வேலை பார்க்கணும், ரங்கமணிகள் பதிவு போடலாம் என்ன வேனாம் செய்யலாம். ஆன்னா நாங்க பதிவு போடற நேரத்தில உங்க வேலையையும் செய்யனும். வீட்டுல உதவுற ஐடியா எல்லாம் இல்ல.
இதாங்க ரங்கமணிகளோட மனசுல எப்பவுமே இருக்கு. வீட்டு வேலையா அதை செய்ய வேண்டியது பெண்கள் தான் அப்படிங்கறது ரத்தத்திலேயே ஊரிப்போச்சு போல.
எப்பவுமே டிரீட்மென்ட் கொடுத்தால் தாங்க மாட்டீங்க. அதனால் சில சமயம் ஐடியா மாத்திரம் கொடுத்து செஞ்சு பார்க்க சொல்லிடுவோம்.
இன்னோரு நாளைக்கு வந்து விளக்கமா பின்னூட்டம் எழுதுறேன்
வாங்க சிவா,
விருந்தினர் போற்றுதும் இது தானே நம் தமிழ் பண்பு. தெகிரியமா சொல்றேன். நீங்க எல்லாம் கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரனும்.
<==தங்கமணிகள் எது சொன்னாலும் செய்யப்பிடாதுன்னு
கல்யாணத்தன்னைக்கே கங்கணம் கட்டிக் கொள்வார்கள் போல.
==>
நீங்க இப்படி சொல்றீங்க. பெத்தவங்க மாத்திச்சொல்றாங்க - நேத்து வந்த பொண்டட்டி பேச்சதான் கேட்கிறான்...நம்ம சொல்றத எங்க கேட்கிறான்...
<== அலுவலக வேலைகள் மட்டும் தான் ஆன் டைமில் முடிக்கப்படும். ==>
அதுக்குதான் சம்பளம் கொடுக்கிறாங்க. அந்த சம்பளத்திலேதான் கணிணி/லாப்டாப் வாங்கி உங்களால(தங்கமணிகளால்) இப்படி ப்ளாக் எழுத/படிக்க முடியுது.
வாங்க சாமான்யன்,
பெத்தவங்க மாத்தி சொல்வாங்க. உண்மையில் திருமண்த்திற்க்கு பிறகு எந்த கணவனும் மனைவி பேச்சை கேட்பதே இல்லை என்பது தான்.
பெத்தவங்க சொல்வதற்கு என் கமென்ட்
"They r in paradime'
அதுக்குதான் சம்பளம் கொடுக்கிறாங்க. அந்த சம்பளத்திலேதான் கணிணி/லாப்டாப் வாங்கி உங்களால(தங்கமணிகளால்) இப்படி ப்ளாக் எழுத/படிக்க முடியுது.
சிவா,
அதெல்லாம் சரி. நாங்க இல்லைன்னு சொல்லலை. ஆனால் மத்த வேலைகளுக்கும் சில நேரம் ஒதுக்கப்படனும் அது தான் எங்கள் வாதம்.
தங்கமணிகளால்) இப்படி ப்ளாக் எழுத/படிக்க முடியுது.
ஆணியப் புயல் வீசுகிறது. பெண்கள் எது செஞ்சாலும் குத்தம்
பெண்ணீய பதிவில் இந்தப் பின்னூட்டப் பதில் வேடிக்கையா இல்ல?
எனக்குத்தெரிந்த ஒருவரை சந்திக்க அவர் வீட்டுக்கு போயிருந்தேன்.அவர் அக்கறையா காய் நறுக்கிக் கொண்டிருந்தார். "என்ன சார் பொழுதுபோக்குக்கா(hobby) காய் நறுக்கிறீங்களா?"ன்னு கேட்டேன்."இல்லை சார் இது வேலை(duty).சாப்பிடனுமில்லயா?' என்று சொல்லிவிட்டு அடுக்களை பக்கம் திரும்பி,தங்கமணியைப்பார்த்து "காபி கொண்டு வா" என்றார்.பின் என்னிடம் "வேலை செஞசாச்சு. இப்ப தைரியமா காபி கேட்கலாம் " என்றார் சிரித்துக்கொண்டே.
உடனே இது எங்கோ நிகழும் ஒரு சம்பவம் என்று பதில் சொல்வீர்கள்.
முந்தி மாதிரி இல்லே. புரிஞ்சுக்கங்க.பெண்ணியம் பேசாத சாதாரண தங்கமணிகளிடம் விசாரித்து தெரிந்துகொள்ளவும்.
பெண்ணீயம் பேசுவதற்காக பிளாக் ஆரம்பிக்கவில்லை சிவா,
நான் பேச நிங்கள் பேச என்று கீரைக்கடைக்கு எதிர் கடைப் போட்டது போல் ஆகிவிடக்கூடாது என்பதால் நான் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.
உங்கள் ஆணிய பின்னூட்டங்களே சொல்கின்றன் நீங்கள் பக்கா ஆணீய வாதி என்று. பாவம் உங்கள் வீட்டு தங்கமணி. (வந்துட்டாங்களா? இன்னும் வரலியான்னு தெரியல? :( )
அட..எல்லார் வீட்லயும் இப்படித்தானா? ரங்கமணிகள் செய்வார்கள் என்று நாமும் செய்யாமல் தள்ளிப்போட்டால்...மொத்த வேலையும் பிறிதொரு நாளில் நாமே செய்ய வேண்டியதுதான்...ஆனாலும் புதுகை..இன்னும் நீங்க ரங்கமணிக்ள் மேல் வச்சுருக்க ந்ம்பிக்கைக்குப் பாராட்டுகள்....
