Sunday, January 20, 2008

தேவை ஒரு சென்சார் போர்ட்

என் சிறுவயதில் திருச்சி வானொலியில் சனிக்கிழமை
தோறும் மாலை5.30 மணிக்கு சின்னன்சிறார்களுக்கான
நிகழ்ச்சி இடம்பெறும். வெவ்வேறுஊர்களைச் சேர்ந்த
குழந்தைகள் பங்குபெறும் கதை, வினாடிவினா,
நாடகம் போன்றவை இடம்பெறும்.

என் அம்மா, சித்தி மற்றும் எங்கள் ஊர்(அதாங்க புதுக்கோட்டை) யைச் சேர்ந்த சில
பெரியவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் நானும் பல
முறை பங்கு பெற்றிருக்கிறேன். நிகழ்ச்சிப்
பதிவுக்காக திருச்சி வானொலி நிலையம்
போய் வருவது இனிமையான அனுபவம்.

(ஞாயிறு காலை 8.30 மணிக்கு வந்த வயதுவந்த சிறார்களுக்கான (ஓடி விளையாடு பாப்பா... என்ற பாட்டோடு துவங்குமே?) நிகழ்ச்சி அறிவிப்பாளர் திரு.இளசை.s.சுந்தரம் அவர்களை காணலாமே.
அதெல்லாம் அப்போ பெருமை!!!) சில சமயம் எங்கள் ஊருக்கே வந்து நிகழ்ச்சியைபதிவு செய்வார்கள்.
சிரிக்க சிரிக்க பேசும் இளசை அண்ணா 2 முறை
வந்திருக்கிறார்.

இதில் முக்கியமானது அந்த நிகழ்ச்சி நிரல் மொத்தமமும் ஸ்கிர்ப்டாக தயார் செய்து வானொலி நிலையத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.(கதை, வினாடிவினா, நாடகம்
எல்லாம் விரிவாக எழுதி). அதை அவர்கள்சரி பார்த்து
(சென்சார் செய்து என்று வைத்துக் கொள்ளுங்களேன்), ஒரு தேதி தருவார்கள். அன்று திருச்சி நிலையத்திற்கோ/ அவர்கள் ஊருக்கே வந்தோ பதிவு நடக்கும்.

வழக்க்கு மொழி, வட்டார மொழி ஆகியவற்றில்
பொது மேடையில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள்,
ஆகியவற்றை கவனமாக பார்ப்பார்கள்.
பொதுவாகவே அனைவரும் கேட்கும் நிகழ்ச்சி,
பல தரப்பட்ட மக்களை சென்று சேர்கிறது என்று நிகழ்ச்சி
தயாரிப்பில் அதிகம் கவனம் கொடுத்து தயாரிப்பார்கள்.
இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் மனதில் பாதிப்பை
உண்டுசெய்யக்கூடாது என்று கூடுதல் கவனம்
எடுத்துக் கொள்வார்கள்.

இன்று எந்தச் சேனலை திறந்தாலும் நிகழ்ச்சிகளில்
பல பேசும் வார்த்தைகள், பேசும் பாங்கு ஆகியவை
சென்சார் செய்யப் படாமலே ஒலி/ஒளி பரப்படுகிறதை
பார்த்து நெஞ்சம் கொதிக்கிறது. காமெடி என்ற பெயரில்
இவர்கள் அடிக்கும் கூத்து,பேசும் வசனங்கள்.... அப்பப்பா!!!

கலாச்சார சீரழிவிக்கு இதைவிட வேறு எதை முக்கிய
காரணியாக சொல்லிவைட முடியும்? இன்றைய
குழந்தைகளுக்கு தரம்பிரிக்கப்படாமலே
"எல்லாம்" காணக்/கேட்கக் கிடைக்கிறது.

எப்.எம் ரேடியோக்களும் சளைத்தவை அல்ல
என்பது சமீபத்திய இந்திய விஜயத்தில்
நன்கு உணர்ந்தேன்.

ஒலிபரப்பிற்கே அன்று அத்தனை மெனக்கெட்டார்களே!,
இன்று ஒலி/ஒளி இரண்டும் தரம் தாழ்ந்தே நம் குழந்தைகளுக்கு கிடைக்கிறதே இதைக் கேட்க ஆளில்லையா?
இதர்க்கும் தேவை ஒரு சென்சார் போர்ட். யார்
காதில் விழுந்து நல்லது செய்யப்போகிறார்களோ?
என்று மனது வேதனைப் படுகிறது.

18 comments:

மங்களூர் சிவா said...

அதுக்குதான் இந்த ரேடியோ நான் கேக்குறதே இல்லை!!

100% நானே சென்சார் பண்ணீட்டேன் என்னைய ரேடியோல இருந்து!!

கானா பிரபா said...

உங்கள் ஆதங்கம் நியாயமானதே. கட்டற்ற சுதந்திரம் சிலவேளை தரத்தை தாழ்த்தி விடும்

cheena (சீனா) said...