பாசமலர்,
ஹா,ஹா,ஹா
[கூகிள் டாக்கின் ஸ்மைலி போட முடியலே]
நல்லா சொன்னீங்க.
ரங்கமணியால முடிஞ்சா செய்ய மாட்டாங்களா? செய்வாங்க.
அதுக்கு கொஞ்ச டைம் கொடுங்க.அதுவரைக்கும் பொறுங்க.
<==
இன்னும் நீங்க ரங்கமணிக்ள் மேல் வச்சுருக்க ந்ம்பிக்கைக்குப் பாராட்டுகள்....
==>
அதுனாலதான் அவங்க பதிவெழுத முடியுது =)))
ithella romba too much shiva.
nan pathivezutharathu en ishtam. itukellama veetukarar kitta permission vaanganum?
சாமான்யன் சிவா காமெடியெல்லாம் படிச்சா சிரிக்கனும் இப்படி விவாதிக்கப்டாது!!
//
புதுகைத் தென்றல் said...
உங்கள் ஆணிய பின்னூட்டங்களே சொல்கின்றன் நீங்கள் பக்கா ஆணீய வாதி என்று. பாவம் உங்கள் வீட்டு தங்கமணி. (வந்துட்டாங்களா? இன்னும் வரலியான்னு தெரியல? :( )
//
வந்திட்டாங்க வந்திட்டாங்க அப்படியும் மனுசன் பயமில்லாம பின்னூட்டராரே அதுதான் ஆச்சரியமா இருக்கு!!
//
புதுகைத் தென்றல் said...
ithella romba too much shiva.
nan pathivezutharathu en ishtam. itukellama veetukarar kitta permission vaanganum?
//
அதுதானே அவர்தான் எல்லாத்துக்கும் பெர்மிசன் வாங்கனும்!!!
அவ்வ்வ்வ்வ்
onna appadi solveenga illa ippadi solveenga.
vera velaye illa. kalyanam aagamale ippadi oru negative thinking iruntha unga wouldbe romba pavamnga.
rendu shivakalukum solren. (samanyan shiva neenga married na "ayyo pavam" unga wife. unga torcherai eppadi than thaangikarangalo?????????/

என்னாது பேச வாயை தெறந்தா அதுக்கு பேரு டார்ச்சரா அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஐயோ அம்மா பயமாயிருக்கே இந்த பக்கம் வர்றதுக்கே!!!!
vaanga mangalore shiva
என்னாது பேச வாயை தெறந்தா அதுக்கு பேரு டார்ச்சரா அவ்வ்வ்வ்வ்வ்வ்
ennathu pesarathe intha lachanama!!!! sarithan
ஐயோ அம்மா பயமாயிருக்கே இந்த பக்கம் வர்றதுக்கே!!!!
enna shiva comedy panreenga. Romba than bayam
//
புதுகைத் தென்றல் said...
enna shiva comedy panreenga. Romba than bayam
//
அட நெசமாங்க நான் சின்ன பையன். என் ப்ளாக் பேர வேணா வந்து பாருங்க அப்பவாச்சும் நம்புவீங்க!!
நீங்களே பாவம் அப்பாவி(???) தங்கமணிகளுக்கு எப்படி ர.மணிகள்ட்ட வேலை வாங்கறதுன்னு சொல்லிக்கொடுத்துட்டு இருக்கீங்க. அதனால எதுக்கு உங்கள டிஸ்கரேஜ்
பண்ணுவானேன்னு பார்த்தேன்.
அதனாலே என் சுய புராணத்தை எடுக்க வேணாம்னு பார்த்தேன்.விட மாட்டீங்கபோல.
நான் 2 மாடி(மூச்சு வாங்க) ஏறிப்போய் உலர்ந்த துணிகளை எடுத்து வந்து மடிச்சு வைக்கிறது.[நான் பண்ணாட்னாலும் த.மணி தானாகவே பண்ணிடுவார்]
பிறகு துணிக்கு இஸ்திரி(த.மணியோட துணிக்கும் சேர்த்துதான்)போடுறது.( 3 மணி நேரம்).
(த.மணி - சொன்ன கேக்குறீங்களா? இஸ்திரி போடுறவர்ட்ட கொடுத்தா அவர் செய்து தரமாட்டாரா?
நான் - கொண்டுபோய்க்கொடுத்துட்டு சரியா வாங்கிட்டு வரணும். நான் ராத்திரி நேரம் கழித்து வீட்டுக்கு வருவேன்.அவன் கடையை மூடிட்டு போய்டுவான்,அதுபோக அவன் நம்மள(!) மாதிரி அவ்ளோ நல்லாவும் இஸ்திரி போட மாட்டான்)
காய்கறிகளில் பட்டானிக்கு தோல் உரிக்கறது.
காரட்டுக்கு தோல் சீவறது.
இது ஒரு சாம்பிள்தான்.
வெளி வேலை எல்லாம் நாந்தான்.த.மணி ஒரு எட்டு வீட்ட விட்டு வெளியே போக மாட்டார்.
இன்னும் எவ்ளோவோ இருக்கு. எல்லாத்தையும் எழுதிறதுக்கு நான் தனி பதிவே
போடலாம்.
த.மணி அடுக்களைல இருக்கறப்போ சும்மா பக்கதிலே பேச்சுதுணைக்கு நின்னதுக்கே,த.மணிக்கு அவ்ளொ சந்தோசம்.இதவிட வேற என்ன பண்ணச் சொல்றீங்க.
ஏன் எல்லா ர.மணிகளும் நீங்க சொல்ற மாதிரி இல்லைனு(உங்க ர.மணியைச் சொல்லலை.அவர் பாவம்.- நீங்க உங்களை அர்த்தநாரின்னு சொன்னதா ஞாபகம்) யோசிங்க.
ஒரு ஆணுக்கு 28/30 வயசில கல்யாணம் ஆகும்னு வச்சுக்கங்க.அதுவரைக்கும்,அவனுக்கு எங்கேங்க தன் வேலையை தானே செய்யனும்னு சொல்லிக்கொடுகிறாங்க?
அதனால, அவனுக்கு மனசுல இது நம்ம வேலை இல்லைன்னு பதிஞ்சுடுது.
அதுபோக த.மணிகளுக்கு வீட்ல பொழுதும் போக வேண்டாமா? ஒரே மாதிரி டி.வி. தொடர பார்து பார்த்து போர் அடிக்காது?
வேலைக்கு போற த.மணியா இருந்தா நான் முன்பே சொன்ன மாதிரி, ர.மணியும் தன்னால முடிஞ்ச வேலையை செய்வார்.
அதுபோக இயல்பாவே சில வேலைகளை த.மணிகள்தான் பொறுமையா நல்லா பண்ண முடியும். அதில் தான் நுளைந்து எதுக்கு கெடுத்துக்குவானேன்னு தான் நீங்க சொல்ற ர.மணிகள் அம்மாதிரி வேலைகளை செய்யறது இல்லே.
இப்ப சொல்லுங்க. நான் டார்ச்சர் பண்றேனா? இல்ல உங்க ர.மணி டார்ச்சர் பண்ணப்படுரரா?
அப்பா. இவ்ளொ எழுதறதுக்குள்ள கண்ணைகட்டுதே.....
<===
புதுகைத் தென்றல் said...
ithella romba too much shiva.
nan pathivezutharathu en ishtam. itukellama veetukarar kitta permission vaanganum?
10 January, 2008 5:18 PM
===>
ஐயைய. நான் அப்படி சொல்லலீங்க.அப்படி இருக்கிறதாலாதான் உங்களால இப்படி M.SC HUSBANDALOGY எழுதமுடியுதுன்னு சொன்னென்.
<====
மங்களூர் சிவா said...
//
புதுகைத் தென்றல் said...
ithella romba too much shiva.
nan pathivezutharathu en ishtam. itukellama veetukarar kitta permission vaanganum?
//
அதுதானே அவர்தான் எல்லாத்துக்கும் பெர்மிசன் வாங்கனும்!!!
அவ்வ்வ்வ்வ்
===>
மங்களூர் சிவா.
பின்றீங்க.
<==
மங்களூர் சிவா said...
//
புதுகைத் தென்றல் said...
enna shiva comedy panreenga. Romba than bayam
//
அட நெசமாங்க நான் சின்ன பையன். என் ப்ளாக் பேர வேணா வந்து பாருங்க அப்பவாச்சும் நம்புவீங்க!!
10 January, 2008 6:01 PM
===>
ஆமாங்க.அவங்க ஊர்ல/வீட்ல அப்படிச் சொன்னாங்க. ==))
<===
மங்களூர் சிவா said...
//
புதுகைத் தென்றல் said...
உங்கள் ஆணிய பின்னூட்டங்களே சொல்கின்றன் நீங்கள் பக்கா ஆணீய வாதி என்று. பாவம் உங்கள் வீட்டு தங்கமணி. (வந்துட்டாங்களா? இன்னும் வரலியான்னு தெரியல? :( )
//
வந்திட்டாங்க வந்திட்டாங்க அப்படியும் மனுசன் பயமில்லாம பின்னூட்டராரே அதுதான் ஆச்சரியமா இருக்கு!!
==>
அதானே =)))
நாம யாரு த.மணி இருந்தாலும் இல்லங்காட்டியும் பின்னூட்டம் போடுவோம்ல.
அவ்ளோ தகிரியசாலியாக்கும் =))
[இந்த மாதிரி பிரச்னைக்குத்தான் நான் இன்னும் கணிணியே வாங்காம இருக்கேன் =)))]
//
நீங்களே பாவம் அப்பாவி(???) தங்கமணிகளுக்கு எப்படி ர.மணிகள்ட்ட வேலை வாங்கறதுன்னு சொல்லிக்கொடுத்துட்டு இருக்கீங்க. அதனால எதுக்கு உங்கள டிஸ்கரேஜ்
பண்ணுவானேன்னு பார்த்தேன்.
அதனாலே என் சுய புராணத்தை எடுக்க வேணாம்னு பார்த்தேன்.விட மாட்டீங்கபோல.
நான் 2 மாடி(மூச்சு வாங்க) ஏறிப்போய் உலர்ந்த துணிகளை எடுத்து வந்து மடிச்சு வைக்கிறது.[நான் பண்ணாட்னாலும் த.மணி தானாகவே பண்ணிடுவார்]
பிறகு துணிக்கு இஸ்திரி(த.மணியோட துணிக்கும் சேர்த்துதான்)போடுறது.( 3 மணி நேரம்).
(த.மணி - சொன்ன கேக்குறீங்களா? இஸ்திரி போடுறவர்ட்ட கொடுத்தா அவர் செய்து தரமாட்டாரா?
நான் - கொண்டுபோய்க்கொடுத்துட்டு சரியா வாங்கிட்டு வரணும். நான் ராத்திரி நேரம் கழித்து வீட்டுக்கு வருவேன்.அவன் கடையை மூடிட்டு போய்டுவான்,அதுபோக அவன் நம்மள(!) மாதிரி அவ்ளோ நல்லாவும் இஸ்திரி போட மாட்டான்)
காய்கறிகளில் பட்டானிக்கு தோல் உரிக்கறது.