கால மாற்றங்கள் - தொழில் நுட்பத்தில் புரட்சி - கலாச்சார மாற்றங்கள் - இவை அனைத்தும் சேர்ந்து சில தவிர்க்க இயலாத்ச் சூழ்நிலையை உருவாக்குகின்றன. சரியான யோசனை - ஆதங்கம் புரிகிறது. அரசு கவனிக்க வேண்டும். ஆவன செய்ய வேண்டும்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

அடுத்த கலாச்சாரப்போலீஸ்?[பட்ட எண்ணிக்கை கூடிட்டே போகுது] அப்படி சென்ஸார் வந்தா அதுக்கு நீங்கதான் முதல் தலைவர்.ஆனா,f TV- எல்லாம் போடணும் சொல்லிட்டேன். வேணுமின்னா ராத்திரி 10 மணிக்குமேலன்னு வேணா வச்சுகங்க.
<==
எப்.எம் ரேடியோக்களும் சளைத்தவை அல்ல
என்பது சமீபத்திய இந்திய விஜயத்தில்
நன்கு உணர்ந்தேன் ==>
அதெல்லம் உங்களை யாரு கேட்கச்சொன்னா?
<== மனது வேதனைப் படுகிறது. ==>
ஒரு அனாசின் போடுங்க சரியாய்போய்டும்.
[இப்படிச்சொல்ல ஆசைதான். ஆனா....
அரசாங்கமே அதுக்குதான் டாஸ்மார்க் வச்சிருக்கு.
அதில ஒரு கட்டிங்க் அடிங்க சரியாய்போய்டும்னு......]

புதுகைத் தென்றல் said...

சிவா நீங்க கேட்காம இருக்கலாம். வளர்ந்தவர்களுக்கு பாகு படுத்திக் கொள்ளத்தெரியும். குழந்தைகள்?

புதுகைத் தென்றல் said...

வாங்க பிரபா,

வருகைக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

அரசு கவனிக்க வேண்டும். ஆவன செய்ய வேண்டும்.
வாங்க சீனா,
அரசாங்கம் கவனிக்குமா என்பதே என் ஐயம்.

புதுகைத் தென்றல் said...

என்ன சாமன்யன் காற்புள்ளி, செமிக்கோலன் எல்லாம் போடாமல் உடனே பின்னூட்டம் போட்டுடீங்க?

இன்னைக்கு இங்க கொஞ்சம் காத்து கூடுதலா அடிக்கும்போதே நினைச்சேன். இயற்கைக்கு மாறா ஏதோ நடக்குதுன்னு. அது சரியா போயிடுச்சு.

ச்சின்னப் பையன் said...

சரியான ஆதங்கம்...

ஒரு வடிவேல் நகைச்சுவை பார்த்தோம். அதில் ஒரு குழந்தை சொல்லும். "நான் வந்து சொன்னால் ஜட்ஜ் அங்கிள் கூட நம்பிடுவாரு"...
இதைப் பார்த்து எவ்வளவு குழந்தைகள் இப்படி சொல்லுமோ...

SanJai said...

ஓ.... ஒரு தென்றல் புயலாக வருதே.. :)..

//எப்.எம் ரேடியோக்களும் சளைத்தவை அல்ல
என்பது சமீபத்திய இந்திய விஜயத்தில்
நன்கு உணர்ந்தேன்.//

யக்கா.. எல்லா நிகழ்ச்சிகளும் இப்டி இல்லைக்கா..குழந்தைகளும் ரசிக்கிற மாதிரி நல்ல நிகழ்ச்சிகளும் வருதுங்கோ..

மதுரையம்பதி said...

உண்மைதான், நானும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ச்சின்னப்பையன்,
தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

புதுகைத் தென்றல் said...

//யக்கா.. எல்லா நிகழ்ச்சிகளும் இப்டி இல்லைக்கா..குழந்தைகளும் ரசிக்கிற மாதிரி நல்ல நிகழ்ச்சிகளும் வருதுங்கோ..//

தம்பி.. குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல நிகழ்ச்சிகள் இருந்தால் சந்தோஷம்.

ஆனா நாம கேட்கும்போது குழந்தைகள் கேட்குமே அப்போ?

புதுகைத் தென்றல் said...

வாங்க மதுரையம்பதி,
நன்றி.

சுரேகா.. said...

அற்புதமா சொல்லி,

சமூக மாற்றத்தை பதிவு பண்ணியிருக்கீங்க!

ரொம்ப வேகமா. திரும்பி இருக்கீங்க !

வாழ்த்துக்கள் !

புதுகைத் தென்றல் said...

வாங்க சுரேகா,
வருகைக்கு நன்றி. ரொம்ப வேகமா இல்ல, ஒரு மாதம் இந்தியாவில் இருந்து விட்டு 14 ஆம் திகதி தான் இலங்கை வந்தேன்.

சுரேகா.. said...

//ரொம்ப வேகமா. திரும்பி இருக்கீங்க !//

ஆஹா...நான் சொன்ன வேகம் எழுத்துல..!

திரும்பிங்கறது பதிவுலகத்துக்கு !

:-)

புதுகைத் தென்றல் said...

அதச் சொன்னீங்கலா சுரேகா?

சரி சரி.