காரட்டுக்கு தோல் சீவறது.
இது ஒரு சாம்பிள்தான்.
வெளி வேலை எல்லாம் நாந்தான்.த.மணி ஒரு எட்டு வீட்ட விட்டு வெளியே போக மாட்டார்.
இன்னும் எவ்ளோவோ இருக்கு. எல்லாத்தையும் எழுதிறதுக்கு நான் தனி பதிவே
போடலாம்.
த.மணி அடுக்களைல இருக்கறப்போ சும்மா பக்கதிலே பேச்சுதுணைக்கு நின்னதுக்கே,த.மணிக்கு அவ்ளொ சந்தோசம்.இதவிட வேற என்ன பண்ணச் சொல்றீங்க.
ஏன் எல்லா ர.மணிகளும் நீங்க சொல்ற மாதிரி இல்லைனு(உங்க ர.மணியைச் சொல்லலை.அவர் பாவம்.- நீங்க உங்களை அர்த்தநாரின்னு சொன்னதா ஞாபகம்) யோசிங்க.
ஒரு ஆணுக்கு 28/30 வயசில கல்யாணம் ஆகும்னு வச்சுக்கங்க.அதுவரைக்கும்,அவனுக்கு எங்கேங்க தன் வேலையை தானே செய்யனும்னு சொல்லிக்கொடுகிறாங்க?
அதனால, அவனுக்கு மனசுல இது நம்ம வேலை இல்லைன்னு பதிஞ்சுடுது.
அதுபோக த.மணிகளுக்கு வீட்ல பொழுதும் போக வேண்டாமா? ஒரே மாதிரி டி.வி. தொடர பார்து பார்த்து போர் அடிக்காது?
வேலைக்கு போற த.மணியா இருந்தா நான் முன்பே சொன்ன மாதிரி, ர.மணியும் தன்னால முடிஞ்ச வேலையை செய்வார்.
அதுபோக இயல்பாவே சில வேலைகளை த.மணிகள்தான் பொறுமையா நல்லா பண்ண முடியும். அதில் தான் நுளைந்து எதுக்கு கெடுத்துக்குவானேன்னு தான் நீங்க சொல்ற ர.மணிகள் அம்மாதிரி வேலைகளை செய்யறது இல்லே.
இப்ப சொல்லுங்க. நான் டார்ச்சர் பண்றேனா? இல்ல உங்க ர.மணி டார்ச்சர் பண்ணப்படுரரா?
அப்பா. இவ்ளொ எழுதறதுக்குள்ள கண்ணைகட்டுதே.....
//
அண்ணே இவ்வளவு சோகத்தை மனசுக்குள்ள போட்டு பூட்டி வெச்சிகிட்டு எப்பிடின்னே எதுவுமே நடக்காத மாதிரி சுத்திகிட்டு வளைய வர்றீங்க !!
இதை படிச்சதிலிருந்து ஒரே கிலியாயிடிச்சு எனக்கு.
துக்கம் தொண்டைய அடைக்குது, கண்ணுல இருந்து தண்ணி தாரை தாரையா வந்துகிட்டிருக்கு இன்னும்.
//
அப்பா. இவ்ளொ எழுதறதுக்குள்ள கண்ணைகட்டுதே.....
//
அப்பா இவ்வளவும் படிக்கிறதுக்குள்ள கண்ணு, மூக்கு, வாய், காது எல்லாத்தயும் கட்டுதே....
//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
<==
மங்களூர் சிவா said...
//
புதுகைத் தென்றல் said...
enna shiva comedy panreenga. Romba than bayam
//
அட நெசமாங்க நான் சின்ன பையன். என் ப்ளாக் பேர வேணா வந்து பாருங்க அப்பவாச்சும் நம்புவீங்க!!
10 January, 2008 6:01 PM
===>
ஆமாங்க.அவங்க ஊர்ல/வீட்ல அப்படிச் சொன்னாங்க. ==))
//
நீங்களாவது எடுத்து சொல்லுங்கண்ணா....
அவ்வ்வ்வ்வ்
மங்களூர் சிவா சைட்
<=== துக்கம் தொண்டைய அடைக்குது, கண்ணுல இருந்து தண்ணி தாரை தாரையா வந்துகிட்டிருக்கு இன்னும். ===>
ஏன் வெங்காயம் (சமையலுக்கு) நறுக்கிக்கிட்டு இருக்கீங்களா?
கண்ணுக்கு நல்லதுதான்னு சொல்றாங்க=))))
ம.சிவா, வேற எதுவும் பாடம் நடத்ற திட்டம் எதுவும் இல்லையான்னு கேட்டீங்கலே. இப்ப பாருங்க பின்னூட்டமே 40 தாண்டிடுச்சு.
அதனாலே என் சுய புராணத்தை எடுக்க வேணாம்னு பார்த்தேன்.
வாங்க வாங்க சிவா,
மனசுல உள்ளத கொட்டுங்க.
//(மூச்சு வாங்க) ஏறிப்போய் உலர்ந்த துணிகளை எடுத்து வந்து மடிச்சு வைக்கிறது.[நான் பண்ணாட்னாலும் த.மணி தானாகவே பண்ணிடுவார்]//
அது தானே நீங்க எதிர் பார்க்றது? என் பாடம் சொல்வதும் அதுதாங்க.
நீங்க பண்ணாட்டி த.மணி தானா பண்ண மாட்டார். அழுதழுது பெத்தாலும் பிள்ளை அவதான் பெறனும்னு ஒரு சொலவடை சொல்வாங்க அதுமாதிரி த.மணி நாம செய்யாட்டி யார் செய்யப்போறான்னு வேலையை செய்ய நீங்க உள்ளுக்குள்ளாற அப்பாடின்னு பெருமூச்சி விடுவீங்க.
பிறகு துணிக்கு இஸ்திரி(த.மணியோட துணிக்கும் சேர்த்துதான்)போடுறது.( 3 மணி நேரம்).//
இதெல்லாம் டூமச். நாங்க இதை நம்பணும்.
தன் கணவனை கசிக்கப் பிழியனும்னு எந்தப் மனைவியும் நினைக்க மாட்டாள்.
//வெளி வேலை எல்லாம் நாந்தான்.த.மணி ஒரு எட்டு வீட்ட விட்டு வெளியே போக மாட்டார்//
நோகாம நோன்பு கும்பிட முடியாது சார். அட்லீஸ்ட் இதை மட்டுமாவது செய்ங்க. குடும்ப பாரம்/வேலை என்பது இருவருக்கும் தான்.
//வேலைக்கு போற த.மணியா இருந்தா நான் முன்பே சொன்ன மாதிரி, ர.மணியும் தன்னால முடிஞ்ச வேலையை செய்வார்.//
ஆமாம் வேலைக்கு போற பொண்டாட்டின்னா வருமானம் வருதுல்ல அதனால செய்வாங்க. வீட்டுல இருக்கற பொண்டாட்டி தண்டமா இருக்கற மாதிரி ஒரு நினைப்பு எல்லோருக்கும் மனசுல ஆழமா பதிந்சாச்சு. வேலைக்குப் போகும் பெண்ணுக்கு கிடைக்கும் மதிப்பு வீட்டில் மாடா உழைக்கிற மனைவிக்கு சத்தியமா தரமாட்டீங்க.
அதுக்கு ஒரு தனி பதிவோட வர்றேன். அப்பாடி இலங்கைக்கு வந்துட்டேன் இனி சரியா உடனே பதில் கொடுக்க முடியும்.
//த.மணி அடுக்களைல இருக்கறப்போ சும்மா பக்கதிலே பேச்சுதுணைக்கு நின்னதுக்கே,த.மணிக்கு அவ்ளொ சந்தோசம்.இதவிட வேற என்ன பண்ணச் சொல்றீங்க.//
இப்படி எல்லாம் வேற நினைக்கரீங்கலா? ஐய்யோ பாவம். மனசுக்குள்ள தண்டமா நிக்கறதுக்கு கூடமாட உதவலாம்லனு திட்டிருப்பாங்க.
தானா நடந்து போய் சமையற்கட்டில் போய் தண்ணி எடுத்து குடிக்கறதையே பெரிய சாதனையா! என்னவோ அரிக்கரிய சாதனை செஞ்சு பொண்டாட்டிய சந்தோஷமா வெச்சுக்கறதா நினைச்சுக்க ஆண்வர்கத்தை சேந்தவங்க தானே. அப்படித் தான் எழுதுவீங்க.
//ஒரு ஆணுக்கு 28/30 வயசில கல்யாணம் ஆகும்னு வச்சுக்கங்க.அதுவரைக்கும்,அவனுக்கு எங்கேங்க தன் வேலையை தானே செய்யனும்னு சொல்லிக்கொடுகிறாங்க?
அதனால, அவனுக்கு மனசுல இது நம்ம வேலை இல்லைன்னு பதிஞ்சுடுது.//
இதுல கொஞ்சம் உண்மை இருந்தாலும், நான் ஆண்களை கேட்கறது இது தான். "எல்லாமே அப்பா/அம்மா சொல்லிக் கொடுத்தா கத்துக்கறீங்க? ஒவ்வொரு ஆண்மகனும் தான் செய்யும் தவறை உணர்ந்து தன்னை மாத்திக்கிட்டு, இது நம் குடும்பம், இங்கே வேலை செய்யறது கவுரவ குறைச்சல் இல்லைன்னு நினைச்சு மாத்திக்கனும். 5 வளையாதது 50 தான் வளையாது. நடுவுல வளையும். வளையணும்".
//சில வேலைகளை த.மணிகள்தான் பொறுமையா நல்லா பண்ண முடியும்.//
இப்படித்தான் சொல்லி சொல்லி வேலை வாங்கறீங்க.
// அதில் தான் நுளைந்து எதுக்கு கெடுத்துக்குவானேன்னு தான் நீங்க சொல்ற ர.மணிகள் அம்மாதிரி வேலைகளை செய்யறது இல்லே.//
நுளைந்து கெடுத்தாத்தானே அடுத்த முறை "உதடு தேய்வதற்கு உள்ளங்கால் தேயலாம்னு" த.மணி வேலையை செஞ்சு முடிச்சிடுவாங்க.
தப்பிச்சுக்கலாமே? திட்டம் பலிச்சிடும்.
//இப்ப சொல்லுங்க. நான் டார்ச்சர் பண்றேனா? //
உள்ளங்கை புண்ணிற்கு கண்ணாடி எதுக்கு சிவா? (சே. என்ன இது உங்களுக்கு பதில் கொடுக்க பின்னூட்டம் இட ஆரம்பிச்சதிலிருந்து பழமொழிகள் அருவியா கொட்டுது)
வாங்க மங்களூர் சிவா,
//இதை படிசதிலிருந்து ஒரே கிலியாயிடிச்சு எனக்கு.
கொழுமோர் காச்சி குடிங்க.
//துக்கம் தொண்டைய அடைக்குது, கண்ணுல இருந்து தண்ணி தாரை தாரையா வந்துகிட்டிருக்கு இன்னும்.//
திருமணம் எனும் பெயரில் ஆண்களிடம் அடிமையாகி பெண்கள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது கண்ணில் உதிரம் தான் கொட்டுகிறது.
மங்களூர் சிவா சைட்
<=== துக்கம் தொண்டைய அடைக்குது, கண்ணுல இருந்து தண்ணி தாரை தாரையா வந்துகிட்டிருக்கு இன்னும். ===>
சாமான்யன் செட்.
//ஏன் வெங்காயம் (சமையலுக்கு) நறுக்கிக்கிட்டு இருக்கீங்களா?
கண்ணுக்கு நல்லதுதான்னு சொல்றாங்க=))))//
சேம் சைட் கோல்.
சாமான்யன் சிவா செட்,
ம.சிவா, வேற எதுவும் பாடம் நடத்ற திட்டம் எதுவும் இல்லையான்னு கேட்டீங்கலே. இப்ப பாருங்க பின்னூட்டமே 40 தாண்டிடுச்சு.
இந்த பின்னூட்டத்தோட 50 ஆயிடுச்சு சிவா.
ஆனா சாமான்யன் உங்க ஒரு பின்னூட்டத்திலிருந்து நான் ஒரு 100 பதி போடலாம்.
<== "எல்லாமே அப்பா/அம்மா சொல்லிக் கொடுத்தா கத்துக்கறீங்க? ஒவ்வொரு ஆண்மகனும் தான் செய்யும் தவறை உணர்ந்து தன்னை மாத்திக்கிட்டு, இது நம் குடும்பம், இங்கே வேலை செய்யறது கவுரவ குறைச்சல் இல்லைன்னு நினைச்சு மாத்திக்கனும். ==>
அப்படி போடுங்க.
த.மணிகளே,
இனிமே வாகன லைசென்ஸ் எடுக்கிறமாதிரி சமையல்,வீட்டுவேலை,வெளி வேலை எல்லாத்துக்குக்கும் செர்டிபிகேட்டோட பெண் பார்க்க வரணும்.அப்புரம்தான்
பஜ்ஜி,சொஜ்ஜி எல்லாம்.
<==
திருமணம் எனும் பெயரில் ஆண்களிடம் அடிமையாகி பெண்கள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது கண்ணில் உதிரம் தான் கொட்டுகிறது. ==>
கல்யாண பந்தத்திலிருந்து பெண்கள் விலகிடலாம்தான்.
ஆனா,எளிதா பட்டுப்புடவை/நகை எல்லாம் வாங்கறது எப்படி?
இந்த இளிச்சவாயன் த.மணியை விட்டா யார் இருக்கா?
அலுவலகத்தில் வேலையும் பார்த்துட்டு சம்பளம் வாங்காத வேலைக்காரனா
<==
ஆனா சாமான்யன் உங்க ஒரு பின்னூட்டத்திலிருந்து நான் ஒரு 100 பதி போடலாம்.
==>
அதுக்குதான் இவ்வளவும் எடுத்துக்குடுக்கறோம். ==)
.
நீங்க பொது வாழ்க்கைக்கு வந்தா...
பெண்ணுரிமைப்போராளி,பேராசிரியை,புதுகைத்தென்றல்னு உஙகளுக்கு பட்டம் ரிசர்வ்ட். சீக்கிரமே கிடைக்க வாழ்த்துக்கள்.
<==
5 வளையாதது 50 தான் வளையாது. நடுவுல வளையும். வளையணும்".
==>
பட்டத்துல பழமொழிப்பெருந்தகைன்னு சேர்த்துக்கங்க.விட்டுட்டேன்.
<== தானா நடந்து போய் சமையற்கட்டில் போய் தண்ணி எடுத்து குடிக்கறதையே பெரிய சாதனையா! ==>
சே,சே. த.மணி மனசு ரொம்ம கஷ்டப்படும்.அதனால அவர்தான் எடுத்துக் கொண்டுவந்து கொடுப்பார்.
<==
5 வளையாதது 50 தான் வளையாது. நடுவுல வளையும். வளையணும்". ==>
நடுவில வளைத்தால் உடைஞ்சுபோய்டும். பாவம் விட்டுடுங்க.
வாங்க சிவா,
அப்படி போடுங்க.
த.மணிகளே,
இனிமே வாகன லைசென்ஸ் எடுக்கிறமாதிரி சமையல்,வீட்டுவேலை,வெளி வேலை எல்லாத்துக்குக்கும் செர்டிபிகேட்டோட பெண் பார்க்க வரணும்.அப்புரம்தான்
பஜ்ஜி,சொஜ்ஜி எல்லாம்.//
ஐயா, அவசரத்தில ர.மணி க்கு பதில் த.மணின்னு போட்டுடீங்க.
சர்டிபிகேட்டெல்லாம் வேண்டாம். அப்பப்போ வீட்டுக்கு உதவுற மனப்பான்மையை வளத்துக்கிட்டா போதும்.
//ஆனா,எளிதா பட்டுப்புடவை/நகை எல்லாம் வாங்கறது எப்படி?
இந்த இளிச்சவாயன் த.மணியை விட்டா யார் இருக்கா?
அலுவலகத்தில் வேலையும் பார்த்துட்டு சம்பளம் வாங்காத வேலைக்காரனா//
கீரல் விழுந்த டேப்ரிக்கார்டர் மாதிரி இதையே திரும்ப சொல்லிக்கிட்டு இருக்காருப்பா இவரு. யாராவது லேட்டஸ்ட் நியூஸ்களை சாமான்யன் சிவா காதில் போடுங்க.
//நீங்க பொது வாழ்க்கைக்கு வந்தா...
பெண்ணுரிமைப்போராளி,பேராசிரியை,புதுகைத்தென்றல்னு உஙகளுக்கு பட்டம் ரிசர்வ்ட். சீக்கிரமே கிடைக்க வாழ்த்துக்கள்.//
பொது வாழ்க்கைக்கு வந்தா தானே?
அப்புறம் இந்த பட்டம் பதவி இதெல்லாம் எனக்கு வேணாம். தலை, தலை னு சொல்லி அஜித்தை காலி பண்ண மாதிரி ஆயிடும்.
<== தானா நடந்து போய் சமையற்கட்டில் போய் தண்ணி எடுத்து குடிக்கறதையே பெரிய சாதனையா! ==>
சே,சே. த.மணி மனசு ரொம்ம கஷ்டப்படும்.அதனால அவர்தான் எடுத்துக் கொண்டுவந்து கொடுப்பார்.
சிவா நீங்க என்னைக்காவது எடுத்துக் கொடுத்திருப்பீங்களா? அவங்களுக்கு மட்டும்தான் மனசு இருக்கு.
//நடுவில வளைத்தால் உடைஞ்சுபோய்டும். பாவம் விட்டுடுங்க.//
ஆக மாற மாட்டீங்க?
@புதுகை தென்றல்
வலைச்சரத்துல பிசியா இருக்கேன் அதனால உங்க கமெண்ட்ஸ்க்கு பதில் இன்னும் போடலை அதுக்காக நீங்க சொன்னதெல்லாம் கரெக்ட்டுனு நெனைச்சிக்க வேண்டாம் அதை சொல்லிட்டு போறதுக்குதான் வந்தேன்.
திரும்ப ...... திரும்ப வருவேன் பதில் கமெண்ட் போடறதுக்கு!!!!
<==
கீரல் விழுந்த டேப்ரிக்கார்டர் மாதிரி இதையே திரும்ப சொல்லிக்கிட்டு இருக்காருப்பா இவரு. யாராவது லேட்டஸ்ட் நியூஸ்களை சாமான்யன் சிவா காதில் போடுங்க ==?
வாங்கிக்கொடுக்கிற ரங்கமணிகள்தான் சொல்ல முடியும்.
த.மணிகளே, நீங்கதான் சொல்லணும்.
அப்புறம்,இந்தியாவோட தங்க இறக்குமதி உலக தங்க இறக்குமதியைப்பார்த்து உலக தங்க கவுன்சிலின் தலைவர் சந்தோஷப்படமாட்டார்?
<== ஐயா, அவசரத்தில ர.மணி க்கு பதில் த.மணின்னு போட்டுடீங்க ==>
ஆமாங்க,பின்னூட்டம் போட்டபின் தான் தெரிந்தது.
//வாங்கிக்கொடுக்கிற ரங்கமணிகள்தான் சொல்ல முடியும்.
த.மணிகளே, நீங்கதான் சொல்லணும்.
அப்புறம்,இந்தியாவோட தங்க இறக்குமதி உலக தங்க இறக்குமதியைப்பார்த்து உலக தங்க கவுன்சிலின் தலைவர் சந்தோஷப்படமாட்டார்?//
அடடடடா, அடுத்த பாடம் அடுத்த வாரம்தான்னு இருக்கேன். இவர் இந்த பதிவுக்கு 100 பின்னூட்டம் போட்ட்டுதான் அடுத்த வேலை பார்பார் போலிருக்கே
அடுத்த பாடங்களுக்கும் மட்டுறுத்த ஸ்டாக் வேணும். (நீங்க தான் ஸ்டாக் சிவா ஆச்சே. ஸ்டாக் ரொம்பவே இருக்கு போலிருக்கு)
<== பொது வாழ்க்கைக்கு வந்தா தானே?
அப்புறம் இந்த பட்டம் பதவி இதெல்லாம் எனக்கு வேணாம். ==>
பட்டம்கிறது தானா வர்ரது.பொது வாழ்க்கைக்கு வராட்டாலும், ஏற்கனவே இருக்கிற பெண்ணுரிமையை மீட்டெடுக்கிறதுக்கு ப்ளாக் (பொது) வாழ்க்கைக்கு வந்துட்டீங்களே!.
<==
தலை, தலை னு சொல்லி அஜித்தை காலி பண்ண மாதிரி ஆயிடும்
==>
பில்லா படம் உங்க ஊர்ல அவ்ளோ மோசமாவா போறது?
[உங்க ஊர்/நாடு எதுனே இன்னும் தெளிவா புரியலே. ஒரு நாள் இலங்கைல இருக்கீங்க, மறுநாள் ஹைதராபாத் போறீங்க. அப்புறம் புதுக்கோட்டைல இருக்கீங்க .
நீங்களோ/உங்க ர.மணியோ இரட்டை குடியுரிமை பெற்றவரா?
இல்லை இந்திய வம்சாவளின்னு(PIO-Person of Indian Origin) சொல்லிக்கிறாங்களே, அது மாதிரி எதுவாவது?
]
<==
சிவா நீங்க என்னைக்காவது எடுத்துக் கொடுத்திருப்பீங்களா? அவங்களுக்கு மட்டும்தான் மனசு இருக்கு.
==>
ஆம்னு சொன்னா நம்பிடப்போறீங்களா?
என்ன சொன்னாலும் நம்பறதில்லைன்னு முடிவு பண்ணப்புரம் இது என்ன கேள்வி?
உங்க பின்னூட்டம் "இதெல்லாம் டூமச். நாங்க இதை நம்பணும்."
<==
தன் கணவனை கசிக்கப் பிழியனும்னு எந்தப் மனைவியும் நினைக்க மாட்டாள்.
==>
சே சே.எந்த த.மணியாவது ர.மணியை மூட்டை தூக்கச்சொல்லுவாங்களா?
<==
வேலைக்குப் போகும் பெண்ணுக்கு கிடைக்கும் மதிப்பு வீட்டில் மாடா உழைக்கிற மனைவிக்கு சத்தியமா தரமாட்டீங்க.
==>
த.மணிகளுக்கு இந்த தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது.
<==
மனசுக்குள்ள தண்டமா நிக்கறதுக்கு கூடமாட உதவலாம்லனு திட்டிருப்பாங்க.
==>
சே சே.என் த.மணியெல்லாம் ரொம்ப ஸ்ட்ரெயிட் ஃபார்வார்ட்.மனசுல உள்ளது உடனே வெளியே வந்திரும்.ர.மணினாலும் சரி. வேர யார்னாலும் சரி.நெத்தி அடிதான்.
<==
இதுல கொஞ்சம் உண்மை இருந்தாலும் ==>
அபூர்வம்.எப்படி இது? ==) என்னாச்சு உங்களுக்கு.எனக்குப் புரியலியே,
<== இப்படித்தான் சொல்லி சொல்லி வேலை வாங்கறீங்க. ==>
மத்தவங்க ஏமாத்றாங்கன்னு ஏன் ஒரு தாழ்வு மனப்பான்மை?
ர.மணி தப்பா செஞ்சா த.மணியால பொறுத்துக்க முடியுமா?
<==
திருமணம் எனும் பெயரில் ஆண்களிடம் அடிமையாகி பெண்கள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது கண்ணில் உதிரம் தான் கொட்டுகிறது.
==>
நல்ல வேளை உங்களை மாதிரி உள்ளவங்க ஒரு பொது விதிமீறல்(exception)தான். இல்லைனா இந்திய அரசு 'குடும்பக்கட்டுப்பாட்டுக்கு"ப்பதிலா "குடும்ப வளர்ப்பு"-டைவர்ஸ் தவிர்ப்பு பண்ண வேண்டியிருக்கும். "மேட்ரிமோனி டாட் காம்",
"ஷாதி டாட் காம்" போன்ற வலைத்தளங்களூக்கு பதில "டைவர்ஸ் டாட் காம்" போன்றவை "டைவர்ஸ் வேணுமா இங்கே வாங்கன்னு" கூவிக் கூவி கூப்பிட்டு இருப்பாங்க.
<==
அதனால உங்க கமெண்ட்ஸ்க்கு பதில் இன்னும் போடலை அதுக்காக நீங்க சொன்னதெல்லாம் கரெக்ட்டுனு நெனைச்சிக்க வேண்டாம் அதை சொல்லிட்டு போறதுக்குதான் வந்தேன்.
==>
சே சே அந்த அளவுக்கு புரிஞ்சுக்க முடியாதவன் இல்லைங்க.நீங்க சரின்னு சொன்னாத்தான் ஆச்சரியம்.நீங்க மெதுவவே வாங்க.
<==
திரும்ப ...... திரும்ப வருவேன் பதில் கமெண்ட் போடறதுக்கு!!!!
==>
மங்களூர் சிவா பாணியில சொன்னா "அய்யோ பயமாயிருக்கே===)))"
<==
அடடடடா, அடுத்த பாடம் அடுத்த வாரம்தான்னு இருக்கேன். இவர் இந்த பதிவுக்கு 100 பின்னூட்டம் போட்டுட்டுதான் அடுத்த வேலை பார்பார் போலிருக்கே ==>
கீரைக்கடைக்கு எதிர்க்கடை போடறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க.அப்புறம் 100 என்ன 1000 பின்னுட்டம் வந்தாலும் வரும்.
நீங்க போற போக்க பார்த்த 1000 பிளாக்(வலைச்சரத்துல பிசியா இருக்கேன் ) போட்ட அபூர்வ சிந்தாமனியா ஆயிடுவீங்க போல .அதுக்கே ஸ்டாக் இருக்கறப்போ பின்னூட்டத்துக்கு ஸ்டாக் இருக்கதா என்ன?
யார் கடிதம்/மின்னஞ்சல் போட்டாலும் கூடியவரை தவறாமல் பதில் போடுவேன்.குறைந்தபட்சம் "படிச்சுட்டேன்"ன்னாவது பதில் போட்டுனனுங்கறது என்ன விருப்பம்.இல்லைனா நம்மளை மதித்து கடிதம் போட்ட அவங்க மனுசு எவ்ளொ கஷ்டப்படும். அதனால நான் இந்தப்பதில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் பின்னூட்டம் போட்டுட்டேன்.
அப்பாடா இப்போ என்னோட முறை முடிந்தது. இனிமே, அவங்க முறை.
சிவா,
இந்த விளையாட்டு போதும். என்னால முடியல. 63 பின்ணூட்டம் ஆயிடுச்சா, கர்சரை நகத்தி கட்/காபி/பேஸ்ட் செய்ய முடியல. கை ரொம்ப வலிக்குது. நீங்க என்ன வேணாம் சொல்லுங்க. நான் அடுத்த வாரம் புது பாடம் போடும் போது பதில் சொல்லிக்கிறேன்.
ஆமாங்க. கொஞ்சம் இடைவேளை விடலாம்.
Post a Comment